Monday, November 17, 2008

டவுட்:- உங்க குழந்தை உருப்படியாக காலையில் என்ன சாப்பிட்டு விட்டுப் போகும் ஸ்கூலுக்கு?இந்த அட்வைஸ் கலந்த டவுட் ஐந்து வயதுக் குழந்தைகளை வேனில் பள்ளிகளுக்கு அனுப்பும் அம்மாக்களுக்கு (அப்பாக்களுக்கும் தான்...!)சென்னை போன்ற பெருநகரங்களில் விடிந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பெரியவர்கள் விழித்து எழுகிறார்களோ இல்லையோ ஐந்து வயதுக் குழந்தைகளில் பெரும்பாலோர் (குறிப்பாக வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி அமைந்த குழந்தைகள்) கட்டாயமாக காலை ஆறிலிருந்து ஆறரைக்குள் எழுந்தே ஆக வேண்டும் ...இல்லாவிட்டால் வேன் போய்விடக்கூடும்,பொதுவாக சென்னையில் பெரியவர்களுக்கே ஏழு மணிக்கு தான் விடியும்.எனக்கு இதில் என்ன பெரிய டவுட் என்றால் ...!

டவுட் நம்பர் ஒன் :-

அப்படி ஆறு மணிக்கு (வேறு வழியே இல்லாமல் )எழுந்து வேக வேகமாய் பள்ளிக்கு கிளம்பும் அந்தக் குழந்தைகள் என்ன தான் அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் போவார்கள் ? ,வெறும் பால் சிலர் குடித்து விட்டுப் போகிறார்கள் (சிலர் என்னவோ போன்-விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் எல்லாம் குடித்து விட்டுத் தான் போவதாக சொல்லிக் கொள்கிறார்கள் ,ஆனாலும் காலை வேளைகளில் பெரும்பாலும் காக்கைகள் தான் அதெல்லாம் குடித்துக் கொண்டிருப்பதாக காற்று வாக்கில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,குழந்தைகள் சாப்பிட்டு சத்து வைக்கிறார்களோ என்னவோ இந்தக் காக்கைகள் தான் அந்தக் குழந்தைகள் மிச்சம் வைத்ததைத் தின்று தின்றே அதி தொந்திரவு தந்து கொண்டு இருக்கின்றன, காலை வேளையில் பார்க்கில் வாக்கிங் போகக் கூட பயம் ...அவ்வளவு காக்கைகள் ...!!!இப்போது டவுட் நம்பர் டூ என்னவென்றால் ?

உண்மையில் வெறும் பால்,போன்விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் ,இதெல்லாம் உண்மையில் குடிப்பது குழந்தைகளா காக்கைகளா ?

அதோடு டவுட் நம்பர் த்ரீ என்னவென்றால் ?

சரி இதெல்லாம் வெறும் நீர் ஆகாரங்கள் தானே ?இது எந்த அளவுக்குப் போஷாக்காக இருக்க முடியும்?திட உணவாக அந்த நேரம் என்ன சாப்பிடுகிறார்கள் அந்தக் குழந்தைகள் ?இட்லி,தோசை,கார்ன்-பிளாக்ஸ்,சாக்கோஸ்...!!! நிச்சயமாக எந்தக் குழந்தையுமே அந்த நேரம் அரிசி சோறு சாப்பிடும் என்று நம்புவதற்கு கஷ்டமாயிருப்பதால் தான் மேற்கூறிய திட ஆகாரங்கள் தான் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடலாம் என நம்புகிறேன் , இதில் எதை எத்தனை சதவிகிதம் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் ,வீணடிக்காமல் சாப்பிட்டு விட்டுப் போகக் கூடும் என்பதில் இந்த பதிவைப் படிக்கும் (ஏதோ ஒரு சிலர் படிப்பீர்கள் தானே...!) நண்பர்கள் உரிய பதில்களைத் தருவீர்கள் என நம்புகிறேன் .இன்றைக்கு டவுட் இவ்ளோ தான் .இதைக் கிளியர் பண்ணுங்கோப்பா பஸ்ட்டு !!!

10 comments:

சந்தனமுல்லை said...

plz change the word verification.

மிஸஸ்.டவுட் said...

welcome santhanamullai

//plz change the word verification.//

yessungo...!
i have changed it now.

சந்தனமுல்லை said...

ம்ம்..இப்போ உங்க கேள்விக்கு என்னோட பதிலை சொல்றேன்!
காலையில் என் மகள் 8.20க்கு வேனை பிடிக்க செல்ல வெண்டும். 7 மணிக்கு எழுந்து கிளம்பி, ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு செல்வாள்! காலை உணவு கையோடு கொண்டு செல்வாள்.
10.30 மணிக்கு உணவு இடைவேளை..சாப்பிடுவது பாதி அல்லது கொஞ்சம்தான், கொடுத்து விட்டதில்! மதியம் வந்து சாப்பாடு..ரசம் சாதம்! இதுதாங்க!!

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

கொழும்புவில்தான் குழந்தைகளுக்கு தொல்லை என எண்ணியிருந்தேன். ஏனெனில் இங்கு பாடசாலைகளை காலை 7.30மணிக்கே ஆரம்பித்துவிடவார்கள். குழந்தைகள் காலையில் உணவு இன்றி வாடுகிறார்கள். அல்லது பாடசாலையில் சொகுசு உணவுகளை வாங்கி உண்டு உடலைக் கெடுக்கிறார்கள். சென்னையில் 9 மணிக்கு தொடங்குவார்கள் என எண்ணினேன்.
பாடசாலைகளை அதிகாலையில் தொடங்குவது ஆசிரியர்கள் நேரத்தோடு வீடு திரும்பி தங்கள் வீட்டு வேலைகளை அல்லது பிரைவேட் ரியூசனை தொடங்கவே உதவுமே அன்றி குழந்தைகளை துன்பப்படுத்துவதாகவே உணருகிறேன்.

rapp said...

அடப்பாவமே, நானெல்லாம் நல்லா சாப்பிட்டுட்டுத்தான் ஸ்கூலப் பத்தியே யோசிப்பேன்

rapp said...

எங்கக்கா பையன் இந்தியால இருக்கும்போது, எங்கப்பா காலையில் ஏழரை மணியிலிருந்து எட்டு மணிவரை ஊட்டிவிடுவார். அவன் ஒரு வாய் முழுங்கினா ஒம்போது வாய் ஏமாத்திடுவான். இப்போ அவங்கப்பாம்மாக் கிட்ட போனப்புறம் சந்தனமுல்லை அவர்கள் சொல்லிருக்க மாதிரித்தான் செய்றாங்களாம்.

அமுதா said...

என் பெண்கள் 8:00 மணிக்கு வேன் பிடிக்க வேண்டும். அவர்களை 6:30 (அ) 7:00 மணிக்கு எழுப்புவேன். காலை 7:00 மணிக்கு ஒரு டம்ளர் பால். 7:45க்கு இட்லி/தோசை என முழுதாக டிபன் கொடுத்து விடுவேன். முதலில் பழக்க சற்று கஷ்டமாக இருந்தது. இப்பொழுது பழகி விட்டதால் , சற்று லேட்டாக எழுந்தாலும், அவர்களே எதையும் மிஸ் பண்ணுவது இல்லை.

மிஸஸ்.டவுட் said...

வாங்க சந்தனமுல்லை ...

//7 மணிக்கு எழுந்து கிளம்பி, ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு செல்வாள்! //
ஒரு தரம் பாத்ரூம் போனால் போதுமே ...பால் எல்லாம் எந்த மூலைக்கு 3 வயதுக்கு மேற்ப்பட்ட குழந்தைகளின் பசியைத் தாங்கக் கூடும்?
எல்லாவற்றையும் விட ...
//மதியம் வந்து சாப்பாடு..ரசம் சாதம்! இதுதாங்க!!//
வெறும் ரசம் சாதத்தில் ஓடி...ஆடி விளையாடக்கூடிய குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் என்ன இருக்க முடியும்?ஏதோ ஒரு கீரை...பருப்பு சாதம்,ஏதாவது ஒரு காய் இப்படி டிரை செய்து பாருங்களேன், இது தவிர எனக்கு இன்னொரு டவுட் என்னவென்றால் இப்போதெல்லாம் குழந்தைகளுக்குப் பசி எடுப்பது சொல்லத் தெரியாமல் போய்விட்டதோ என்றொரு பயம்! சாக்லேட் கேட்பதில் இருக்கும் ஆர்வம் ஏனோ சாப்பாடு விசயத்தில் இருப்பதில்லை ....என்ன செய்யப்போகிறோம் அம்மாக்கள் ? என்ன செய்யலாம் ?உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எழுதுங்களேன் .


வணக்கம் டொக்டர்.முருகானந்தம்

//சென்னையில் 9 மணிக்கு தொடங்குவார்கள் என எண்ணினேன்.//

இல்லை டொக்டர்...பள்ளி என்னவோ 8.45 மணிக்கு தான் துவங்குகிறார்கள்.ஆனால் இந்த சென்னை ட்ராபிக்கில் நீந்திக் கரை சேர்ந்து பள்ளியை அடைய கூடுதல் நேரம் எப்போதுமே தேவைப் படுகிறது.பள்ளிக்கு குறைந்தபட்சம் 7.45--8 மணிக்காவது புறப்பட்டே ஆக வேண்டும்,இது வேனில் போகும் குழந்தைகளுக்கு மட்டும் தான் .

//பாடசாலைகளை அதிகாலையில் தொடங்குவது ஆசிரியர்கள் நேரத்தோடு வீடு திரும்பி தங்கள் வீட்டு வேலைகளை அல்லது பிரைவேட் ரியூசனை தொடங்கவே உதவுமே அன்றி குழந்தைகளை துன்பப்படுத்துவதாகவே உணருகிறேன்.//

நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன் ...இப்படியும் யோசிக்கலாம் ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் இருக்கும் தானே!!! அவர்கள் எல்லோருமே பள்ளிக்கு மிக அருகில் குடி இருப்பவர்கள் என்றும் சொல்லமுடியாது அல்லவா?அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் தங்களது குழந்தைகளின் காலை உணவுப் பிரச்சினைகளை?யாராவது கிண்டர் கார்டன் ஆசிரியைகள் இந்தப் பதிவைப் படித்து விட்டுப் பதில் சொல்லலாம் என நம்புகிறேன்.
மொத்தத்தில் குழந்தைகளை அறிந்தே நாம் கஷ்டப் படுத்திக் கொண்டிருப்பது முற்றிலும் நிஜமே !

வாங்க rapp...
// எங்கக்கா பையன் இந்தியால இருக்கும்போது, எங்கப்பா காலையில் ஏழரை மணியிலிருந்து எட்டு மணிவரை ஊட்டிவிடுவார். அவன் ஒரு வாய் முழுங்கினா ஒம்போது வாய் ஏமாத்திடுவான். //

இங்கேயும் அதே கதை தான் ...எட்டு மணிக்கு வேன் வரும்போது சாதம் ஊட்டிக் கொண்டு இருப்பது பெரிய கஷ்டம் தான் ...சகித்து தான் தீர வேண்டும் ..வேறு வழியே இல்லை .வேலைக்குப் போகும் பெற்றோர்கள் என்றால் தாத்தா பாட்டிகளை கண்டிப்பாக தாஜா செய்து வைத்துக் கொண்டே ஆகவேண்டும் (no...other choice is there)

வாங்க அமுதா...

//முதலில் பழக்க சற்று கஷ்டமாக இருந்தது. இப்பொழுது பழகி விட்டதால் , சற்று லேட்டாக எழுந்தாலும், அவர்களே எதையும் மிஸ் பண்ணுவது இல்லை.//

என் வீட்டில் இப்போது தான் பழக்க ஆரம்பித்து இருக்கிறோம்,உங்கள் பதில் திருப்தியாக இருந்தது,ஊரில் உள்ள எல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களும் என்றாவது ஒரே ஒரு நாள் மட்டுமில்லாது எல்லா நாட்களுமே "எங்கள் குழந்தைகள் நன்றாக சாப்பிட்டு விட்டு சரியான நேரத்திற்குள் பள்ளிக்கும் சென்று விடுகின்றன என்று சொன்னால் கேட்க மிக நன்றாகத்தான் இருக்கும் ...ஆசை தான்!!! நம்பிக்கையோடு காத்திருப்போம் என்றைக்காவது இந்த ஆசை நிறைவேறும் என்று .

சந்தனமுல்லை said...

//ழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் என்ன இருக்க முடியும்?ஏதோ ஒரு கீரை...பருப்பு சாதம்,ஏதாவது ஒரு காய் இப்படி டிரை செய்து பாருங்களேன், இது தவிர எனக்கு இன்னொரு டவுட் என்னவென்றால் இப்போதெல்லாம் குழந்தைகளுக்குப் பசி எடுப்பது சொல்லத் தெரியாமல் போய்விட்டதோ என்றொரு பயம்! சாக்லேட் கேட்பதில் இருக்கும் ஆர்வம் ஏனோ சாப்பாடு விசயத்தில் இருப்பதில்லை ....என்ன செய்யப்போகிறோம் அம்மாக்கள் ? என்ன செய்யலாம் ?உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எழுதுங்களேன் .//

நன்றி மிஸ்ஸ்.டவுட்! ரசம் சாதம் என்று நான் சொன்னது ஒருநாள். தினமும் அதுவேயல்ல..ஆனல் வளின் விருப்பம் அது! பருப்பு மற்றும் கேரட் சாதம், சாம்பாரில் இருக்கும் காய்களோடு சாதம்! தினமும் ஒரு முட்டை கண்டிப்பாக! சாக்லேட் நாங்கள் அடிக்கடி கொடுக்கும் வழக்கம் இல்லை. அதேப்போல் குர்குர்ரே வகையறாக்கள் கண்டிப்பாக நோ! ஆனால் கேக் உண்டு. கோக் வகை கிடையாது. பிறிதொரு நாளில் அவளின் சாப்பாடு பற்றி பதிகிறேன்!! :-)

மிஸஸ்.டவுட் said...

வாங்க சந்தனமுல்லை
//பிறிதொரு நாளில் அவளின் சாப்பாடு பற்றி பதிகிறேன்!!//
கட்டாயம் பதியுங்கள்,பயனுள்ளதாகவே இருக்கும்