Tuesday, February 15, 2011

தன்யவதி ஆவேன்

மிஸ்.ராதா கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி )

கோல் (Goal ) இலியாஹூ எம். கோல்ட்ராட் (தமிழில் அஞ்சனா தேவ் )

சூர்ய வம்சம் சா.கந்தசாமி

மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்

Goal விகடனில் தொடராக வந்த போதே அதிகம் ஈர்த்தது சேகரித்து வைத்தேன் சில வாரங்கள் மட்டுமே முடிந்தது ...பிறகு என்றாவது ஒருநாள் முழு நாவலாக வாசித்துக் கொள்ளலாம் என்ற சமாதானத்தோடு Goal விடுபட்டது.

தேவனின் படைப்புகள் அத்தனையும் எனக்கு சர்க்கரைப் பாகில் ஊற வைத்த ஜீரா தோசை சாப்பிடுவதைப் போல வாசிக்க அத்தனை ப்ரியங்கள் ,பெரும்பாலும் அவரது தலைப்புக்கள் இப்படித்தான் இருக்கும் ;

கல்யாணி ,மாலதி,மைதிலி ,கோமதி (கோமதியின் காதலன்) ,மிஸ்.ஜானகி இப்படிப் போகும் இந்தக் கதைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் எத்தனை முறைகள் வேண்டுமானாலும் வாசிக்கப் பிடிக்கும் எனக்கு .

இதே நினைவில் தான் "தில்லானா மோகனாம்பாள்" எழுதிய கொத்தமங்கலத்தாரின் மிஸ்.ராதா நாவலை எடுத்து வந்தேன். எழுத்தில் ஹாஸ்யம் எத்தனை தூரம் செல்லுபடியாகலாம் என்றால் இன்றைக்கு தேவன் இல்லை சொல்லித் தர ஸ்ரீமான் சுதர்ச்சனத்தையும் ,லக்ஷ்மி கடாட்சத்தையும் அத்தனை எளிதில் மறக்க இயலாது.

சா.கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" வழியே " சாயா வனம் " நாவலை வாசித்து விட்டு இப்போது சூர்ய வம்சம் வரை வர முடிந்திருக்கிறது ,அடுத்து விசாரணைக் கமிஷன் எடுக்கலாம் என்றிருக்கிறேன். கோடையின் பின் மதிய நேரங்களைப் போல ஆர்ப்பாட்டங்களே இல்லாத எழுத்து சா.கந்தசாமி வகை.

ஒருவழியாக நானும் மெர்க்குரிப் பூக்களை வாசிக்கப் போகிறேன். நண்பர்கள் பலருக்கும் பிடித்துப் போய் சிலாகிக்கப் பட்ட நாவல்...என்ன தான் இருக்கிறது அதில் வாசித்ததும் எதையாவது கிறுக்குவேன் என்பது மட்டும் திண்ணம்.

இப்போது கைகளில் விரித்துக் கிடத்திக் கொள்ளப் போவது Goal .

சிறுவர் இலக்கியம்,தலித் இலக்கியம் போல இந்த நாவல் பிசினஸ் இலக்கியம் வகைப்பாடாம் .

முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது .

பிசினஸ் இலக்கிய நாவல்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது ,தகவல் அறிந்த நண்பர்கள் பரிந்துரைத்தாலும் சரி இல்லை பகிர்ந்து கொண்டாலும் சரி. தன்யவதி ஆவேன்.

:)

4 comments:

உமர் | Umar said...

Goal போன்று கதையமைப்போடு கூடிய பிசினஸ் வகை கதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது "Who Moved My Cheese?" By Spencer Johnson. (Self-Improvement வகை கதையிலும் இது சேரும்)

Anonymous said...

உங்களின் படிக்கும் ஆர்வமும் ரசனையும் அறிய முடிகிறது கார்த்திகா..

KarthigaVasudevan said...

நன்றி கும்மி,

நன்றி தமிழரசி

'பரிவை' சே.குமார் said...

niraiya padikkireerkal... vazhththukkal...