இச்சையில் ஆடும் இடாகினிப் பேய்களுடன்
விடாது கதைக்கத் தொடங்கி
இன்றோடு நாட்கள் எட்டு
எட்டி விடும் தூரம் தான்
சுவாதீனமாய் சப்பணமிட்டு
அவள் ஆடிக் கொண்டிருந்தாள்;
சுளீர் சுளீரென
அகல விசிறிச் சுழன்று தாழ்ந்து ஓயும்
நீளக் கூந்தல் குத்தூசிகளாய் விரிந்து பரவ
உறுத்து விழிக்கும் ஆங்கார கண்கள்
என்னைப் பிய்த்து தின்று விடும் கோரப் பசியில் ;
பேய்கள் அவளை ஆட்டுவிக்கின்றனவாம்
பேசிப் பேசி கலைகிறார்கள் ;
வேடிக்கை மனிதர்கள்;
பெருந்தீனியிட்டு பேய் வளர்க்கும் கலை அறியாதவர்கள்...
நோட்: படம் கூகுளில் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.உரிமைக்காரர்கள் ஆட்சேபித்தால் நீக்கப் படும்
4 comments:
ரொம்ப நல்லா இருக்குங்க..
ஆஹா...
கவிதை ஒரு மாதிரி ரொம்ப வேகமா, நல்லாருக்கு. அதே மாதிரி கவிதைக்கு பொருத்தமா படமும்.
இதுக்கு போய் யாரு நெகட்டிவ் வோட் போட்டது? :(
nallaarukkE!
Post a Comment