சும்மா சும்மா பென்சில் துருவிக்கிட்டே இருந்தா அதுக்குப் பேர் பென்சில்மேனியாவாம்,ஹரிணி சொன்னா ,அவளுக்கு இருக்காம்.இதுல இருந்து அவளை நான் காப்பாத்திட்டேன்னா நான் சொல்றதெல்லாம் அவ கேட்பாளாம்.
ரொம்ப ஈசின்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்.
நேத்து காலைல சின்ன ஸ்கேல் நீளத்துக்கு அழகா துருவி கொடுத்து விட்ட பென்சில் ஸ்கூல் விட்டு வந்தோடனே பேக்ல செக் பண்ணா அவ கை சுண்டு விரலுக்கும் பாதி நீளம் தான் இருந்தது.i was shocked .
இன்னைக்கும் அதே தான் ...i was shocked ...
இது தப்பான வழக்கமாச்சேன்னு ...
ரொம்ப நேரம் இப்படிலாம் சும்மா சும்மா துருவினா பென்சில் God கிட்ட போய் அழும்,என் முனை எல்லாம் ஷார்ப் பண்ணி ஷார்ப் பண்ணி புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல அழுத்தி அழுத்தி அந்த ஹரிணி பாப்பா உடைச்சு உடைச்சு விடறா அப்புறம் திருப்பி பென்சில் ஷார்ப்பாவே இல்லை...ஷார்ப்பாவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு துருவிகிட்டே இருக்கா ...எனக்கு வலிக்குதே...ஐயோ God எனக்கு வலிக்குதேன்னு உன்னை பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
ம்ம்...நிஜமாவான்னு கொஞ்ச நேரம் எம்மூஞ்சியவே பார்த்துட்டு இருந்துட்டு ...
God நல்லவர் ஒன்னும் பண்ண மாட்டார் , அம்மா நீ பொய் தான சொல்றன்னா...
இல்ல நிஜம்மா தான் ,நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை மிட்நைட் ல பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாருன்னேன் .
நீ வேணா ட்ரை பண்ணி பாரேன்னா
எதை ட்ரை பண்ண?
நான் எதுக்கு பென்சில் துருவினேன் ஷார்ப்பா இல்லைன்னு தான ? பென்சில் ஏன் ஷார்ப்பா இல்லை முனை உடைஞ்சதால தான?
ம்ம் ...
முனை ஏன் உடைஞ்சது ?
ஏன் ?
நான் புல்ஸ்டாப் வச்சதால தான ?
ம்ம்...
நீயும் புல்ஸ்டாப் வச்சுப் பாரும்மா?
எதுக்கு?
நீ வை நான் சொல்றேன்.
சரி என்று அவளுடைய ஹோம் வொர்க் நோட் எடுத்து fill ups மட்டும் எழுதிக் கொடுத்தேன் ,பத்து புல்ஸ்டாப் வைக்க வேண்டியிருந்தது .
அவளைப் போலவே நோட் புக்கில் அழுத்தி புல்ஸ்டாப் வைத்ததில் பத்து முறை முனை உடைந்தது.பென்சிலை பத்து முறை துருவினேன் .
சரி..சரி போதுமென்றாள்.
நோட் புக்கை மூடி வைத்தேன் . இப்ப புரிஞ்சதா ? இனிமே இப்டி சும்மா சும்மா பென்சில் துருவி துருவி போட்டு ஒருநாளைக்கு மூணு பென்சில் காலி ஆக்க மாட்டயில்ல ?
ம்ம்...மம்மி இப்ப பென்சில் பூதங்களை வரச் சொல்லு ?
என்னது?
ஆமாம் நீயும் தான பென்சில் துருவி துருவி உடைச்ச ,உன்னையும் சேர்த்து தான பயமுறுத்தும் ,அப்படின்னா பரவாயில்லை .பூதங்களை ஒன் பை ஒன் வரச் சொல்லு ...be quick .
ங்கே ! ( நான் தான்)
இப்பலாம் அடிக்கடி பென்சில் உடைக்கறது நானும் தான்!
இதற்குப் பெயரும் பல்பென்று சொல்லத் தகுமோ?!
4 comments:
செம செம செம
பல்பூஊஊஊஊஊஊஊஊ
//ங்கே ! ( நான் தான்)
இப்பலாம் அடிக்கடி பென்சில் உடைக்கறது நானும் தான்!//
ஹா..ஹா.. நல்ல ஜோக்..!!
நல்லா இருக்கு...
சூப்பருங்கோ.. நா கூட பென்சில பத்தி எழுதி இருக்கேன். என்னோட நிகழ்வுகள் போய் பாருங்க..ம்...
Post a Comment