Friday, August 20, 2010

கர்ண பரம்பரைக் கதைகளும் பாவைக்கூத்தும் :


 கர்ண பரம்பரைக்கதைகள் :கூகுளில் கர்ண பரம்பரைக் கதைகள் தேடியதில் சில கதைகளின் மூலப் புத்தகங்கள் சிக்கின.அந்தக் கதைகள் ;
 
நல்ல தங்காள் கதை

ஆரவல்லி சூரவல்லி கதைகள்

கர்ண மகாராஜன் சண்டை

காத்தவராயன் கதை

கோவலன் கதை

பஞ்ச பாண்டவர் வனவாசம்

மயில் ராவணன் கதை

சபரி மோட்சம்

சதி அனுசுயா

கட்டபொம்மன் தளபதி பாதர் வெள்ளை சண்டைக்குப் புறப்படும் கதை


பவளக்கொடி கதை மருதுபாண்டியர் கதை ...
 
அடேயப்பா ...இன்னும் நிறைய இருக்கும் போல ஆனால் ஒரிஜினல் வெர்சன் படிக்க படு சிரமமாக இருக்கிறது.இந்த கதைகளை எல்லாம் படிக்க விருப்பமிருப்பவர்கள் ;
 
http://www.tamilheritage.org  இந்த இழைக்குள் நுழையலாம்.
இங்கே மேலே நான் குறிப்பிட்ட எல்லாக் கதைகளும் இருக்கின்றன.வாசிக்க விருப்பமிருப்பவர்கள் வாசிக்கலாம் ,பெரும்பாலும் பாடல் வடிவம் தான்
 

கர்ண பரம்பரைக் கதைகள் என்றால் செவி வழிக் கதைகள் என்றும் சொல்லலாம் ,பரம்பரை பரம்பரையாக தலைமுறை தோறும் குடும்பத்தின் மூத்தவர்கள் வாயிலாக வாரிசுகள் இந்தக் கதைகளை அறிந்து கொள்கின்றனர்,பெரும்பாலும் பாடல் வடிவில் தான் இந்தக் கதைகள் அமைந்துள்ளன .பால்யத்தில் "பாவைக் கூத்து,தெருக்கூத்து நாடகங்கள் பார்க்க வாய்த்தவர்களுக்கு ஓரளவுக்கு இந்தப் பாடல்கள் புரியக் கூடும் .


என்.டி.டி வியில் நவீன பாவைக்கூத்து தொடர் சில வருடங்கள் முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிறது."பப்பட் ஷோ "  என்ற பெயரில் அரசியல் கேலி தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது,இப்போதும் உண்டா என தெரியவில்லை,ஆனால் பாவைக் கூத்துக் கலை இன்று நலிந்து  விட்டதென்று தான் சொல்ல வேண்டும், தசாவதாரம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வருமே ;
 
"முகுந்தா முகுந்தா ...என்று அசின் பாடுவாரே அதே பாடலில் திரையில் கண்ணனின் தச அவதாரங்களை படத்துண்டுகள் ,மற்றும் பொம்மைகளின் நிழல் உருவங்களாக நிஜம் போலக் காட்டுவார்களே ,அது  தான் பாவைக் கூத்து.வெகு அருமையான  கலை  வடிவம் இது ,
 
வெறும் நாலணாவுக்கு 90 களில் பாவை கூத்து நாடகங்களை கிராமம் தோறும் வந்து போட்டுக் காட்டுவார்கள்.இதை நாகரீகமாகவோ நவீன மயமாகவோ வளர்த்தெடுக்க நம்மிடையே ஆட்கள் பஞ்சமோ என்னவோ.குழந்தைகளிடம் பாவைக் கூத்து என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள் ,பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை,பள்ளிகளில்  இந்த பாவைக்கூத்து நாடகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தலாம் .
 
பாவைக்கூத்து முற்றிலும் கர்ண பரம்பரைக் கதைகளை மையமாக வைத்தே நடத்தப் பட்டு வந்திருக்கலாம் .


மேலும் கர்ணபரம்பரைக் கதைகள்
என்றவுடன் நாட்டுப்புறத்து கதைமாந்தர்களை மட்டுமே அடிப்படையாக வைத்து எழும்பிய கதைகள் என்று எண்ணி விடல் ஆகாது,முக்காலும் மூன்று வீசம்  ராமாயணக் கிளைக் கதைகள் ,ஐம்பெருன்காப்பியங்களின் கிளைக் கதைகள்,விடுதலைப் போராட்ட காலத்திய நிஜக் கதைகள் இப்படி சகல விதமான இலக்கிய வடிவங்களில் இருந்தும் இந்தக் கதைகள் உருப்பெற்றுள்ளன.உதாரணம் மேலே குறிப்பிடப் பட்டுள்ள கதைகளை பாருங்கள் புரியும்.
 

அம்புலிமாமா :


பள்ளிக் காலங்களில் அம்புலிமாமா படிக்காதவர்கள் யாரேனும் உண்டா? இன்றும் கூட  அம்புலிமாமா சிறுவர் கதைகளை படிக்க விருப்பமிருப்பவர்கள் இங்கே செல்லுங்கள்.
 
 
 நிறம் மங்காத அதே வண்ணங்களுடன் படக்கதைகள் நிறைய உண்டு இந்த தளத்தில் .குழந்தைகளுக்குப் பிடிக்கும் .எழுத்து கூட்டி வாசிக்கப் பழகிய குழந்தைகள் எனில் இதை வாசிக்க சொல்லி விட்டு தினம் ஒரு கதை சொல்லும் அலுப்பில் இருந்து மீளலாம் .
 

சமூக நீதிக்கதைகள் :

வெறும் கற்பனைகளை மட்டும் தூண்டக் கூடிய மாயாஜாலக் கதைகள் வேண்டாம் கொஞ்சம் அறிவார்த்தமான சமூக நீதிக் கதைகள் வேண்டும் என்று நினைப்பீர்களானால் கல்ச்சுரல் இந்தியாவின்  இந்த தளத்தை திறவுங்கள் .
 
 
பகவத் கீதையின் நீதிக் கதைகள் ,பௌத்த ஜாதகக் கதைகள் ,பஞ்ச தந்திரக் கதைகள் எனும் தலைப்புகளில் நிறையக் கதைகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
 
http://tamil.cri.cn/1/more/1457/ZTmore1457.htm  (சீன நாட்டுப்புறக் கதைகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்)
 
கூகுளில் இப்படி கதைகளை தேடுவது நல்ல பொழுது போக்காக இருக்கிறது ; நேரம் போவதே தெரியவில்லை .
 

6 comments:

வல்லிசிம்ஹன் said...

கார்த்திகா, அருமையான லின்க் கள் கொடுத்திருக்கிறீர்கள்.
கட்டாயம் படிக்கிறேன். இத்தனை தேடி எடுத்துக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

KarthigaVasudevan said...

நன்றி வல்லிம்மா ,கதைகளுக்காக ரொம்பவும் மெனக்கெடலை என் மகளுக்காக தேடும் போது கிடைச்சுது,பதிவு பண்ணி வச்சா பின்னாட்களில் உதவுமேனு தான்.

:)

ஜெய்லானி said...

ஆஹா..சூப்பர் லிங்க் . பழைய நினைவுகள வந்து விட்டது ,இந்த பதிவை படித்து...!!

ஜெய்லானி said...

ஆஹா..சூப்பர் லிங்க் . பழைய நினைவுகள வந்து விட்டது ,இந்த பதிவை படித்து...!!

அது சரி said...

பாவைக் கூத்து நான் பார்த்ததில்லை. பட், அம்புலிமாமா எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப கூட கிடைச்ச படிக்கிறது உண்டு. அதென்னவோ பாலமித்ராவை விட அம்புலிமாமா தான் என்னோட ஃபேவரைட்.

R.Gopi said...

ஆஹா....

பழைய நினைவுகளை மீட்டி விட்டீர்கள்..

சிறு வயதில் அம்புலிமாமா படித்தது நினைவுக்கு வருகிறது....

கூடவே படிக்க படிக்க திகட்டாத செல்வமென பல லிங்க் தந்தமைக்கு மிக்க நன்றி....