இரைந்து கிடக்கும் கேள்விகளை
உரசிப் பற்ற வைக்க
சதா முயன்று கொண்டிருக்கும்
சலனக் காட்டின்
சபை நடுவே
மௌனிக்கப்பட்ட பதில்களின்
அணிவகுப்பு ;
பார்க்க விசித்திரமென்ன
நின்று நிதானித்து நிமிர்ந்து
என்றோ ஒரு கணத்திலும்
பதில் சொல்ல விருப்பமில்லை ;
கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!
உரசிப் பற்ற வைக்க
சதா முயன்று கொண்டிருக்கும்
சலனக் காட்டின்
சபை நடுவே
மௌனிக்கப்பட்ட பதில்களின்
அணிவகுப்பு ;
பார்க்க விசித்திரமென்ன
நின்று நிதானித்து நிமிர்ந்து
என்றோ ஒரு கணத்திலும்
பதில் சொல்ல விருப்பமில்லை ;
கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!
9 comments:
ஒன்னுமே நஷ்டமில்லைங்க..மௌனம் பலநேரம் லாபம் தானே..;) அணிவகுப்பு க்கு நல்லமரியாதை கிடைக்கும்..
kavithai romba nalla irukkunga
//கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!//
Superb Lines..!!
My wishes..!!
அட யாத்ரா கமெண்ட்லாம் போடுறாரா இப்ப எல்லாம் ...
:)
கவிதை நல்லா இருக்குங்க
நல்ல கவிதை ,
//
கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!//
பிடித்த வரிகள் !!
:)
மௌனம் எப்போதும் லாபம்தான்!
மௌனத்தால் லாபம்தான் .எப்பவுமே. ஆனால் அது நம் சந்தோஷ மௌனமா இருக்கணும்.
வெற்றி கிடைக்கும்.
ரொம்ப அருமைங்க கார்த்திகா. ரொம்ப பிரமாதமான வரிகள். ரொம்பவே ரசிக்கிறேன். :)
நன்றி முத்துலெட்சுமி ...
நன்றி யாத்ரா
நன்றி ரங்கன்
நன்றி நேசமித்திரன்
நன்றி அன்புடன் அருணா
நன்றி வல்லிம்மா
நன்றி விதூஷ்
Post a Comment