Thursday, April 22, 2010

கதை கதையாம் காரணமாம் ...

ஒரு ஜாமத்தின் பின்னான கதைகளைக் கேட்க
கனவுகளின் குவியலுக்குள் களைக்காது புரண்டு
கனகாம்பரப் போர்வை தேடி
சிருங்காரம் காட்டும் என் சின்ன மயிலே
மைனாக் குஞ்சே எங்கிருக்கிறாய் நீ!
பெய்யாது ஓய்ந்த மழைக்காய் அல்ல
பூசணிப் பழங்களாய் காணும் முகமெலாம் சூடாக்கி
ஓயாது வெடித்துப் பிளந்திட்ட வெயிலுக்காயும் அல்ல ;
மாம்பிஞ்சே மரகத பூஞ்சிட்டே ;
தலை சரித்து நோக்குங்கால்
என் நெஞ்சகத்துக் கனமெல்லாம்
காணாதடிப்பாயடி...
சித்திரைப் பூவே ...
சில நேரம் கண்ணுறங்காய் ...
காலிலே கட்டிய சக்கரங்கள் தூங்கட்டும்
கார் கால மேகம் போல்
இமை கவிய கண் துயிலாய்;
எனக்குத் தூக்கம் வருதுடி ...
சுட்டிப் பொண்ணே ...அடிக்கரும்பே
சீனி சர்க்கரையே
அம்முக்குட்டி பொம்முக்குட்டி
அம்மாவோட தங்கக் கட்டி
தூங்கிடேன் ப்ளீஸ் ...

ஒரு அப்பாவி அம்மாவுக்கும் சுட்டி மகளுக்குமான தினப்படி தூக்கத்துக்கு முந்தைய உரையாடல் கவிதை.

7 comments:

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா...ரசித்தேன்! :-)

Vidhoosh said...

சூப்பர். ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு பக்கம் வரேன்.

நலம்தானே? :) உங்கள் குடும்பத்தினருக்கு என் அன்பும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

Sanjai Gandhi said...

சூப்பர் கார்த்தி... ரொம்ப நல்லா இருக்கு..

Thamiz Priyan said...

கவிதை நல்லா இருக்கு.. இந்தக் கால ஜெடிக்ஸ் டைப் குழந்தைகளுக்கு இப்படி எல்லாம் சொல்லிக் கொஞ்சினா பிடிக்குமோ என்னவோ?.. ;-)

நேசமித்ரன் said...

அட!!!

நூதனக் கதைகள் உலவும் வெளி
யோசித்துக் கொண்டே கிளைவிடும் தாய்க் கதைகள்

அப்புறம் அந்த நரி ...
அவ்வளவுதான் கதை
அத்தோட சரி
:)

நட்புடன் ஜமால் said...

காரணங்கள் தேடும் கதைகள் ...