Tuesday, March 2, 2010

புல்...




பாயிலிருந்து உருவி நழுவிய கோரைப்புல்
நழுவாத மற்றொன்றிடம் சொல்லிக் கொண்டது
எனக்கு விடுதலை !
புல்லின் பாஷை அறியாமல்
கட்டிக் கொண்டு துயில்கின்றனர்
தம்பதிகள்.
"கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்"
மடையர்கள்
புல் சரி...கல் எப்படி ?!
கோபித்துக் கொண்டு
சுளித்த முகத்துடன்
தரையில்
தனியாய் புல் !

நோட்:
படம் கூகுளில் தேடுகையில் உயிர்மையில் கிடைத்தது.

9 comments:

நாமக்கல் சிபி said...

//பாவம் படிக்கிறவங்க//

அதேதாங்க்!

கலகலப்ரியா said...

புரியல... ஆனா நல்லாருக்கு கார்த்திகா... =))...

Unknown said...

அருமையான படம் கார்த்திகா...

பதிவு எழுதுவதற்கான உங்களின் முயற்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது

(கவிதையைப் பத்தி வேற என்ன சொல்ல? கு.கு எதிர் கவுஜயப் பாத்துக்க வேண்டியதுதான்)

அண்ணாமலையான் said...

இந்த மூனு பேர விட நான் என்னத்த சொல்ல?

KarthigaVasudevan said...

@ நாமக்கல் சிபி (அதான் நாங்களே சொல்லிட்டோம்ல ...சொன்னதையே திருப்பி சொல்லிக்கிட்டு) :(

@ கலகலப்ரியா ...பொய் தான சொல்றிங்க!!! நல்லாவா இருக்கு?! :)))

@ முகிலன் ... என்ன ...என்ன...என்ன ஆச்சர்யம்?! கு.ஜ.மு.க பெரிய பா.ஜ.க வா? இல்ல பா.ம.கா வா? போங்கப்பா எதிர் கவிதை போட்டுக்கங்க. :(

@ அண்ணாமலையான் ...ஆமாம் ரொம்ப முக்கியம்... நீங்களும் ஏதாவது சொல்லுங்க!
:(

Henry J said...

unga blog romba nalla iruku

High Definition Youtube Video Download Free

visit 10 to 15 Website and EARN 5$

CineMa Tickets Booking Online

R.Gopi said...

எங்க கதி அப்போ, அதோ கதிதானா கார்த்திகா??


ஆனாலும், இந்த வரிகள் ரொம்பவே ரசிக்க வைத்தது...


//மடையர்கள் புல் சரி...கல் எப்படி ?!//

சூப்பர் வரிகள்.......!!!

அகநாழிகை said...

கவிதையின் பாடுபொருள் அருமை. இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம்.

குடுகுடுப்பை said...

நாங்க ச.ம.க வை விட பெரிய கட்சி