Tuesday, February 16, 2010

Drawings ... My Daughter


எலியை விரட்டும் யானை (ரொம்ப டயர்ட் ஆயிருச்சாம் யானை ...!) படம் கொஞ்சம் இருட்டா இருக்கு ,நல்லா உத்துப் பார்த்தா தாங்க யானையும் எலியும் கண்ல படறாங்க.என்ன பண்ண என் பொண்ணு வரைஞ்சதாச்சே ! ஆவணப்படுத்தும் முயற்சி தான்.
இதை எழுதும் போது அடிக்கடி எங்களை கலாய்க்க என் தம்பி சொல்வான் "தன்னை தானே மெச்சிக்குமாம் தவிட்டுக் கோழி " சொலவடை ஞாபகம் வந்தாலும் விட்ருவமா நாங்க?!
பாப்புவுக்காக ஒரு நல்ல டிராயிங் டீச்சர் தேடிட்டு இருக்கேன் ...பல திறமைகள் ... ;) என் பொண்ணுகிட்ட இருந்தாலும் தனித் திறமைகளை கண்டடையற முயற்சி தான். அண்ணாநகர் திருமங்கலம் ..வில்லிவாக்கம் பிரதேசங்களில் திறமையான Drawing டீச்சர்ஸ் யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா பரிந்துரையுங்கள் :)))

13 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா இருக்கு யானை.. :)

alex paranthaman said...

குழந்தைகள் தான் மிகச்சிறந்த கலைஞர்கள். அவர்கள் பேசுவதே கவிதை தான். நடந்தால் நடனம்.

ஆவனப்படுத்துங்கள். உங்கள் குழந்தை மிகச்சிறந்த கலைஞராகப் பரிணமிப்பார்

R.Gopi said...

கார்த்திகா...

படம் கொள்ளை அழகு... ரொம்ப நல்லா இருக்கு...

குழந்தையின் ஒவ்வொரு செயலுமே நம்மை பரவசப்படுத்துமே...

மன்னார் அமுதன் சொன்னது போல் :

அவர்கள் நடந்தால் நடனம்
பேசினால் கவிதை

அவர்கள் தெய்வத்தின் மறுவடிவம்..

உங்கள் குழந்தை அனைத்து கலைகளிலும் தேர்ந்து சிறந்து விளங்க அந்த சரஸ்வதி அருள் புரியட்டும்...

சந்தனமுல்லை said...

ரொம்ப சுட்டியா இருக்கு யானையும் எலிகளும்! :-)

ஹுஸைனம்மா said...

நல்ல கற்பனைத் திறன். அழகாருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

படம் அழகு....

வல்லிசிம்ஹன் said...

வலைப்பூ உலகத்துக்கு இன்னோரு யானை ரசிகை கிடைத்துவிட்டாள்.
ரொம்ப அழகா வந்து இருக்கு யானை. யானை அளவும் எலி அளவும் தத்ரூபமாகப் பொருந்துகின்றன.

KarthigaVasudevan said...

நன்றி முத்துலெட்சுமி...

நன்றி மன்னார் அமுதன்

நன்றி R.Gobi ...

நன்றி சந்தனமுல்லை

நன்றி ஹூசைனம்மா

நன்றி Sangkavi

நன்றி வல்லிம்மா ...

நாமக்கல் சிபி said...

பொன்ஸ்க்கு பிறகு அடுத்த யானை ரசிகையா?

நாமக்கல் சிபி said...

நல்லா என்கரேஜ் பண்ணுங்க!

சாமக்கோடங்கி said...

படத்தில் ஒரு அன்னையின் பாசம் தெரிகிறது..

நன்றி..

அது சரி(18185106603874041862) said...

உற்றுக் கவனித்தால், யானைக்கு மட்டுமே வியர்வை தெரிக்கிறது...எலிக்கு எதுவும் இல்லை...யானை எவ்வளவு தூரம் ஓடியதோ அதை விட எலி இரண்டடி தூரம் அதிகம் ஓடியிருந்தாலும்!...

உங்கள் மகளின் சுற்றுப்புறத்தை உன்னித்து கவனிக்கும் திறமையும், கற்பனையும் அபாரம்! சிறந்த ஓவியராக வாழ்த்துக்கள்!

KarthigaVasudevan said...

நன்றி நாமக்கல் சிபி... நல்ல டிராயிங் டீச்சர் தேடிட்டு தான் இருக்கேன் .

நன்றி பிரகாஷ்

நன்றி அதுசரி ...(நல்லாத் தான் கவனிக்கறீங்க அதுசரி நீங்களும் :)))