Thursday, February 25, 2010

தசையினை தீ சுடினும் ...

எதிலோ புதைந்து போனதை எங்கோ தேடி விட்டு
கனவிலிருந்து விழித்தெழுகையில்
தீராத் தேடல்
திகைப்பூண்டாய்
தகை கொள்ளும் நினைவுகள்
தசையினைத் தீ சுடினும்
கண்ணம்மா
நீ தெரிந்து கொள் ;
தேம்பாவணி முற்றத்தில்
கலம்பகம் கை அள்ளி
குறவஞ்சி கொஞ்சியோட
அகமும் புறமும்
பழமொழி பேச
சூளாமணியோடு சிந்தாமணி போல
அந்தாதி பாடும் அபிராமி
ஜன்னல் வழித் தெரியும்
என் அடுத்த வீட்டுப் பெண்;
எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
விழித்தெழும் கனவுகள்.

11 comments:

Unknown said...

கவிதை அருமை கார்த்திகா.

//சூளாமணியோடு சிந்தமாணி போல//

சூடாமணி இல்லை?

குடுகுடுப்பையின் எதிர் கவிதைக்குக் காத்திருக்கிறேன்.. :))

நட்புடன் ஜமால் said...

கனவிலிருந்து விழித்தெழுந்து

கடைசியில் விழிந்தெழும் கனவுகள்

நல்லாயிருக்குங்க

குடுகுடுப்பை said...

கவுஜ போட்டாச்சு

அண்ணாமலையான் said...

நீங்களும் இப்பதான் விழித்தெழுந்துறீக்கங்க போல?

அமுதா said...

/*எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
விழித்தெழும் கனவுகள்*/
நல்லா இருக்குங்க...

Vidhoosh said...

அங்க படிச்சுட்டுதான் இங்க வந்தேன். :) அருமையான கவிதைங்க

ஜெய்லானி said...

நல்ல கவிதை!!!!!!!

KarthigaVasudevan said...

நன்றி முகிலன்...சூளாமணி தான் கரெக்ட்.சூடாமணி ஒரு வித ஆபரணம் ராமாயணத்துல வரும் ஹனுமான் சீதைகிட்ட இருந்து சூடாமணி வாங்கிட்டு வந்து ராமன் கிட்ட காட்டறதா படிச்ச ஞாபகம்.
எதிர் கவிதை படிச்சிட்டு கமெண்ட்டும் போட்ருக்கோம் அங்க. :))


நன்றி ஜமால் ...கனவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை.கனவிலிருந்து விழித்து எழுவதும் கனவைப் போலவே சுகமானது .

KarthigaVasudevan said...

குடுகுடுப்பை said...
கவுஜ போட்டாச்சு

கவுஜயா ...கவிதைன்னு சொன்னா எவ்ளோ நல்லா இருக்கு!!!கவுஜயாம்...கவுஜ!!! படிச்சிட்டோம்...படிச்சிட்டோம். :)))

KarthigaVasudevan said...

நன்றி அண்ணாமலையான்

நன்றி அமுதா...

நன்றி விதூஷ் ...

நன்றி ஜெய்லானி

க.பாலாசி said...

கவிதை மிக நன்றாக இருக்குங்க...