Wednesday, December 16, 2009

பிஞ்சுகள் ...

மாய மாயா லோகங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத பூமிப் பந்து
பச்சைக் கிளிகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகளின் கனமேந்தி உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
ஏடு படிந்து போன பாசாங்காய்
ஏசுநாதரின் சிலுவையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
நிஜக்குளிர் அலுத்துப் போய்
வெம்மை தேடி அலைகையிலே
இன்னுமொரு பிஞ்சு
சர்ப்ப பிசாசின்
இச்சைகளின் வடிகாலாகுமோ!

3 comments:

அண்ணாமலையான் said...

”பச்சைக் கிளிகளின் பிய்த்து எறியப்பட்ட”
“இன்னுமொரு பிஞ்சு” என்ன ஒரு இளகின மனம்.. வாழ்த்துக்கள்

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

அது சரி(18185106603874041862) said...

எனக்கு புரியற மாதிரி இருக்கு...ஆனா புரியுதான்னு புரியலை...:0)))