Thursday, December 3, 2009

கல்கி வெறும் கவர்ச்சி

நேற்றைய ஜூனியர் விகடனில் வெளியான செய்தி ஒன்று "கல்கி பகவானும் அவரது மகன் கிருஷ்ணா ஜியும் பிரிகிறார்கள் " கிருஷ்ணா ஜி கல்கி மற்றும் அம்மா பகவானின் (!!!)அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து தனியானதொரு அமைப்பு தொடங்கவிருக்கிறார் என்பது. மிகவும்

கசப்பான உணர்வைத் தந்த செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும் .
தந்தையின் "ஒன்னெஸ் " அமைப்பு மூலம் திரட்டிய மக்கள் நிதி பற்றாக் குறை ஆகி விட்டதா என்ன ?என்ற ஆயாசமே மிகுதியானது. விஸ்வநாத் என்பவர் கல்கியின் (விஜயகுமார்) நண்பர் இவர் இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே கல்கி மீது குற்றச் சாட்டை எழுப்பியே வருகிறார்,ஆனால் நமது மீடியாக்கள் பரபரப்பிற்காக ஓரிரு நாட்கள் செய்திகளைப் பிரசுரிப்பதோடு ஓய்ந்து விடுகின்றன. காரணம் கல்கியை நம்பும் மிகுதியான வி.ஐ.பி பக்தர்களாகக் கூட இருக்கலாம். சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் கல்கியை ஆதரித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

குங்குமம் மற்றும் அவள் விகடனில் கல்கி பகவானின் அற்புதங்கள் குறித்து விளம்பரம் கூட வெளியாகிறது ,யோசியாமல் நம்புவதற்கு தான் ஏராளம் பேர் இருக்கிறார்களே. அனுபவ ரீதியாக எனக்குத் தெரிந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால் தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

மனிதர்களுக்குப் பட்டால் தான் புத்தி வரும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ?! ஐந்தாயிரம் ரூபாய்கள் செலவழித்து கல்கி பகவன் மற்றும் அவரது மனைவியான அம்மா பகவான் தரிசனம் செய்து வந்தவர்களில் நாங்களும் உண்டு என்பதால் அனுபவ சான்றுகளுடன் தெரிய வந்த விஷயம் .
அங்கே பணமே பிரதானம்.
வரயக்யம் என்று ஒரு பூஜை
மகா வரயக்யம்
முக்தி யக்யம்
யூத் வரயக்யம்
கலச பூஜை
அம்மா பகவான் திருக்கல்யாணம்

நானறிந்த வரையில் இப்படிப் பல பூஜைகள் நடத்துவார்கள் .இதற்க்கு தேவைப் படும் நிதி எல்லாம் அங்கே "கல்கி டிவோட்டிகள் "(கல்கி பக்தர்கள்) தலையில் சுமத்தப் படும். பூஜைக்குத் தேவையான அழைப்பிதழ்கள் அச்சிடுவது வாகனச் செலவுகள்,பூக்கள்,பழங்கள் முதற்கொண்டு இன்ன பிற எல்லா செலவுகளையும் இன்னின்னவர் என்று ஸ்பான்சர் பிடித்து சாதிக்க வேண்டும்,இந்த பூஜைகளை நடத்துவதற்கென்று "தாசா ஜிக்கள் "(கல்கி அடியார்கள்) இருப்பார்கள் ,அவர்கள் இப்படி இப்படி செய்யுங்கள் என்று ஆணை இடுவதோன் சரி பணம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே பக்தர்கள் தான் திரட்டித் தந்தாக வேண்டும்.

சத்சங்கம் செய்வது ...எனக்கு இன்ன குறை என்று மனம் விட்டுப் பேச விரும்பும் பக்தர்களுக்கு தனக்குத் தெரிந்த வகையில் சில தத்துவங்களைக் கூறி அவர்களது மனம் சமாதானம் அடைய வைப்பது ,திரட்டிய நிதிகளை பகவானிடம் கொண்டு சேர்ப்பது இது மட்டுமே கல்கி தாசாக்களின் வேலை.

இப்படி தமிழகம் முழுக்கவே இவர்கள் பரவி இருந்தனர் 2000 ஆம் ஆண்டு வாக்கில் ,இப்படி திரட்டிய நிதிகளை இவர்கள் எப்படிப் பயன் படுத்தினார்கள் என்பதற்கு கல்கிக்கே வெளிச்சம்.அவரது மகனின் நிர்வாகத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றும் ,காஸ்மிக் எனும் ஆடியோ நிறுவனம் ஒன்றும் இருப்பது பக்தர்களுக்கு தெரியும் .

கல்கி என்ன பரம்பரை பணக்காரரா? படி நிலை வளர்ச்சி என்பது அம்பானியில் இருந்து லக்ஷ்மி மிட்டல் வரை கண் கூடாக செய்திகள் மூலம் நமக்குத் தெரிந்தவை,ஒன்னெஸ் மையம் என்ற பெயரில் சகல நவீன வசதிகளுடன் வெளி நாட்டினரை ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய வழிபாட்டு தியான மண்டபம் கட்டி இருக்கிறார்கள்.

கொசுறு :

அம்மா பகவான் தரிசனம் செய்ய ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5000 வாங்கினார்கள் ,நேற்று ஜூ.வி யில் 50 ,000 என்று படித்த ஞாபகம் ,அடடா...என்ன ஒரு படி நிலை வளர்ச்சி .

பிரபலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு இவர்கள் எல்லாம் எங்கள் பக்தர்கள் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள். உதாரணம்...மனீஷா கொய்ராலா,ஷில்பா ஷெட்டி,எஸ்.ஏ .சந்திர சேகர் தம்பதி,தாமு,எழுத்தாளர் இந்துமதி( இவர் நான் கல்கி பக்தை இல்லை என்று முன்பே பேட்டி கொடுத்து விட்டார்.) இப்படிப் பலர் உண்டு.

சில வருடங்களுக்கு முன் தேனிக்கு அருகில் வீரபாண்டித் திருவிழாவுக்கு வருகை தந்த நகைசுவை நடிகர் தாமு "கல்கி தர்மம் (!!!) பரப்ப என்று போடப் பட்டிருந்த ஒரு ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் அ.தி.மு. கா வுக்கு ஓட்டுப் போடுமாறு ஸ்டாலுக்கு வந்தவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். அ.தி.மு.கா என்றால் இனி "அம்மா தர்ம முன்னேற்றக் கழகமாம் " அங்கிருந்த பக்தர்கள் சொல்லக் கேள்வி .

இந்த ஸ்டாலும் வீர பாண்டித் திருவிழா காலங்களில் பக்தர்களின் நிதியால் மட்டுமே போடப் படும் ,ஏறத்தாழ எல்லா ஆன்மீக இயக்கங்களும் இப்படித் தான் என்றாலும் இது கொஞ்சம் அதிகப் படி என்று தோன்றக் காரணம் நானும் சில வருடங்கள் நேரில் கண்ட பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் சில உண்டு என்பதால் மட்டுமே .

கல்கி பகவான் ரூரல் சர்வீஸ் என்ற பெயரில் பக்தர்களே அரிசி பருப்பு எல்லாம் சேகரம் செய்து கொண்டு பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று அவர்களே சமையல் செய்து கிராமத்தோரை அன்போடு அழைத்து இலை போட்டு உணவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடித்த் பின் அந்த எச்சில் இலைகளையும் எடுக்க வேண்டும் அப்போது தான் பகவானின் முழு பலன் கிட்டுமாம். நிஜம் என்றே ஒத்துக் கொள்ளத் தோன்றினாலும் கல்கி அடியார்கள் ஒரு போதும் என்றேனும் ஒருநாள் மட்டும் கூட அப்படி இலை எடுத்து நான் கண்டதில்லை. இதுவல்லவோ பக்திப் பெருக்கு!!!

முக்தி யக்யம்
என்ற பெயரில் வலுக்கட்டாயமாக பணம் கட்டி சென்னைக்கு அருகில் நேமத்தில் நடக்கும் ஒரு பூஜைக்கு பக்தர்களை போகச் சொன்னதை பல முறை நான் கண்டிருக்கிறேன்,மறுக்கும் பக்தர்கள் நாளடைவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப் படுவார்கள்.ஆனால் அவர்கள் நடத்தும் ..நடத்தப் போகும் பூஜைகளில் பணம் செலுத்தி கலந்து கொள்ள மட்டும் மறக்காமல் அழைப்பு மீண்டும் மீண்டும் அனுப்பப் படும்.

இதை விட பக்தர்களின் வாரிசுகளை தாசாஜிக்கலாக அனுப்பச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?! எனும் கேள்வி அடியார்களால் கேட்கப் பட்டதும் அங்கே உண்டு.அதில் மிரண்டு வெளியேறிய பல பக்தர்களை நான் அறிவேன்.

எதற்கு நீட்டி முழக்குவானேன். "கல்கி வெறும் கவர்ச்சி மட்டுமே " அவர் தெய்வம் கடவுள் விஷ்ணுவின் பத்தாது அவதாரம் என்பதெல்லாம் வெறும் கப்ஸா என் போன்றவர்களுக்கு,இன்னும் கல்கியை நம்பக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை .

ஆன்மீகம் வியாபாரம் தான் என்பதை யாராவது தெள்ளத் தெளிவாக அறிய விரும்பினால் கல்கி பூஜைகளில் தொடர்ந்து பங்கெடுத்துப் பாருங்கள்.பிறகே உங்களுக்கே தெரியும் எல்லாம்.

15 comments:

துளசி கோபால் said...

கட் அவுட் கல்யாணம்கூட நடத்தறாங்களாமே அமெரிக்காவில்:-)))))


நானும் ஒரு துளசி மடம் ஒன்னு ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன். பூனைச் சாமியாரிணி.

சந்திக்க அம்பதாயிரம் வேணாம். கொஞ்சம் கு'ரை'ச்சுக்கலாம். பதிவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

நீங்கதான் போணி பண்ணனுமுன்னு கேட்டுக் கொள்கிறேன். அனுகிரகம் டபுள் உங்களுக்கு:-)

M.G.ரவிக்குமார்™..., said...

டேய்!டேய்!.......உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா!..........

நன்றி:திரு.விவேக்.

Thekkikattan|தெகா said...

துள்சி :)), செம ஜாலியா இருக்கு உங்க பின்னூட்டங்கள் எல்லாம், எல்லா இடத்திலும்...

டவுட்னு பேர வைச்சிக்கிட்டு முன்னமே நீங்க டவுட் பண்றதில்லையா இந்த மாதிரி விசயத்தில எல்லாம். சரி, சரி இனிமேலாவது முழிச்சிக்கோங்க... தைரியமா இங்கே கொண்டு வந்ததிற்கும் ஒரு சிறப்பு நன்றி... :)

அது சரி(18185106603874041862) said...

//
ஐந்தாயிரம் ரூபாய்கள் செலவழித்து கல்கி பகவன் மற்றும் அவரது மனைவியான அம்மா பகவான் தரிசனம் செய்து வந்தவர்களில் நாங்களும் உண்டு என்பதால் அனுபவ சான்றுகளுடன் தெரிய வந்த விஷயம் .
//

இதில் எனக்கு உறுத்தலான ஒரு விஷயம்...இந்த மோசடிக்காரனையும் அவனது மனைவியான ஒரு மோசடிக் காரியையும் இன்னமும் கல்கி பகவான்/அம்மா பகவான் என்றே நீங்கள் எழுதியிருப்பது...

மோசடிக்காரனுக்கு என்ன பகவான் மரியாதை?? இந்த இரண்டு சமூக நோய்களும் அதை சுற்றி இருக்கும் கும்பலும் இருக்க வேண்டிய இடம் ஆயுள் தண்டனையுடன் சிறையில்...ஏன், மொத்த கும்பலுக்கும் நடுத்தெருவில் தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்...அடுத்து வரும் பல திருட்டு கும்பல்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்... அப்படி ஒரு காரியம் நடந்தால் உண்மையான விடிவை நோக்கி தமிழ்நாடு நடக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம்...

ஆனால் எங்கே? ஐம்பதினாயிரம் செலவு செய்து அவனுக்கு பாத பூஜை செய்து அதை தலையில் தெளித்து கொள்ள க்யூவில் நிற்கிறார்கள்...

இதற்கு மேல் எழுதினால் இன்னமும் கடினமான வார்த்தைகள் வந்து விழக்கூடும் என்பதால் இத்துடன்.

அது சரி(18185106603874041862) said...

//
அம்மா பகவான் திருக்கல்யாணம்
//

எதுனா கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சாலும் மழை வரும்னு ஊர்ல சொல்வாங்க....இந்த வயசில இந்த சனியன்களுக்கு எதுக்கு கல்யாணம் அதுவும் அடுத்தவங்க செலவுல‌?? ஒரு வேளை இது ரெண்டும் சாமி படத்துல வர்ற மாதிரி "புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கிடற" கோஷ்டியா??

அது சரி(18185106603874041862) said...

//
முக்தி யக்யம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக பணம் கட்டி சென்னைக்கு அருகில் நேமத்தில் நடக்கும் ஒரு பூஜைக்கு பக்தர்களை போகச் சொன்னதை பல முறை நான் கண்டிருக்கிறேன்,மறுக்கும் பக்தர்கள் நாளடைவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப் படுவார்கள்.
//

ஆமா...அப்படியே அந்த பூஜைல கலந்துக்கிட்டாலும்....ம்ம்ம்...நாட்ல நல்லவங்களுக்கெல்லாம் சாவு வருது...இந்த விஜயகுமார் மாதிரி *****ங்களுக்கு சாவு வர மாட்டேங்குது...

அது சரி(18185106603874041862) said...

//
ஆன்மீகம் வியாபாரம் தான் என்பதை யாராவது தெள்ளத் தெளிவாக அறிய விரும்பினால் கல்கி பூஜைகளில் தொடர்ந்து பங்கெடுத்துப் பாருங்கள்.பிறகே உங்களுக்கே தெரியும் எல்லாம்.
//

இதுக்குத் தான் அப்பவே சொல்லி வச்சிருக்கார்...கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி...கடவுளை பரப்புபவன் அயோக்கியன்...

கரெக்டா இருக்கா இல்லியா??

kankaatchi.blogspot.com said...

உன்னை எந்த வஸ்து உனக்குள்ளே இருந்துகொண்டு உன்னை இயக்குகிறதோ அதுதான் கடவுள் என்றும் அதை உன்னுள் தேடு என்றுதான் அவனை அறிந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த உலகம் அழிந்து போகும் இந்த உடலை கடவுள் என்று நம்பி ஏமாந்து போய் கொண்டிருக்கிறது. அவர்களை யாரும் திருத்த முடியாது. திருந்துபவர்கள் திருந்தட்டும். திருந்தாதவர்கள் வருந்தட்டும்

KarthigaVasudevan said...

// துளசி கோபால் said...
கட் அவுட் கல்யாணம்கூட நடத்தறாங்களாமே அமெரிக்காவில்:-)))))//


விஜய் டி.வி ல முன்னாடி யு.கி.சேது நையாண்டி தர்பார்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.இப்போ அதைக் காணோம் ,நல்ல இருக்கும் பார்க்க, பேசாம நீங்க ட்ரை பண்ணலாம் டீச்சர் அந்த ப்ரோக்ராம் நடத்த.அடடா...என்ன ஒரு நக்கல்...நையாண்டி,உங்க கமெண்ட்ஸ் சூப்பர். படிச்சிட்டு இதுக்காக மட்டும் வேணும்னா இந்த பூனைச் சாமியாரினிக்கு அடியார் ஆகிடலாம் யாராச்சும்!!!( சத்தியமா நான் இல்லைங்க) :)))))

KarthigaVasudevan said...

// நேசன்..., said...

டேய்!டேய்!.......உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா!..........

நன்றி:திரு.விவேக்.//

"திருந்தறதா அட கெட்டுப் போனா தானங்க திருந்தனும் ? "

கேட்பாங்கல்ல ...கேட்பாங்கல்ல ...கேட்பாங்கல்ல நம்ம நல்ல மனசுக்கார ஜனங்கள்!!!

:)))

நேசன் யாரும் தானா திருந்தினாத்தான் உண்டு,எத்தனை பெரியார் வரட்டுமே!!!

KarthigaVasudevan said...

Thekkikattan|தெகா said...

துள்சி :)), செம ஜாலியா இருக்கு உங்க பின்னூட்டங்கள் எல்லாம், எல்லா இடத்திலும்...

டவுட்னு பேர வைச்சிக்கிட்டு முன்னமே நீங்க டவுட் பண்றதில்லையா இந்த மாதிரி விசயத்தில எல்லாம். சரி, சரி இனிமேலாவது முழிச்சிக்கோங்க... தைரியமா இங்கே கொண்டு வந்ததிற்கும் ஒரு சிறப்பு நன்றி... :)//

முழிச்சிகிட்டு வருஷம் ஏழு ஆச்சு தெக்கிக்காட்டான்...
இந்தப் பதிவு இன்னும் முழிசிக்காம தூங்கறவங்களையும் ...தூங்கற மாதிரி நடிக்கரவங்களையும் கொஞ்சம் தட்டி எழுப்பத் தான்.

அப்புறம் ப்ளாக் பேர் தான் டவுட் ...என் பேர் Mrs .Dev

:)

KarthigaVasudevan said...

//அது சரி said...

இதில் எனக்கு உறுத்தலான ஒரு விஷயம்...இந்த மோசடிக்காரனையும் அவனது மனைவியான ஒரு மோசடிக் காரியையும் இன்னமும் கல்கி பகவான்/அம்மா பகவான் என்றே நீங்கள் எழுதியிருப்பது...//

ஆமாம் மோசடிக்காரங்க தான் அவங்களை வெறுமே பத்மாவதின்னு சொன்னா யாருக்குப் புரியும்?! அம்மா பகவான் (!!!) இப்படிச் சொன்னாதாங்க புரிய வேண்டியவங்களுக்கு புரியும். ஆச்சர்யக் குறியைக் கவனிக்கலையோ நீங்க ?! உறுத்தல் வார்த்தைகளில் மட்டுமா அதுசரி ? இன்னும் மக்கள் தங்களுக்கான ஆன்மீக குருக்களை (பெரும்பாலும் போலிகளே)இடை விடாம தேடி அலைஞ்சிட்டு இருக்காங்க பாருங்க அதில் தான் மாகாப் பெரிய உறுத்தல் .

இப்பதிவின் மூலம் என்னுடைய நோக்கம் இன்னோரன்ன வார்த்தைகள் மூலம் அவர்களை அவமானப்படுத்துவது அல்ல இவர்கள் இப்படி என்று அடையாள படுத்துவது மட்டுமே.

KarthigaVasudevan said...

// enpaarvaiyil said...

உன்னை எந்த வஸ்து உனக்குள்ளே இருந்துகொண்டு உன்னை இயக்குகிறதோ அதுதான் கடவுள் என்றும் அதை உன்னுள் தேடு என்றுதான் அவனை அறிந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த உலகம் அழிந்து போகும் இந்த உடலை கடவுள் என்று நம்பி ஏமாந்து போய் கொண்டிருக்கிறது. அவர்களை யாரும் திருத்த முடியாது. திருந்துபவர்கள் திருந்தட்டும். திருந்தாதவர்கள் வருந்தட்டும்//


திருந்துபவர்கள் திருந்தட்டும். திருந்தாதவர்கள் வருந்தட்டும்//

இது வாஸ்த்தவமான பேச்சு .

செய்வதற்கோ சொல்வதற்கோ வேறெதுவும் இல்லை. நிஜம் இது தான்.

Vidhya Chandrasekaran said...

நல்ல இடுகை. முதல் கமெண்டே ROTFL:)

sundar said...

எல் ஐ சி அலுவலக பணியாளராக இருந்த விஜயகுமார் இன்று மனைவியோடு திருக்கல்யாணம் பண்ணிக் கொள்கிற கடவுளா ? ஆனாலும் இது ரொம்ப ரொம்ப டூ மச்!!

சுந்தர்