Sunday, November 1, 2009

அடைதோசை



அடைதோசை :


தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு கப்
கடலைப் பருப்பு -அரை கப்

பாசி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10 உரித்தது

தக்காளி - ஒன்று (பெரியது)

காய்ந்த மிளகாய் வற்றல் - 5 அல்லது ஆறு

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை &கொத்து மல்லித் தளை - கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் தேவையான பருப்பு வகைகளை மேற்சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும் , இட்லிக்கு அரைப்பதைப் போலவே ஆனால் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கடைசியாக வெங்காயம் ,தக்காளி (பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ),காய்ந்த மிளகாய்,சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து அரைத்த பின் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு எடுத்து அடையாக ஊற்றி சாப்பிடலாம் ,அடைக்கு சாதா தோசையைக் காட்டிலும் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அதிகம் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்தால் சுவை அருமையாக இருக்கும் .

அடைக்கு அவியல் பிரமாதமான சைடு டிஷ் ,அதைத் தவிர்த்து அவசரத்திற்கு காரச் சட்னியோ அல்லது தேங்காய் சட்னியோ கூட செய்து சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். காலை டிஃபனுக்கு அருமையான உணவு .

அடை பதிவுக்குத் தோதான படம் கூகுளில் தேடியதில் கிடைத்தது ,
நன்றி கதம்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்

3 comments:

ராமலக்ஷ்மி said...

நான் தக்காளி சேர்ந்து செய்து பார்த்ததில்லை. பார்த்து விடுகிறேன்:)! நன்றி மிஸஸ். தேவ்.

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்ல மெல்லிசா அடையைப் பார்த்ததும் பாரட்டலாமுன்னு நினைத்தால் அது கூகுளாண்டர் கிட்ட சுட்டதுன்னு சொல்லிட்டிங்க. பரவாயில்லை, நான் அடை அவியல் பயித்தியம், வெல்லம் அல்லது பாகு தொட்டு சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

my favorite tooooooo