Thursday, August 20, 2009

அழுத்தமான கோடுகள்

அழுத்தமாகப் போட்டுக் கொண்ட
சில கோடுகளை
அழிக்க முடிந்தும்
அழிக்க நினைத்தும்
அழியாமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
கோட்டுக்குள்
தாண்டாமல் நிற்கும்
கால்களுடன்
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
திமிர்ந்த ஞானச் செருக்கும்
கொண்டவளாய்
நிற்பவள்

.
.
.
.
.
பெண்

14 comments:

Indy said...

புது ஸ்டைல்.
மிகவும் அருமை இந்த கவிதை.

அது சரி(18185106603874041862) said...

one word!

WOW!

அது சரி(18185106603874041862) said...

You know Mrs.Dev, writing once in a month is a bad idea, you should write more and more like this.

அது சரி(18185106603874041862) said...

And also, you should join Tamilish, so that writings like this will reach more people :0))

Vetirmagal said...

Superb!

Anonymous said...

சில கோடுகள் ரேகை மாதிரி அழிக்க முடிவதில்லை. :)

சந்தனமுல்லை said...

மிஸஸ்.தேவ்..வெகு அருமை!! நச்-னு இருக்கு!!

நட்புடன் ஜமால் said...

கோட்டுக்குள்
தாண்டாமல் நிற்கும்
கால்களுடன்]]


இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழுத்தமா சொல்லியிருக்கீங்க

நல்லா இருக்கு.

KarthigaVasudevan said...

நன்றி Indy,

நன்றி அது சரி...

tamilish ல இணைக்கறது எப்படின்னு இன்னும் எனக்குத் தெரியலை,முயற்சிக்கறேன் இனி.

//writing once in a month is a bad idea, you should write more and more like this.//

நான் ஒரு மாசம் முழுக்க எழுதாம இருந்தேனா ? ஆச்சரியமா இருக்கே அதுசரி .

KarthigaVasudevan said...

நன்றி Vetrimagal


//சின்ன அம்மிணி said...
சில கோடுகள் ரேகை மாதிரி அழிக்க முடிவதில்லை. :)
//

ஆமாங்க சின்ன அம்மிணி

நன்றி சந்தனமுல்லை

நூற்றாண்டுகள் இல்லை ஜமால் ..யுகம் யுகமாய் ...யுகம் கடந்தும் அப்படித்தான்.

நன்றி அமித்துஅம்மா

Unknown said...

ஒரு வழியா இந்தக் கவிதை எனக்குப் புரிஞ்சிடுச்சி..

அருமையா இருக்கு.. இது மாதிரி கொஞ்சம் புரியிற கவிதை எழுதுங்களேன். ப்ளீஸ்?

Unknown said...

அல்லது திருக்குறள் உரை மாதிரி உரை போட்டிங்கன்னா கூட நல்லா இருக்கும்.

Anonymous said...

அருமை!