வாழ்தலுக்கான
நியாயங்கள்
மழுங்கடிக்கப்பட்ட
அகண்டதோர் சமவெளியில்
மருந்தென்ற பெயரில்
ஊமைச்சமாதானமாய்
வெறும்
வேம்புகள் ;
கரும்பு வேண்டாம் ...
கற்கண்டும் வேண்டாம்
வேம்பின்
ருசியறியா
நாவின் நரம்புகள் தா ...
வேம்பைக் குறித்தெழும்
மறுப்புகள்
மறக்கப்படும் .
3 comments:
தேவுக்கு சீக்கிரமே இந்த நாக்கு கிடைக்கவேண்டும். தயிர் சாத ருசியும் அறியாத நாக்குமாய் இருக்கவேண்டும்
//வாழ்தலுக்கான
நியாயங்கள்
மழுங்கடிக்கப்பட்ட
அகண்டதோர் சமவெளியில்//
ஆரம்பமே அசத்தலா இருக்கே....
//மருந்தென்ற பெயரில்
ஊமைச்சமாதானமாய்
வெறும்
வேம்புகள் ; //
இவை எவற்றை குறிக்கின்றன?
முடிவில் நீங்கள் குறிப்பிடுவது ...... கசப்பை மறக்கும் மருந்தா? வாழ்வின் கசப்புகளையா?
முதன்முதலாக வருகை தருகிறேன்... இனி தொடர்ந்து வருவேன்...
நீங்களும், நேரம் கிடைக்கும் போது, என் வலைப்பூ பக்கம் வந்தால் மகிழ்வேன்.
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
வாழ்த்துக்கள் மிஸஸ் தேவ்....
நல்லா இருக்குங்க
வாழ்த்துக்கள்
Post a Comment