நெடு நேரக் கனவின் பின்
ஒருநாள் விழித்தெழுந்தும்
தொடரும்
கனவின் நிழலில்
இடிபாடுகளுடன்
அழுக்கடைந்த கலசங்களின்
உச்சியில்
பட்டும் படாமலும்
சட சடத்துப் பறக்கும்
புறாக்களின் சிறகசைவில்
காற்றின் மென் சுருட்டலில்
அதிரத் தளும்பும்
உலர் பூக்களின் சறுகோசையில்
அத்திப் பழ இனிப்பு நெடியில்
கை ஒட்டிய பாவனையில்
துடைத்துக் கொள்ள துணி தேடும்
தூசுக் கலவை நாசி தாக்க
புகை படிந்த ஓவியமாய்
ஞாபகப் பரணில்
பத்திரப்படுத்தப் பட்ட
ஏதோ ஒரு கோயில்
நிஜமாய் கண்ணில் பட்டால்
கனவு மெய்ப்படுமே
வாழ்வின் நிஜங்கள் தென்படுமே ?!
9 comments:
இந்தக் கவிதை கொஞ்சமோ கொஞ்சம் எனக்குப் புரியற மாதிரி இருக்குது.
நன்றி ராஜநடராஜன், எப்படியோ கவிதை புரிந்ததில் சந்தோசமே...
கனவு மெய்ப்பட வாழ்த்துகள்! இஃகிஃகி!!
நல்லாயிருக்கு கவிதை.
கனவு மெய்ப்பட்டால் வாழ்வின் நிஜங்கள் தென்படும். அதே சமயம் கனவு பொய்க்க நேர்ந்தால் வாழ்வின் நிஜங்கள் புரிபடும். இதுவும் சரிதானே:)?
அத்திப் பழ இனிப்பு நெடியில்\\
அருமை பிரயோகம்
கனவு மெய்ப்படட்டும் மெய்யாக ...
//
துடைத்துக் கொள்ள துணி தேடும்
தூசுக் கலவை நாசி தாக்க
//
ஆஹா...எதுகை மோனை பின்றீங்க போங்க! எப்படி உக்காந்து யோசிப்பீங்களா இல்ல கண்ணதாசன் மாதிரி முதல் வரி சிக்கினதும் அடுத்த வரியெல்லாம் தானா வருதா??
//அத்திப் பழ இனிப்பு நெடியில்//
இனிமையான வார்த்தைக் கோர்ப்பு...கவிதை அழகு...
// பழமைபேசி said...
கனவு மெய்ப்பட வாழ்த்துகள்! இஃகிஃகி!!//
நன்றி பழமைபேசி அண்ணா
//ராமலக்ஷ்மி said...
நல்லாயிருக்கு கவிதை.
கனவு மெய்ப்பட்டால் வாழ்வின் நிஜங்கள் தென்படும். அதே சமயம் கனவு பொய்க்க நேர்ந்தால் வாழ்வின் நிஜங்கள் புரிபடும். இதுவும் சரிதானே:)?
//
வாஸ்தவமே ராமலக்ஷ்மி மேடம் ,அதுவும் சரி தான்
Post a Comment