உள்ளிருக்கும் இரைச்சல் ஓயும் நேரம்
நெருங்காக் கனவில் அறிந்தும் அறியா
ஏராள நினைவுகள் ;
இமைக்க மறந்தாலும் கண் திறக்கவொட்டா
கடலோர நுரைச் சிதறலின் முன்
காத்திருக்கும் மணற்துகள்களாய்
உறுத்தியும் உறுத்தாமல்
ஒட்டிக் கொண்டு பிசுபிசுக்கும்
நச நசப்பில் நாட்கள் நகர்கின்றன
தூரத்தே கலங்கரை விளக்கம்
9 comments:
நாட்கள் எப்படி நகர்ந்தாலும் நம்பிக்கை நட்சத்திரமாய் அந்தக் கடைசி வரி.
அருமை.
வாழ்த்துக்கள்.
கவிதை கிரகிக்க எங்க வருது?பாருங்க ராமலஷ்மி போட்டிருக்காங்க கவிதைப் பின்னூட்டம்.
இரைச்சல்கள் ஓயுமா என்பது தெரியவில்லை
\\இமைக்க மறந்தாலும் கண் திறக்கவொட்டா
கடலோர நுரைச் சிதறலின்\\
அருமையான வரிகள்
தூரமாயிருந்தும் வழிகாட்டும் கலங்கரை
பிசுபிசுப்பில்லாத பின்னூட்டம் இது.
நல்லா இருக்கு...வழக்கம் போல உங்க சொல்லாடல் வித்தை காட்டுகிறது...
//
தூரத்தே கலங்கரை விளக்கம்
//
காலத்தின் கடைசி எல்லை வரை
களைப்புடன் நடந்தாலும்
கனவில் மட்டுமே தெரியும்
கலங்கரை விளக்கங்கள்
காலம் காலமாக
தூரமாகவே இருக்கின்றன...
/*நச நசப்பில் நாட்கள் நகர்கின்றன
தூரத்தே கலங்கரை விளக்கம் */
நம்பிக்கையுடன் நகரும் நசநசப்பான நாட்கள்...
உறுத்தியும் உறுத்தாமல்
ஒட்டிக் கொண்டு பிசுபிசுக்கும்
நச நசப்பில் நாட்கள் நகர்கின்றன
தூரத்தே கலங்கரை விளக்கம்//
கடைசி வரியில் முழுமையடைகிறது..
அருமைங்க..
// ராமலக்ஷ்மி said...
நாட்கள் எப்படி நகர்ந்தாலும் நம்பிக்கை நட்சத்திரமாய் அந்தக் கடைசி வரி.
அருமை.
வாழ்த்துக்கள்.
//
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
// ராஜ நடராஜன் said...
கவிதை கிரகிக்க எங்க வருது?பாருங்க ராமலஷ்மி போட்டிருக்காங்க கவிதைப் பின்னூட்டம்.//
உங்களுக்கு கவிதை கிரகிக்க முடியலையா ராஜ நடராஜன் ?!
// நட்புடன் ஜமால் said...
இரைச்சல்கள் ஓயுமா என்பது தெரியவில்லை
\\இமைக்க மறந்தாலும் கண் திறக்கவொட்டா
கடலோர நுரைச் சிதறலின்\\
அருமையான வரிகள்
தூரமாயிருந்தும் வழிகாட்டும் கலங்கரை
//
நன்றி ஜமால்
//குடுகுடுப்பை said...
பிசுபிசுப்பில்லாத பின்னூட்டம் இது.//
புரியாம பின்னூட்டம் போடறதுல உங்களை மிஞ்ச முடியுமா குடுகுடுப்பை அண்ணா ?
// அது சரி said...
நல்லா இருக்கு...வழக்கம் போல உங்க சொல்லாடல் வித்தை காட்டுகிறது...
//
தூரத்தே கலங்கரை விளக்கம்
//
காலத்தின் கடைசி எல்லை வரை
களைப்புடன் நடந்தாலும்
கனவில் மட்டுமே தெரியும்
கலங்கரை விளக்கங்கள்
காலம் காலமாக
தூரமாகவே இருக்கின்றன...//
நன்றி அதுசரி , உங்க கவிதையும் நல்லா இருக்கு
//அமுதா said...
/*நச நசப்பில் நாட்கள் நகர்கின்றன
தூரத்தே கலங்கரை விளக்கம் */
நம்பிக்கையுடன் நகரும் நசநசப்பான நாட்கள்...//
வாஸ்தவம் தான் அமுதா ,
// Poornima Saravana kumar said...
உறுத்தியும் உறுத்தாமல்
ஒட்டிக் கொண்டு பிசுபிசுக்கும்
நச நசப்பில் நாட்கள் நகர்கின்றன
தூரத்தே கலங்கரை விளக்கம்//
கடைசி வரியில் முழுமையடைகிறது..
அருமைங்க..//
நன்றி பூர்ணிமா சரவணகுமார்
Post a Comment