பானாக்கரம் ..இதையே பானகம் என்றும் சொல்வார்களாயிருக்கும் போல !? எங்கள் ஊரில் பானாக்கரம் என்று சொல்லத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் . இதை வெயில் காலத்தில் குடித்துப் பாருங்கள் தேவாமிர்தம் தான் .ரசத்திற்கு அம்மா புளி ஊற வைத்து விட்டு அந்தண்டை போனால் போதும் ஊற வைத்த புளித் தண்ணீரை எடுத்து பானாக்கரம் ஈசியாகச் செய்து அம்மா இந்தண்டை வருவதற்குள் குடித்து முடித்து விட்டு பாத்திரத்தையும் துலக்கி வைத்து விடலாம் .அத்தனை எளிது பானாக்கரம் செய்வது .
நல்ல நீரில் ஊறவைத்த புளி, புளி நன்றாக ஊறியதும் நீரை வடிகட்டிப் பிரிக்க வேண்டும் ,அதனோடு சர்க்கரையோ ...வெல்லமோ சேர்த்தால் பானாக்கரம் ரெடி.
வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும் .இப்போது இப்படி யாரும் செய்து அருந்துவதாகாத் தெரியவில்லை.
நான் பிறந்த ஊரில் ...ஊருக்கு வெளியே ஜக்கம்மாவுக்கென்று ஒரு கோயில் உண்டு ...வருடத்திற்கு ஒருமுறை அவளுக்குத் திருவிழா வரும். ஜக்கம்மா துடியான தெய்வம் என்பார்கள் ...அவளுக்குத் துணை தெய்வம் கருப்பசாமி ...வெட்டரிவாள் ஏந்தி பக்கவாட்டில் அவரும் நிற்பார் ஜக்கம்மா சன்னதியில் .
கோயில் என்பது பெயரளவில் தான் ...அது ஒரு வெட்ட வெளி அங்கே ஒரு பீடத்தில் ஜக்கம்மா உக்கிரமாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். திருவிழா சமயங்களில் மேலே தென்னம் பந்தல் போட்டுக் கொள்வார்கள் ,மாற்ற நாட்களில் எல்லாம் ஜக்கம்மாவுக்கு சுற்றியுள்ள கொடிக்காய்புளி காய்ந்த முள்ளில் வேயப்பட்ட சுற்று வேலிப்படல் தான் சாஸ்வதம் .
உக்கிரத்தை தணிக்கவோ என்னவோ அவளது கோயில் பிரசாதமாக பானாக்கரமும் கூடவே வெல்லமிட்ட பச்சரிசியும் தான் தருவார்கள். பச்சரிசியுடன் பொடியாய் நறுக்கிய தேங்காய் துண்டுகளும் உண்டு. அது ஒரு வகை அலாதி சுவைதான் .
பானாக்கரம் பற்றி பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...பதிவாக்கி விட்டேன் .
9 comments:
பானகம் கேள்விப்பட்டிருக்கேன்
பானாக்கரம் - இங்குதான் படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.
இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை.
பானக பிரியர் ஸ்வாமி அய்யப்பனும் இந்த அபிஅப்பனும். நல்லா இருக்கும் ஆனா அதிலே எலுமிச்சம் பழ விதை தான் எனக்கு பிடிக்காது!
நன்றி நன்றி. நினைவு படுத்திவிட்டீர்களே பானக் கரத்தை. சிறுவயதில் எங்கள் குலதெய்வம் கோவிலில் எப்போதும் இது உண்டு. வீட்டிலும் செய்து வெயிலுக்குக் குடிக்கலாம்னு தோன்ற வைத்ததற்கு மறுபடி நன்றி:)!
//நல்ல நீரில் ஊறவைத்த புளி, புளி நன்றாக ஊறியதும் நீரை வடிகட்டிப் பிரிக்க வேண்டும் ,அதனோடு சர்க்கரையோ ...வெல்லமோ சேர்த்தால் பானாக்கரம் ரெடி.
வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும் .இப்போது இப்படி யாரும் செய்து அருந்துவதாகாத் தெரியவில்லை.
//
முயற்சி பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான்
அமித்து அம்மா சொல்வது போல்
நானும் பானகம் தான் குடித்துள்ளேன்.
இது புதிது தான்.
ஜெய் ஜக்கம்மா
எங்க ஊர்லேயும் பானக்கம்தான். சீனி போட்டு இனிப்பா இருக்கும்.
உங்க பானாக்கா(க)ரம் காராமா இருக்குமோ, தெலுகு கார ஜக்ஸ்ன அப்படிதான்
நானும் பானகம் குடித்திருக்கிறேன். எங்க ஊரில் பெரும்பாலும் ராமர் கோவில்களில் ஸ்ரீராமநவமிக்கு பானகமும் நீர்மோரும் தான் நெய்வேத்தியம்.
ஆனால் புளி போடுவார்களா தெரியாது. வெல்லம், தண்ணீர், கொஞ்சம் ஏலக்காய் எல்லாம் போட்டு தித்திப்பாய் வாசனையாய் இருக்கும்..
நீஙக் சொல்ற அரிசி வெல்லம் பேரு எங்க ஊரிலே “காப்பரிசி”. எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷம் அன்று காப்பரிசி பிரசாதம் கிடைக்கும்.
யார் வீட்டிலாவது புதிதாகக் குழந்தை பிறந்திருந்தால், பத்தாவது நாள் தொட்டில் போட்டு கை நிறைய காப்பரீசி கிடைக்கும்..
நல்ல எழுதியுள்ளீர்கள்
அன்புடன்
சீமாச்சு..
எங்க ஊர்லயும் பானகம்னு தான் சொல்வாங்க...கரும்பு வெல்லம், புளி..கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்..எப்பவும் லேசா கொஞ்சம் ஊதுபத்தி வாசனை வரும்....ஒரு வேளை கோயில்ல தர்றதுனால இருக்கலாம்..
வந்தவுங்க எல்லாருக்கும் நன்றிங்க ...பதில் சொல்லக் கொஞ்சம் கால தாமதமாகிப் போச்சு, இனிமேல் மறுமொழிகளில் சுணக்கம் இல்தாமதத்தினால யாரும் இந்தப் பக்கம் வந்து படிக்காம போய்டக் கூடாதில்லையா ?!லாமல் பார்த்துக் கொள்கிறேன். :)
Post a Comment