மழை பெய்து முடித்த மறுநாள் காலை என்று தான் நினைக்கிறேன்! பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் காட்சியை எங்கள் கிராமத்தில் சகஜமாகக் காணலாம் .அழுக்கான கண்ணாடித் தாள் போன்ற மெல்லிய றெக்கைகள் அதற்கு .வாசிப்பவர்கள் ஈசலைத் தட்டான் பூச்சி என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள் .அது வேறு ,இது வேறு
"தட்டான் தாழப் பறந்தால் மழை வரும்" என்பார்கள் ஊர்ப் பக்கத்தில் ,ஆனால் ஈசல் எப்போதும் மழை ஊற்றி முடித்த மறுநாள் காலையில் தான் வண்டல் மண் சேகரித்துக் கொட்டி வைக்கப் பட்டிருக்கும் திட்டுக்களின் மேலே கூரை போல கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் .
ஆர்வமிருக்கும் சில சிறுவர்...சிறுமிகள் கையேடு கொண்டு போயிருக்கும் பித்தளைத் தூக்குகளிலோ அல்லது எவர்சில்வர் தூக்குகளிலோ அந்த ஈசல்களைப் ஓடி ஓடி பிடித்து அடைத்து வைத்துக் கொள்வார்கள் .உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் ஈசல்களின் வாழ்நாள் காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே !
மழை பெய்த மறுநாள் காலையில் கண்களில் படும் ஈசல்கள் அன்றைய தினமே வெயில் ஏற ஏற ஆற்று மணல் ...அல்லது களத்து மணல் மேடு போன்ற இடங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கொஞ்ச நேரத்தில் உயிரை விட்டு விடும். அந்த ஈசலகளையும் விட்டு வைக்க மாட்டார்கள் சிலர் .
அதென்ன டேஸ்ட்டோ ?! இப்போது யோசித்தால் ஒன்றும் புரியவில்லை! என் தாத்தாவின் வத்தல் களத்தில் சோடை வத்தல் பொறுக்கி நல்ல வத்தல்களை மூட்டை கட்டி கொடுத்து விட்டுப் போக பக்கத்து ஊரிலிருந்து வரும் தினக் கூலிகளில் சரசக்கா இந்த ஈசல்களை மகா ஆசையோடு பாலீதீன் பைகளில் சேகரித்து வைத்து நன்றாக வெயில் ஏறியதும் களத்து சுடுமணலில் காய வைப்பார் .
ஈசல்கள் மொரு மொறுவென்று காய்ந்ததும் அங்கேயே கற்களை வைத்து அடுப்பு மூட்டி பொரிகடலை ...காய்ந்த வத்தல் கொஞ்சம் உப்பு கூட அந்த ஈசல் என்று கலந்து போட்டு வறுத்து உண்பார். வேடிக்கை பார்க்கும் எனக்கும் தருவார். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வரும் எனக்கு .
இப்படி அல்லாது வெறுமே காய்ந்த ஈசல்களை உன்பவர்களையும் பார்த்திருக்கிறேன் அப்போது நான்!!! இப்போது நினைத்துப் பார்த்தால் வித்யாசமான மனிதர்கள் ...வித்யாசமான பழக்க வழக்கங்கள் என்று தோன்றினாலும் அந்த நாள் ஞாபகங்கள் என்றுமே இனிக்கவே செய்கின்றன. ஈசல்களைப் போலவே தான் அதற்குப் பின் நான் சரசக்காவையும் காண நேரவில்லை .
23 comments:
என்னாங்க இது இப்படி ஒரு கேள்வி
தானா விழுறதா ? அதை எல்லாம் பொறுக்கறதுக்கு ஏது நேரம்...
நைட்ல வெள்ளை வேட்டிய ஈசல் புத்தை சுத்தி வச்சி அது நடுவுல ஒரு ராந்தல் வெளக்க வெச்சா அம்புட்டு ஈசலையும் அள்ளிடலாமே ?
அரிசியோட வறுத்தா ஆட்டோமேட்டிக்கா கிராமத்து ஸ்நேக்ஸ். (Snakes)
ஈசல் has been a delicacy in ancient Tamil cuisine.
ஐயய்யோ... இல்லைங்க...
ஹ்ம்ம்..சுவாரசியம்! கொஞ்சநாள் கழிச்சு வெளிநாட்டிலிருந்து பேக்ட் ஃபுட்-ஆ நமக்கே திரும்பி வந்தாலும் வரலாம்! :-)
அதென்னமோ தெரியலை மழை காலத்துக்கு வரும் நண்டு,ஈசல்களை அப்ப சாப்பிடுவதற்கு உவ்வே!நண்டு கடிச்சுரும்ன்னு பயந்துட்டு பக்கத்துல போறதே இல்ல.அப்புராணி ஈசல பாத்திரத்தில தண்ணி ஊத்தி மின்சாரக் கம்பத்து பக்கம் வச்சிட்டா அதுக்குள்ள டபக்கு டபக்குன்னு வந்த் விழறதப் பார்க்கிறதுல ஒரு சந்தோசம்.அப்புறம் என்ன கொஞ்சம் நேரங்கழிச்சு அங்கேயே கீழே கொட்டி விடவேண்டியதுதான்.
அன்னைக்கு தப்பிச்ச உயிர் நண்டுகள் இப்ப மீன் மார்க்கட்டுல தூங்கிட்டு கிடைக்கிறதால வாங்கி,ஓடு எடுத்து,கழுவி மசாலா போட்டு சமைச்சு ஒரு பிடி பிடிச்சுட வேண்டியதுதான்.இப்பவும் ஈசல் சாப்பிடும் தைரியம் வரவில்லை.
சொல்ல மறந்துட்டேனே!நண்டு பற்றி சொன்னதும் இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரங்க சாவகாசம் கொஞ்சம் இருக்குறதால அவங்க வீட்டுக்குப் போனா நண்டு மார்க்கெட்டுல இருந்து அல்லது புடிச்சிட்டு வந்து அப்படியே வேக வச்சு சாப்பிடறாங்க.சாப்பாட்டு விசயம் மட்டும்தான் இப்படி.ஆனால் வீடு சுத்தம்,பாத்ரூம் சுத்தம்,உடை சுத்தம் போன்றவற்றை இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
//மகா ஆசையோடு பாலீதீன் பைகளில் சேகரித்து வைத்து நன்றாக வெயில் ஏறியதும் களத்து சுடுமணலில் காய வைப்பார் .//
சமயல் என்று வகைப் படுத்தி தமிழ் மணத்திற்கு அனுப்பி இருக்கலாமே தல....
ஹே
நான் சாப்பிட்டு இருக்கேன், எனக்கு ரொம்பவும் பிடிக்கும், ஊர்ல இருந்து என் அத்தை இதை எனக்காகவே செய்து கொடுத்தனுப்புவாங்க.
ஈசலோடு, பொரி அரிசி, துவரை, வேர்க்கடலை எல்லாம் போட்டு இருக்கும்.
ச்சே, டேஸ்ட்டே மறந்து போச்சு போங்க,
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.
நட்புடன் ஜமால் said...
//என்னாங்க இது இப்படி ஒரு கேள்வி//
நல்ல கேள்வி தானப்பா ? கேட்க நினைச்சேன் கேட்டுட்டேன் ...ஆமா நீங்க ஈசல் சாப்பிட்டதே இல்லையா ஜமால்? ஈசல் சாப்பிட்டவங்களும் நிறைய பேர் இருக்காங்க பின்னூட்டங்களைப் பாருங்க ,தெரியும்.
//செந்தழல் ரவி said...
தானா விழுறதா ? அதை எல்லாம் பொறுக்கறதுக்கு ஏது நேரம்...
நைட்ல வெள்ளை வேட்டிய ஈசல் புத்தை சுத்தி வச்சி அது நடுவுல ஒரு ராந்தல் வெளக்க வெச்சா அம்புட்டு ஈசலையும் அள்ளிடலாமே ?
அரிசியோட வறுத்தா ஆட்டோமேட்டிக்கா கிராமத்து ஸ்நேக்ஸ். (Snakes)//
அட...அட...அடாடா...அப்போ நீங்க ஈசல் நல்லா வெளுத்து கட்டுனீங்கன்னு சொல்லுங்க,ஈசல் பிடிக்கும் எளிய முறையும் அதை சமைத்து சாப்பிட செய்முறையும் வேற சொல்லி அசத்தறிங்க செந்தழல்.இப்பலாம் ஈசல் கிடைக்கறதில்லை போல இருக்கே?!
Indian said...
ஈசல் has been a delicacy in ancient Tamil cuisine.
ஓ... அப்ப பண்டைக் காலத்துல இருந்தே ஈசல் தமிழர்களின் பிரியமான உணவு தான் போல இருக்கே!!!,
புதிய செய்தி ...நன்றி Indian.
அமுதா said...
ஐயய்யோ... இல்லைங்க...
பயப்படாதீங்க அமுதா ...ஈசல்லாம் சாப்பிடச் சொல்லி உங்களை யாரும் கம்பெல் பண்ணமாட்டாங்க .
சந்தனமுல்லை said...
//ஹ்ம்ம்..சுவாரசியம்! கொஞ்சநாள் கழிச்சு வெளிநாட்டிலிருந்து பேக்ட் ஃபுட்-ஆ நமக்கே திரும்பி வந்தாலும் வரலாம்! :-)//
வரலாம் இல்லை...ஒருவேளை வந்திருக்கலாம் இப்போ கூட சைனிஸ்
ரெஸ்ட்டாரெண்ட்ல கிடைக்கக் கூடுமோ என்னவோ முல்லை?! பூச்சிகளை சாப்பிடறதுல அவங்களை மிஞ்ச முடியுமா?
ராஜ நடராஜன் said...
அதென்னமோ தெரியலை மழை காலத்துக்கு வரும் நண்டு,ஈசல்களை அப்ப சாப்பிடுவதற்கு உவ்வே!நண்டு கடிச்சுரும்ன்னு பயந்துட்டு பக்கத்துல போறதே இல்ல/
உங்க நண்டு ,ஈசல் நினைவுகளை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி ராஜநடராஜன்...ஈசல்களை கரண்டு கம்பத்து தண்ணி பக்கெட்ல தள்ளி விட்ட பாவம் சும்மா விடாது ஞாபகம் இருக்கட்டும் .
அதுவா விழுந்தாலும் சரி...தள்ளி விட்டாலும் சரி...ஈசல் செத்துப் போறது தான் நிஜம் ...அப்போ நீங்க தான் குற்றவாளி ஈசல் கோர்ட்ல .
:):):)
ராஜ நடராஜன் said...
சொல்ல மறந்துட்டேனே!நண்டு பற்றி சொன்னதும் இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரங்க சாவகாசம் கொஞ்சம் இருக்குறதால அவங்க வீட்டுக்குப் போனா நண்டு மார்க்கெட்டுல இருந்து அல்லது புடிச்சிட்டு வந்து அப்படியே வேக வச்சு சாப்பிடறாங்க.சாப்பாட்டு விசயம் மட்டும்தான் இப்படி.ஆனால் வீடு சுத்தம்,பாத்ரூம் சுத்தம்,உடை சுத்தம் போன்றவற்றை இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.//
நன்றி பிலிப்பைன்ஸ் சுத்தம் பற்றி சொன்னதற்கு.
SUREஷ் said...
//மகா ஆசையோடு பாலீதீன் பைகளில் சேகரித்து வைத்து நன்றாக வெயில் ஏறியதும் களத்து சுடுமணலில் காய வைப்பார் .//
சமயல் என்று வகைப் படுத்தி தமிழ் மணத்திற்கு அனுப்பி இருக்கலாமே தல....
தலைவிதின்னு சொல்ல வந்து தல...ன்னு நிறுத்திட்டிங்களா என்ன? இந்த தல சொல்லாடலுக்கு பால் பேதம் இல்லையாக்கும் ...ஆனா...பெண் ரெண்டுபேருக்குமே தல தானா? !!!
அமிர்தவர்ஷினி அம்மா said...
ஹே
நான் சாப்பிட்டு இருக்கேன், எனக்கு ரொம்பவும் பிடிக்கும், ஊர்ல இருந்து என் அத்தை இதை எனக்காகவே செய்து கொடுத்தனுப்புவாங்க.
ஈசலோடு, பொரி அரிசி, துவரை, வேர்க்கடலை எல்லாம் போட்டு இருக்கும்.
ச்சே, டேஸ்ட்டே மறந்து போச்சு போங்க,
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.//
ஈசல் அவ்ளோ பிடிக்குமா உங்களுக்கு ? நான் சாப்பிட்டதில்லைப்பா ...நல்லா கர...கர...மொறு..மொறு ஸ்நாக்ஸ் மாதிரி இருக்கும்பாங்க
எனக்கென்னவோ சாப்பிட மனமில்லை அப்பவும் இப்பவும்.
ஞாபகத்தை பதிஞ்சேன் .
நன்றி அமித்துஅம்மா ...
:))
நல்லா எழுதினீங்க ஞாபகத்தை..
இவங்களாம் வேற கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிட்டாங்க ...பாருங்க.
காரைக்காலில் கள்ளு கடை வாசலில் சாக்கனாங்கடையில் முக்கிய டிஷ் இது!
நானும் பாத்திருக்கேன், ஆனா எனக்கு யாரும் சமைச்சு தரலை.
என்னுடன் ஆந்திராவில் ஒரு நண்பன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு அருப்புக்கோட்டை சொந்த ஊர்.
ஒரு நாள் (ஆந்திராவில்தான்) மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் வேலையை விட்டு வீட்டிற்கு வந்தோம். வீட்டின் பின்புறம் ஒரே ஈசல் கூட்டம். என் நண்பனோ கீழே விழுந்த ஈசல்கள், மேலே பறக்கும் ஈசல்கள் எல்லாவற்றையும் பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் இறக்கைகளை பொறுமையாக நீக்கினான்.
எனக்கும், அங்கே வாழும் ஆந்திர மக்களுக்கும் ஆச்சரியம்.
பிறகு அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈசலை வறுத்து, உப்பு மிளகாய்ப் பொடி தூவி நாம பொறி கடலை சாபிடுவோமே அது போல சாப்பிட்டான்.
அவன் சொன்னது. 'மச்சி, இது கூட ஒரு குவார்ட்டர் அடிச்சா செம தூளா இருக்கும்டா'.
அன்று முதல் அவன் பெயர் ஈசல் தன்ராஜ் ஆகும்.
//
இப்படி அல்லாது வெறுமே காய்ந்த ஈசல்களை உன்பவர்களையும் பார்த்திருக்கிறேன்
//
என்னங்க...பீதிய கெளப்பறீங்களே!
Post a Comment