ஒரு சிறுகதையில் வாசித்தேன் ...
நல்ல நிறை பௌர்ணமியில் ஒரு வனக் குடியிருப்பின் அருகில் ஒரு அழகான ஓடை ...ஓடை நிறைய பளிங்கு போன்ற தெளிந்த நீர் ...நீருக்குள் வட்ட வெள்ளித் தட்டாய் வெள்ளி அப்பளம் போல அழகான தண்ணிலா...;ஒரு காட்டுவாசிப் பெண் செப்புக் குடத்தை எடுத்துக் கொண்டு அந்த ஓடைக்கு நீர் மொண்டு கொண்டு போக வருகிறாள் ;நீரில் நிலா ...
நிலவின் பிம்பம் களையக் களைய நீரை குடத்தில் அள்ளியதும் ஓடை நிலா குடத்தில் டாலடிக்கிறது .அடுத்து இன்னொரு பெண் ஓடையில் நீர் எடுக்க வருகிறாள் குடத்தோடு ...இப்போது அவளது குடத்திலும் நிலா .
குனிந்து பார்த்தால் ஓடையிலும் நிலா ...
இந்தப் பெண்கள் கையில் ஏந்தி நிற்கும் குடங்களிலும் நிலாக்கள்
அப்போது இன்னொரு பெண் அங்கே வருகிறாள் ...
குடிக்கக் கொஞ்சம் நீர் கேட்கிறாள் ...குடத்தில் இருந்த நீரை அந்த காட்டுவாசிப் பெண் சரித்து ஊற்ற இவள் குனிந்து இருகை குவித்து நீரை கீழே வழியாமல் ஏந்தும் போது அவளது குவித்த கைகளுக்கிடையில் நிலா நெளிந்து ..நெளிந்து ஊசலாடுகிறது.
அப்படியானால் இவள் நிலவைக் குடித்தவள் ஆகிராளோ?!
இவள் குடித்து முடித்த பின்னும் வானில் நிலா ...
ஓடையிலும் நிலா...
அந்த பெண்கள் இடுப்பில் தூக்கிச் செல்லும் குடங்களிலும் நிலாக்கள் .
ஆக மொத்தம் எத்தனை நிலாக்கள் ?
எத்தனை அழகான கற்பனை பாருங்கள் ?!
தாகத்திற்கு நீரை அருந்தி முடித்த பின் வானை நிமிர்ந்து பார்க்கும் அந்தப் பெண் தன்னுள் சொல்லிக் கொள்கிறாள்...
"நிலவை மிச்சம் வைத்தவள் நான் "என்று .
இந்த நிலா கற்பனை "அம்பையின் காட்டில் ஒரு மான் தொகுப்பில் "அடவி " எனும் சிறுகதையில் "வாசிக்கக் கிடைத்தது.
7 comments:
அழகான கற்பனை தான்
யோசித்தால் மிக அழகாக இருக்கின்றது
கவிதையாக்கூட முயற்சிக்களாமே!
ரசித்து ரசித்து எழுதியிருக்கும் விதம் அப்படியே காட்சியை கண்முன் விரியச் செய்கிறது. அருமை.
வாவ்...ரொம்ப அழகா ரசிக்கும்படி இருந்தது....
அன்புடன் அருணா
இப்படியெல்லாம் நல்ல கதை படிக்கிறவங்க என் பதிவுகளையும் படிக்கிறாங்கன்னு நினைக்கும் போது எனக்கு அக்கா பாசம் பிச்சுகிட்டு வருது.
\\ குடுகுடுப்பை said...
இப்படியெல்லாம் நல்ல கதை படிக்கிறவங்க என் பதிவுகளையும் படிக்கிறாங்கன்னு நினைக்கும் போது எனக்கு அக்கா பாசம் பிச்சுகிட்டு வருது.//
:))
மிக அழகான கற்பனை.
நன்றி ஜமால் ...
நன்றி ராமலக்ஷ்மி மேடம்...
நன்றி அன்புடன் அருணா...
நன்றி குடுகுடுப்பையாரே...
நன்றி முத்து அக்கா ...
நன்றி அமுதா ...
பதிவின் தேதி மாற்றி அமைக்கும் குழப்பத்தில் பதிவு இருமுறை பதிவாகி விட்டது.அங்கேயும் பின்னூட்டங்கள் இருப்பதால் டெலிட் செய்ய மனமில்லை ...sorry for this error friends.
Post a Comment