உறக்கங்களில்லாமல்
நீளும்
சொர்க்கத்தின் நீட்சியில்
மண்வாசம்
வரைபடமாய்
மலர் வாசம்
மனப்பாடமாய் ...
ஏதோ... ஏதோ
திகட்டிப் போன
ஏதோ ஒரு நொடியிலோ
அன்றி
பெருங்கனவு பிடித்திழுத்த
மறு நொடியிலோ
ஆசையின் நெடி தாக்க
தட்டுத் தடுமாறி
விழுந்த இடம்
அம்மாவின் கருவறை
மறுபடி பிண்டமானேன்
பேரண்டம் புரியா
பயணம் தொடர்கிறது ...
இன்னும்
ஒருமுறை!!!
12 comments:
\\மண்வாசம்
வரைபடமாய்
மலர் வாசம்
மனப்பாடமாய் ...\\
இரசித்தேன்
தொடரட்டும் தொடரட்டும்...
//
உறக்கங்களில்லாமல்
நீளும்
சொர்க்கத்தின் நீட்சியில்
மண்வாசம்
வரைபடமாய்
மலர் வாசம்
மனப்பாடமாய் ...//
முதல் வரிகள் நல்லாருக்கு
//
பெருங்கனவு பிடித்திழுத்த
மறு நொடியிலோ
ஆசையின் நெடி தாக்க
தட்டுத் தடுமாறி
விழுந்த இடம்
அம்மாவின் கருவறை
மறுபடி பிண்டமானேன்
//
ஆஹா...ஏதோ சித்தர் பாட்டு மாதிர் இருக்குங்க..
//
இன்னும்
ஒருமுறை!!!
//
நான் கொஞ்ச நாள் முன்னாடி "மீண்டும் ஒரு முறை"ன்னு கிறுக்கியிருந்தது...இதே விஷயத்தை ரிவர்ஸில் சொல்லும் முயற்சி...நீங்க பிறப்புலருந்து ஆரம்பிச்சிருக்கீங்க...நான் இறப்பு முந்தியதன் தொடர்ச்சின்னு எழுதியிருந்தேன்...
ஆனா எல்லாரும் ஏதோ குவாட்டர் கவிதைன்னு புரிஞ்சிகிட்டாங்கன்னு நினைக்கிறேன்.. :0))

டவுட் அக்கா !
வர வர நல்ல புரி(யாது)ம் படி நல்லா எழுதுறீங்க;-))
எங்களுக்கு ஒரு டவுட்...
இதெல்லாம் நீங்களே யோசிச்சு எழுதறீங்களா....
இல்ல தனியா சம்பளத்து ஆள் வெச்சு வாங்கி வெளியிடுறீங்களா....
நன்றி ஜமால்...
நன்றி பழமைபேசி அண்ணா
நன்றி ஆ.முத்துராமலிங்கம் (முதல் வரிகளைத் தவிர மற்ற வரிகள் நல்லா இல்லைன்னு சொல்றீங்களா)
நன்றி அதுசரி(குவாட்டரை விட்டு வெளில வரமுடியலை பாருங்க உங்களால...அதுசரி!!!)
நன்றி அபிஅப்பா (வர வர நீங்க கவிதைகளை தவறாம வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்க பாருங்க ...அதான் நல்லா புரியும் படியா எழுதி இருக்கேன் சித்தப்பா)
என்ன டாக்டரே உங்களுக்கே டவுட்டா ?
//SUREஷ் said...
எங்களுக்கு ஒரு டவுட்...
இதெல்லாம் நீங்களே யோசிச்சு எழுதறீங்களா....
இல்ல தனியா சம்பளத்து ஆள் வெச்சு வாங்கி வெளியிடுறீங்களா....//
என்ன கொடுமை சார் இது ? நீங்க வேணா சம்பளம் தாங்க நான் உங்களுக்கு எழுதி தரேன் கவிதைகள்.
//பேரண்டம் புரியா
பயணம் தொடர்கிறது ...
இன்னும்
ஒருமுறை!!!
//
இது நல்லா இருக்குங்க!
//தட்டுத் தடுமாறி
விழுந்த இடம்
அம்மாவின் கருவறை //
அழகு...ரசித்தேன்...
முற்றிலும் வித்தியாசமான கரு இது!
கவிதையின் கரு...... கரு தான்!
நல்லதொரு கவிதை நண்பரே!
//
நன்றி அதுசரி(குவாட்டரை விட்டு வெளில வரமுடியலை பாருங்க உங்களால...அதுசரி!!!)
//
அது சரி! நான் இனிமே எதுவுமே சொல்றதில்லைன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்துட்டேன் :0))
Post a Comment