Monday, March 2, 2009

புள்

விடுபட முடியா ஆழம்
உள்ளே உள்ளே ...உள்ளே
இழுக்க...இழுக்க ...
இழுபடா லாவகத்துடன்
ஊசலாடும்
தூக்கனாங்குருவி கூடாய்
செயற் பொறியில் சிக்கா
செம்பஞ்சுத் துகள்களாய்
சிற்றாறுகள் குறுக்கிடும்
நீள்
வனப் பாதையில்
கால் போன போக்கில்
நடக்க விழைகையில்
நாள்...
கோள்...
நட்சத்திரம் ...
யாவும் பிறழ்ந்து போகட்டுமா ...
என
போக்குக் காட்டியும்...
காட்டாதொரு
பின்னிலவில்
இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையின்
மெது மெதுப்பை
உணர்ந்து அழும்
பாதங்களுக்கே கேட்கக் கூடும்
புள்ளினங்களின் ஆர்ப்பரிப்பு.

19 comments:

நட்புடன் ஜமால் said...

படிச்சிட்டு வாறேன் ...

நட்புடன் ஜமால் said...

விடுபட முடியா ஆழம் உள்ளே உள்ளே ...உள்ளே இழுக்க...இழுக்க\\

உங்கள் வரிகளில் நாங்களும் உள்ளே உள்ளே ...

நட்புடன் ஜமால் said...

செம்பஞ்சுத் துகள்களாய் சிற்றாறுகள் குறுக்கிடும் நீள் வனப் பாதையில் \\

அழகாயிருக்கு ...

நட்புடன் ஜமால் said...

தெளிவா புரியலை

அபி அப்பா said...

நல்லா இருக்கு டவுட் அக்கா! பின் இனைப்பா ஒரு கோனார் நோட்ஸும் கொடுத்தா நல்லா இருந்திருக்கும்:-))

முரளிகண்ணன் said...

முடியல

Poornima Saravana kumar said...

அக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க!!!

www.narsim.in said...

//செம்பஞ்சுத் துகள்களாய் சிற்றாறுகள் குறுக்கிடும் நீள் வனப் பாதையில் கால் போன போக்கில் நடக்க விழைகையில் //

பின் நவீனத்துவம்?? வார்த்தைகள் நச்சுனு உட்கார்ந்து இருக்கு.. அர்த்தம் ப்ளீஸ்

அது சரி(18185106603874041862) said...

//
இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையின்
மெது மெதுப்பை
உணர்ந்து அழும்
பாதங்களுக்கே கேட்கக் கூடும்
புள்ளினங்களின் ஆர்ப்பரிப்பு.
//

என்ன சொல்றதுன்னு தெரில...கலக்கறீங்க...ஆனா எனக்கு ஒரு டவுட்டு :0))

இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையில் மெதுவாய் நடக்கையில்
ஆங்காங்கே கேட்பது புள்ளினங்களின்
ஆர்ப்பரிப்பா அழுகுரலா??

பழமைபேசி said...

//கோள்...//

அட, நம்ம பக்கத்துல இப்பத்தான் இதை அலசித் தொவச்சிக் காயப் போட்டுட்டு வந்தேன்...இஃகிஃகி!!

குடுகுடுப்பை said...

உங்க ஊட்டுக்காருகிட்டேயும் இப்படிதான் பேசுவீங்களா?

KarthigaVasudevan said...

வாங்க ஜமால்
தொடர்ந்து கவிதைகளை வாசித்து கருத்து சொல்லும் நண்பர் ஜமாலுக்கு நன்றிகள் பல ...

KarthigaVasudevan said...

அபி அப்பா said...

நல்லா இருக்கு டவுட் அக்கா! பின் இனைப்பா ஒரு கோனார் நோட்ஸும் கொடுத்தா நல்லா இருந்திருக்கும்:-))

கோனார் கிராமத்துல இல்ல இருக்கார் ...சரி நீங்க டிக்கெட் அனுப்புங்க அவருக்கு துபாய் பயணத்துக்கு ,அவர் கையோட நோட்ஸ் கொண்டு வந்து தருவார்.
:)

KarthigaVasudevan said...

முரளிகண்ணன் said...

முடியல

வாங்க முரளிகண்ணன் ...
இதுக்கே இவ்ளோ பயந்தா எப்படி?
இன்னும் எவ்ளோ கவிதை எழுதனும்னு நினைச்சுட்டு இருக்கேன் நான்???!!!

KarthigaVasudevan said...

//Poornima Saravana kumar said...

அக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க!!!//
இல்ல ...இதோ பக்கத்துல சென்னைல தான்பா இருக்கேன்.

KarthigaVasudevan said...

//narsim said...

//செம்பஞ்சுத் துகள்களாய் சிற்றாறுகள் குறுக்கிடும் நீள் வனப் பாதையில் கால் போன போக்கில் நடக்க விழைகையில் //

பின் நவீனத்துவம்?? வார்த்தைகள் நச்சுனு உட்கார்ந்து இருக்கு.. அர்த்தம் ப்ளீஸ்//

அர்த்தம் தான் ஏற்கனவே சொல்லியாச்சு இல்ல நர்சிம் அண்ணனுக்கு

KarthigaVasudevan said...

//அது சரி said...
//
இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையின்
மெது மெதுப்பை
உணர்ந்து அழும்
பாதங்களுக்கே கேட்கக் கூடும்
புள்ளினங்களின் ஆர்ப்பரிப்பு.
//

என்ன சொல்றதுன்னு தெரில...கலக்கறீங்க...ஆனா எனக்கு ஒரு டவுட்டு :0))

இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையில் மெதுவாய் நடக்கையில்
ஆங்காங்கே கேட்பது புள்ளினங்களின்
ஆர்ப்பரிப்பா அழுகுரலா??//

வாங்க அதுசரி ...
" புள் "னா பறவை ..பறவைகள் அழுது நான் இதுவரை கேட்டதில்லை...பறவைகள் அழவே கூடாது ...அழத் தெரியாது அவற்றுக்கு என்று கூட நினைத்திருக்கிறேன் .அந்த பாதிப்பில் எழுதினேன். பறவைகளின் ஆர்ப்பரிப்பை மட்டுமே இது வரை கேட்டிருந்ததால் அந்த வார்த்தை சரியாகப் பட்டது.துக்கமோ..சந்தோசமோ அதை ஆர்ப்பரிப்பாக கூட வெளிப் படுத்தக் கூடும் என்ற நம்பிக்கை தான்!!!

KarthigaVasudevan said...

//பழமைபேசி said...
//கோள்...//

அட, நம்ம பக்கத்துல இப்பத்தான் இதை அலசித் தொவச்சிக் காயப் போட்டுட்டு வந்தேன்...இஃகிஃகி!!//


வாங்க...வாங்க பழமைபேசி அண்ணா.படிச்சேன் உங்க பதிவையும்...கூட்டம் ஜாஸ்தி போல அங்க!?:)

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...

உங்க ஊட்டுக்காருகிட்டேயும் இப்படிதான் பேசுவீங்களா?//

ஹா ...ஹா...ஹா...
என்னத்த சொல்ல ? என்ன கொடுமை அண்ணா இது? தங்கச்சி கவிதை எழுதறத பாராட்டுவீங்களா? இப்படி வேட்டு வச்சா என்ன அர்த்தம்?