Friday, February 27, 2009

மழை என்னை நனைத்தது...நான் மழையில் நனைந்தேன்...!!!


மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரந்தெரியா வீடு
கண் மறைத்த
வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய் பட்டுத் தெறித்தது
எந்நேரம் வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!

10 comments:

www.narsim.in said...

சந்த ஒலி கலக்கல்..

கவிதை.. கலக்கல்..

அ.மு.செய்யது said...

chancae illanga.....

அ.மு.செய்யது said...

எந்த வரிய எடுத்து கமெண்ட் பண்றதுண்ணே தெரியல..

எல்லாமே சூப்பரா தாங்க இருக்கு...

அ.மு.செய்யது said...

மழைய பத்தி எத்தன கவித எழுதுனாலும் சலிப்பே தட்டாது.

அன்புடன் அருணா said...

எனக்குப் பிடித்த மழை பற்றி....
இன்னும் கொஞ்சம் சின்னதாக இருந்தால் இன்னும் ரசித்திருப்பேன்
அன்புடன் அருணா

சந்தனமுல்லை said...

பெருமழை பத்தி எழுதியிருக்கீங்களா..கொஞ்சம் நீளமா இருக்கு! நல்லா இருக்கு!

நட்புடன் ஜமால் said...

உங்கள் கவி வரிகளில் நானும் நனைந்தேன்

உங்கள் கவி வரிகள் என்னையும் நனைத்தது

Anonymous said...

கலக்கல் கவி வரிகள்

Anonymous said...

"எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!"

எனக்கு ஒரு டவுட் ......மழை ஓய்ந்ததா?...வீடு டிரும்பியாச்சா
? ....முக்யமாக ...தரை மறுபடி தெரிந்ததா ?
வாழ்த்துக்கள்...தொடர்ந்து பதியுங்கள்...

KarthigaVasudevan said...

நன்றி நர்சிம்...
நன்றி அ.மு.செய்யது
நன்றி அன்புடன் அருணா
நன்றி சந்தனமுல்லை
நன்றி ஜமால்
நன்றி கடையம் ஆனந்த்
நன்றி வலைக்குள் மழை
வந்தவங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்க.மறுமொழிக்கு கொஞ்சம் லேட் ஆனதுக்கு ஸாரி பிரெண்ட்ஸ் ...