இருட்டை
பிளாஸ்டிக் வாளியில்
சேந்தி
சேந்தி
வாரி வழித்து எடுத்து
முற்று முழுதாய்
வீசி எரிந்து விட்டு
வீட்டுக் கதவை
பெரிய திண்டுக்கல்
பூட்டால்
பூட்டி விட்டால் மட்டும்
இருள் செத்துப் போவது
இல்லையாமே
வகீதா
இன்னும்
அழுது கொண்டு தான்
இருக்கிறாள்!
நம்ப மாட்டாதவளாய்
சுவற்றில்
காய்ந்த மாலையுடன்
(தொ)தூங்கும்
பஷீரின் புகைப்படம் !
இருட்டும் இரவும்
ஒன்றல்லவே
எதற்கோ
எதையோ பரீட்சித்துப் பார்க்கும்
பேதை மனம்
அழுது ஓயட்டும் !
14 comments:
:( சோகமா இருக்கே!!
இருட்டு..பயம்..அழுகை..அமானுஷ்யமா இருக்கே கவிதை!!
//சந்தனமுல்லை said...
:( சோகமா இருக்கே!!
இருட்டு..பயம்..அழுகை..அமானுஷ்யமா இருக்கே கவிதை!!//
வாங்க முல்லை ...
இதை மெல்லியல் சோகம்னும் சொல்லிக்கலாம் .
என்ன எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லைன்னு நீங்களாவே முடிவு செஞ்சுடுறதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடோனும்!!
இதுல வேற படைப்பு சோகமா இருக்கு...நல்லாவும் இருக்கு...இஃகிஃகி!
என்னங்க ஆச்சி
நல்ல தலைப்பு..கவிதைகளில் நார்மலா பெயர்கள் வராது..வகிதா பஷீர் என அதை கையாண்ட விதமும் அருமை..
நல்ல மென் சோகக் கவிதை
என்ன எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லைன்னு நீங்களாவே முடிவு செஞ்சுடுறதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடோனும்!!//
அப்படியெல்லாம் கட்டுபடுத்தாதீங்க ப்ளீஸ். பொங்கிவரும்பொழுது பதிவு போட்டுடணும்.
இப்படிக்கு
ஒரு நாளைக்கு அதிகம் பதிவு போடுவோர் சங்கம்
ரொம்ப நல்லா இருக்கு.. அதுவும் தலைப்பு செம அசத்தல்..
// பழமைபேசி said...
என்ன எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லைன்னு நீங்களாவே முடிவு செஞ்சுடுறதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடோனும்!!
இதுல வேற படைப்பு சோகமா இருக்கு...நல்லாவும் இருக்கு...இஃகிஃகி!//
வாங்க பழமைபேசி அண்ணே ...
என்னது இது ? ஏதோ மிரட்டல் மாதிரி இருக்கே!!! எப்படியோ கவிதை நல்லா இருந்தா சரி தான்!
ரொம்ப நாளா கேட்க நினைச்சது தான் இப்போ கேட்டுடறேன் ஆமா அதென்ன இஃகிஃகி! இழுத்து...இழுத்து நீளமா சிரிக்கிறதா அர்த்தமாக்கும்?! டவுட்டு தான் வேறென்ன ?
// நட்புடன் ஜமால் said...
என்னங்க ஆச்சி//
ஒன்னும் ஆகலை ஜமால் ...
சும்மா...ஒரு ...கவிதை அவ்ளோ தான் .
//narsim said...
நல்ல தலைப்பு..கவிதைகளில் நார்மலா பெயர்கள் வராது..வகிதா பஷீர் என அதை கையாண்ட விதமும் அருமை..
நன்றி நர்சிம்
அந்த நேரம் தோணற பேரை வச்சிட வேண்டியது தானே? காசா ...பணமா ?!
//முரளிகண்ணன் said...
நல்ல மென் சோகக் கவிதை
நன்றி முரளிகண்ணன்.
//புதுகைத் தென்றல் said...
என்ன எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லைன்னு நீங்களாவே முடிவு செஞ்சுடுறதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடோனும்!!//
அப்படியெல்லாம் கட்டுபடுத்தாதீங்க ப்ளீஸ். பொங்கிவரும்பொழுது பதிவு போட்டுடணும்.
இப்படிக்கு
ஒரு நாளைக்கு அதிகம் பதிவு போடுவோர் சங்கம்
//
அப்படிச் சொல்லுங்க புதுகைதென்றல். சப்போட்டுக்கு ஆள் இருக்கும் போது என்ன பயம்? பதிவா போட்டுத் தள்ளிட வேண்டியது தான்.
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
ரொம்ப நல்லா இருக்கு.. அதுவும் தலைப்பு செம அசத்தல்..//
நன்றி முத்தக்கா .நீங்க சொன்னா சரி தான்
Post a Comment