கண்ணே மணியே
கொஞ்சல்
காத்திருந்து உண்ணும்
இரவு சாப்பாடு
வாரம் ஒரு சினிமா
மாதம் ஒரு மலைப் பிரதேச
சுற்றுலா
இன்பச் சிற்றுலா ...
இப்படி சாயமிழக்க
யத்தனிக்கும்
கலர் கலர் கனவுகள்
எப்போதும் போல்
ஒவ்வொரு முறையும்
இன்றே நமக்கு மீள்கிறது ....
வெகு சுகமாய்
படு சுகந்தமாய்
இன்றே நமக்கு மீள்கிறது
விழி அசைவில்
என் மனம் அறியும்
விரலசைவில்
என் குணம் அறியும்
காதலா
நீயே என் கணவனுமானாய் !
கல்யாணமான காதலர்கள் நாம் (இருக்கக் கூடாத என்ன?!)
உள்ளங்கை பரிசாயினும்
பரவசமாய்
கண்ணோரம் சிரிப்பில் விரிய
சில்லென்று பூக்கும்
உன் புன்னகைக்கு
என்றும்
ரசிகை
நான் உன் மனைவி
நீ என் கணவன் ...
நாம் காதலர்கள்
என்றென்றும் காதலர்களே !
ஐ லவ் யூ டா புருஷா...
31 comments:
புருசனை வாடா போடான்னு சொல்ல ஒரு நல்ல சந்தர்ப்பம்:-))நடத்துங்க :-))
//உன் புன்னகைக்கு
என்றும்
ரசிகை
//
அய்...உண்மை! உண்மை!!
எதார்த்தமா எல்லா நாளும் சொல்லுங்க உண்மைய!
போட்டுத் தாக்குங்க..வாழ்த்துக்கள்
நல்லாயிருக்குங்க.
\\புருசனை வாடா போடான்னு சொல்ல ஒரு நல்ல சந்தர்ப்பம்:-))நடத்துங்க :-))\\\
//
காத்திருந்து உண்ணும்
இரவு சாப்பாடு
வாரம் ஒரு சினிமா
மாதம் ஒரு மலைப் பிரதேச
சுற்றுலா
இன்பச் சிற்றுலா ...
//
க்ளாஸிக்.....
மத்தபடி....தேவ் சாரை நீங்க டேய் என்ன, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கூட சொல்லலாம்....ஏன்னா இன்னிக்கு காதலர் தினம் :0)))
ஓஹோ. மிசஸ். தேவ்:)
ரைட் ரைட்.
ஹாப்பி வாலந்டைன்!!!!
ok ok
ஓகே ஒகே ஒகே ட்ரீபிள் ஓகே..
வாடா வா? அன்பு மிகுதின்னு சொல்லி ஆரம்பிங்க.. அப்படியே செல்லமா ஜல்லகரண்டியால... நான் இல்லப்பா.. தாமிரா சொல்ல சொன்னாரு
உண்மைதான்!
காதல் என்ற மாயையைப் பற்றித் தெளிவாக அறிந்த நான் என் மனைவியை அன்றி யாரையும் காதலித்ததில்லை.
உங்கள் கவிதை மிகவும் அற்புதம்.
//இப்படி சாயமிழக்க யத்தனிக்கும் கலர் கலர் கனவுகள் எப்போதும் போல் ஒவ்வொரு முறையும் இன்றே நமக்கு மீள்கிறது//
நல்ல சொல்லாடல்.. காதலர் தின வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு..
//கார்க்கி said...
வாடா வா? அன்பு மிகுதின்னு சொல்லி ஆரம்பிங்க.. அப்படியே செல்லமா ஜல்லகரண்டியால... நான் இல்லப்பா.. தாமிரா சொல்ல சொன்னாரு//
ரிப்பீட்டேய்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பிப்ரவரி பதினாலுக்கு பத்தாயிரம் ரூபா பட்டுப்புடவைக்கு அல்லது வெளிநாடு ட்ரிப்புக்கோ அல்லது நெக்குலசுக்கோ மீட்டரை போடனும். அதுக்கு கவுஜையை வெச்சு கவுத்துப்புட்டீங்களே ?
அல்லது நான் இங்க ஒருத்தி இருக்கேன். பிப்ரவரி போட்டீன் வருது. ஒழுங்கு மரியாதைய கிப்ட் வாங்கி குடு மகனே. போன வருஷம் மாதிரி மறந்து தொலைக்காதே...என்பது மாதிரியும் இருக்கு..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சார், மெஜேஜ் ப்ரம் நயந்தாரா.
நீங்க கூட ப்ளாக்கன் ஒயிட் போட்டோவுல ஜூப்பரா இருக்கீங்க ச்சார்.
மச்சான் மாட்டிக்கிட்டாரு,நல்லா மாட்டிக்கிட்டாரு.
காதல் என்ற மாயையைப் பற்றித் தெளிவாக அறிந்த யாரையும் காதலித்ததில்லை.
//அபி அப்பா said...
புருசனை வாடா போடான்னு சொல்ல ஒரு நல்ல சந்தர்ப்பம்:-))நடத்துங்க :-))//
பின்ன சான்ஸ் கிடைக்கும் போது விடுவோமா என்ன? விடக் கூடாதில்ல .
//பழமைபேசி said...
//உன் புன்னகைக்கு
என்றும்
ரசிகை
//
அய்...உண்மை! உண்மை!!
எதார்த்தமா எல்லா நாளும் சொல்லுங்க உண்மைய!//
சொல்லிட்டா போச்சு ...இதுல என்ன வஞ்சனை ?
//நசரேயன் said...
போட்டுத் தாக்குங்க..வாழ்த்துக்கள்
இன்னும் சரியாக தாக்கலை நசரேயன் .கொஞ்ச நேரம் ஆகலாம் எல்லாரும் வந்து பதிவைப் பார்க்க .
// முரளிகண்ணன் said...
நல்லாயிருக்குங்க.
\\புருசனை வாடா போடான்னு சொல்ல ஒரு நல்ல சந்தர்ப்பம்:-))நடத்துங்க :-))\\\
நன்றி முரளிகண்ணன். நீங்களுமா?
//அது சரி said...
//
காத்திருந்து உண்ணும்
இரவு சாப்பாடு
வாரம் ஒரு சினிமா
மாதம் ஒரு மலைப் பிரதேச
சுற்றுலா
இன்பச் சிற்றுலா ...
//
க்ளாஸிக்.....
மத்தபடி....தேவ் சாரை நீங்க டேய் என்ன, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கூட சொல்லலாம்....ஏன்னா இன்னிக்கு காதலர் தினம் :0)))
ஏன் இந்த நல்ல எண்ணம்? அதுசரி வேதாளத்து கூட கூட சுத்தி சுத்தி விக்ரமனுக்கு ஒற்றுமையான தம்பதிகளுக்குள் கலகமூட்டும் பேராசையோ ?!நாங்களா சிக்குவோம்?! மாட்டோமே!!!
//வல்லிசிம்ஹன் said...
ஓஹோ. மிசஸ். தேவ்:)
ரைட் ரைட்.
ஹாப்பி வாலந்டைன்!!!!
//
அப்பாடா ஒரு வழியா உங்க சந்தேகம் தீர்ந்ததா இப்போ! நல்லதாப்
//SUREஷ் said...
ok ok
வாங்க சுரேஷ் ...நீங்க ஓகே ...ஓகே சொல்றத பார்த்த டௌப்டா இருக்கே!!!
Covai Ravee said...
ஓகே ஒகே ஒகே ட்ரீபிள் ஓகே..
நீங்க என்ன சுரேஷ்க்கு போட்டியாக்கும். வருகைக்கு நன்றி கோவை ரவி
// கார்க்கி said...
வாடா வா? அன்பு மிகுதின்னு சொல்லி ஆரம்பிங்க.. அப்படியே செல்லமா ஜல்லகரண்டியால... நான் இல்லப்பா.. தாமிரா சொல்ல சொன்னாரு
ஏன் இதை தாமிரா வந்து சொல்ல மாட்டாரோ ? அண்ணனுக்கு ரொம்பத்தான் பயம் .
ச்சே..ச்சே ஜல்லிகரண்டி ரொம்ப பாவம்.பூரிக்கட்டை கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்குமே.
//லதானந்த் said...
உண்மைதான்!
காதல் என்ற மாயையைப் பற்றித் தெளிவாக அறிந்த நான் என் மனைவியை அன்றி யாரையும் காதலித்ததில்லை.
உங்கள் கவிதை மிகவும் அற்புதம்.//
நன்றி லதானந்த் சார். என் கவிதை மட்டுமல்ல உங்கள் கருத்தும் அற்புதம் தான்.
அடிக்கடி நம்ம ப்ளாக்கு பக்கமும் இப்படி வந்து எட்டிப் பார்த்து கருத்து சொல்லுங்க.
//narsim said...
//இப்படி சாயமிழக்க யத்தனிக்கும் கலர் கலர் கனவுகள் எப்போதும் போல் ஒவ்வொரு முறையும் இன்றே நமக்கு மீள்கிறது//
நல்ல சொல்லாடல்.. காதலர் தின வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு..//
நன்றி நர்சிம்.
// அத்திரி said...
//கார்க்கி said...
வாடா வா? அன்பு மிகுதின்னு சொல்லி ஆரம்பிங்க.. அப்படியே செல்லமா ஜல்லகரண்டியால... நான் இல்லப்பா.. தாமிரா சொல்ல சொன்னாரு//
ரிப்பீட்டேய்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
நீங்க எப்படி ஜல்லிக்கரண்டியால் பாதிக்கப் பட்டவரா? இல்ல பூரிக்கட்டையால் பாதிக்கப் பட்டவரா அத்திரி ?! அழுகைச் சத்தம் ரொம்ப பலமா இருக்கே!!!
//செந்தழல் ரவி said...
பிப்ரவரி பதினாலுக்கு பத்தாயிரம் ரூபா பட்டுப்புடவைக்கு அல்லது வெளிநாடு ட்ரிப்புக்கோ அல்லது நெக்குலசுக்கோ மீட்டரை போடனும். அதுக்கு கவுஜையை வெச்சு கவுத்துப்புட்டீங்களே ?//
அட இதெல்லாம் கேட்கனும்னு தோணவே இல்லையே!!! ஒரே ஒரு சினிமாவுக்கு இல்ல போகலாம்னு ப்ளான்ல இருந்தோம்.ஞாபகப் படுத்தினதுக்கு ரொம்ப ...ரொம்ப...ரொம்பவே நன்றி :)
// செந்தழல் ரவி said...
சார், மெஜேஜ் ப்ரம் நயந்தாரா.
நீங்க கூட ப்ளாக்கன் ஒயிட் போட்டோவுல ஜூப்பரா இருக்கீங்க ச்சார்//
யாரு அது? ப்ளாக் அண்ட் வைட் போட்டோல?
குடுகுடுப்பை said...
மச்சான் மாட்டிக்கிட்டாரு,நல்லா மாட்டிக்கிட்டாரு.
காதல் என்ற மாயையைப் பற்றித் தெளிவாக அறிந்த யாரையும் காதலித்ததில்லை.
வாங்க குடுகுடுப்பை அண்ணே...
இந்த கமெண்டு என் கவிதைக்கா இல்ல ஏதேனும் நுண்ணரசியலா ???(நுண்ணரசியல்னா என்னப்பா ரொம்ப நாளா டவுட்)
கல்யாணமான காதலர்கள் நாம் (இருக்கக் கூடாத என்ன?!)
இதுதானுங்க உண்மையான காதல்
//கண்ணோரம் சிரிப்பில் விரிய
சில்லென்று பூக்கும்
உன் புன்னகைக்கு
என்றும்
ரசிகை //
போதுமே. வேறென்ன வேறென்ன வேண்டும்.
Post a Comment