Monday, February 9, 2009

நட்பெனப்படுவது யாதெனில்?



மேகங்கள் அடர்ந்ததோர்

கானகத்தின் ஊடே

யுகம் யுகமாய்

இளைப்பாறல் இன்றி

நெடுந்தூரம் நடக்கையில்

என்றேனும் ஓர் நாள்

சிங்கங்கள் நமக்கு

சிநேகிதமாகலாம் ...!

புலிகள் நமக்கு

புதிர் நீக்கலாம்

யானைகள் நமக்கு

வழித் துணைகளாகலாம்

காட்டிலுள்ள விலங்குகளெல்லாம்

அன்றொரு நாளில்

பழக்கப் பட்டு

வார்த்தைகள் ஏதுமில்லா

வான் வெளியின்

வெற்றிடத்தில்

வசப்படாத இலக்கியமாய்

நட்பை நமக்கே பாடமாக்கி

நட்பெனப் படுவது யாதெனில்

யாதொன்றும் தீமை இலாத சொலல்

என

வார்த்தைகள் கனமிழக்கும்

கண நேர புரிதலில்

நட்புக்குத் தேவை இருப்பதில்லை

மனித...மிருக வித்யாசம்

ஆடும் நண்பனே

மாடும் தோழனே

குழி முயலும்

குட்டிக் குரங்கும்

மயிலும்

குயிலும்

மானும்

மீனும்

ஏன் காக்கையும் ...குருவியும்

ஏன் அசையும் ...அசையாத

எல்லாமே நண்பர்களே !

சும்மாவா சொன்னான் பாரதி

"காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் "

ஆதலின் நட்பெனப் படுவது யாதெனில்

யாதொன்றும் தீமையிலாத சொலல் "



21 comments:

அபி அப்பா said...

//ஆடும் நண்பனே //

மட்டேன்! எனக்கு கால் வலிக்கும்:-))

முரளிகண்ணன் said...

உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்க்கவே இல்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ் மணத்தில் ஓட்டு போட்டுவிட்டேன்

நட்புடன் ஜமால் said...

தலைப்பே அருமையா இருக்குங்க

நட்புடன் ஜமால் said...

நல்ல வரிகள்

நட்புடன்.

\\ஆதலின் நட்பெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் தீமையிலாத சொலல் "\\

பழமைபேசி said...

//கவிதை, புரிந்தாலும் ...புரியலைனாலும் படிங்க சும்மா //

பின்ன, காசு குடுத்துப் படிக்க எங்ககிட்ட என்ன கொட்டியா கிடக்கு?

உங்க படைப்பு நல்லா இருக்கு....ஆனா சும்மாதான் எங்கனால படிக்க முடியும்!

பழமைபேசி said...

//கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் //

எனக்கு ஒரு டவுட்! சந்தேகம்(டவுட்)ங்றது மனசுல தானாத் தோன்ற ஒன்னு...அதையெப்பிடிக் கேக்க முடியும்...அதான் என்னோட டவுட்!

நசரேயன் said...

இது கேட்க ஒரு டவுட் இல்லை, நல்லா இருக்கு, ஆனா இது டவுட் இல்லை

Poornima Saravana kumar said...

விலங்குங்க பறவைங்க கூட மட்டும் தான் நம்ம நட்பு போல !!

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
//கவிதை, புரிந்தாலும் ...புரியலைனாலும் படிங்க சும்மா //

பின்ன, காசு குடுத்துப் படிக்க எங்ககிட்ட என்ன கொட்டியா கிடக்கு?

உங்க படைப்பு நல்லா இருக்கு....ஆனா சும்மாதான் எங்கனால படிக்க முடியும்!

//

ரிப்பிட்டே...

KarthigaVasudevan said...

//அபி அப்பா said...

//ஆடும் நண்பனே //

மட்டேன்! எனக்கு கால் வலிக்கும்:-))//

ஆமாம் பின்ன வயசாகுது இல்ல?

KarthigaVasudevan said...

// முரளிகண்ணன் said...

உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்க்கவே இல்லை.//

சும்மா மாத்தி மாத்தி போட்டு எழுதிக்க வேண்டியது தான் முரளிகண்ணன். எப்படியோ சாப்பாடு நல்லா இருந்தா சரி தானே?

KarthigaVasudevan said...

//SUREஷ் said...

தமிழ் மணத்தில் ஓட்டு போட்டுவிட்டேன்//

சரிங்க வைத்தியரே!

KarthigaVasudevan said...

// நட்புடன் ஜமால் said...
தலைப்பே அருமையா இருக்குங்க

நல்ல வரிகள்

நட்புடன்.

\\ஆதலின் நட்பெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் தீமையிலாத சொலல்//

வாங்க ஜமால் ...
நட்புனாலே அழகு தானே

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...

//கவிதை, புரிந்தாலும் ...புரியலைனாலும் படிங்க சும்மா //

பின்ன, காசு குடுத்துப் படிக்க எங்ககிட்ட என்ன கொட்டியா கிடக்கு?

உங்க படைப்பு நல்லா இருக்கு....ஆனா சும்மாதான் எங்கனால படிக்க முடியும்!

இருக்குனா இல்லைன்னு அர்த்தமாமே ....இல்லைனா இருக்குன்னு அர்த்தமாமே .யாரோ சொன்னாங்க கொங்கு நாட்டுல ?!அப்போ உங்க கிட்ட கொட்டித்தான் கிடக்குதோ? இங்கிட்டு கொஞ்சம் தள்ளி விடுங்க பொட்டி காலியாத்தான் இருக்கு .


பழமைபேசி said...

//கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் //

எனக்கு ஒரு டவுட்! சந்தேகம்(டவுட்)ங்றது மனசுல தானாத் தோன்ற ஒன்னு...அதையெப்பிடிக் கேக்க முடியும்...அதான் என்னோட டவுட்!

மனசுல தோணினா அதை நாக்கு என்னிக்காச்சும் வெளில கேட்காம விட்றுமா என்ன?வெளில கேட்டா தானுங்க அண்ணா அது டவுட் இல்லனா வெட்டி திங்கிங் .
எதையுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கேட்டுப் போட்ட பிரச்சினை இல்லீங்களே! என்ன நான் சொல்றது?

KarthigaVasudevan said...

// நசரேயன் said...

இது கேட்க ஒரு டவுட் இல்லை, நல்லா இருக்கு, ஆனா இது டவுட் இல்லை//

ரொம்பத்தான் குழம்பு விட்டீங்க ...ஸாரி...ஸாரி ...குழம்பிட்டீங்க போல?! எப்படியோ படிச்சிட்டீங்க இல்ல,அடுத்ததைப் படிங்க.

KarthigaVasudevan said...

//Poornima Saravana kumar said...

விலங்குங்க பறவைங்க கூட மட்டும் தான் நம்ம நட்பு போல !!//

நம்மன்னு யாரை சொல்றீங்க மேடம்? எனக்கு நட்பு வட்டம் பால்வாடி ஸ்கூல்ல இருந்து ஆரம்பிக்குது? நீங்க எப்படி ஜாயின் பண்ணிக்கறீங்களா கிண்டர் கார்டன்ல ?

KarthigaVasudevan said...

//Poornima Saravana kumar said...
// பழமைபேசி said...
//கவிதை, புரிந்தாலும் ...புரியலைனாலும் படிங்க சும்மா //

பின்ன, காசு குடுத்துப் படிக்க எங்ககிட்ட என்ன கொட்டியா கிடக்கு?

உங்க படைப்பு நல்லா இருக்கு....ஆனா சும்மாதான் எங்கனால படிக்க முடியும்!

//

ரிப்பிட்டே...//

கன்சல்ட் வித் கொங்குத் திலகம் ...நுண் அரசியல் வித்தகர் பழமைபேசி அண்ணா .அங்கன பதில் சொல்லிட்டோம்ல.

அது சரி(18185106603874041862) said...

இரும்பு குதிரைகள்ல பாலகுமாரனோட குதிரைக் கவிதைகள் படிச்ச மாதிரி இருக்கு...

ராமலக்ஷ்மி said...

’கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என் கவிதையை’ன்னும் சொல்லலாம் நீங்க.

//வான் வெளியின்
வெற்றிடத்தில்
வசப்படாத இலக்கியமாய்
நட்பை நமக்கே பாடமாக்கி //

ரசித்தேன் அருமை.

//ஆடும் நண்பனே
மாடும் தோழனே
குழி முயலும்
குட்டிக் குரங்கும்
மயிலும்
குயிலும்
மானும்
மீனும்
ஏன் காக்கையும் ...குருவியும்
ஏன் அசையும் ...அசையாத
எல்லாமே நண்பர்களே ! //

உண்மைதான்.

//யாதொன்றும் தீமையிலாத சொலல்//

அழகாய்ச் சொல்லி விட்டிருக்கிறீர்கள் நட்பிற்கான இலக்கணத்தை. பாராட்டுக்கள்!

KarthigaVasudevan said...

வாங்க ராமலக்ஷ்மி மேடம் ...
கவிதைகளை நான் திட்டமிட்டு எழுதியதில்லை.அவ்வப்போது தோன்றுவதையே பதிந்திருக்கிறேன் .நன்றாக இருக்கிறது என நீங்கள் பாராட்டுவது உற்சாகமளிக்கிறது.
வார்த்தை தேர்வுகள் சரியாக சிக்கினால் கவிதைகள் அழகாகி விடக் கூடும். என்பது உங்கள் பின்னூட்டத்தில் உணர்கிறேன்.