ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!
உலராத பொழுதுகள் :-
கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !
மண்
உதிர்த்து
அலை நனைக்கும்
கால்களுக்கு
துயரம்
உதிர்த்து
உலர்ந்த மனம் பெற
கடற்கரையின்
உலராத பொழுதுகளில்
நிச்சயம்
தெரிந்தே இருந்திருக்கும் ???
20 comments:
\\ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை\\
இரண்டு முறை படித்தேங்க ...
அழகர் குறித்த குட்டிக்கவிதை அழகு.!
இரண்டாவது கவிதை, உலர்ந்து.. உதிர்ந்து.. உலர்ந்து.. உதிர்ந்து.. தலைசுற்றி.. மயங்கி.. ஹிஹி..
//ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!
//
அழக்ருக்கு தானே தெரியவில்ல.. குதிரை ஏன் யோசித்தது? டவுட்டுக்கே டவுட்டா?
நன்றி ஜமால்...
நட்புடன் ஜமால் said...
\\ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை\\
இரண்டு முறை படித்தேங்க ...
ஏன் இரண்டுமுறை படிக்கணும்?புரியலையா வரிகள்! இல்ல நல்லா இருக்குங்கறீங்களா?
//தாமிரா said...
அழகர் குறித்த குட்டிக்கவிதை அழகு.!
இரண்டாவது கவிதை, உலர்ந்து.. உதிர்ந்து.. உலர்ந்து.. உதிர்ந்து.. தலைசுற்றி.. மயங்கி.. ஹிஹி..
//
நன்றி தாமிரா ...
ஹி...ஹி...ஹி...இதுக்கெல்லாமா தலைசுத்தும் ?!கவலைப் படாதீங்க ரெண்டாவது கவிதையும் புரியற நேரம் ஒருநாள் வரும் .
// ஆளவந்தான் said...
//ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!
//
அழக்ருக்கு தானே தெரியவில்ல.. குதிரை ஏன் யோசித்தது? டவுட்டுக்கே டவுட்டா?
//
அதானே சரியான டவுட் தான் ஆளாவந்தான். ஆனாலும் குதிரை தானே யோசிச்சதா எழுதி இருக்கேன்!அப்போ குதிரை கிட்ட தான் நீங்க உங்க டவுட்டைக் கேட்கணும்!
கேளுங்க...கேளுங்க...கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க டவுட்!
உங்களுக்கு ஏன் டவுட்னு பேரு?? இதுதான் எனக்கு டவுட். அதுவும் மிசஸ் டவுட்:))
// வல்லிசிம்ஹன் said...
உங்களுக்கு ஏன் டவுட்னு பேரு?? இதுதான் எனக்கு டவுட். அதுவும் மிசஸ் டவுட்:))
ஸ்ரீ வில்லிபுத்தூர்ல இருந்து வந்தா இப்படிலாம் டவுட் வருமா என்ன?
பக்கத்து ஊர்க்காரங்களா போய்டீங்க அதனால உங்க டவுட்டைக் கிளியர் பண்ணித்தான் ஆகணும்.பரணி கயல் இது ரெண்டும் என் நிக் நேம்ஸ் ,இந்தப் பேர்ல எழுதும் போது யாரும் என் ப்ளாக்கை ரீட் பண்ணதா தெரியலை,சும்மா ஒரு தமாசுக்கு வச்ச பேர் தான் மிசஸ்.டவுட். அவ்ளோ தான் ,என்ன உங்க டவுட் தீர்ந்ததா இப்போ?
ஓ தீர்ந்தது.
கயல், பரணி. ம்ம்ம்ம்ம்.
சரி இனிமே ரெகுலரா படிக்கறேன்ன்.
அழகரும் குதிரையும்,
கவிதையும் நல்லா இருந்ததுப்பா.
தங்க்கவேலுகிட்ட எம்.சரோஜா 'அடுத்தவீட்டுப் பெண்ணி'லகேப்பாங்க...''.வேஷத்தை இத்தோட நிறுத்தப் போறீஇங்களா. இல்லை இத்தோட முடிச்சுக்கறதா??அப்டீன்னு:)
வாழ்த்துகள். நாங்க திருனெல்வேலிங்க. வில்லிபுத்தூர்ல பாசம். இப்ப சென்னை.
"கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !"
ஆம் நம்பிக்கைதானே வாழ்வின் அடித்தளம். அழகாக வந்திருக்கின்றன வரிகள்.
// வல்லிசிம்ஹன் said...
சரி இனிமே ரெகுலரா படிக்கறேன்ன்.
அழகரும் குதிரையும்,
கவிதையும் நல்லா இருந்ததுப்பா.
நன்றி வல்லிசிம்ஹன்....
வல்லிசிம்ஹன் said...
தங்க்கவேலுகிட்ட எம்.சரோஜா 'அடுத்தவீட்டுப் பெண்ணி'லகேப்பாங்க...''.வேஷத்தை இத்தோட நிறுத்தப் போறீஇங்களா. இல்லை இத்தோட முடிச்சுக்கறதா??அப்டீன்னு:)
வாழ்த்துகள். நாங்க திருனெல்வேலிங்க. வில்லிபுத்தூர்ல பாசம். இப்ப சென்னை.
இது வேசமில்லைங்க,எழுத்துக்கள் மேல உள்ள பாசம்!எல்லாருக்குமே நாம எழுதற விஷயம் யாருக்காவது போய் சேரணும்னு குறைந்தபட்ச விருப்பம் இருப்பது நியதி,மத்த பெயர்கள்ல எழுதும்போது கவனிக்கப்படலை,இந்தப் பெயர் கவனிக்கப் பட்டது ,அவ்ளோ தான் ,எப்படியோ நாம எழுதறதை நாலு பேர் படிச்சா சரி தானே!
பேர்ல என்னாங்க இருக்கு!!!
திருநெல்வேலியா நீங்க? தகவலுக்கு நன்றி .
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
"கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !"
ஆம் நம்பிக்கைதானே வாழ்வின் அடித்தளம். அழகாக வந்திருக்கின்றன வரிகள்.//
நன்றி டொக்டர்.முருகானந்தம்;
முதல் கவிதை நல்லாருந்துச்சுங்க
இரண்டாவது கவிதை படிக்கவே முடியலையே ஏன்?
முதற் கவிதை அபாரம்.
இரண்டாவது ஓகே
\\மண்
உதிர்த்து\\
கடற்கரை என்றால் மணல்தானே?
கவிதைக்கு பொய்யழகு?
இலக்கணம் மீறுதல் தானே புதுக்கவிதை?
ஒரு நல்லது நடக்கும்னா பேரை மாத்திக்கைறதுல என்ன தப்பு மிஸஸ.டவுட்:)
அந்தப் படத்தில முருகன், வள்ளியைக் கல்யாணம் கட்ட வேடனாய் விருத்தனாய் வருவதைப் போல மாறி மாறி வருவார். எல்லாம் வள்ளிஎன்னும் நற்பலனை அடையவே.
அதுபோல உங்கள் பதிவும் மேலும் சிறக்க வாழ்த்துகள். ஓகேயா.
கவிதை சூப்பர்:)
//அதிஷா said...
முதல் கவிதை நல்லாருந்துச்சுங்க
இரண்டாவது கவிதை படிக்கவே முடியலையே ஏன்?
வாங்க அதிஷா ...
முதல் கவிதை பாராட்டுக்கு நன்றி ;
இரண்டாம் கவிதை ஏன் புரியவில்லை ?வார்த்தைகள் குழப்பியிருக்குமோ?
// முரளிகண்ணன் said...
முதற் கவிதை அபாரம்.
இரண்டாவது ஓகே
\\மண்
உதிர்த்து\\
கடற்கரை என்றால் மணல்தானே?
கவிதைக்கு பொய்யழகு?
இலக்கணம் மீறுதல் தானே புதுக்கவிதை?
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முரளிகண்ணன்,
கவிதைக்குப் பொய் அழகு தான்,
அதோடு கடற்கரையில் மணல் நிரம்பி இருப்பதைப் போலவே வாழ்க்கையில் துயரங்களும் என்றென்றும் கடற்கரை மணல் போல எண்ணிக்கையின்றி நிறைந்தே இருக்கின்றன என்று கூட எடுத்துக் கொள்ளலாம் தான்!
//PoornimaSaran said...
கவிதை சூப்பர்:)
thankx poornimasaran
Post a Comment