எல்லா பயணங்களும்
கீழிருந்தே துவங்குகின்றன ...
மேலே செல்லச் செல்ல
தொடரும் வால் போல
நீளும் ஏணிப்படிகள்
படிப்படியாய் தயங்கி
அவ்விடத்தே
நிலைத்துவிட
பயணங்கள் என்றென்றும்
துவங்கித் தொடர்கின்றன ...
பயணிகள் மாறலாம்
பயணங்கள் மாறுவதில்லை
எல்லாப் பயணங்களும்
கீழிருந்தே
துவங்கித் தொடர்கின்றனவாம் ...!!!
16 comments:
me escape.........
//மேலே செல்லச் செல்ல தொடரும் வால் போல நீளும் ஏணிப்படிகள் படிப்படியாய் தயங்கி அவ்விடத்தே நிலைத்துவிட பயணங்கள் என்றென்றும் துவங்கித் தொடர்கின்றன ... //
வரிகள் நல்லாருக்கு படிக்க!
கவிதை மிக அருமை.
இதே சாயலில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி இருப்பார், எல்லா பயணங்களும் நம் வீட்டில் இருந்தே தொடங்குகின்றன.
எல்லா சாலைகளும் நம் வீட்டில் இருந்தே தொடங்குகின்றன என்று. (அலைவோம் திரிவோம் கட்டுரை என நினைக்கிறேன்). படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
குப்பன்_யாஹூ
எல்லா பயணங்களும்
கீழிருந்தே துவங்குகின்றன ...
மேலே செல்லச் செல்ல
தொடரும் வால் போல
நீளும் ஏணிப்படிகள்
படிப்படியாய் தயங்கி
///
இது ஒரு இடைவிடாத பயணம்!!
தொடர்பவர் யார் தொடர்ந்தவர் யார் என்று யாருக்கும் தெரியாது..
தேவா...
//
எல்லா பயணங்களும்
கீழிருந்தே துவங்குகின்றன ...
//
நல்ல அருமையான கருத்து
வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது.
//
பயணங்கள் என்றென்றும்
துவங்கித் தொடர்கின்றன ...
பயணிகள் மாறலாம்
பயணங்கள் மாறுவதில்லை
//
ஆமாம் பயணங்கள் மாறுவதில்லை
தொடரும் பயணங்கள் தொல்லை
இல்லாமல் இருக்க வாழ்த்துகிறேன்.
கவிதை, புரிஞ்சா...புரியலைனாலும் படிங்க//
எனக்காகவே லேபிள் போட்டது மாதிரி இருக்கு
அட கவிதையெல்லாம் எழுதறது ...படிக்கிறதுன்னு வந்தபின்னால எஸ்கேப் போட்டா என்ன அர்த்தம்?...
சந்தனமுல்லை said...
//மேலே செல்லச் செல்ல தொடரும் வால் போல நீளும் ஏணிப்படிகள் படிப்படியாய் தயங்கி அவ்விடத்தே நிலைத்துவிட பயணங்கள் என்றென்றும் துவங்கித் தொடர்கின்றன ... //
வரிகள் நல்லாருக்கு படிக்க!
நன்றி சந்தனமுல்லை ....
//குப்பன்_யாஹூ said...
கவிதை மிக அருமை.
இதே சாயலில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி இருப்பார், எல்லா பயணங்களும் நம் வீட்டில் இருந்தே தொடங்குகின்றன.
எல்லா சாலைகளும் நம் வீட்டில் இருந்தே தொடங்குகின்றன என்று. (அலைவோம் திரிவோம் கட்டுரை என நினைக்கிறேன்). படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
குப்பன்_யாஹூ//
வாங்க குப்பன்-யாகூ ...
நீங்க சொன்னப்புறம் தான் ஞாபகம் வருது...
//RAMYA said...
//
எல்லா பயணங்களும்
கீழிருந்தே துவங்குகின்றன ...
//
நல்ல அருமையான கருத்து
வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது//
நன்றி ரம்யா...
// thevanmayam said...
எல்லா பயணங்களும்
கீழிருந்தே துவங்குகின்றன ...
மேலே செல்லச் செல்ல
தொடரும் வால் போல
நீளும் ஏணிப்படிகள்
படிப்படியாய் தயங்கி
///
இது ஒரு இடைவிடாத பயணம்!!
தொடர்பவர் யார் தொடர்ந்தவர் யார் என்று யாருக்கும் தெரியாது..
தேவா...
//
சில யதார்த்தங்கள் இப்படி தான் !...நன்றி தேவன்மயம்
//RAMYA said...
//
பயணங்கள் என்றென்றும்
துவங்கித் தொடர்கின்றன ...
பயணிகள் மாறலாம்
பயணங்கள் மாறுவதில்லை
//
ஆமாம் பயணங்கள் மாறுவதில்லை
தொடரும் பயணங்கள் தொல்லை
இல்லாமல் இருக்க வாழ்த்துகிறேன்.
பயணங்களில் அறவே தொல்லைகள் இல்லாமல் போக வாய்ப்பு குறைவு ரம்யா...யதார்த்தம் என்னவெனில் அப்படி தொல்லைகள் இடைப் படினும் அதைக் கடந்து செல்லும் மனஉறுதியை பெற வாழ்த்துங்கள் என்னை மட்டும் அல்ல...எல்லோரையும்.
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
வாழ்வென்றால் போராடும் போர்களமே!"
குடுகுடுப்பை said...
கவிதை, புரிஞ்சா...புரியலைனாலும் படிங்க//
எனக்காகவே லேபிள் போட்டது மாதிரி இருக்கு
வாங்க குடுகுடுப்பை அண்ணா...
ஆகக் கூடி எப்படியோ படிசிட்டீங்கன்னு சொல்லுங்க...நல்ல வேலை ஜஸ்ட் பாஸ் பண்ணிட்டீங்க!
நல்லா இருக்குங்க...
//பயணிகள் மாறலாம்
பயணங்கள் மாறுவதில்லை//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...
Post a Comment