Monday, January 19, 2009
மை டியர் பாப்பு
சில நாட்களுக்கு முன்பு பாப்பு வரைந்த ஓவியம் இது.
இந்த ஓவியத்தில் இருப்பவர்கள் ...
பாப்புவின் வலது புறம் தேவ் ,இடது புறம் நான்.நடுவில் பாப்புவாம்.
வரைந்து முடித்த பின் அவளே என்னிடம் சொன்னாள்.
எங்களுக்கு மேற்புறம் இருக்கும் படம் என் தம்பியாம்.அதாவது பாப்புவின் மாமா.அவனுடன் அவனது வலது புறம் கண்ணுக்கே தெரியாமல் குட்டியாய் துளியூண்டு ஓவியம் ஒன்று இருக்கிறது கண்களைச் சுருக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும்,
அது பாப்புவின் தம்பியாம்(என் தங்கையின் எட்டு மாத குழந்தை சக்தி தான் அது)அப்புறம் எனக்கும் பாப்புவுக்கும் நடுவில் எங்கள் மூன்று பேருக்கும் தலா மூன்று பூக்களும் வரைந்திருக்கிராளாம்.
தேவ் தலைக்கு மேல் நான்கு கற்களை இணைப்பது போல இருக்கும் படம் என் வளையலாம்!
பாப்பு சொன்னதின் பேரில் இந்த அருமையான ஓவியத்தை நான் வலையில் பதிந்திருக்கிறேன்.
"என் மகள் இவள்" நினைக்கும் போதே எப்போதும் போல் மனம் நிறைவடைகிறது இப்போதும்.
டிஸ்க்கி:- இந்த பெருமை வாய்ந்த ஓவியத்தின் ஒட்டு மொத்த உரிமையும் பாப்புவுக்கு மட்டுமே சொந்தமாம்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அழகான பொக்கிஷம் ...
பத்திரமாக வைத்திருங்கள் ...
சூப்பர்.
ஓவியத்திலும் ஒற்றுமை தெரிகிறது.
சூப்பரா வரைந்திருக்காங்க பாப்பு...
:) பதிவின் கலரை மாத்தினதுக்கு நன்றி.. படமும் கருத்தும் அருமை..
வாவ்! சூப்பர் டிராயிங்!! நல்லா இருக்குங்க! ப்ரிண்ட் அடிச்சு பிரேம் பண்ணுங்க!!
//"என் மகள் இவள்" நினைக்கும் போதே எப்போதும் போல் மனம் நிறைவடைகிறது இப்போதும்.//
செம!!
// நட்புடன் ஜமால் said...
அழகான பொக்கிஷம் ...
பத்திரமாக வைத்திருங்கள் ...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால் .
// குடுகுடுப்பை said...
சூப்பர்.
ஓவியத்திலும் ஒற்றுமை தெரிகிறது//
ஹி..ஹி..நாங்க ரொம்ப...ரொம்ப...ரொம்பவே ஒற்றுமையான குடும்பம் தான்...எப்படியோ கண்டுபிடிச்சிட்டீங்க குடுகுடுப்பை அண்ணா.நன்றிங்க உங்க கண்டுபிடிப்புக்கு .
//அமுதா said...
சூப்பரா வரைந்திருக்காங்க பாப்பு...//
நன்றி அமுதா...பாப்பு நன்றாகப் படம் வரைவாள்.
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) பதிவின் கலரை மாத்தினதுக்கு நன்றி.. படமும் கருத்தும் அருமை..
நன்றி கயல் அக்கா ...
//சந்தனமுல்லை said...
வாவ்! சூப்பர் டிராயிங்!! நல்லா இருக்குங்க! ப்ரிண்ட் அடிச்சு பிரேம் பண்ணுங்க!!
//"என் மகள் இவள்" நினைக்கும் போதே எப்போதும் போல் மனம் நிறைவடைகிறது இப்போதும்.//
செம!!
//
நன்றி முல்லை ...பிரிண்ட் பண்ணிடலாம்.
ரொம்ப அழகான ஓவியம்
பத்திரமா பாதுகாக்க வேண்டும்
ஓவியத்தில் அதிக இடுபாடு
தெரியுது அதிலே நல்ல
பயிற்ச்சி கொடுக்கவும்
இது எனது தாழ்மையான்
வேண்டுகோள் சகோதரி
வாழ்த்துக்கள் சொல்லவும்!!!
//RAMYA said...
ரொம்ப அழகான ஓவியம்
பத்திரமா பாதுகாக்க வேண்டும்
ஓவியத்தில் அதிக இடுபாடு
தெரியுது அதிலே நல்ல
பயிற்ச்சி கொடுக்கவும்
இது எனது தாழ்மையான்
வேண்டுகோள் சகோதரி
வாழ்த்துக்கள் சொல்லவும்!!!//
வாங்க ரம்யா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
தங்களது வாழ்த்துக்களை நான் பாப்புவிடம் தெரிவித்தாகிவிட்டது.
Post a Comment