Tuesday, January 27, 2009

ஆண்டாள் டீச்சரும் ...பாலசந்தர் ஹீரோயின்களும்;

நேற்று காலை கலைஞர் டி.வி யில் அவார்டு வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது...அதில் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலை வித்தகர் விருதை கே.பாலசந்தர் வழங்கினார்.இதல்ல விஷயம் ;அதோடு நில்லாமல் திரு .ஆனந்தனின் காலைத் தொட்டும் வணங்கினார் கே.பி .ஆனந்தன் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பொக்கிஷப் பெட்டகமே ...அதில் ஐயமேதுமில்லை.தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓக்களுக்கான ஒரு நல்லதொடக்கம் உருவாக அவரே காரணமாக இருந்தார் என கே.பி அவரைப் பாராட்டினார்.
இதில் எனக்கு கே.பி ; ஆனந்தன் அவர்களின் காலைத் தொட்டு வணங்கிய நிகழ்ச்சி ஏனோ பிடித்துப் போனது...வயதிற்காக மட்டும் இன்றி அவரது திறமைக்காகவும் எல்லாராலும் கொண்டாடப் படும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் ஒருவர் இவ்வாறு செய்தது பாராட்டப் பட வேண்டிய ஒரு விசயமே.(காலில் விழும் கலாச்சாரத்தை எல்லாம் ஆதரிப்பதாக யாரும் நினைத்து விடாதீர்கள் ...போலிச் சாமியார்கள்...சுயநல அரசியல்வாதிகள்...இவர்களின் கால்களில் பலர் தினம் தினம் விழுது எழுவதைப் பார்க்கையில்

கே.பி ஒரு மூத்த அனுபவசாலியான பெரியவரின் கால்களில் அவரது வித்தகத் தன்மைக்காக வணங்கி எழுத்து ஏனோ அந்த நிமிடத்தில் மனதில் ஒரு இணக்கமான உணர்வைத் தோற்றுவித்தது. அவ்வளவே!
நான் இப்போது சொல்ல வந்த விசயமே வேறு .இந்த நிகழ்வைப் பற்றியும் ஒரு வரி எழுத தோன்றியதால் அதை முதலில் சொல்லி விட்டேன் .

பாலசந்தர் படங்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டோ??? சும்மா விமர்சிக்கிறேன் பேர்வழியென்று அவரது படங்களை குறை சொல்லலாம் தான்.ஆனாலும் அவரது பெரும்பான்மையான படங்கள் நல்லதொரு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளன இது வரையிலும்...;எத்தனையோ படங்களை சொல்லலாம் .அதில் எனக்குப் படித்தமானவற்றைப் பற்றி மட்டும் நான் இப்போதுபட்டியலிடுகிறேன்.

1.அவள் ஒரு தொடர் கதை
2.எதிர் நீச்சல்
3.இரு கோடுகள்
4.பாமா விஜயம்
5.அரங்கேற்றம்
6.மன்மத லீலை
7.இளமை ஊஞ்சலாடுகிறது
8.நினைத்தாலே இனிக்கும்
9.உன்னால் முடியும் தம்பி
10. .சிந்து பைரவி
11. புதுப் புது அர்த்தங்கள்
12.வானமே எல்லை


"கல்கிக்குப் "பிறகு வந்த பாலசந்தர் படங்கள் எதுவுமே என்னை ஈர்த்ததே இல்லை."சமீபத்தில் "பொய் " என்றொரு படம் வந்தது ...பாலசந்தர் எங்கே என்று குழப்பமாகி விட்டது...எதில் தவறு ?கதையிலா? அதைப் படமாக்கிய விதத்திலா? அல்லது பாத்திரப் படைப்பிலா ? அல்லது பாத்திரங்கள் தேர்விலா? ஏதோ ஒரு குறை ! முந்தைய நேர்த்தி இல்லாது போனதால் கவனம் கலைவதோடு பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்க்கும் பொறுமையும் இல்லாது போகிறது. சரி பதிவு பாலசந்தரின் பிந்தைய படங்களைப் பற்றியதல்ல ...நான் வேறொரு விஷயம் சொல்ல நினைத்தேன் .

எல்லா பாலசந்தர் படங்களிலும் பெண்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் தருவார்.ஏன் பெண்களை ஹீரோயினை மையப் படுத்தியே அவரது படங்கள் இருக்கும் ஹீரோ சும்மா தான் என்று ஒரு குற்றச் சாட்டே கூட அவரது படங்களின் மீது உண்டு .இது ஒரு ஆதாரமற்ற குற்றசாட்டு என்பது படத்தோடு பொருந்திப் போய் விட்டால் புரியும்.பெண்களுக்கு முக்கியத்துவம் என்று சொல்வதைக்காட்டிலும் ...அந்தந்த படங்களில் காட்டப் படும் அல்லது முன்வைக்கப் படும் சூழ்நிலைகளை கவனித்தாலே "கதை" தான் அங்கு முன்னிலைப் படுகிறது என்பதை அறியலாம்.

பொதுவில் "அவள் ஒரு தொடர் கதை" படத்தை எடுத்துக் கொண்டால் ...கவிதாவின் (சுஜாதா) கோபங்கள் நியாயமானவையே !அவளுக்கும் விருப்பு..வெறுப்புகள் இருக்கலாம் என்பதையே சிந்திக்க மறந்த அல்லது சிந்திக்க விரும்பாத அல்லது...சிந்திக்க இயலாத ஒரு குடும்பத்தின் சம்பாதிக்கும் மூத்த மகள் என்ற வகையில் அவளது பாத்திரப் படைப்பு மிக அருமையான ஒன்று ...அவள் அப்படித்தானே இருக்க முடியும்!!!

இதில் விகடகவியாக வரும் கமல் ...கவிதாவின் காதலனாக வந்து பின்பு அவளது தங்கையை மணக்கும் விஜயகுமார் ...கவிதாவின் தோழியாக வரும் "படாபட்" ஜெயலக்ஷுமி அவளது தாய் ...;தாய் ..மகள் இருவரையும் ஏமாற்றும் சுகுமாரன்(மலையாள நடிகர்)உருப்படாத அண்ணன் ஜெய்கணேஷ் .

உருப்படாத உதவாக்கரை கணவனாயினும் அவனது ஆசைகளையும் ஒதுக்கித் தள்ள முடியாத நிலையில் இருக்கும் அப்பாவி அண்ணி கதாபாத்திரம்.அப்புறம் விளையாட்டுத் தனம் நிறைந்த தங்கை கதா பாத்திரம் .சில வினாடிகளே வந்தாலும் "கவிதாவின் "சுளீர் பதில்களால் " மனதில் பதியும் விஜயகுமாரின் அம்மா கதாபாத்திரம் ...இப்படி படம் முழுக்கவே எல்லோருக்கும் முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் செல்கிறது .

இதில் கவிதா முன்னிலைப் படுத்தப் படவில்லை...இன்னின்ன காரணங்களால் "அவள் ஒரு தொடர் கதை ஆனாள்" என்பதை விளக்கவே இப்படி ஒரு படம் .

இதே உதாரணங்களை நாம் "அரங்கேற்றம் " படத்திலும் காணலாம் .அதிலும் பிரமிளா என்று இல்லை எல்லா பாத்திரங்களுமே முக்கியத்துவத்துடன் தான் ஒவ்வொரு காட்சியிலும் தென்படுகிறார்கள்.பிரமிளாவின் நண்பனாக வந்து பிறகு அவள் மீது கொண்ட பரிவால் காதல் வயப் படும் சிவக்குமார் ...அவரது தந்தை செந்தாமரை (சிவகுமாரை விட செந்தாமரை நிச்சயம் இளையவராகவே இருப்பாரோ!!! டவுட் தான் வேறென்ன?! )

பிரமிளாவின் தந்தையாக வரும் எஸ்.வி.சுப்பையா ...தாய் எம்.என்.ராஜம்...அத்தையாக வரும் ஒரு வாயாடிப் பாட்டி ...அவளது லூசுப் பெண் ...தங்கைகளாக வரும் ஜெய சுதாவும்...ஜெய சித்ராவும் ...இந்தப் படத்தில் வரும் இன்னொரு மறக்க முடியாத நபர்(நிறையப் பேர் மறந்தும் இருக்கலாம்) சசிக்குமார் என்றொரு நடிகர் (நீங்கள் கெட்ட பாடல் விஜய சாரதியின் தந்தை ) இவர் பின்னாளில் தீவிபத்தில் மனைவியைக் காப்பாற்றப் போய் தானும் ரணப் பட்டு இறந்து விட்டார். இவரது பாத்திரப் படைப்பும் இயல்பான அறிமுகமே!பிரமிளா தன் தம்பியான கமலின் மருத்துவப் படிப்புக்காக நகரத்தில் சந்திக்கும் பல தரப் பட்ட ஆண்களின் குணங்களும் அவர்களின் இரக்கமற்ற எதிர்பார்ப்புகளும்
தான் கதையை நகர்த்துகின்றன.

இதிலும் "கதையின் நாயகி என்பவள் ஒரு மையப் புள்ளி அல்ல ...அவளை சுற்றி மட்டுமே கதை நகரவில்லை.அவளது கண்ணோட்டத்தில் "இதனால் இப்படி ஆனது " என்ற வாழ்வியல் நிதர்சனம் காட்டப் படுகிறது அவ்வளவே! படம் பார்த்தவர்கள் எவரானாலும் இந்தக் கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் .அவள் ஒரு தொடர் கதை சுஜாதாவையும்...அரங்கேற்றம்" பிரமிளாவையும் அவர்களது அந்தந்த பாத்திரப் படைப்புகளை வைத்து ஒத்திட்டுப் பாருங்கள் .

கவிதாவின் (சுஜாதா) தைரியமும் தெளிவும் பிரமிலாவுக்கு இல்லை ,
ஆனால் அவளும் ஒருவிதத்தில் துணிவான பெண்ணாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.இது இரு வேறுபட்ட பெண்களின் சூழ்நிலை சார்ந்த தனித் தன்மைகளே இவை.

கல்கி படத்தில் வரும் கதாநாயகி மட்டுமா அப்படத்தில் முக்கியமாகக் கருதப் படுகிறாள்? அதில் அவளைத் தவிரவும் செல்லம்மா என்ற பாடகி (கீதா) அவளுக்கு பணிப்பெண்ணாக வரும் கோகிலா(பாத்திமாபாபு),ரேணுகா...நாயகன் பரஞ்சோதி...பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் இப்படி எல்லாமே தனித்தன்மையுடன் தான் படைக்கப் பட்டுள்ளது.

இதே போல "சிந்து பைரவியிலும்" சுகாசினி(சிந்து) ,நாயகன்(பி.கே.பி) சிவக்குமார், அவன் மனைவி பைரவி (சுலோச்சனா) தவிரவும் முக்கியத்துவம் வாய்ந்த பல பாத்திரங்கள் வருகின்றன. தவில் வாசிக்கும் குருமூர்த்தி(டெல்லி கணேஷ்),சிந்து தங்கியிருக்கும் பதிப்பக மாடி அறையின் உரிமையாளர் பிரதாப் போத்தன்...அந்த ஜட்ஜ் கதாபாத்திரம் ,அவரது கார் டிரைவராக வரும் கவிதாலயா கிருஷ்ணன் ...சிவசந்திரன் இப்படி படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையுமே முக்கியத்துவம் பெற வைப்பதே பாலசந்தரின் தனித் திறமை தான்.

இந்தப் படங்கள் தான் என்றில்லை ;

"எதிர் நீச்சலில் "வரும் எல்லா கதாபாத்திரங்களுமே அப்படத்தில் கதையின் நாயகன் ...நாயகிகளே! நாம் தினம் தோறும் கடந்து செல்லும் அல்லது நம்மைக் கடந்து செல்லும் நபர்களின் சாயலை அவரது பாத்திரப் படைப்புகளில் நாம் காணலாம்."பட்டு மாமி...கிட்டு மாமாவை மறக்க முடியுமா? நாயர் முத்துராமனை மறக்க இயலுமா?எந்நேரமும் அந்தப் படத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் மனோரமாவின் தந்தை கதாபாத்திரத்தை மறக்க முடியுமா? ஜெயந்தி என்ற அருமையான ஒரு நடிகையை மிகச் சரியாக கே.பி மட்டுமே பயன்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன் ,மாடிப் படி மாது மட்டுமா அதில் நாயகன் ? மேலே நான் குறிப்பிட்ட அத்தனை பேர்களும் இல்லாவிட்டால் கதை ஏது?

இதே போல"பாமா விஜயத்தையும்" சொல்லலாம் ; இதற்கும் நீளமான விளக்கம் அளித்தால் சிலருக்கு போர் அடிக்கலாம் .அதனால் வேண்டாம். ஒரு நடிகை தம் வ்வீட்டுக்கு வருகிறாள் என்பதற்காக ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் அடிக்கும் கூத்துக்களும் அவர்களை நல்வழிப் படுத்தி நிதர்சனத்தை அறிய வைக்க அவர்களது மாமனாராக ...பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பழம் பெரும் நடிகர் திரு.டி.எஸ் .பாலையா செய்யும் முயற்சிகளுமே "பாமா விஜயம்" படத்தின் கதை .நல்ல நகைச்சுவையை விரும்புவோர் தாராளமாகப் பார்க்கலாம் எப்போதுமே!

இதில் தான் ...

"வரவு எட்டணா செலவு பத்தணா

கடைசியில் துந்தனா " எனும் அருமையான சூபர் ஹிட் பாடல் இடம் பெற்றுள்ளது .

இன்னும் புதுப் புது அர்த்தங்கள் ...

இளமை ஊஞ்சலாடுகிறது...

நினைத்தாலே இனிக்கும் ...

உன்னால் முடியும் தம்பி ...;

இப்படி எல்லாப் படங்களுமே சில நாட்கள் இடைவெளியில் மறுபடி பார்க்கத் தகுந்த படங்களே.

இந்த வரிசையில் "உன்னால் முடியும் தம்பி ...இருகோடுகள்...புதுப் புது அர்த்தங்கள் "இந்த மூன்று படங்களையும் ஆறுமாத இடைவெளியில் மறுபடி மறுபடி பார்த்தாலும் அலுப்பில்லாத படங்களே என்பார் என் அம்மா...அது நிஜம் தான் என்பது முதல் முறை படம் பார்த்தபோது புரிந்தது .

சரி இனி தலைப்பிற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தான் சம்பந்தம் இன்று குழப்பத்தை ஏற்படுத்தாமல் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்கிறேன் .அம்மாவின் பணி மாறுதல் காரணமாக ஒரே ஒரு வருடம் சொல்லப் போனால் முக்கால் வருடம் மட்டும் "மானாமதுரையில் " வசிக்க நேர்ந்தது .அங்கே நானும் ...தங்கையும் அங்கே அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முறையே ஏழாம் வகுப்பும்...ஆறாம் வகுப்பும் சேர்க்கப் பட்டோம்.அங்கே எங்களுக்கு கணிதப் பாடம் எடுத்தவர் தான் "ஆண்டாள் டீச்சர் ... !

அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் பணி புரிந்திருக்கலாம் ஆனால் ஆண்டாள் டீச்சரை மட்டும் ஏனோ மறக்க இயலுவதில்லை .டீச்சர் மிக அருமையாகப் பாடம் எடுப்பார்(ஆனால் என்ன எனக்குத் தான் கணக்கு எப்போதுமே பெரும் பிணக்கு ) சுத்தமாக கணக்கு வராது என்பதை விட கணக்கு பாடமே அப்போது பிடிக்காது எனக்கு .

வீட்டுக் கணக்கு போடாமல் வந்து விட்டு டீச்சரிடம் அடி வாங்குவதிலிருந்த தப்ப எத்தனையோ முறை என்னென்ன காரணம் சொல்வது சரியாக இருக்கும் என்று பெரிய ...பெரிய பிளான்கள் எல்லாம் போட்டதுண்டு அப்போது .

அதை விடுங்கள்...டீச்சரைப் பற்றி பார்ப்போம்; ஆண்டாள் டீச்சர் பேருக்குப் பொருத்தமாக "ஆண்டாள் "போலவே ரொம்ப அழகானவர். எலுமிச்சை நிறம்;அளவான உயரம் ...கை தேர்ந்த சிற்பி நேர்த்தியாக செய்து ஓட்ட வைத்ததைப் போல பொருத்தமான மூக்கு ...எத்தனை தூரம் ஒழிந்து மறைந்தாலும் ...கண்டு பிடித்து அவரது நாற்காலி முன்னே மண்டி போட வைக்க தக்க கூர்மையான பார்வை .

இத்தனை அழகான கண்களை வைத்துக் கொண்டு இந்த டீச்சர் ஏன் இப்படி எந்நேரமும் கண்களில் சிரிப்பே காட்ட மறுக்கிறாரோ ? என்றெல்லாம் நாங்கள் பேசிக் கொள்வதுண்டு..இத்தனை இலக்கிய நயமாக அல்ல? "இந்த டீச்சருக்கு என்ன வந்துச்சுல ? எல ஏம்லா இவ்ளோ அழகா கண்ணு முழி மீன் மாதி வச்சிக்கிட்டு ஏம்லா இப்பிடி அடிசுக்கினே இருக்காங்க எப்போ பார்த்தாலும் ?அவங்க கைய தேளு புடுங்க ...! (இவை தவிர்க்க முடியாத திட்டுக்கள் என்ன செய்ய பள்ளி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே!

எங்கள் வகுப்பில் மட்டுமே அப்போது 130 பேர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!) மொத்தம் மூணு செக்சன்கள் வேறு ...நான் "எ" செக்சன் .)ஒழிந்திருக்கும் மாணவியைத் தேடிக் கண்டு பிடித்து குச்சியால் சாத்தி தனது கணக்குப் பாடத்தை மூளையில் கஷ்டப் பட்டேனும் ஏற்றி விடக் கூடிய பிடிவாதமான பாசக்கார டீச்சர் அவர்.

அப்படிப் பட்ட டீச்சர் "கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்பது எனக்கு நான் அந்தப் பள்ளியை விட்டு விலகும் போது தான் தெரிய வந்தது, அதற்கும் ஒரு குட்டி கதை சொன்னார்கள் உடன் பயின்ற மாணவிகள்.

விசாலம் டீச்சர்..விசாலம் டீச்சர் என்று ஒரு டீச்சர் இருந்தார் அங்கே அப்போது...அவர் "சி " செக்சனுக்கு கணிதப் பாடம் எடுப்பார் .அவரும் எங்கள் ஆண்டாள் " டீச்சரும் சின்ன வயதில் ஒன்றாகவே படித்தவர்களாம்...நெருங்கிய சிநேகிதிகளும் கூடவாம் ...ஒன்றாகவே கல்லூரி வரை படிக்கையில் இருவரும் ஒரு சபதம் செய்தார்களாம்.அதாகப் பட்டது " நாம் இருவரும் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்றை இறுதி வரை நினைத்தே பார்க்க கூடாது ...கல்யாணமில்லாமல் வாழ்ந்து முடிக்கலாம் என்று .

இதற்க்கு அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு குடும்ப ரீதியாக எதோ சில காரணங்கள் இருந்திருக்கலாம்...அதைப் பற்றி ஏதும் எனக்கு தெரியவரவில்லை .இதில் காலம் செல்ல செல்ல விசாலம் டீச்சர் மனம் மாறி வீட்டினர் பார்த்த வரனை மணந்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடவும் "ஆண்டாள் டீச்சர் "அவருடன் பேசுவதில்லையாம் .அவர்களின் நட்பு இதனால் ரத்தாகி இருக்கக் கூடும் என்று என்னால் அப்போது அன்றைய தினம் சிந்திக்க முடியாவிட்டாலும் மற்றவர்கள் சொன்னதை உண்மை என எண்ணிக் கொண்டேன்.நான் பார்த்த வரையில் அப்படித் தான் என நினைக்கிறேன் .

நான் அங்கு படித்தது வருடம் சரியாக நினைவில்லை ஆனால் அப்போதே "ஆண்டாள் டீச்சர்" ஓய்வு பெரும் வயதில் இருந்தார்...நான் அப்பள்ளியை விட்டு வந்த அந்த வருடமே அவர்களின் ஆசிரியப் பணியின் கடைசி வருடமாக இருந்தது .அந்த 58 வயதில் தான் டீச்சர் அத்தனை அழகாக இருந்தார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகா வேண்டும்...சொல்லப் போனால் இப்போதைய நடிகை சுஜாதாவைப் போல டீச்சருக்கு "முதுமையே தெரியாத ஒரு வசீகர முகமும் மென்மையான தேகமும் கூட !

பாலசந்தர் படங்களுக்கும் "ஆண்டாள் டீச்சருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று இதை வாசிப்பவர்களுக்கு குழப்பம் வரத்தான் செய்யும் .அது என்னவோ மனித மனம் மிக விசித்திரமானது .அது தனக்குப் பிடித்தமானவர்களை ஏதாவது ஒரு பொருளுடனோ அல்லது சம்பவத்துடனோ தொடர்பு படுத்தி ஞாபகம் வைத்துக் கொள்ளும் .அப்படித் தான் நான் எனது"ஆண்டாள் டீச்சரை" " அவள் ஒரு தொடர் கதை " சுஜாதாவுடன் கற்பனயில் பொருத்திப் பார்த்து ஞாபகத்தில் ஏற்றி வைத்தேன்

அது நேற்று அந்த டி.வி காட்சியில் தட்டி எழுப்பப் பட்டு இன்று உங்கள் முன் வாசிப்பிற்கு வந்திருக்கிறது .இத்தனைக்கும் சுஜாதா அவள் ஒரு தொடர் கதையில் "வயதான பெண்ணே அல்ல?!" அவள் ஒரு முதிர்கன்னி என்பதைப் போல தான் காட்டப் பட்டிருப்பார். அதென்னவோ 58 வயதிலும் டீச்சரின் கட்டுப்பாடு கலந்த பாசம் எனக்கு "சுஜாதாவின் சாயலையே காட்டுகிறது .

வருடம் சரியாக நினைவில்லை சற்றேறக் குறைய 1993 அல்லது ௧௯௯௨ ஆக இருந்திருக்கும் சான்றிதழ்களைப் பார்த்தல் ஒரு வேலை ஆண்டு சரியாகத் தெரியலாம்.அப்போது அந்தப் பள்ளியில் ஆண்டாள் டீச்சரிடம் படித்ட மாணவிகள் யாரேனும் இந்தப் பதிவை வாசித்தால் மீண்டும் ஒரு முறை நம் ஆண்டாள் டீச்சரை நினைவு கூர்ந்து மகிழலாம் .அப்படி யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இடம்- மானாமதுரை பள்ளி-அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அப்போது இந்தப் பள்ளி அங்கே படு பிரபலம் தேர்ச்சி விகிதத்தில் எப்போதும் நல்ல டாப் தான் )

அப்போது அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர்- திருநாவுக்கரசு (தேனிக்காரர்)

டீச்சரின் பெயர்- ஆண்டாள் டீச்சர்பாடம்- பெருமை வாய்ந்த கணிதம் (ஆண்டாள் டீச்சர் எடுத்த பாடம் என்பதால்)

இத்தோடு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் வாசிப்பவர் நலம் கருதி மட்டுமே!!!

குறிப்பு :

பாலசந்தர் படங்களின் ஹீரோயின்களில் எல்லோருமே தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள் என்பதோடு தங்களுக்கு என தனிப் பட்ட விருப்பு வெறுப்பு உள்ளவர்களாகவே பெரும்பாலும் காட்டப் படுவார்கள்.யார் என்ன விமர்சித்தாலும் அவரது பெண் கதா பாத்திரங்கள் தங்களது குணநலன்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் .ஆண்டாள் டீச்சர் கூட அப்படித்தான் எனக்கு தோன்றினாரோ என்னவோ ?! ஏதோ அந்தப் பாதிப்பில் தான் இந்த பதிவு வந்தது .

56 comments:

gulf-tamilan said...

//7.இளமை ஊஞ்சலாடுகிறது//
balachander???
i think sridhar

அபி அப்பா said...

enna pathivu iththana cinnathaa irukku!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள் கெட்ட பாடலா??? ஆமாம் நல்லா வே இல்லாத பாட்டையெல்லாம் போட்டுட்டு .. நல்லபாட்டு இல்ல.. ன்னு ஒரு கமெண்ட் அடிப்பார்.. ஆமாங்க.. நல்லபாட்டே இல்லைன்னு நாம பின் பாட்டு பாடலாம்... ;)

நட்புடன் ஜமால் said...

\\
3.இரு கோடுகள்
9.உன்னால் முடியும் தம்பி
12.வானமே எல்லை \\

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்தது.

அ.மு.செய்யது$ said...

வறுமையின் நிறம் சிவப்பு...

தண்ணீர் தண்ணீர்

நிழல் நிஜமாகிறது..இதெல்லாம் எப்டி விட உங்களுக்கு மனசு வந்துச்சு..

அ.மு.செய்யது$ said...

எவ்ளோ பெரிய பதிவுங்க..இருந்தாலும் பாலசந்தருக்காக நான் இத முழுசா படிக்கிறேன்.

சந்தனமுல்லை said...

ஷார்ட்டாத்தானே எழுதுவீங்க..பதிவு நீளமேத் தவிர, படிக்க அலுக்கவேயில்ல..நல்லா எழுதியிருக்கீங்க..நீங்க லீஸ்ட் பண்ணின படம் எல்லாமே பார்த்ததில்லை..உங்க டீச்சர் மனசில பதிஞ்சுட்ட்டாங்க!! :-)

நட்புடன் ஜமால் said...

\\பாலசந்தர் படங்களின் ஹீரோயின்களில் எல்லோருமே தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள் என்பதோடு தங்களுக்கு என தனிப் பட்ட விருப்பு வெறுப்பு உள்ளவர்களாகவே பெரும்பாலும் காட்டப் படுவார்கள்.யார் என்ன விமர்சித்தாலும் அவரது பெண் கதா பாத்திரங்கள் தங்களது குணநலன்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் .ஆண்டாள் டீச்சர் கூட அப்படித்தான் எனக்கு தோன்றினாரோ என்னவோ ?! ஏதோ அந்தப் பாதிப்பில் தான் இந்த பதிவு வந்தது .\\

நல்ல பாதிப்பு

நல்ல பகிர்வு.

என்ன அர நாள் லீவு எடுக்கனும்

முழுதும் படிக்க.

அ.மு.செய்யது said...

//எல்லா பாலசந்தர் படங்களிலும் பெண்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் தருவார்.ஏன் பெண்களை ஹீரோயினை மையப் படுத்தியே அவரது படங்கள் இருக்கும் ஹீரோ சும்மா தான் என்று ஒரு குற்றச் சாட்டே கூட அவரது படங்களின் மீது உண்டு .இது ஒரு ஆதாரமற்ற குற்றசாட்டு என்பது படத்தோடு பொருந்திப் போய் விட்டால் புரியும்.பெண்களுக்கு முக்கியத்துவம் என்று சொல்வதைக்காட்டிலும் ...அந்தந்த படங்களில் காட்டப் படும் அல்லது முன்வைக்கப் படும் சூழ்நிலைகளை கவனித்தாலே "கதை" தான் அங்கு முன்னிலைப் படுகிறது என்பதை அறியலாம்.
//
நான் சினிமா அதிக‌ம் பார்ப்ப‌தில்லை..பால‌ச‌ந்த‌ர் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே டிவியில் போட்டால் பார்ப்பேன்.

பால‌ச‌ந்த‌ரின் "நிழ‌ல் நிஜ‌மாகிற‌து" ப‌ட‌ம் க‌ம‌ல் க‌தாநாய‌கனாக‌ ந‌டித்த‌து.
மொத்த‌மே எண்ணி ஒரு 10 அல்ல‌து 15 பேர் தான் ப‌ட‌த்தில் ந‌டித்திருப்பார்க‌ள்.
அந்த‌ க‌தையில் வ‌ரும் ஒரு வேலைக்காரிப் பெண் த‌ன‌க்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ துரோக‌த்தை எதிர்த்து, க‌டைசியில் ஒரு புர‌ட்சி முடிவு எடுப்பாள்.

அன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளிலேயே இப்ப‌டி ஒரு ப‌ட‌ம் எடுக்க‌ முடியுமா ?? என்று யோசிக்க‌ வைத்த‌வ‌ர் பால‌ச‌ந்த‌ர்.

இன்னும் ச‌ரிதா என்ற‌ ஒரு துருப்புச் சீட்டை வைத்தே அவ‌ர் சினிமா உல‌கில் ந‌க‌ர்த்திய‌ காய்க‌ள் அதிக‌ம்.இந்தியாவில் பால‌ச‌ந்த‌ரை போல் ஒரு இய‌க்குன‌ர் இனிமேல் பிற‌ந்து தான் வ‌ர‌ வேண்டும்.

ச‌த்ய‌ஜித்ரே.இருந்தார்..இப்போது ம‌ணிர‌த்ன‌ம்..அடூர் கோபால‌கிருஷ்ண‌ன்..எல்லாம் ந‌ல்லா தான் ப‌ன்றாங்க‌...இருந்தாலும் பால‌ச‌ந்த‌ர் உய‌ர‌த்தை யாரும் தொட‌வில்லை என்ப‌து என் க‌ருத்து.

ந‌ன்றி உங்க‌ள் நீண்ட‌ ப‌திவுக்கு.......

நட்புடன் ஜமால் said...

\\Syed Abdul kadhar.M said...
வறுமையின் நிறம் சிவப்பு...\\

அதானே

Anonymous said...

வித்தியாசமான அலசல்..வாசிக்கவும் அலுக்கவில்லை :-)

அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said...
\\Syed Abdul kadhar.M said...
வறுமையின் நிறம் சிவப்பு...\\

அதானே
//

அதே ..அதே....போலிகளை வெறுக்கும் வேலையில்லா இளைஞன்.

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி..

ஒரு ஊமை ஓவியன், கமலிடம் வரைந்து காட்டுவார்.அதற்கு கமல் பதில் சொல்லுவார்.

நீலம் ---‍‍‍‍தூரம்

மஞ்சள் --- சுபம்

சிவப்பு----- வறுமை....

ஆயிரம் அர்த்தங்கள்..

பாலசந்தரைப் பற்றி பேசினால் இன்றெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பேன்.

அபி அப்பா said...

டவுட் அக்கா! இளமை ஊச்சல் ஆடுகிறது ஸ்ரீதர் படம். அது போகட்டும்!

பாலசந்தரை புன்னகை மன்னனுக்கு முன்பு பின்புன்னு அவரை பிரிச்சா தான் சரியா இருக்கும்!

ஆண்டாள் டீச்சர் மாதிரியே எனக்கும் ஒரு ஆனந்தவல்லி டீச்சர் இருந்தாங்க!

நீங்க சொன்ன பட வரிசையிலே சில படங்கள் விட்டு போச்சுப்பா!

அவள் ஒரு தொடர்கதை அருமையான படம். அது போல நீர்குமிழி, அனுபவிராஜா அனுபவி, பாமாவிஜயம் போன்ற அவரது காமடி படங்களை இதுவரை அடிச்சுக்க வேற படம் வரலை.

மாடிப்பாடி மாது கேரக்டர், அந்த படத்திலே வரும் இருமல் தாத்தா(ஒரு நடிகரே இல்லாம ஒரு கேரக்டரை உண்டாக்கிய பாலசந்தரின் புரட்சி) இன்னும் சொல்லி கொண்டே போகலாம்!

வீ. எம் said...

கே பி , கே பி படங்கள் பற்றி மிக நீண்ட அலசல்.. அலுப்புத்தட்டாமல் படிக்க முடிந்தது..

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கும்.. அவரின் ஞாபகத்திறனும், விரல் நுனியில் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை வைத்திருந்த பாங்கும்..

நீங்கள் சொன்னது போல , ஒருவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது ஒரு தவறான முன்னுதாரனம் இந்த அரசியலால் தான்..

கே பி யின் சில பாத்திரப்படைப்புகள், கதை களம் சற்று சர்ச்சையை கிளப்பியிருந்தாலும், சிலவற்றில் உடன்பாடில்லை என்றாலும்.. ஒரு வெற்றிகரமான இயக்குனர், சிறந்த படைப்பாளி என்பதில் சந்தேகமே இல்லை.. வறுமையின் நிறம் சிவப்பு படத்தை விட்டுவிட்டீர்கள்.. எத்துனை முறை பார்த்தாலும் புதிதாக தோண்றும்.. சிந்து பைரவி மற்றுமொரு சூப்பர் படம்..

உண்மைதான் புதுப்புது அர்த்தங்கள், கல்கி அடுத்த கே பியின் படங்கள் ஏனோ கே பி முத்திரையுடன் இல்லை..

மீண்டும் ஒரு நல்ல படத்துடன் கே பி வருவார் என எதிர்பார்க்கலாம்.

நீண்ட பதிவுங்க.. படிக்கவே மூச்சு முட்டுது.. எப்படித்தான் எழுதி, தட்டச்சு செய்ய்தீர்களோ.. :)

வீ. எம் said...

//நான் அங்கு படித்தது வருடம் சரியாக நினைவில்லை ஆனால் அப்போதே "ஆண்டாள் டீச்சர்" ஓய்வு பெரும் வயதில் இருந்தார்//

என்னங இது நம்பற மாதிரி இல்லையே... ! கே பி படத்தோட கடைக்கோடி கேரக்டர் பேரெல்லாம் பக்காவா ஞாபகம் வெச்சு அடிச்சு கலக்குறீங்க.. கல்கி படத்துல கதாநாயகன் கேரக்டர் பேரெல்லாம் அட்ச்சு விடுறீங்க.. ஆனால், ஆண்டாள் டீச்சர் கிட்ட படிச்ச வருஷம் மட்டும் நியாபகம் இல்லையா?? :) உங்க அபார நினைவாற்றல்ல இருந்து இது மட்டும் மறந்து போச்சா??

அப்போ நீங்க 7 வது படிச்சேனு சொல்றீங்க.. 7 வது படிக்கறப்போ என்ன ஒரு 12, 13 வயது இருக்கலாம்.. அதை வெச்சு ரிவர்ஸ் கேல்குஷேன்.. இல்லை நீங்க கல்லூரி படிச்ச வருஷத்தை வெச்சு ஒரு ரிவர்ஸ் கேல்குலேஷன்.. இல்லை பிறந்த வருடத்தை வச்சு 7 வது படித்த வருஷத்துக்கு ஒரு பார்வேர்ட் கேல்குலேஷன் போட்டா ஈஸியா கண்டுபிடிக்கலாமே... :)

7 வது சொல்லியாச்சு.. வருஷமும் சொல்லிட்டா.. அப்புறம் எல்லோரும் கேல்குலேஷன் போட்டுடுவாங்கனு தானே வருஷத்துக்கு லீவு விட்டுடீங்க?? உண்மைய சொல்லுங்க..

கலக்குறீங்க மிஸஸ் டவுட்..

ராஜேஷ், திருச்சி said...

very good post mrs doubt

narsim said...

ரொம்ப நல்லா ( நீளமாவும்)எழுதியிருக்கீங்க..சினிமான்னாலே அலுப்பு தட்டாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனம் ஆகியிருக்கிறது.. நல்ல பதிவு(பாலசந்தர் படங்கள் பிடிக்காதவர்கள் இருப்பார்களானு பொதுவா கேட்காதீங்க.. என்னைப்போல் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்)

தமிழன்-கறுப்பி... said...

பெரிய பதிவுதான் ஆனா சுவாரஸ்யமா இருந்திச்சு..

தமிழன்-கறுப்பி... said...

சில படங்களை பார்க்கவில்லை அல்லது மறந்து போய்விட்டது...

தேவன் மாயம் said...

இன்னும் புதுப் புது அர்த்தங்கள் ...

இளமை ஊஞ்சலாடுகிறது...

நினைத்தாலே இனிக்கும் ...

உன்னால் முடியும் தம்பி ...///

நாலுமே நல்ல படங்கள்தான்!!!
திரும்பப் பார்க்கும்போது சுவரசியம்
குறைவதில்லை!!

பழமைபேசி said...

Very nice, I got to come again!!

Azhagan said...

Manadhil Urudhi Vendum

Azhagan said...

It is a fact that some of his films are "inspired" by other language films like Bengali(Aval oru thodarkathai, I think)

குடுகுடுப்பை said...

நான் அங்கு படித்தது வருடம் சரியாக நினைவில்லை//

படிச்சாதான் நினைவிலே இருக்கும்.ஏழாவது படிக்கும்போதே பாலச்சந்தர் படம் ஞாபகமா இருந்தா அப்படிதான்.
---------------------------------------
சுவராஸ்யமா இருந்துச்சுங்க உங்க பதிவு
-----------------

KarthigaVasudevan said...

// gulf-tamilan said...

//7.இளமை ஊஞ்சலாடுகிறது//
balachander???
i think sridhar//

பிழையை திருத்தியமைக்கு நன்றி gulf-தமிழன் அவர்களே...
தங்கள் வரவு நல்வரவாகி தொடரட்டும் ...
இளமை ஊஞ்சலாடுகிறது ஸ்ரீதர் படம் தான் ...நான் தான் மாற்றி சொல்லி விட்டேன்.

KarthigaVasudevan said...

//அபி அப்பா said...

enna pathivu iththana cinnathaa irukku!

வாங்க சித்தப்பா ...

அபிஅப்பா வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த பதிவு கண்டிப்பாக இதைப் போல சிறிதாக இல்லாமல் சற்றே பெரிய பதிவாக போடப் படும் .:):):)

அருண்மொழிவர்மன் said...

பாலசந்தர் மீது வைக்கப்படும் எல்லா விமர்சனங்களாஇயும் தாண்டி அவர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு டைரக்டர் என்பேன். அவரது திரைக்கதையை வலுவாக அமைக்கும் பாணியும், சுளீரென்றா வசன பாணியும் இன்றும் அவரது படங்களாஇ ரசிக்க தூண்டுகின்றன

KarthigaVasudevan said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

நீங்கள் கெட்ட பாடலா??? ஆமாம் நல்லா வே இல்லாத பாட்டையெல்லாம் போட்டுட்டு .. நல்லபாட்டு இல்ல.. ன்னு ஒரு கமெண்ட் அடிப்பார்.. ஆமாங்க.. நல்லபாட்டே இல்லைன்னு நாம பின் பாட்டு பாடலாம்... ;)//

வாங்க கயல் அக்கா ...
நான் தப்பா டைப் பன்னதைக் கூட எவ்ளோ பாசிடிவ் கமென்ட் போட்டு எடுத்து சொல்றீங்கா...நீங்க...நீங்க தான்! அது நீங்கள் கேட்ட பாடல் தான் ! கெட்ட இல்லை எப்படியோ அதுக்கும் சூப்பரா ஒரு விளக்கம் கொடுத்து நான் தப்பா டைப் பண்ணதையும் சரி பண்ணிட்டீங்க..! நன்றி அக்கா.

KarthigaVasudevan said...

// நட்புடன் ஜமால் said...

\\
3.இரு கோடுகள்
9.உன்னால் முடியும் தம்பி
12.வானமே எல்லை \\

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்தது.

முதல் இரு படங்கள் எனக்கும் ரொம்பவே பிடிக்கும் .வானமே எல்லையில் சின்னதாக ஏதோ மிஸ்ஸிங்.சொல்லத் தெரியவில்லை கதை நல்ல கதை தான்

நட்புடன் ஜமால் said...
\\பாலசந்தர் படங்களின் ஹீரோயின்களில் எல்லோருமே தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள் என்பதோடு தங்களுக்கு என தனிப் பட்ட விருப்பு வெறுப்பு உள்ளவர்களாகவே பெரும்பாலும் காட்டப் படுவார்கள்.யார் என்ன விமர்சித்தாலும் அவரது பெண் கதா பாத்திரங்கள் தங்களது குணநலன்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் .ஆண்டாள் டீச்சர் கூட அப்படித்தான் எனக்கு தோன்றினாரோ என்னவோ ?! ஏதோ அந்தப் பாதிப்பில் தான் இந்த பதிவு வந்தது .\\

நல்ல பாதிப்பு

நல்ல பகிர்வு.

என்ன அர நாள் லீவு எடுக்கனும்

முழுதும் படிக்க.//

நன்றி ஜமால் ...அடுத்த பதிவு நிச்சயம் இவ்வளவு பெரிய பதிவாக இருக்கப் போவதில்லை.

நட்புடன் ஜமால் said...

\\Syed Abdul kadhar.M said...
வறுமையின் நிறம் சிவப்பு...\\

அதானே

எதானே...?!

KarthigaVasudevan said...

//Syed Abdul kadhar.M said...

வறுமையின் நிறம் சிவப்பு...

தண்ணீர் தண்ணீர்

நிழல் நிஜமாகிறது..இதெல்லாம் எப்டி விட உங்களுக்கு மனசு வந்துச்சு..

அதை எல்லாம் விட்டு விடவில்லை நண்பரே, பதிவு "ஆண்டாள் டீச்சரைப் பற்றியதும் கூட என்பதால் அதற்குத் தக்க படங்களை தேர்ந்தெடுத்து சொன்னேன் ..

KarthigaVasudevan said...

// Syed Abdul kadhar.M said...

எவ்ளோ பெரிய பதிவுங்க..இருந்தாலும் பாலசந்தருக்காக நான் இத முழுசா படிக்கிறேன்.

இதான் 1 ஸ்ட் டைம் வரீங்க நம்ம வலைப் பக்கம் .நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.இவ்ளோ பெரிய பதிவை பொறுமையா முழுசா படிச்சதுக்கும் நன்றி

KarthigaVasudevan said...

//சந்தனமுல்லை said...

ஷார்ட்டாத்தானே எழுதுவீங்க..பதிவு நீளமேத் தவிர, படிக்க அலுக்கவேயில்ல..நல்லா எழுதியிருக்கீங்க..நீங்க லீஸ்ட் பண்ணின படம் எல்லாமே பார்த்ததில்லை..உங்க டீச்சர் மனசில பதிஞ்சுட்ட்டாங்க!! :-)//

ஷார்ட்டா தான் எழுதுவேன் ...இன்னைக்கு சொல்ல வந்த டாபிக் அவ்ளோ பெரிசா போய்டுச்சு ...படிக்கிறவங்களுக்கு போர் அடிக்கும்னு நினைச்சேன் ...பரவாயில்லை அலுப்பு தட்டலைனு சொல்லி சந்தோசப் பட வச்சிட்டீங்க முல்லை ...நன்றிப்பா .

இராம்/Raam said...

டவுட் அக்கா,

பாலச்சந்தர் படங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது அபூர்வராகங்கள்.... அவ்வளவு பெரிய சிக்கலான கதையே அவரு சொல்லிருக்கிற விதம் சான்ஸே இல்லை.. என்ன அவருடைய பெரும்பாலான படங்கள் எல்லாம் செக்குமாடு மாதிரி ஒரு விசயத்தையே சுத்தியே இருக்கும்... என்ன சொல்லுறேன்னு புரியுமின்னு நினைக்கிறேன்...
:)

KarthigaVasudevan said...

//பால‌ச‌ந்த‌ரின் "நிழ‌ல் நிஜ‌மாகிற‌து" ப‌ட‌ம் க‌ம‌ல் க‌தாநாய‌கனாக‌ ந‌டித்த‌து.
மொத்த‌மே எண்ணி ஒரு 10 அல்ல‌து 15 பேர் தான் ப‌ட‌த்தில் ந‌டித்திருப்பார்க‌ள்.
அந்த‌ க‌தையில் வ‌ரும் ஒரு வேலைக்காரிப் பெண் த‌ன‌க்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ துரோக‌த்தை எதிர்த்து, க‌டைசியில் ஒரு புர‌ட்சி முடிவு எடுப்பாள்.

//பார்த்த ஞாபகம் இருக்கிறது...ஷோபா நடித்த படம் தானே இது...சரத் பாபு அவரது தங்கையாக இந்துமதி எனும் கேரக்டரில் சுமித்ரா அப்புறம் மௌலி நடித்த படம் தானே இது...ஆமாம் அதில் முடிவு அந்தக் காலகட்டத்திற்கு ரொம்பவே புரட்சிகரமானது தான்.

அன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளிலேயே இப்ப‌டி ஒரு ப‌ட‌ம் எடுக்க‌ முடியுமா ?? என்று யோசிக்க‌ வைத்த‌வ‌ர் பால‌ச‌ந்த‌ர்.

இன்னும் ச‌ரிதா என்ற‌ ஒரு துருப்புச் சீட்டை வைத்தே அவ‌ர் சினிமா உல‌கில் ந‌க‌ர்த்திய‌ காய்க‌ள் அதிக‌ம்.இந்தியாவில் பால‌ச‌ந்த‌ரை போல் ஒரு இய‌க்குன‌ர் இனிமேல் பிற‌ந்து தான் வ‌ர‌ வேண்டும்.

நிஜம் தான் "அச்சமில்லை...அச்சமில்லை "படத்தில் சரிதாவைத் தவிர வேறு யாரால் சுலபமாகப் பொருந்திப் போயிருக்க முடியும்?

KarthigaVasudevan said...

இனியவள் புனிதா said...

வித்தியாசமான அலசல்..வாசிக்கவும் அலுக்கவில்லை :-)

நன்றி இனியவள் புனிதா ...

KarthigaVasudevan said...

//அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said...

பாலசந்தரைப் பற்றி பேசினால் இன்றெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பேன்.

இப்படியும் ஒரு கே.பி ரசிகரா!!...good

இராம்/Raam said...

எழுத்துபிழைகள் கொஞ்சம் இருக்கு... அதெல்லாம் சரி பண்ணுங்க... :)

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...

டவுட் அக்கா! இளமை ஊச்சல் ஆடுகிறது ஸ்ரீதர் படம். அது போகட்டும்!

பாலசந்தரை புன்னகை மன்னனுக்கு முன்பு பின்புன்னு அவரை பிரிச்சா தான் சரியா இருக்கும்!

ஆண்டாள் டீச்சர் மாதிரியே எனக்கும் ஒரு ஆனந்தவல்லி டீச்சர் இருந்தாங்க!

நீங்க சொன்ன பட வரிசையிலே சில படங்கள் விட்டு போச்சுப்பா!

அவள் ஒரு தொடர்கதை அருமையான படம். அது போல நீர்குமிழி, அனுபவிராஜா அனுபவி, பாமாவிஜயம் போன்ற அவரது காமடி படங்களை இதுவரை அடிச்சுக்க வேற படம் வரலை.

மாடிப்பாடி மாது கேரக்டர், அந்த படத்திலே வரும் இருமல் தாத்தா(ஒரு நடிகரே இல்லாம ஒரு கேரக்டரை உண்டாக்கிய பாலசந்தரின் புரட்சி) இன்னும் சொல்லி கொண்டே போகலாம்!//

என்ன சித்தப்பா இது? சந்தடி சாக்குல என்னப் போயி அக்கானு சொல்லிட்டீங்களே...!
வயசானாலே சில நேரம் பேசறது சில நேரம் ஞாபகம் இருப்பதில்லை ...உங்களுக்கும் அப்படி ஆயிடுச்சே ! என்னத்தச் சொல்ல?

//அந்த படத்திலே வரும் இருமல் தாத்தா(ஒரு நடிகரே இல்லாம ஒரு கேரக்டரை உண்டாக்கிய பாலசந்தரின் புரட்சி) இன்னும் சொல்லி கொண்டே போகலாம்!//

இதான் அபிஅப்பா எவ்ளோ பேர் சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கார் பாருங்க,நிஜம் தான் அது ஒரு பெரிய புதுமை தான் ...கடைசி வரைக்கும் அந்த இருமல் தாத்தா வெளில வராமலே இறந்துடுவார் இல்ல படத்துல?!

KarthigaVasudevan said...

//மீண்டும் ஒரு நல்ல படத்துடன் கே பி வருவார் என எதிர்பார்க்கலாம்.

பார்க்கலாம் வீ.எம் ..அந்த கே.பி திரும்பி வந்தா நிச்சயம் பலமா வரவேற்பு இருக்கும்.

நீண்ட பதிவுங்க.. படிக்கவே மூச்சு முட்டுது.. எப்படித்தான் எழுதி, தட்டச்சு செய்ய்தீர்களோ.. :)

எல்லாம் நீங்க கொடுக்கிற ஊக்கம் தான் !!! வேற என்னத்த சொல்ல?!

//7 வது சொல்லியாச்சு.. வருஷமும் சொல்லிட்டா.. அப்புறம் எல்லோரும் கேல்குலேஷன் போட்டுடுவாங்கனு தானே வருஷத்துக்கு லீவு விட்டுடீங்க?? உண்மைய சொல்லுங்க..

கலக்குறீங்க மிஸஸ் டவுட்..//

அட நீங்க வேற !!! என் வயசு என்ன தங்கமலை ரகஷியமா ? மத்தவங்க கால்குலேசன் போட்ருவாங்கன்னு யோசிக்க ! பதிவை நல்லா படிங்க ஒரு இடத்துள் தோராயமா வருஷம் சொல்லி இருப்பேன் .
கலக்குறேனா (ஹா ...ஹா...ஹா ...காம்ப்லானா...பூஸ்ட்டாப்பா?!) சும்மா தமாஸ்ஸு!
நன்றி வீ.எம் .

KarthigaVasudevan said...

// ராஜேஷ், திருச்சி said...

very good post mrs doubt

thankx rajesh

KarthigaVasudevan said...

//narsim said...

ரொம்ப நல்லா ( நீளமாவும்)எழுதியிருக்கீங்க..சினிமான்னாலே அலுப்பு தட்டாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனம் ஆகியிருக்கிறது.. நல்ல பதிவு(பாலசந்தர் படங்கள் பிடிக்காதவர்கள் இருப்பார்களானு பொதுவா கேட்காதீங்க.. என்னைப்போல் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்)

அடடா...இது தெரியாம போய்டுச்சே ....ஆமாம் நரசிம் அண்ணா உங்களுக்கு ஏன் கே.பி படம் பிடிக்காது ? தனி பதிவாவே பதில் சொல்லிருங்களேன்.அப்போ புன்னகை மன்னன் பிடிக்காதா ? சிந்து பைரவியும் பிடிக்காதா ? எதிர் நீச்சல் கூடவா? தங்கள் பதில் என்னவோ ?

KarthigaVasudevan said...

//தமிழன்-கறுப்பி... said...

பெரிய பதிவுதான் ஆனா சுவாரஸ்யமா இருந்திச்சு..

சில படங்களை பார்க்கவில்லை அல்லது மறந்து போய்விட்டது...

நன்றி தமிழன் கறுப்பி

KarthigaVasudevan said...

//thevanmayam said...
இன்னும் புதுப் புது அர்த்தங்கள் ...

இளமை ஊஞ்சலாடுகிறது...

நினைத்தாலே இனிக்கும் ...

உன்னால் முடியும் தம்பி ...///

நாலுமே நல்ல படங்கள்தான்!!!
திரும்பப் பார்க்கும்போது சுவரசியம்
குறைவதில்லை!!//

ஆமாம் தேவன்மயம் ...குறிப்பிட்ட இடைவெளிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...

Very nice, I got to come again!!//

வாங்க பழமைபேசி அண்ணா ...தாரளமா எப்போ வேணாலும் வந்து படிங்க ..மறக்காம கமெண்டை போட்ருங்க .

KarthigaVasudevan said...

//azhagan said...

Manadhil Urudhi Vendum

yes..its also k.b 's master piece.

It is a fact that some of his films are "inspired" by other language films like Bengali(Aval oru thodarkathai, I think)

yes ofcourse ...but it is common to all launguages.
thankx for ur nice coments

KarthigaVasudevan said...

//குடுகுடுப்பை said...
நான் அங்கு படித்தது வருடம் சரியாக நினைவில்லை//

படிச்சாதான் நினைவிலே இருக்கும்.ஏழாவது படிக்கும்போதே பாலச்சந்தர் படம் ஞாபகமா இருந்தா அப்படிதான்.

//படிச்சேனா இல்லையானு நீங்க ஆண்டாள் டீச்சர் கிட்ட தான் தேடிப் பிடிச்சி கேட்கணும்!!!

இதென்னய்யா கொடுமை ஏழாவது படிச்சா கணக்கு தான் பிடிக்காதுன்னு சொன்னேன் பாலசந்தர் படமுமா பிடிக்காம போகணும்? ஏன் நல்ல படத்தை எப்போ பார்த்தா என்ன?
---------------------------------------
சுவராஸ்யமா இருந்துச்சுங்க உங்க பதி

இப்போ நீங்க பாராட்டறீங்களா இல்ல கிண்டல் பண்றீங்களா குடுகுடுப்பை அண்ணா ...ஒரு தெளிவான பதிலை சொல்லிட்டு போங்கப்பா 1 ஸ்ட்.

KarthigaVasudevan said...

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி அருண்மொழி வர்மன்

நன்றி ராம்

பிழைகள் திருத்திக் கொள்ளப் படும் ராம்

இல்யாஸ் said...

”நினைத்தாலே இனிக்கும்” என்றன்றும் நினைத்தாலே இனித்துக்கொண்டே இருக்கும், நான் முதன் முதலாக பார்த்த பால்சந்தர் படம், எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.

நசரேயன் said...

ஒரு கல்லில் ரெண்டு மாங்காய், பாலச்சந்தர்ரும், உங்க டீச்சர்ரும்.
நான் மான மதுரையிலே படிக்கவில்லை, இருந்தாலும் நல்ல சுவரஸ்யமான தகவல்

செந்திலான் said...

வித்தியாசமா இருப்பது வேறு,வித்தியாசமா இருக்கோணுங்கறதுக்காகவே இருப்பது வேறு,பாலச்சந்தர் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்......!

sa said...

அருமையான் பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

தருமி said...

கே.பி.ஒரு திருப்புமுனை என்பதில் ஐயமில்லைதான். ஆனால் உங்களது நல்ல படங்கள் தொகுப்பில் 'புதுப் புது அர்த்தங்க'ளும் (நல்ல வேளை, இந்தப் படத்தைப் போன்ற இன்னொரு முட்டாள்தனமான படமான 'கல்கி' அதில் இல்லை!) இருந்ததைப் பார்த்ததும் நான் முன்பு எழுதியது நினைவுக்கு வந்தது. எட்டிப் பாருங்களேன் - if you dont mind!!

தருமி said...

பதில் பின்னூட்டங்கள் வருவதற்கான கட்டத்தை 'டிக்' செய்ய மறந்ததால் ... மீண்டும்........

ராம்.CM said...

இளமை ஊஞ்சலாடுகிறது
நினைத்தாலே இனிக்கும்
உன்னால் முடியும் தம்பி
சிந்து பைரவி.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்தது.

வித்தியாசமான அலசல்..வாசிக்கவும் அலுக்கவில்லை....

Unknown said...

Achamillai Achamillai ?

Unknown said...

மிசஸ் டவுட்,

ஆண்டாள் டீச்சரை விட தங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்க்கு கொடுத்த குறிப்பில் தேனிகாரர் என்று குறிப்பிடுவது தங்கள் ஊர்காரர் என்பதாலா?
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தங்களது எழுத்துகளில் நிறைய வித்யாசங்கள். வளர்க்க!! மலர்க !!! டவுட் அக்கா (ஆண்டி என்றால் தான் தங்களுக்கு கோவம் வருமே?)

அது என்ன ஆண்டாள் டீச்சர் சின்ன புள்ள தனமா சபதம் பண்ணி இருக்காங்க?
அவங்க தோழி மட்டும் விவரமா எஸ்கேப் அயிடங்க. தோழி மேல் இருந்த கோபத்தை தான் அடிக்கடி தங்கள் மீது காட்டி இருப்பரோ என்னவோ??