மௌனத்தின்
சலனத்தோடு
முனை மழுங்கிய
புலன்களின் ஊடே
வழுக்கிக் கொண்டு
சறுக்கும்போது
புள்ளியில் குவிந்த
பெருவெளிச்சத்தின்மத்தியில்
துழாவித்....துழாவி
ஓய்ந்த பின்
எல்லையற்ற நீள்வெளியில்
கருப்பு அழைத்தது
தன்னுள் அமிழ
வெளுப்பு நழுவியது
ஒட்டாமல் வெட்டிக் கொண்டு
கூம்புகளும்
உருளைகளும்
குழம்பித் திகைத்த
ஏதோ ஒரு நொடியில்
குத்தீட்டிகளாய்
பரவிச் சிதறின
பளபளப்பாய் பல நிறங்கள்
நிறங்களின் ஊடலையும் மனமே ...
எந்த நிறம் நல்ல நிறம் ?
8 comments:
அருமையான வரிகள்
சூப்பருங்க ...
நலவாய் இருக்கும் எந்த நிறமும் நல்ல நிறமே ...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் ...
எப்படிங்க
அருமை
யப்பா பரிட்சைல நான் 0/100
//நட்புடன் ஜமால் said...
அருமையான வரிகள்
சூப்பருங்க ...
நலவாய் இருக்கும் எந்த நிறமும் நல்ல நிறமே ...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் ...
எப்படிங்க
அருமை
நன்றி ஜமால் .
//குடுகுடுப்பை said...
யப்பா பரிட்சைல நான் 0/100//
கோ டு த லாஸ்ட் பெஞ்ச் (0/100) இது தேறுமா?!:(
//Valaipookkal said...
Hi,
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team//
உங்கள் வலைப் பக்கம் இங்கே ஓபன் ஆகமாட்டேங்குதுங்க.விளக்கமா சொல்லுங்க ஒன்னும் புரியலை.
ரொம்ப நல்லா இருக்குங்க இந்தக் கவிதை,
வெளிச்சப்புள்ளி, இருள் வெளி. அழைக்கும் கருப்பு. கூம்பு உருளை குத்தீட்டி நிறங்கள், மௌனத்தின் சலனம், முனை மழுங்கிய புலன்,
வரிக்கு வரி கவிதை, தத்துவார்த்தமாகவும் இருக்கிறது.
ரொம்ப அருமை
நிறங்களில் ஏது நல்ல நிறம் கெட்ட நிறம். நல்லது கெட்டது தேடாமல் இந்த வாழ்க்கையின் வர்ணஜாலங்களை இப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
Post a Comment