யவனிகாவை வாசித்து முடித்திருக்கிறேன் இன்று காலை.சுஜாதா ஏன் இவ்வளவு சீக்கிரம் இறக்க வேண்டும் என்று எல்லா சுஜாதா வாசகர்களைப் போலவே நானும் நினைத்தேன் கொஞ்ச நேரம்,பிறகு காலை சமையல் இருக்கவே இருக்கிறதே எல்லாவற்றையும் மறக்கடிக்க.
நிறைய பேர் யவனிகாவை வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்,நானும் என் பங்குக்கு இன்று தான் ...முடித்தேன்.சுஜாதாவை மட்டம் தட்டநினைப்பவர்கள் மற்றும் ஒரு கணேஷ்...வசந்த் கதை என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட முடியும் தான் .ஆனால் இதில் கற்றுக் கொள்ளவும் ...ஆச்சர்யப்படவும் விஷயம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு கேரக்டரும் தனித் தனி குணநலன்களுடன் படைக்கப் பட்டிருப்பதே சுஜாதா டச் தான்.யார் யார் எப்படி இருப்பார்களோ...அவர்களை அப்படி அப்படியே கதையில் உலவ விட சுஜாதாவால் மட்டுமே முடியும்! வரும் கேரக்டர்கள் எல்லோரும் கும்பலில் கலந்து கட்டி கும்மி அடிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வது ரசிக்கும் படி இருக்கிறது.
வேண்டுமானால் ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாமா?
இப்போது நான் யவனிகா கேரக்டர்களின் பெயர்களை இங்கே வரிசைப் படுத்துகிறேன் ...உங்களுக்கு அவர்கள் கதையில் எந்த இடத்தில் என்னவாக வந்து போகிறார்கள் ?என்பது சட் சட்டென்று மனதில் வந்து நிற்கும் பாருங்கள்(நிற்கும் தானே!!!)
கணேஷ் &வசந்த்-இவர்களைத் தெரியாதவர்கள் சுஜாதாவையே தெரியாதவர்கள்.
கணேஷ் கேரக்டருக்கு எவ்ளோ யோசிச்சும் "வெற்றி விழா ...விக்ரம் ...படத்துல பார்த்த நம்ம உலக நாயகன் கமல் தவிர வேற யாரும் செட் ஆகலைங்களே!
வசந்த் கேரக்டருக்கு பேசாம விக்ரமை போட்றலாம்.(காசா...பணமா...எதோ எனக்குத் தோணினதை சொல்றேன்.)
கெளரி-இவள் இந்தக் கதையில் யார்?இப்படி பல கேரக்டர்கள் நம்மைக் கடந்து போயிருக்கும் நாம சரியா கவனிச்சிருக்க மாட்டோம்...;(இந்தப் பொண்ணு கேரக்டருக்கு அலை பாயுதேல மாதவன் பிரெண்டா வந்த மேத்தாவை போடலாம்!
தேஜோமயி -ஹை... இவளை நீங்கள் மறந்திருக்க முடியாதே!(சரி நம்ம நமீயைக் கற்பனை பண்ணிக்குங்க இப்போதைக்கு ...சுஜாதா வர்ணனைல நமீ தேஜூவை விட கொஞ்சம் ஜாஸ்தி பிரம்மாண்டமாவே இருந்தாலும் கூட தேஜூ தமிழ் நமீக்கு மட்டுமே பொருந்தும் இன்னைய தேதிக்கு!
ராஜா செல்லையா...ராஜா ராமையா-சகோதரர்கள்.(ராஜா ராமையாவுக்கு நம்ம கிரீஸ் கர்னாட் அருமையா செட் ஆவார்.செல்லையாவுக்கு கிட்டியப் போட்டுக்கலாம்.(எவ்வளவு நாள் தான் பாவம் அவரும் வில்லனாவே வந்து போயிட்டு இருப்பார்?! இதுல கேரக்டர் ரோல் பண்ணட்டுமே?!
நடேசன்-செல்லையாவின் பார்ட்னர்(தேவன் ஒரு மலையாள நடிகர் அவர் பொருந்தலாம் இந்த ரோலுக்கு!)
அம்ஜத்-தேஜுவின் பாய் பிரென்ட் (சல்மான் கானைத் தவிர இதுக்கு யாருமே பொருந்தலைங்க என் கற்பனைல!?
சம்பத்-தேஜுவின் பி.எஸ் (எல்லா மெகா சீரியல்லயும் வர ட்ரை பண்ணுவார் பாருங்க மோகன் ராம் அவரைப் போடலாம் சரியா இருக்கும்.)
கும்பகோணத்தில் இருந்து வந்து அநியாயமாகச் உயிரை விடும் ஸ்தபதி ஒருவர்.(இந்த கேரக்டருக்கு நிழல்கள் ரவி கொஞ்சம் சரியா பொருந்துவார்னு தோணுது!
யவனிகா சிலையை கணேஷிடம் ஒப்படைக்கும் பரமானந்த் (இந்தக் கேரக்டருக்கு பழைய காதல் தேசம் அப்பாசைப் போடலாம் பொருத்தமா இருக்கும்!
மயிலாப்பூர் ஆழ்வார் சன்னதியின் அர்ச்சகர் கேரக்டர் .(யவனிகாவை படமாக்கினா இந்த ரோலை ஹேமா பாஸ்கருக்குத் தரலாம்...மனுஷர் பிச்சு உதறிடுவார் பாத்திரத்தை! பிரிவோம் சந்திப்போம் ல சேரனுக்கு சித்தப்பாவா வருவார் அவர் தான்!)
வெடி குண்டுகளை செயலிழக்க வைக்க கணேஷின் நண்பனாக கடைசி பக்கங்களில் மட்டுமே அதிரடியாக வந்து போகும் ஸ்ரீ ,(கரன் அவர் கிடைக்கலனா ஸ்ரீமன் நடிச்சா சரியா வரும் இந்த ரோல்!)
தப்பு தப்பாக ஆங்கிலம் பேசியே கொல்லும் ஒரு அராபிக் கொள்ளை கூட்டக் காரன் .(கசன் கானைப் பத்தி என்ன நினைக்கறீங்க இந்த ரோலுக்கு!)
அவ்ளோ தாங்க நடிகர்...நடிகைகள் தேர்வு முடிஞ்சது. இனி கதைக்கு போகலாம்.
கதை என்று பார்த்தால்,யவனிகா ...சோழர் காலத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வீர ராஜேந்திரர் காலத்தில் செய்வித்த ஒரு வெண்கலச் சிலை.
இதை நம்ம கிட்டி தொல்பொருள் சேகரிப்பாளர் கம் ஆர்வலரா இருந்து ஒரு மியுசியம் வச்சு பாதுகாத்துட்டு வரார்.
நம்ம மேத்தாக்கா அவர்கிட்ட வேலை பாக்கறாங்க அசிஸ்டன்ட்டா...திடீர்னு ஒருநாள் யவனிகா சிலை காணமா (திருடு) போய்ட்டதா மேத்தாக்க வந்து கமல் கிட்டயும் விக்ரம் கிட்டயும் புகார் பண்றாங்க.
இடைல நம்ம நமீதா சல்மான் கான் காதல் கலாட்டா வேற வரும்(ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கக் கூடாது...நமீ இருந்தா தானே சூட்டிங் சீன் வைச்சு கொஞ்சம் கலகலப்பா ஆக்க முடியும் கதை ஓட்டத்தை !அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நமீ சூட்டிங்கள தான் கதையோட முடிச்சு அவிழும்.அதனால் நமீ இந்த கதைக்கு ரொம்பத் தேவை.இவங்க கதை ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கட்டும்.
மெயின் கதைக்கு போவோம் வாங்க...
கமலும் ...விக்ரமும் யாவநிகாவைத் தேடறாங்க...தேடறாங்க...ஒரே குழப்பமா இருக்கு ! யார் தான் யவனிகாவை திருடினதுனு ? முதல்ல தேவன் மேல சந்தேகப் படறாங்க...அப்புறம் கிட்டி மேல...அப்புறம் மேத்தாக்கா மேல...கடசில திருடன் நம்ம கிரீஸ் கர்நாட்னு தெரிஞ்சிருது,
அவரே அவங்க தம்பி வச்சிருந்த விலை மதிப்பற்ற சிலையை திருடி வெளிநாட்டுக்கு விக்கிறதா சொல்லி போலி சிலையை வித்துட்டு அவங்களையும் ஏமாத்திடறார்(கிரீஸ் கர்னாட் இப்படி ஏமாத்தலைனா தான நமக்கெல்லாம் டவுட் வரும்!.
அந்த வெளிநாட்டு கொள்ளைக்கூட்ட காராங்க (அதாங்க கசன்கான் கோஷ்டி )இதனால் வெறி பிடிச்சி போயி நிஜ யவனிகா சிலையைத் தேடி இந்தியாவுக்கு வந்து கிரீஸ் கர்நாட்டுக்கு பீதி தராங்க.
ஒரு பக்கம் போலி சிலையை செஞ்சு தர உதவின ஸ்தபதி நிழல்கள் ரவி அதுக்கு உடந்தையா இருந்த தேவன்...இப்படி ஒரு நாலஞ்சு பேரை இந்தக் கூட்டம் சகட்டு மேனிக்கு கொலை செய்யுது.அதான் டுவிஸ்ட்டு !
அப்புறம் என்ன ஆகுது சில பல இடங்கள்ல (அட நம்ம சென்னைக்குள்ள தாங்க கதை நடக்குது) கலவரங்களும் குண்டு வெடிப்பும் நடந்த பின்ன யவனிகா சிலை பத்தின துப்பு விக்ரமுக்கு கிடைக்குது .கூடவே நம்ம கமலுக்கும் கிடைக்குதுங்கடா சாமியோவ்!
கமலும்...விக்ரமும் புத்திசாலித் தனமா பல செயல்கள் செஞ்சு அப்பால நிஜ (ஒரிஜினல்)யவனிகாவை கண்டு பிடிச்சிடறாங்க ஒரு கட்டத்துல .
இதுல காமெடி இன்னான்னா கடைசில அந்த சிலை ராமையா & செல்லையா கிட்டயும் போகலை...இந்திய அரசாங்கத்தின் தொல் பொருள் துறை வசமும் போகலை ...கட்டக் கடைசில மயிலாப்பூர் ஆழ்வார் கோயில்ல அவரோட பத்தினியா நிக்க வைக்கப் படுது.
சில பல உயிர்களைக் காவு வாங்கிட்டு அந்த சிலை பொது மக்கள் கண்ணில் தட்டுப் பட எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கு பாருங்க!சிலைக்கும் உயிர் உண்டோ?
கிரீஸ் கர்னாட் வந்து வெளிநாட்டுக் கொள்ளைக் காரங்க அவரோட கார்ல வச்ச குண்டால ...தப்பு தப்பு அதான் அந்த குண்டு வெடிப்பு விபத்துல இருந்து கரனும் கமல் அண்ட் விக்ரம் கோஸ்டி அவரைக் காப்பாத்திடுதே...ஆனாலும் உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் " பழமொழிக்கேற்ப தன்னோட வாலட்டை (மணி பர்சு தாங்க athai ippadiyum solluvaangalaam!)கார்ல் இருந்து எடுக்க மறுபடி காருக்குள்ள பாயுற கிரீஸ் பீஸ் பீசா வெடிச்சு சாகிறார்.(படத்துலங்க!)
மேத்தாக்க இடைல கணேஷை லவ் பண்ணறதா பீல் ஆகிட்டு பின்னாடி ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி அமேரிக்கா போயிடறாங்க.
நம்ம வசந்த் சல்மான் கான் கிட்ட இருந்து நமீயை காப்பாத்த நமீயோட தற்காலிக பாய் பிரெண்டா நடிக்கறார்.அப்புறம் kazhandukkaraar..சல்மான்கான் மான் vettaila ஜெயிலுக்குப் போனதும் நமீ இந்தியன் கிரிகெட் டீம்ல ஒருத்தனை லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.
அதாங்க கமல் கல்யாணம் பண்ணிக்காம ...காதல்லயும் மாட்டிகாம eppavum போல ஒழுங்கான பிரம்மச்சாரியா காலத்தை வக்கீலாவே கடத்திட்டு இருக்கார்.
இதாங்க யவனிகா கதை விமர்சனம்.
நிஜமா தான் சொல்றேன்...யவனிகா படிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இதை படிக்காதீங்க.ஏதேதோ எழுத நினைச்சு கடைசில இன்னைக்கு இப்படி போய் முடிச்சிட்டேன் பதிவை.
திட்ரவங்க திட்டலாம் ....பாராட்டுறவங்க பாராட்டலாம்!!!!!அப்படி யாராச்சும் வருவாங்க பாருங்களேன்!
24 comments:
எப்படிங்க இது ...
காலை சமையல் ஒழுங்க நடந்துதா ...
\\கணேஷ் கேரக்டருக்கு எவ்ளோ யோசிச்சும் "வெற்றி விழா ...விக்ரம் ...படத்துல பார்த்த நம்ம உலக நாயகன் கமல்\\
ஆஹா ஆஹா - அருமையான கற்பனை
தூள்
வரிகள் தொடராக இருக்கிறது
கொஞ்சம் அலைன் செய்து,
பத்தி பிரித்து போடுங்கள் ...
அட என்னா வேகம்
செய்து விட்டீர்களே ...
மிக அழகா சொல்லிட்டீங்க.
படித்த ஞாபகம் இன்னும் இல்லை,
படிக்கிறேன் ...
//
நிறைய பேர் யவனிகாவை வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்,
//
நான் இன்னும் வாசிக்கலையே :0))
நீங்க கதை சொல்றது நல்லாருக்கு...அப்படியே அஸிஸ்டெண்ட் டைரக்டர் மாதிரி....
அப்படியே தேவ் சார்ட்ட பேசி ஃப்னான்ஸ் ஏற்பாடு பண்ணுங்க...நானே டைரக்ட் பண்றேன்...கதை ரைட்ஸ் எல்லாம் சுஜாதா மேடம்கிட்ட பேசிக்கலாம்...
:0)))
கமல் நடிப்பது என்றால் அனைத்துப் பாத்திரங்களுக்கும் அவரே செய்துவிடுவார். மற்ற நடிகர்களே தேவையிலலை
//
SUREஷ் said...
கமல் நடிப்பது என்றால் அனைத்துப் பாத்திரங்களுக்கும் அவரே செய்துவிடுவார். மற்ற நடிகர்களே தேவையிலலை
JANUARY 18, 2009 3:50 AM
//
ரிப்பீட்டேய் :0)))
ஆனா, நமீதா மாதிரி கமல் வந்தா...
ஐயோ இப்பவே கண்ண கட்டிக்கிட்டு வருதே ;)))
கமல் நடிக்கிறாரா..அப்ப தசாவதாரம் - 2 ஆ...? கதையும் கிட்டத்தட்ட பொருந்தி வருது. எல்லா கரெக்டரையும் கமலே பண்ணிடுவார்...படம் சூப்பரா ஓடும்...(அட தியேட்டர விட்டு இல்லீங்கோ..)
:-)
:-))
//நட்புடன் ஜமால் said...
எப்படிங்க இது ...
அதான் யோசிச்சிட்டு இருக்கேன் ஜமால்.
காலை சமையல் ஒழுங்க நடந்துதா ...
நல்லாவே நடந்தது.
\\கணேஷ் கேரக்டருக்கு எவ்ளோ யோசிச்சும் "வெற்றி விழா ...விக்ரம் ...படத்துல பார்த்த நம்ம உலக நாயகன் கமல்\\
ஆஹா ஆஹா - அருமையான கற்பனை
தூள்
வரிகள் தொடராக இருக்கிறது
கொஞ்சம் அலைன் செய்து,
பத்தி பிரித்து போடுங்கள் ...
அட என்னா வேகம்
செய்து விட்டீர்களே ...
ஐயோ ரொம்ப பாராட்டாதீங்க ...பயமா இருக்கு !
மிக அழகா சொல்லிட்டீங்க.
படித்த ஞாபகம் இன்னும் இல்லை,
படிக்கிறேன் ...
படிங்க ...ஒரு தடவை படிக்கலாம்.
// அது சரி said...
//
நிறைய பேர் யவனிகாவை வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்,
//
நான் இன்னும் வாசிக்கலையே :0))
படிங்க ...ஒரு தடவை படிக்கலாம்.
அது சரி said...
நீங்க கதை சொல்றது நல்லாருக்கு...அப்படியே அஸிஸ்டெண்ட் டைரக்டர் மாதிரி....
அப்படியே தேவ் சார்ட்ட பேசி ஃப்னான்ஸ் ஏற்பாடு பண்ணுங்க...நானே டைரக்ட் பண்றேன்...கதை ரைட்ஸ் எல்லாம் சுஜாதா மேடம்கிட்ட பேசிக்கலாம்...
:0)))
நீங்க பினான்சியர்னா டீல் டபுள் ஓகே அதுசரி
//SUREஷ் said...
கமல் நடிப்பது என்றால் அனைத்துப் பாத்திரங்களுக்கும் அவரே செய்துவிடுவார். மற்ற நடிகர்களே தேவையிலலை//
சும்மா ...சும்மா தசாவதாரத்தை வச்சு சொல்லக் கூடாது,
அது சரி said...
//
SUREஷ் said...
கமல் நடிப்பது என்றால் அனைத்துப் பாத்திரங்களுக்கும் அவரே செய்துவிடுவார். மற்ற நடிகர்களே தேவையிலலை
ரிப்பீட்டேய் :0)))
அது சரி said...
ஆனா, நமீதா மாதிரி கமல் வந்தா...
ஐயோ இப்பவே கண்ண கட்டிக்கிட்டு வருதே ;)))
இதெல்லாம் ஓவர் கற்பனை...ஒரு பினான்சியர் இப்படிலாம் கற்பனை பண்ணிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.
ம் கலக்குங்க
அது யாரு யவனிகா?
//’டொன்’ லீ said...
கமல் நடிக்கிறாரா..அப்ப தசாவதாரம் - 2 ஆ...? கதையும் கிட்டத்தட்ட பொருந்தி வருது. எல்லா கரெக்டரையும் கமலே பண்ணிடுவார்...படம் சூப்பரா ஓடும்...(அட தியேட்டர விட்டு இல்லீங்கோ..)
:-)//
வாங்க டொன்லீ..
கமல் மேல ஏன் இவ்ளோ பாசம் உங்களுக்கு ?
சிற்சில ஏற்றுக்கொள்ளமுடியாத காரணங்கள் சிலருக்கு கமல் மீது இருந்தாலும் கூட அவர் ஒரு மகத்தான நடிகர் அல்லவா?!(அப்பாடா...யாரையும் குறை சொல்லாம ஒரு பதில் சொல்லியாச்சு!!!)கமல் படம் நல்ல்லாத்தானே ஓடுதுங்கோ (தியேட்டர்ல தான் !)
:)
//அபி அப்பா said...
:-))//
வாங்க அபிஅப்பா....
இந்தப் பதிவுல இப்படி வந்து ஏன் சிரிக்கறீங்கன்னு புரியலையே!!!
//முரளிகண்ணன் said...
ம் கலக்குங்க
//
சரி முரளிகண்ணன்.நீங்களும் சூப்பரா கலக்கறீங்களே!
// குடுகுடுப்பை said...
அது யாரு யவனிகா?//
குடுகுடுப்பை அண்ணா ...
என்ன இது எப்போ பார்த்தாலும் ஒன்னு முட்டை வாங்கறீங்க! இல்லாத்தி இப்படி சந்தேகம் கேட்கறீங்க?"யவனிகா வீர ராஜேந்தர் காலத்தில் செய்விக்கப் பட்ட ஒரு வெண்கலச் சிலை ...அது காணாமப் பொய் திரும்பக் கிடைக்குது .இதான் கதை .படிச்சுப் பாருங்க தெரியும் கதை!!!
Post a Comment