Wednesday, January 7, 2009

ஹே பாட்டி நீ இன்னும் பியூட்டி!

பாட்டிக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகி விட்டதாம் ! இப்படி எல்லோரையும் போல என் பாட்டிக்கும் வருஷா..வருஷம் வயது ஏறிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை.பாட்டியின் வயது அருபதிலேயே அப்படியே நிலைத்து நின்று விட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் இன்னும் எனக்குண்டு,"

என்றும் பதினாறைப் போல

என் செல்லப்பாட்டி ஏன் ...

என்றும் அறுபதாய் நீடிக்கக் கூடாது?"

கடந்த ஒரு வாரம் முழுக்க நானும் பாப்புவும் பாட்டியுடன் இருந்த போது முன்னெப்போதையும் விட மனம் வெகு கவனமாக அந்த நிமிடங்களை எல்லாம் பத்திரமாகப் பதிவு செய்து கொண்டது.ஒவ்வொரு நிகழ்வையும் பாட்டியின் நினைவுகள் அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டே செல்லும் அற்புதம் சமீப காலாமாகத்தான் தொடங்கியது.

எழுபது கடந்தும் பம்பரமாக வீட்டு வேலைகளில் சுற்றிச் சுழலும் பாட்டியின் வேகமும் சிரத்தையும் கண்டு என் சோம்பேறித்தனத்தின் மீது எனக்கே மிகக் கோபம் வந்தது.இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பாகி விட்டேன்.(அது தனிக் கதை)

பாட்டி மிகச் சிறந்த உழைப்பாளி ;தாத்தாவின் தோட்டமெனும் அட்சய பாத்திரம் பாட்டியின் தங்க விரல்கள் பட்டுப் பட்டு நவரத்தினங்களைப் போல பல வண்ணங்களில் ஜிலு...ஜிலுப்பாய் ஜில்லென்று வருடம் முழுக்க காய்த்துக் குலுங்கி ஓய்ந்ததெல்லாம் ஒரு காலம் ! இன்று அது ஒரு கனாக் காலம் !இப்போது நினைத்துப் பார்த்தாலும்

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்கும் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வானிலை " தான்

(சிச்சுவேசன் சாங் இல்லை போலத்தான் தோன்றும் ! எனக்கு இது சிச்சுவேசன் சாங் தான் அந்த நாளைப் பற்றி நினைத்தால் அந்த நாளுக்கே அழைத்துச் சென்று விடும் மாயம் பாட்டியின் ஞாபகங்களுக்கு மட்டுமே உண்டு

அதான் "சட்டென்று மாறுது வானிலை " !!!இந்த இடத்துக்கும் பொருந்தும்) இதனாலெல்லாம் தான் ;

கடவுளே என் பாட்டி இன்னும் நிறைய நாட்கள் ஜீவித்து இருக்கட்டும்...குடும்பத்தின் எல்லோருடைய ஆயுளிலும் குறைந்தது இரண்டு வருடங்களை பங்கிட்டுத் தந்து விட்டால் என்ன? பாட்டி எங்களுக்கு என்றென்றைக்குமே வேண்டும்...வேண்டும்...வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லாமல் யோசிக்க வைக்கிறது பாட்டியின் நேசம்!!!

இதனாலெல்லாம் நிஜம் என்ற ஒன்று இல்லையென்று ஆகி விடுமா என்ன ?பாட்டிக்கு வயதாகி விட்டது உண்மை தான் .

முகம்...கை...கால்கள்...தூங்கும் போது நான் ஒரு புறம் ,என் தங்கை ஒரு புறம் என கைகளைப் போட்டு இறுக்கிக் கட்டிக் கொள்ளும் பாட்டியின் இடுப்பு ,எல்லா இடங்களிலும் வளமை போய் பழுத்து நெடு நாட்கள் ஆன நிறை இலையின் ஒரு வித சோர்வு அப்பட்டமாய்த் தெரிந்த போது ஏனோ சொல்லிக் கொள்ளாமல் கண்ணோரம் கசிந்து நின்றது .

மொட்டை மாடியில் பாட்டியும் நானும் நின்று பேசிக் கொண்டு இருந்தோம்,சிறிது நேரத்தில் அலைபேசி அழைக்க நான் பேசி முடித்து விட்டு வரும் போது பாட்டி வீட்டின் மறுபுறம் பெரிதாய் வியாபித்து நின்ற மலைகளைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.

மனதில் இனம் புரியாமல் ஏதோ ஊர் உணர்வு அழுத்த ;

அலைபேசியின் வீடியோவை ஆன் செய்து விட்டு பக்கத்தில் போய் "பாட்டி" என்று அழைத்து

"ஏமிரா ...என்று திரும்பிய பாட்டியின் குரலையும் அந்த நிமிடத்தையும் அப்படியே பதிவு செய்து கொண்டேன்.என்னால் அது மட்டும் தானே முடியும்!காற்றில் எங்கிருந்தோ கரைந்து வந்து காதோடு மனதையும் நிறைத்தது இந்த வரிகள்

"இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்

மனிதற்கு மொழியே தேவை இல்லை

காற்றின் மொழி ஒலியா இசையா ?"அந்த நிமிடத்தில் மட்டுமல்ல இனி எங்கே இந்த வரிகளைக் கேட்டாலும் எனக்கு என் பாட்டி " ஏமிரா" என்று சொன்னது மட்டும் எப்போதும் மறக்காது,என்னைப் பொறுத்தவரை இது தான் இதயத்தின் மொழி !பத்திரமாய் பாதுகாப்பேன் மொழியை !

முக்கியக் குறிப்பு:- (தெலுங்கில் ஏமிரா என்றால் என்னடா என்று அர்த்தம் தாமிரா என்று வாசித்து விடாதீர்கள் !!!)

25 comments:

தமிழ் மதுரம் said...

நினைவுகளும் ஏக்கமும் பதிவில் தெரிகிறது,

தேவன் மாயம் said...

பாட்டிக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகி விட்டதாம் ! இப்படி எல்லோரையும் போல என் பாட்டிக்கும் வருஷா..வருஷம் வயது ஏறிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை.பாட்டியின் வயது அருபதிலேயே அப்படியே நிலைத்து நின்று விட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் இன்னும் எனக்குண்டு,"///

பாட்டி மேல் உங்கள் பாசம் புல்லரிக்குது!!!
ஏன் இப்ப இருக்கும் பெண்கள் பாசம் குறைவாக காணப்ப்டுகிறீர்கள்?

குடுகுடுப்பை said...

தெலுங்கு பார்ட்டி நல்லாதான் தமிழ்ல எழுதறீங்க. என்னோட நண்பன் நாநா மாதிரி.

தேவன் மாயம் said...

நான் கேட்ட கெள்விக்கு கோபப்பட வேண்டாம்!!!

அபி அப்பா said...

நீங்க பதிவுலகத்தில் ஒரு நல்ல ரவுண்டு வருவீங்க!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் குரலை பதிவு செய்ததாக ஒரு தகவல் காற்றோடு வருகிறதே தாயே..

KarthigaVasudevan said...

//மெல்போர்ன் கமல் said...
நினைவுகளும் ஏக்கமும் பதிவில் தெரிகிறது,//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மெல்போர்ன் கமல்

KarthigaVasudevan said...

// thevanmayam said...
பாட்டிக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகி விட்டதாம் ! இப்படி எல்லோரையும் போல என் பாட்டிக்கும் வருஷா..வருஷம் வயது ஏறிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை.பாட்டியின் வயது அருபதிலேயே அப்படியே நிலைத்து நின்று விட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் இன்னும் எனக்குண்டு,"///

பாட்டி மேல் உங்கள் பாசம் புல்லரிக்குது!!!
ஏன் இப்ப இருக்கும் பெண்கள் பாசம் குறைவாக காணப்ப்டுகிறீர்கள்?
//

யாரை சொல்றீங்க? பதிவை இன்னொரு தடவை நல்லா வாசியுங்கோ தேவன்மயம் .
ஐ லவ் மை பாட்டி !!!

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...
தெலுங்கு பார்ட்டி நல்லாதான் தமிழ்ல எழுதறீங்க. என்னோட நண்பன் நாநா மாதிரி.//

குடுகுடுப்பை அண்ணா யாருங்க அது நாநா ? தெலுங்கு பார்ட்டியா...ஐயே ...அரசியல் கட்சிளலாம் சேர்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லைங்க நாங்க!?

KarthigaVasudevan said...

//thevanmayam said...
நான் கேட்ட கெள்விக்கு கோபப்பட வேண்டாம்!!!//

நீங்க என்ன சொல்றீங்கனே புரியலை, இதுல நான் வேற கோவப்படணுமா?

KarthigaVasudevan said...

//அபி அப்பா said...
நீங்க பதிவுலகத்தில் ஒரு நல்ல ரவுண்டு வருவீங்க!//

நன்றி அபிஅப்பா ,

நட்புடன் ஜமால் said...

\\"ஹே பாட்டி நீ இன்னும் பியூட்டி!"\\

ரய்மிங்க் ...

நட்புடன் ஜமால் said...

\\ "ஏமிரா ...என்று திரும்பிய பாட்டியின் குரலையும் அந்த நிமிடத்தையும் அப்படியே பதிவு செய்து கொண்டேன்\\

உங்களோட பாசம் மஞ்சி தனங்க தெலுஸ்தாந்தி ...

KarthigaVasudevan said...

//உங்கள் குரலை பதிவு செய்ததாக ஒரு தகவல் காற்றோடு வருகிறதே தாயே..//

என் குரலை பதிவு செய்றதா? நான் யாருக்காகவும் இதுவரைக்கும் குரல் கொடுக்கலையே!?

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...
\\"ஹே பாட்டி நீ இன்னும் பியூட்டி!"\\//

ஆமாம் ஜமால் ரைமிங்கா தான் இருக்கு.

//நட்புடன் ஜமால் said...
\\ "ஏமிரா ...என்று திரும்பிய பாட்டியின் குரலையும் அந்த நிமிடத்தையும் அப்படியே பதிவு செய்து கொண்டேன்\\

உங்களோட பாசம் மஞ்சி தனங்க தெலுஸ்தாந்தி ...//

தெலுஸ்துந்தா பாபு ...தானிகே நேனு அதன்னி ராஸ்தானு,

ராம்.CM said...

பாட்டி மேல் உங்கள் பாசம் புல்லரிக்குது!!!

தேவன் மாயம் said...

உங்கள் பாட்டி போல் இந்த தலைமுறை பெண்களின் பாசம் குறைவதாக உணர்கிறேன்!!!
தேவா..

அன்புடன் அருணா said...

//தெலுங்கில் ஏமிரா என்றால் என்னடா என்று அர்த்தம் தாமிரா என்று வாசித்து விடாதீர்கள் !!!)//

super final touch!!!! keep up the spirit...
anbudan aruna

KarthigaVasudevan said...

// ராம்.CM said...
பாட்டி மேல் உங்கள் பாசம் புல்லரிக்குது!!!
//

இதென்ன பாராட்டா இல்ல கிண்டலா? எப்படி வேணுமென்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள்,பாட்டி செல்லங்களுக்கு என் வரிகளின் அர்த்தம் புரியும்.

அன்புடன் அருணா said...

உங்களுக்கு என் வலைப்பூவில் ஒரு பட்டாம்பூச்சி!!!
அன்புடன் அருணா

KarthigaVasudevan said...

// அன்புடன் அருணா said...
உங்களுக்கு என் வலைப்பூவில் ஒரு பட்டாம்பூச்சி!!!
அன்புடன் அருணா//

பட்டாம்பூச்சி விருது கொடுத்ததற்கு நன்றி அருணா ,
கூடவே இன்னொன்றையும் நீங்கள் சொன்னால் தான் என்னால் இன்னும் ஐந்து பேருக்கு இந்த பட்டாம்பூச்சி விருது கொடுக்க முடியும்(அவ்ளோ தாங்க நம்ம சாப்ட்வேர் நாலேட்ஜ் !?)

டவுட் நம்பர் 1:-

இந்தப் பட்டாம்பூச்சி லோகோவை என் வலைப் பக்கத்துக்கு எப்படி கொண்டு போவது ?

டவுட் நம்பர் 2:-

இன்னும் ஐந்து பேருக்கு இந்த விருதை எப்படி அளிப்பது?
இந்த வழிமுறைகளையும் சொல்லிக் கொடுங்க மேடம்.
இல்லாட்டி செயல் முறை விளக்கம் .நீங்க இதுக்கு பதில் சொன்னாத்தான் நீங்க எனக்கு கொடுத்த விருது முழுமை அடைந்ததா அர்த்தம் .(பதில் அனுப்புவீங்க தானே?!)

KarthigaVasudevan said...

//thevanmayam said...

உங்கள் பாட்டி போல் இந்த தலைமுறை பெண்களின் பாசம் குறைவதாக உணர்கிறேன்!!!
தேவா..
//

நானறிந்த வரையில் அப்படி இல்லை என்றே தோன்றுகிறது .பாட்டிகள் எப்போதும் மிக பாசமானவர்களே எந்தத் தலைமுறையிலுமே!

ரிதன்யா said...

நிறைய பேர் பாட்டி செல்லந்தாங்க!,
அதுவும் நான் அம்மா வகை பாட்டி, அப்பா வகை பாட்டி இரண்டு பேருக்கும் செல்லம்.

ஆமா ஒரு வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியனும் சொல்ல முடியுமா?

pudugaithendral said...

நிறைய பேர் பாட்டி செல்லந்தாங்க!,
அதுவும் நான் அம்மா வகை பாட்டி, அப்பா வகை பாட்டி இரண்டு பேருக்கும் செல்லம்.//

repeatikkaren.

KarthigaVasudevan said...

நீண்ட நாட்களுக்குப் பிறகே மறுபடி இந்தப் பக்கத்தை புரட்டியதில் சிலருக்கான மறுமொழிகள் விடுபட்டிருப்பது புரிந்தது...

நன்றி புதுகை தென்றல்
நன்றி ரிதன்யா ...
எந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லணும் ரிதன்யா...
கொஞ்சம் லேட்டான மறுமொழி தான்...இதை நீங்கள் படித்தல் எந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியவேண்டும் என தெரிவியுங்கள்....எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்...அதான் நம்ம ப்ளாக் டைட்டிலே"கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் நு தானே வச்சிருக்கோம்.சும்மா கேளுங்க.

வாங்க புதுகை தென்றல் நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவலுக்கு நன்றி.தொடர்ந்து நம்ம வலைப் பக்கம் வாங்க.