Friday, December 5, 2008

டி.டி யில் ஒளிபரப்பான சில மெகா மகாத் தொடர்கள் ஒரு பிளாஷ் பேக்

மெகா சீரியல் பார்க்கவே பிடிக்காமல் போய்விட்டது இப்போதெல்லாம்,விளம்பரங்களுக்கு நடுவில் எதை தான் பார்க்கப் பிடிக்கிறது?பல மெகா சீரியல்களை விட அட...ஏன் பல திரைப் படங்களை விடவும் கூட சில விளம்பரங்கள் படு பாந்தமாகவும் அருமையாகவும் தான் இருக்கின்றன .

ஆனாலும் எத்தனை முறை தான் ஒரே விளம்பரத்தை திரும்பத் திரும்ப பார்க்க முடியும்?இத்தனை நாட்கள் தான் என்ற முன் அறிவிப்பு எதுவும் இன்றி இஷ்டம் போல இழுத்து அடிக்கப் படும் மெகா சீரியல்களில் தினப் படி ஒலிபரப்பு நேரம் ஒவ்வொரு தொடருக்கும் அரைமணிநேரம் மட்டுமே,காலையில் சன் தொலைக்காட்சியில் பத்து மணிக்கு

மகள்மெட்டி ஒலி (மறு ஒலிபரப்பு)

பந்தம்மணிக்கூண்டுசெந்தூரப் பூவேஅத்திப் பூக்கள்

பிறகு ஒரு இரண்டரை மணி நேரம் ஏதோ ஒரு திரைப்படம்(போட்டதையே போட்டுக் கொல்லும்!!! போட்டி இதில் எந்த தொலைக்காட்சியும் விதி விலக்கில்லை)

பிறகு மாலை ஆறுமணியிலிருந்துமேகலாகஸ்தூரிஆனந்தம்திருமதி செல்வம்கலசம்கோலங்கள்அரசி(வீட்ல அரிசி இருக்கோ இல்லையோ கட்டாயம் தினசரி அரசி பார்க்கணும்)

சிவசக்தி (யாரையும் காலா காலத்துல தூங்க விடக் கூடாதுன்னு என்ன ஒரு சபதம் பாருங்க !!!(ராத்திரி பதினோரு மணிக்கு தான் இந்த சீரியல் முடியும்)

அதுக்கப்புறம் தூங்கி காலைல எப்போ எழுந்து மத்த வேலைங்களைப் பார்க்கறதாம் ?மறுபடி காலைல பத்து மணிக்குள்ள வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சே ஆகணுமே !பின்ன மகள் சீரியல் போட்ருவாங்க இல்ல?இப்படித் தாங்க போயிட்டு இருக்கு பல இல்லத்தரசிகள் மற்றும் பாட்டிகளோட தினசரி செட்யூல். அவங்களுக்கெல்லாம் ஓய்வே இல்லை ,

நான் சொன்ன சீரியல் பட்டியல் சன் டி.வி மட்டும் தான் .இன்னும் ...

கலைஞர் டி.வி இருக்குஜெயா டி.வி இருக்கு ராஜ் டி.வி இருக்குஸ்டார் விஜய் இருக்குமக்கள் தொலைக்காட்சி இருக்கு...

சில ஆர்வக் கோளாறு அதி மேதாவிகள் பத்தி சொல்லவே வேணாம்,

அவங்கல்லாம் சூர்யா டி.வி பார்ப்பாங்க ...

ஜெமினி டி.வி பார்ப்பாங்க...

கைராளி பார்ப்பாங்க...எல்லாத்துலயும் சீரியல் தாங்க .

அதான் மொழிபெயர்ப்பாளர் இல்லாமலே எட்டாங்க்ளாஸ் மட்டுமே பாஸ் பண்ண எங்க அத்தை எல்லா மொழில வர சீரியல் கதை எல்லாத்தையுமே அட்சரம் பிசகாம சொல்றாங்களே !!!

ஸோ ... மொழி எல்லாம் சீரியல் உலகத்துக்கு ரெண்டாம் பட்சம் தான் போல?என்ன பெரிய கதை வச்சு வாழுது ?ஒரே கதையைத்தான மாத்தி மாத்தி எல்லாத்துலயும் வேற வேற ஹீரோ ...ஹீரோயின்சைப் போட்டு எடுக்கறாங்க?இதுவும் அந்த அத்தை சொன்னது தான்!

அட நான் சொல்ல வந்த விஷயமே வேற!பார்த்தீங்களா...பார்த்தீங்களா?இந்த பாழாப் போன மெகா சீரியல் அதோட புத்தியக் காட்டிடுச்சு இதுல கூட ;எவ்ளோ நேரமா அதப் பத்தியே பேச வச்சிடுச்சு பாருங்க இதான் மெகா சீரியல் !!!

முந்தி எல்லாம் ஒரு இருபது வருஷம் முன்னால டி.டி ல கூட செவ்வாய்க் கிழமை தோறும் மெகா தொடர் ஒலிபரப்பு ஆகும் .அப்போ பொதிகைலாம் இல்லை .அப்போ எல்லாம் தொடர்களுக்கு நடுவுல நோ விளம்பரம் .தொடர் ஆரம்பிக்க முன்னாடி சில விளம்பரங்கள் போடுவாங்க.

"விக்கோ ...டர்மெரிக்...இல்லை காஸ்மெடிக் ...""

விக்கோ வஜ்ரதந்தி ..."

"பாரு பாரு பபூல் வசந்தம்'(இது ப்ராமிஸ் டூத் பேஸ்ட் விளம்பரம் இப்போ வரதில்லை)

ரால்கோ டயர்ஸ் ...

ஸ்ரீ தேவி வரும் "சூர்யா பல்ப்...சூர்யா பல்ப்" விளம்பரம்

சொட்டு நீலம் டோய் ...ரீகல் சொட்டு நீலம் டோய் "

பேஷ்..பேஷ் ரொம்ப நன்னா இருக்கு (நரசூஸ் காப்பி)

லைபாய் , சின்த்தால்,முக்கியமாக லக்ஸ் சோப்பு விளம்பரம்...இதிலயும் ஸ்ரீ தேவி தான் .

இப்படி சில விளம்பரங்கள் தான் முக்கியமா தொடர் ஆரம்பிக்க முன்னாடியும் ...தொடர் முடிஞ்ச பின்னாடியும் போடுவாங்க.இப்போ மாதிரி தொடருக்கு நடுவுல மூணு நாலு விளம்பர இடைவேளை எல்லாம் அப்போ கிடையவே கிடையாது.

அப்படிப் பட்ட அற்புதமான அபூர்வமான காலத்துல டி.டில ஒலி பரப்பான சில மெகாத் தொடர்களைப் பத்தி எழுதணும்னு தான் இன்னைக்கு இதை ஆரம்பிச்சேன் அது கடைசில இவ்ளோ நீளமா ஆயிடுச்சு .பரவாயில்லை பொறுமை இருக்கறவங்க யாராவது ஒருத்தராச்சும் இந்தப் பதிவை முழுமையா படிப்பாங்க தானே!(நம்பிக்கை தானே வாழ்க்கை!!!)

சரி விசயத்துக்கு வரேன்...அப்போ நான் ரசிச்ச இப்பவும் சன் டி.வி லயோ இல்ல ஜெயா டி.வி லயோ மறு ஒலிபரப்பு செய்ய வாய்ப்பு இருந்தா பார்க்க விரும்பற சில செவ்வாய்க் கிழமை சீரியால்களோட பட்டியல் ,

"கரிப்பு மணிகள்":-

(மறைந்த ஆண்பாவம் பாண்டியனும் ,இளவரசியும் நடித்து வெளிவந்த தொடர் )

"குறிஞ்சி மலர்":-

(இப்போதைய தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும்,தேவிலலிதா மற்றும் பலர் நடித்த நா.பார்த்த சாரதி அவர்களின் நாவல் தொடராக வெளிவந்தது )

"வடிவேலு வாத்தியார்":-

கம்பர் ஜெயராமன் வடிவேலு வாத்தியார் எனும் கௌரவமான ஆசிரியர் வேடத்திலும் மாஸ்டர் கணேஷ் மாணவராகவும் ,பீலி சிவம் பண்ணையாராகவும் நடிக்க வெளிவந்த மெகா ஹிட் தொடர்.

"சித்திரப்பாவை":-

அகிலனின் சித்திரப்பாவை நாவல் "சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி ஹீரோயினாக நடிக்க வெளிவந்த தொடர்.

"அலை ஓசை ":-

கல்கியின் அலை ஓசை நாவல் ,ஜி.ஜெ என்று அரசியில் ஒரு வில்லக் கதாநாயகன் வருகிறார் ,அவரே தான் அந்த வேணு அர்விந்த் ஹீரோவாக நடிக்க அப்போது வெளிவந்த சீரியல் இது .

"மரியாதை ராமன் கதைகள்":-

இப்போது வெளிவந்த "ஜீ பூம்பா,போலில்லாமல் அப்போது எங்களைப் போன்ற சிறுவர் சிறுமிகளைக் கவர்ந்த மெகா ஹிட் தொடர் இது (அத்தனையும் நீதிக் கதைகள் வாரம் ஒன்றாக வெளிவந்தது ஹீரோ நம்ம மாஸ்டர் கணேஷ் தான்)

அப்புறம் பெயர் சரியாக ஞாபகமில்லை "ரயில் சிநேகிதமா...ரயில் பயணங்களா ...இல்லை சகானாவா சரியாகத் தெரியவில்லை "நிழல்கள் ரவி ஹீரோ பாலசந்தர் இயக்கியது ,அதில் வரும் பாடல் படு பிரபலம்;

"இந்த வீணைக்குத் தெரியாது அதை இசைத்தவன் யாரென்று!!!"

இப்படிப் பல தொடர்கள் வந்தன அப்போது .எல்லாமே ஒரு மணி நேரம் விளம்பர இடை வேலை இன்றி வந்த தொடர்கள் .நான் சிலவற்றை மறந்திருக்கலாம் .ஆலது தவறாகக் கூட கூறி இருக்கலாம் .ஆனாலும் நான் மேலே குறிப்பிட்ட எல்லா தொடர்களையும் இப்போது ஒளிபரப்பப் படும் மெகா..மெகா சீரியால்களோடு ஒப்பிட்டால் அவையெல்லாம் மாணிக்கம் போன்றவை .

அவற்றோடு ஒப்பிடக் கூட இப்போதுள்ள சீரியல்கள் தகுதி பெறவில்லை .இந்தப் பதிவை வாசிப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த அந்தக் கால தொடர்களை இங்கே பின்னூட்டமிடலாம் .

12 comments:

ராஜாதி ராஜ் said...

that one is KB's Rayil Sneham...has a pallavi as "Muthalum Illaathathu, mudivum illaathathu...."

கபீஷ் said...

ரயில் ஸ்னேகம்னு நினைக்கிறேன்.

rapp said...

me the first?

rapp said...

அது ரயில் ஸ்னேகம்தான். சுட்டி இங்கே http://www.tamiltubevid.com/2008/08/kbalachander-serial-rail-sneham-watch.html

rapp said...

எனக்கு குறிஞ்சி மலர் கொஞ்சூண்டு நியாபகம் இருக்கு, ஆனா அப்போ ரொம்ப சின்ன வயசானதால் வேறொன்னும் அது பத்தி நினைவில்லை. மரியாதை ராமன், அலையோசை நியாபகம் இருக்கு.

நட்புடன் ஜமால் said...

நல்லாதான் சொல்றிய

சீரியலப்பத்தி ஒரு சீரியலே எழுதலாம் போலிருக்கே

நட்புடன் ஜமால் said...

”தாயுமானவன்” அப்படின்னு ஒரு சீரியல்.

பாலகுமாரன் எழுதிய நாவலின் திரை வடிவம்.

அருமையா இருக்கும்.

அதுல வர்ர கதையின் நாயகி கட்டிய ஒரு புடவையை மீண்டும் கட்டவேயில்லை (இதை கவணித்து சொன்னவர்கள் தங்கமணிகள்)

அவுக புடவை டிசைன் பார்க்கவே நிறைய பேர் இந்த சீரியலை பார்த்தா சொல்லுவாக.

நாம அப்போ ரொம்ப சிறுசுங்கோ.

கார்க்கிபவா said...

//எனக்கு குறிஞ்சி மலர் கொஞ்சூண்டு நியாபகம் இருக்கு, ஆனா அப்போ ரொம்ப சின்ன வயசானதால் வேறொன்னும் அது பத்தி நினைவில்லை//

நான் அப்ப‌ பொற‌க்க‌வில்லை ராப்..அதான் என‌க்குத் தெரிய‌ல‌ :(((((

ஆகாய நதி said...

நல்ல நியாபகத் திறன் உங்களுக்கு :)

எனக்கு டிடி-இல் ஒளிபரப்பான ஓம்நமச்சிவாய மற்றும் ஜெய்ஹனுமான் ஆகிய மொழிபெயர்ப்பு தொடர்கள் மிகவும் பிடிக்கும்.

நானும் "குறிஞ்சி மலர்" தொடரை தொடர்ந்து பார்த்ததுண்டு

அமுதா said...

ம்... நீங்க சொன்ன மாதிரி இந்த சீரியல் எல்லாம் மாணிக்கங்கள் தான்...

rapp said...

//நான் அப்ப‌ பொற‌க்க‌வில்லை ராப்..அதான் என‌க்குத் தெரிய‌ல‌//

அப்டியா அப்போ நீங்க படிச்சுட்டு வேலப்பாக்கறேன்னு சொன்னதெல்லாம் வழக்கம்போல டுபாக்கூரா, ஏன்னா குறிஞ்சிமலர் வந்தது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில். அப்போ பொறக்கலேன்னா நீங்க என்ன (பிஞ்சில பழுத்த)கொழந்தத் தொழிலாளரா? வயசாகிடுச்சுல்ல, கார்க்கிண்ணே, அதான் மறந்துட்டீங்க போலருக்கு:):):)

KarthigaVasudevan said...

வாங்க ராஜாத்தி ராஜ்
வாங்க கபீஷ்
வாங்க rapp

u the third madam

//அது ரயில் ஸ்னேகம்தான்.//

ஆமாமாம் ..அது ரயில் சிநேகமே தான் !

//எனக்கு குறிஞ்சி மலர் கொஞ்சூண்டு நியாபகம் இருக்கு, ஆனா அப்போ ரொம்ப சின்ன வயசானதால் வேறொன்னும் அது பத்தி நினைவில்லை. மரியாதை ராமன், அலையோசை நியாபகம் இருக்கு.//

அப்போ சின்ன வயசுன்னா இப்போ உங்களுக்கு எத்தனை வயசிருக்கும் rapp madam ?

//நல்லாதான் சொல்றிய

சீரியலப்பத்தி ஒரு சீரியலே எழுதலாம் போலிருக்கே//

ஏற்கனவே யாராச்சும் எழுதி இருப்பாங்க ஜமால்...அதுக்கென்ன நாமளும் எழுதிட்டா போச்சு !?

//அதுல வர்ர கதையின் நாயகி கட்டிய ஒரு புடவையை மீண்டும் கட்டவேயில்லை (இதை கவணித்து சொன்னவர்கள் தங்கமணிகள்)

அவுக புடவை டிசைன் பார்க்கவே நிறைய பேர் இந்த சீரியலை பார்த்தா சொல்லுவாக.

நாம அப்போ ரொம்ப சிறுசுங்கோ.//

இதெல்லாம் கொடுமை...தங்கமணிகளின் பிரத்யேக உரிமைகளில் எல்லாம் நீங்க ஏன் தலை இடணும்?மெகா சீரியல் பார்க்கறதும் குழந்தை வளர்ப்பு மாதிரி ஒரு கலை தான் தெரியுமா?உங்க தங்கமணிகிட்ட வேணும்னா கேட்டுப் பாருங்க?!!

வாங்க கார்க்கி
////எனக்கு குறிஞ்சி மலர் கொஞ்சூண்டு நியாபகம் இருக்கு, ஆனா அப்போ ரொம்ப சின்ன வயசானதால் வேறொன்னும் அது பத்தி நினைவில்லை//

நான் அப்ப‌ பொற‌க்க‌வில்லை //
நீங்க என்ன சொல்ல வரீங்க?
குறிஞ்சிமலர் தொடர் வெளிவந்தப்ப உங்களுக்கு சின்ன வயசுன்னு சொல்றிங்களா இல்ல அப்போ நீங்க பொறக்கவே இல்லைன்னு சொல்றிங்களா? குழப்பறிங்களே?!

வாங்க ஆகாயநதி ...

//எனக்கு டிடி-இல் ஒளிபரப்பான ஓம்நமச்சிவாய மற்றும் ஜெய்ஹனுமான் ஆகிய மொழிபெயர்ப்பு தொடர்கள் மிகவும் பிடிக்கும்.//
சந்திரகாந்தா ,ராமாயணம்...மகாபாரதம் எல்லாம் விட்டுட்டிங்களே...அப்போ தமிழ்ல மொழி பெயர்க்காமலே போட்டாலும் கூட நாங்கலாம் பார்ப்போம்..அவ்ளோ இந்திப் பற்றுன்னு எல்லாம் நினைச்சிடாதிங்க ...டைம் பாஸ்க்கு அப்போ வேற வழி !!!

வாங்க அமுதா
//ம்... நீங்க சொன்ன மாதிரி இந்த சீரியல் எல்லாம் மாணிக்கங்கள் தான்...//

yes it is true...

//அப்போ பொறக்கலேன்னா நீங்க என்ன (பிஞ்சில பழுத்த)கொழந்தத் தொழிலாளரா? வயசாகிடுச்சுல்ல, கார்க்கிண்ணே, அதான் மறந்துட்டீங்க போலருக்கு:):):)//

என்னாச்சு rapp?...

ஆனாலும் நீங்க கார்க்கியை வச்சு இப்படிலாம் காமெடி பண்ணக் கூடாது .