Wednesday, December 3, 2008

இப்படித்தான் நியாயம் செய்யுமா இந்திய அரசு?!

ஒலிம்பிக் என்பது உலகளாவிய அளவில் நடத்தப் படும் ஒரு விளையாட்டுப் போட்டி.ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் பெற்றுத் தந்த அபினவ் பிந்த்ராவுக்கு நமது இந்திய அரசு மூன்று கோடி ரூபாய்கள் பரிசுப் பணமும் மற்றும் பல வெகுமதிகளும் கொடுத்துக் கௌரவித்தது .
சென்ற வாரம் மும்பையில் வெறியாட்டம் ஆடித் தீர்த்த தீவிரவாதிகளுக்கு எதிராக நமது இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரப் போராட்டத்தில் பலியான ராணுவ வீரர்களின் இழப்புக்கு அவர் தம் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய்கள் இழப்பீடு வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது .
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரருக்கு மூன்று கூடி ரூபாய்களோடு வெகுமதிகள் வேறு இன்னும் தொடர்கின்றன.நாட்டையும் மக்களையும் காக்க தமது இன்னுயிரை ஈந்த துப்பாக்கி வீரருக்கோ வெறும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு மட்டும்!!! ஏன் இந்தப் பாரபட்சம்?!
அபினவ் பிந்த்ரா ஒரு கோடீஸ்வரரின் மகன் அவருக்கு இந்த மூன்று கோடி ரூபாய் பரிசுப் பணத்தை விட ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கமே பெரியதொரு "கௌரவச் சின்னமாக " இருக்கக் கூடும் .பணம் அவருக்கு ஒரு அத்யாவஸ்யமே அல்ல ! அவருக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கி ஏன் அரசு கௌரவித்தது என்பது இங்கே முன்வைக்கப் படவில்லை.
விளையாட்டில் ஒருமுறை வென்றால் அதிர்ஷ்டமிருப்பின் மறுமுறையும் வெல்ல வாய்ப்பு இருக்கிறது .ஆனால் நிஜத்தில் போன உயிர்(தேசப் பாதுகாப்புக்காக பறிக்கப் பட்ட உயிர்) மறுபடி திரும்பக் கூடுமா?இறந்த ராணுவ வீரர்களின் கடமை உணர்ச்சிக்கும் தேச பக்திக்கும் இந்திய அரசு இப்படித் தான் நியாயம் செய்கிறதா?
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரரின் பெருமையைக் காட்டிலும் தேசத்துக்காக போராடி உயிரை விட்ட துப்பாக்கி வீரரின் பெருமை எந்த விதத்தில் சோடை போய்விட்டது?அவர்களுக்கும் முக்கியத்துவம் தருவதில் என்ன பாரபட்சம் வேண்டி இருக்கிறது ?
இந்திய அரசு சிந்திக்குமோ ...சிந்திக்காதோ ?
எனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி என்னை இப்படி சிந்திக்க வைத்தது.அதனால் இதனை உங்களோடு பகிர்கிறேன் இப்போது .

8 comments:

வித்யா said...

அந்த அஞ்சு லட்சத்தையும் குடுக்கறதுக்குள்ள இறந்த வீரருக்கு 5ம் வருட நீஐவு அஞ்சல்லி செலுத்தப்பட்டிருக்கும்:(

துளசி கோபால் said...

என்னங்க இப்படி விவரம் புரியாத ஆளா இருக்கீங்க!!!!

நிறைய இருப்பதுக்கு மதிப்பு குறைச்சல் இல்லையா?

அதான் மனித உயிர்கள் எக்கச்சக்கமா மலிஞ்சு கிடக்கு நம்ம நாட்டுலே.

தங்கப் பதக்கம்?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.


நியாயவாதிகள் ஆளும் நாடுன்னு புரிஞ்சதா?

நல்ல பதிவு. நியாயமான பதிவு.

கார்க்கி said...

உங்க ஆதங்கம் புரியுது.. நாம் இருக்கிற‌து இந்தியாவில.. அத மறக்காதீங்க‌

மிஸஸ்.டவுட் said...

வாங்க வித்யா...

//அந்த அஞ்சு லட்சத்தையும் குடுக்கறதுக்குள்ள இறந்த வீரருக்கு 5ம் வருட நீஐவு அஞ்சல்லி செலுத்தப்பட்டிருக்கும்//

அப்படித்தான் நடக்கப் போகுதோ என்னவோ?

வாங்க துளசி டீச்சர்...

//நிறைய இருப்பதுக்கு மதிப்பு குறைச்சல் இல்லையா?//

வாஸ்தவமான உண்மை ...சரி தான் நானும் ஆமோதிக்கறேன் உங்க கருத்தை ,

வாங்க கார்க்கி

//உங்க ஆதங்கம் புரியுது.. நாம் இருக்கிற‌து இந்தியாவில.. அத மறக்காதீங்க‌//

என்னோட ஆதங்கம் இந்தியாவில இருக்கோம்கறது இல்லை;இந்தியாவே சோவியத் ரஷ்யா மாதிரி நம்ம அரசியல்வாதிகளால துண்டு துண்டாப் போய்டக் கூடாதுங்கறது தான் .இது நடக்க இப்போதுள்ள சூழ்நிலைல வாய்ப்பு இல்லையா என்ன?

அதிரை ஜமால் said...

\\நாட்டையும் மக்களையும் காக்க தமது இன்னுயிரை ஈந்த துப்பாக்கி வீரருக்கோ வெறும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு மட்டும்!!! ஏன் இந்தப் பாரபட்சம்?!\\

மீதம் அவங்க பாக்கெட்டுக்கு போயிருக்கும்.

அதிரை ஜமால் said...

\\இந்திய அரசு சிந்திக்குமோ ...சிந்திக்காதோ ?
எனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி என்னை இப்படி சிந்திக்க வைத்தது.அதனால் இதனை உங்களோடு பகிர்கிறேன் இப்போது .\\

அழகான சிந்தனைதான்.

துளசி கோபால் said...

//.........துப்பாக்கி வீரருக்கோ ......//

என்ன ஒரு ஒற்றுமை பாருங்க. ரெண்டு நிகழ்ச்சிகளும் 'துப்பாக்கி'யோடுத் தொடர்புள்ளவை!

Che Kaliraj said...

நீங்க பணத்தை மட்டும் பாக்காதீங்க, உயிரே போனாலும் மாற்ற உயிர்களை காக்க திடம் பூண்டு உள்ளோரை மதிக்கும் முறை இது தானா என்ற கோணத்தில் பார்க்கும் போது நெஞ்சு கனக்கும் உண்மை உண்மையே இது. வீட்டில் உள்ளோரை திகில் அடித்து உள்ளபோது எவ்வளவு பணம் கொடுத்தாலும் அது ஈடாகாது என்ற காரணத்தினால் அவர்கள் இருந்திருக்கலாம்.


எதோ தங்கம் வாங்குவதுதான் பெருமை, மற்றவை தள்ளினும் தள்ளாது நீர்த்து என்ற பாகுபாட்டின்படி, உயிர் பெரிதல்ல (சாதாரண பொது மகன், போலீஸ், மிலிடரி) ? ஆனால் பெரிய பெரிய முதலாளி வர்க்கம், கிரிகெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் உயிர் போனால் உதறலெடுக்கிறது அரசுக்கு? ஒரிசா கலவரத்துக்கு நிவாரண நிதி இல் ௧00 இல் ஒரு பங்காவது வந்து இருக்குமா அந்த ௩ கோடி இல் . சாதரண குடிமகன் எப்போதும் இளப்பம் தான்.

பந்தாவிற்க்காக ஆளாளுக்கு நமது "தங்க மகனை" சலுகைகளை வரி இறைத்தனர். ஆனால் தேசத்தின் மானம் காக்க தன் உயிரை இழந்த "வீர மகனுக்கு " செய்யும் காரியம் இதுதானா? கேள்விகள் மட்டுமே மிச்சம்