Thursday, January 29, 2009

பொன்னியின் செல்வன் ரசிக சிகாமணிகளுக்கு சமர்ப்பணம்

அது ஒரு நாவலாக இருக்கட்டும் அல்லது சிறுகதையாக இருக்கட்டும் வாசிக்கும் போதே அதன் கேரக்டர்களோடு நாம் மனதளவில் நெருங்கி விடுவோம்,சில கேரக்டர்கள் சட்டென்று தோழமை ஆகி மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும் ...

சில கேரக்டர்கள் வெறுப்பைத் தரும் ...வெகு சில பிரமிப்பைத் தரும்...இன்னும் சில கேரக்டர்கள் பிரமிப்பைத் தந்து அவர்களைப் பின்பற்றலாம் என்ற உணர்வைத் தரும் .சில கேரக்டர்கள் ரொம்பவே புத்திசாலித்தனத்துடன் வந்து நம்மை சபாஷ் போட வைக்கும்.

சில அனுதாபப் பட வைக்கும் ...சில கேரக்டர்கள் வெடித்துச் சிரிக்க வைக்கும் .சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொண்டு போகலாம் தான் ...விசயத்துக்கு வருகிறேன் இப்போது ;

பொன்னியின் செல்வன் நாவல் வாசித்து அதன் ரசிக சிகாமணிகளானவர்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன் .பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் இப்போதைக்கு பீல்டில் இருக்கும் எந்தெந்த நடிகர்கள் எல்லாம் ஓரளவுக்கேனும் பொருந்துவார்கள் என்ற கற்பனை தான் இந்தப் பதிவு .

படிச்சிட்டு திட்றவங்க திட்டுங்கோ உங்களுக்குள்ள ....!

பாராட்றவங்க எல்லாம் பாராட்டுங்கோ எல்லாருக்கும் தெரியறாப்பில?!

போலாமா ...பதிவுக்கு தாங்க !

சரி முதல்ல கேரக்டர்களை வரிசைப் படுத்தலாம் .

  1. வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொருந்தலை )
  2. குந்தவை ரம்யாகிருஷ்ணன்
  3. நந்தினி ஐஸ்வர்யா ராய்
  4. அருண் மொழி பிரபாஸ் (தெலுகு ஹீரோ )
  5. வானதி சரண்யா மோகன் (பாலக்காட்டு மோகினி)
  6. அமுதன் பரத்
  7. பூங்குழலி பிரியாமணி
  8. மணிமேகலை அசின் ;அசின் கிடைக்கலைனா மீரா ஜாஸ்மின்
  9. சுந்தர சோழர் அவினாஷ் (சந்திரமுகில சாமியாரா வருவாரே அவரு தான்)
  10. வானவன் மாதேவி ஜெயந்தி
  11. வீர பாண்டியன் - நெப்போலியன்
  12. செம்பியன் மாதேவி - லக்ஷ்மி
  13. கண்டராதித்தர் - விஜய குமார்
  14. மலையமான் -
  15. பெரிய பழுவேட்டரையர் -சத்யராஜ்
  16. சின்ன பழுவேட்டரையர் - சரத் குமார்
  17. மந்தாகினி(ஊமை ராணி) - சுஜாதா
  18. மதுராந்தகன் - சரத்பாபு (அப்பாஸ் கூட ஓகே தான் ஆனால் குந்தவைக்கு சித்தப்பானா கொஞ்சம் இடிக்கும் அதான் சரத்பாபுகாரு )
  19. அநிருத்த பிரம்மராயர் - மோகன்லால்
  20. ஆழ்வார்க்கடியான் - பிரகாஷ் ராஜ் இல்லனா அவர் சகலை ஸ்ரீஹரி நல்லா பொருந்துமோ!
  21. ஆதித்த கரிகாலன் விஷால்
  22. கந்தமாறன் ஸ்ரீமன்
  23. பார்த்திபேந்திரன் கரண்
  24. ரவிதாசன் அப்பாஸ்
  25. குடந்தை சோதிடர்- டெல்லி கணேஷ் (வேற யாருங்க பொருந்துவாங்க இந்த கேரக்டருக்கு?)
  26. கடம்பூர் சம்புவரையர் ராதாரவி
  27. கோடியக்கரை பூங்குழலியின் அப்பா - நாசர்
  28. சேந்தன் அமுதனின் தாய் சாந்தி கிருஷ்ணா (பன்னீர் புஷ்பங்கல்ல வருவாங்க இல்ல அவங்க தான் )

இதுக்கு மேலயும் கல்கி அதுல நிறைய கேரக்டர்ஸ் உலவ விட்ருக்கார்...அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் ...இதுவரைக்கும் சொன்ன கேரக்டர்ஸ் பத்தி யோசிச்சு பாருங்க...

கொஞ்சம் பொருந்தலாம் .

உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற்றிய விவாதங்களையும் வரவேற்கிறேன் .

வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா !!!

சும்மா ஒரு கற்பனை தான்?????!!!!!

எல்லாரும் உங்க மண்டைக்குள்ள இருக்கற பல்ப்பை கொஞ்சம் எரிய வுடுங்க !

Wednesday, January 28, 2009

ஜெயக்கொடியும்...கணபதி வாத்தியாரும் ...பின்னே (பயப்)பிராந்தியும்!!!

ஜெயக்கொடி ...ஜெயக்கொடி ...இந்தப் பேரை கேட்டாலே ஒரு காலத்தில் உடம்பெல்லாம் உதறும் ,மனசுக்குள் ஒரு பயக் குளிர் ஊடுருவும் .இத்தனைக்கும் அவளை நான் நேரில் பார்த்ததே இல்லை ;

ஊரில் பலர் சொல்லிக் கொள்வார்கள் ;

நான் அவளை அங்கே அய்யாவு நாயக்கர் கொய்யாத் தோப்பில் பார்த்தேன்...ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் நேரத்தில் தன்னந்தனியே ஊருக்குள் நுழைகையில் பார்த்தேன் ...வைகை ஆத்துப் பாலத்தில் பார்த்தேன் ...
என்று ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டார்கள் .

வெம்பக் குடி அத்தை தான் எதையும் தெள்ளத் தெளிவாய் சொல்வாள் அவள் கூட இப்போது ஜெயக்கொடியால் புலம்பித் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறாள்.
பின்னாடியே...
பின்னாடியே வந்துகிட்டு இருந்தா நான் உயிரைக் கையில புடிச்சிகிட்டு ஓடியாந்தேன்."இவள அடக்க யாருமில்லையா அடியே ஜக்கம்மா தாயேனு "கண்ண மூடிக்கிட்டு ஒரே ஓட்டம் அங்க ஆரம்பிச்சது எங்க மச்சு வூட்டுக்குள்ள இருக்கன்குடி மாரியம்மன் படத்துல போய் தான் கண்ண முழிச்சிப் பார்த்தேன் ?
அம்புட்டுக்கு கதி கலக்கீட்ட தாயோளி மக! ஊருக்குள்ள எங்கிட்டுப் பார்த்தாலும் இவ நடமாட்டந்தேன் ...அந்தியில..சந்தியில எங்குட்டாச்சும் ஒத்தையில போய் வர முடியுதா ? மூத்தவ வேற இன்னிக்கோ ...நாளைக்கோன்னு குச்சுக்குள்ள உட்கார தயாரா நிக்கா ...ஒத்தையில எங்கனயும் போகதடீன்னா கேட்க மாட்டேங்கா ...இவ பாட்டுக்கு மட்ட மத்தியானத்துல நல்ல தண்ணி எடுத்தாறேன்னு ஆத்தங்கரைக்கு நடையக் கட்டிர்ரா ...இவள அடக்கறதே பெரும்பாடா இருக்கு ,இதுல ஊருக்குள்ள அந்த "ஜெயக் கொடிய நான் இங்கன பார்த்தேன்...அங்கன பார்த்தேன்னு வேற புரளியக் கிளப்பி விட்ராளுகலேனு நேத்து வரைக்கும் விசனப் பட்டுகினு இருந்தேன் எல்லாரும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கறாப்பல பண்ணிட்டாளே சண்டாளி ...அவ நாசமாப் போக! "ஜெயக்கொடி" நு அவளுக்கா பேரு வச்சவன சொல்லணும் ...ஊரு பூர்ரம் அவ ஜெயத்த தான் மங்களம் பாடிக்கிட்டு திரியறோம் .

ஈசுவரா ..பெருமாளே (துன்னூரை(திருநீர்) அள்ளி அள்ளி நெற்றியிலும் ...உச்சந்தலையிலும் பூசுவதான பாவனையில் தெளித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்க ஒரு புறம் சிரிப்பு பொத்துக் கொண்டாலும் கேட்க ...கேட்கவே அதீத பயமும் வந்தது .ஆறு மணிக்கு மேல் பாட்டியின் சேலைத் தலைப்பின் நுனியைப் பற்றிக் கொள்ளாமல் தெருவில் நடக்க அப்படி ஒரு பயம்!

ஒரே ஒரு முறை மட்டும் ஜெயக்கொடியை அவள் வீட்டு பழைய புகைப் படத்தில் பார்க்க நேர்ந்தது .பார்த்த பிறகோ "ஏண்டா பார்த்தோம் அதை என்று ஆகி விட்டதென்னவோ வாஸ்தவமே!

அப்படி ஒரு ஆள் துளைக்கும் பார்வை அவளுக்கு ...பார்ப்பவர் கண்ணை மட்டுமின்றி நெஞ்சையும் குத்தும் ஈட்டிக் கண்கள் .எல்லா பழைய போட்டோ கலைப் போலவே அவளுடையதும் லேசாக செல்லரித்துப் போயிருந்தாலும் கண்களில் உயிர் இருந்தது அந்த உயிர்ப்பு பார்ப்பவரின் உயிரை எடுப்பதைப் போல திகிலூட்டியது .சில நிமிடங்களுக்கு மேல் அதைப் பார்க்க இயலவில்லை .பார்த்தால் எங்கே நம்மை அவளது அடிமையாக்கி விடுமோ அந்தப் பார்வை என்ற பயம் வந்தது ,ஏதோ ஒரு அமானுஷ்ய தன்மை அவளுக்கு அப்போதே இருந்திருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டே நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன் .

ஜெயக்கொடி பேர் அழகானது தான் ...அர்த்தமுள்ளதும் கூட!ஆனால் அவள் அர்த்தமின்றி போனது மட்டுமின்றி அன்று ஊரையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தாள் .

எல்லோருமே ...ஊரின் பெரிய நாட்டாமை "ரங்கசாமி நாயக்கரிலிருந்து " புதிதாய் பக்கத்து ஊர் வகுப்புக் கலவரத்தை ஒடுக்க மாற்றலாகி வந்திருந்த எஸ்.ஐ ராஜாங்கம் முதற்கொண்டு டாக்டர் பெரியப்பா ஐயப்பன் வரை எல்லோருமே அவள் பெயரைச் சொன்னால் கொஞ்ச நேரம் ஏதோ இழவு செய்தி கேட்டதைப் போல அமைதியாகி பிறகே " அவளை எல்லாம் அடக்கி வச்சு ரொம்ப நாளாச்சு ..சும்மா பயந்து சாகதீங்க பெண்டுகளா " என்கிறார்கள். அவர்களுக்கும் உள்ளூர பயம் தான் போல!

சரி அப்பேர்ப்பட்ட அந்த ஜெயக்கொடி யார் என்பது உங்களுக்கும் தெரிய வேண்டும் இல்லையா?

ஜெயக்கொடி ஒரு இளம்பெண் ?!

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும் அவளுக்கு சாகும்போது ?!
அப்போதிருந்த எல்லா இளம்பெண்களையும் போலத்தான் சிட்டுக்குருவியாய் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு...கேலி பேசும் முறைமைக் கார இளைஞர்களிடம் வெடுக் வெடுக்கென வெட்டி வெட்டிப் பேசிக் கொண்டு .

ஒவ்வொரு தீபாவளி ...பொங்கல் ...சித்திரத் திருவிழாவுக்கும் விலை அதிகம் போட்டு புடவை வாங்கித் தராத அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு .தன் வயதொத்த பெண்களுடன் "தாயமும் ...பல்லாங்குழியும் ஆடிக் கொண்டு "இஷ்டமிருந்தால் கத்தரிக்காய் பிடுங்கவும் ...களை எடுக்கவும் "பெரிய நாயக்கர் தோட்டம் போய் வர கையில் காசு கண்டதும் டவுனில் பாக்கிய ராஜ் படம் பார்க்க ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அப்பாவிடம் அனுமதிக்காய் ஒரு வாரம் முதற்கொண்டு நச்சரித்துக் கொண்டு ...

இப்படித்தான் ...

இப்படித்தான் வாழ்ந்திருந்தாள் முன்னேப்போதே நான் பிறக்கும் முன்பு !

இப்போது அவள் இல்லை ஆனால் ...!அவள் பெயர் இருக்கிறது அழியாத பொழிவோடு இன்னமும் !

ஜெயக்கொடி ஏன் செத்துப் போனால் ?

அதுவும் தூக்கில் தொங்கி ?

ஏதேதோ ...சொல்லிக் கொள்கிறார்கள் ;

அவள் கேட்ட"சுங்கிடிபுடவையை தீபாவளிக்கு அம்மா வாங்கித் தராததால்!"

"பக்கத்து வீட்டு பால கிருஷ்ணனை அவள் காதலித்தது வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை ஆனதால்"

"எப்போதோ ஒருநாள் நல்ல தண்ணி எடுக்க தோப்புக் கிணற்றுக்கு போகையில் தோப்புக் கார இசக்கிமுத்துகையைப் பிடித்து இழுத்ததால்

"இப்படிப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ...

இப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் .

ஜெயக்கொடி ஏன் செத்துப் போனாள்...?

அவள் பேயாய் வந்து பிடித்துக் கொண்டு ஆட்டுவித்த யாவரும் சொன்ன காரணங்கள் தான் மேற்சொன்னன்வை அனைத்தும் .

அப்போது நம்பினேன் .

இப்போது ?!

சரி ஜெயக்கொடியை விடுங்கள் ;

கணபதி வாத்தியார் பற்றி நாளை சொல்கிறேனே !

தொடரும் ...

Tuesday, January 27, 2009

ஆண்டாள் டீச்சரும் ...பாலசந்தர் ஹீரோயின்களும்;

நேற்று காலை கலைஞர் டி.வி யில் அவார்டு வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது...அதில் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலை வித்தகர் விருதை கே.பாலசந்தர் வழங்கினார்.இதல்ல விஷயம் ;அதோடு நில்லாமல் திரு .ஆனந்தனின் காலைத் தொட்டும் வணங்கினார் கே.பி .ஆனந்தன் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பொக்கிஷப் பெட்டகமே ...அதில் ஐயமேதுமில்லை.தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓக்களுக்கான ஒரு நல்லதொடக்கம் உருவாக அவரே காரணமாக இருந்தார் என கே.பி அவரைப் பாராட்டினார்.
இதில் எனக்கு கே.பி ; ஆனந்தன் அவர்களின் காலைத் தொட்டு வணங்கிய நிகழ்ச்சி ஏனோ பிடித்துப் போனது...வயதிற்காக மட்டும் இன்றி அவரது திறமைக்காகவும் எல்லாராலும் கொண்டாடப் படும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் ஒருவர் இவ்வாறு செய்தது பாராட்டப் பட வேண்டிய ஒரு விசயமே.(காலில் விழும் கலாச்சாரத்தை எல்லாம் ஆதரிப்பதாக யாரும் நினைத்து விடாதீர்கள் ...போலிச் சாமியார்கள்...சுயநல அரசியல்வாதிகள்...இவர்களின் கால்களில் பலர் தினம் தினம் விழுது எழுவதைப் பார்க்கையில்

கே.பி ஒரு மூத்த அனுபவசாலியான பெரியவரின் கால்களில் அவரது வித்தகத் தன்மைக்காக வணங்கி எழுத்து ஏனோ அந்த நிமிடத்தில் மனதில் ஒரு இணக்கமான உணர்வைத் தோற்றுவித்தது. அவ்வளவே!
நான் இப்போது சொல்ல வந்த விசயமே வேறு .இந்த நிகழ்வைப் பற்றியும் ஒரு வரி எழுத தோன்றியதால் அதை முதலில் சொல்லி விட்டேன் .

பாலசந்தர் படங்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டோ??? சும்மா விமர்சிக்கிறேன் பேர்வழியென்று அவரது படங்களை குறை சொல்லலாம் தான்.ஆனாலும் அவரது பெரும்பான்மையான படங்கள் நல்லதொரு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளன இது வரையிலும்...;எத்தனையோ படங்களை சொல்லலாம் .அதில் எனக்குப் படித்தமானவற்றைப் பற்றி மட்டும் நான் இப்போதுபட்டியலிடுகிறேன்.

1.அவள் ஒரு தொடர் கதை
2.எதிர் நீச்சல்
3.இரு கோடுகள்
4.பாமா விஜயம்
5.அரங்கேற்றம்
6.மன்மத லீலை
7.இளமை ஊஞ்சலாடுகிறது
8.நினைத்தாலே இனிக்கும்
9.உன்னால் முடியும் தம்பி
10. .சிந்து பைரவி
11. புதுப் புது அர்த்தங்கள்
12.வானமே எல்லை


"கல்கிக்குப் "பிறகு வந்த பாலசந்தர் படங்கள் எதுவுமே என்னை ஈர்த்ததே இல்லை."சமீபத்தில் "பொய் " என்றொரு படம் வந்தது ...பாலசந்தர் எங்கே என்று குழப்பமாகி விட்டது...எதில் தவறு ?கதையிலா? அதைப் படமாக்கிய விதத்திலா? அல்லது பாத்திரப் படைப்பிலா ? அல்லது பாத்திரங்கள் தேர்விலா? ஏதோ ஒரு குறை ! முந்தைய நேர்த்தி இல்லாது போனதால் கவனம் கலைவதோடு பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்க்கும் பொறுமையும் இல்லாது போகிறது. சரி பதிவு பாலசந்தரின் பிந்தைய படங்களைப் பற்றியதல்ல ...நான் வேறொரு விஷயம் சொல்ல நினைத்தேன் .

எல்லா பாலசந்தர் படங்களிலும் பெண்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் தருவார்.ஏன் பெண்களை ஹீரோயினை மையப் படுத்தியே அவரது படங்கள் இருக்கும் ஹீரோ சும்மா தான் என்று ஒரு குற்றச் சாட்டே கூட அவரது படங்களின் மீது உண்டு .இது ஒரு ஆதாரமற்ற குற்றசாட்டு என்பது படத்தோடு பொருந்திப் போய் விட்டால் புரியும்.பெண்களுக்கு முக்கியத்துவம் என்று சொல்வதைக்காட்டிலும் ...அந்தந்த படங்களில் காட்டப் படும் அல்லது முன்வைக்கப் படும் சூழ்நிலைகளை கவனித்தாலே "கதை" தான் அங்கு முன்னிலைப் படுகிறது என்பதை அறியலாம்.

பொதுவில் "அவள் ஒரு தொடர் கதை" படத்தை எடுத்துக் கொண்டால் ...கவிதாவின் (சுஜாதா) கோபங்கள் நியாயமானவையே !அவளுக்கும் விருப்பு..வெறுப்புகள் இருக்கலாம் என்பதையே சிந்திக்க மறந்த அல்லது சிந்திக்க விரும்பாத அல்லது...சிந்திக்க இயலாத ஒரு குடும்பத்தின் சம்பாதிக்கும் மூத்த மகள் என்ற வகையில் அவளது பாத்திரப் படைப்பு மிக அருமையான ஒன்று ...அவள் அப்படித்தானே இருக்க முடியும்!!!

இதில் விகடகவியாக வரும் கமல் ...கவிதாவின் காதலனாக வந்து பின்பு அவளது தங்கையை மணக்கும் விஜயகுமார் ...கவிதாவின் தோழியாக வரும் "படாபட்" ஜெயலக்ஷுமி அவளது தாய் ...;தாய் ..மகள் இருவரையும் ஏமாற்றும் சுகுமாரன்(மலையாள நடிகர்)உருப்படாத அண்ணன் ஜெய்கணேஷ் .

உருப்படாத உதவாக்கரை கணவனாயினும் அவனது ஆசைகளையும் ஒதுக்கித் தள்ள முடியாத நிலையில் இருக்கும் அப்பாவி அண்ணி கதாபாத்திரம்.அப்புறம் விளையாட்டுத் தனம் நிறைந்த தங்கை கதா பாத்திரம் .சில வினாடிகளே வந்தாலும் "கவிதாவின் "சுளீர் பதில்களால் " மனதில் பதியும் விஜயகுமாரின் அம்மா கதாபாத்திரம் ...இப்படி படம் முழுக்கவே எல்லோருக்கும் முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் செல்கிறது .

இதில் கவிதா முன்னிலைப் படுத்தப் படவில்லை...இன்னின்ன காரணங்களால் "அவள் ஒரு தொடர் கதை ஆனாள்" என்பதை விளக்கவே இப்படி ஒரு படம் .

இதே உதாரணங்களை நாம் "அரங்கேற்றம் " படத்திலும் காணலாம் .அதிலும் பிரமிளா என்று இல்லை எல்லா பாத்திரங்களுமே முக்கியத்துவத்துடன் தான் ஒவ்வொரு காட்சியிலும் தென்படுகிறார்கள்.பிரமிளாவின் நண்பனாக வந்து பிறகு அவள் மீது கொண்ட பரிவால் காதல் வயப் படும் சிவக்குமார் ...அவரது தந்தை செந்தாமரை (சிவகுமாரை விட செந்தாமரை நிச்சயம் இளையவராகவே இருப்பாரோ!!! டவுட் தான் வேறென்ன?! )

பிரமிளாவின் தந்தையாக வரும் எஸ்.வி.சுப்பையா ...தாய் எம்.என்.ராஜம்...அத்தையாக வரும் ஒரு வாயாடிப் பாட்டி ...அவளது லூசுப் பெண் ...தங்கைகளாக வரும் ஜெய சுதாவும்...ஜெய சித்ராவும் ...இந்தப் படத்தில் வரும் இன்னொரு மறக்க முடியாத நபர்(நிறையப் பேர் மறந்தும் இருக்கலாம்) சசிக்குமார் என்றொரு நடிகர் (நீங்கள் கெட்ட பாடல் விஜய சாரதியின் தந்தை ) இவர் பின்னாளில் தீவிபத்தில் மனைவியைக் காப்பாற்றப் போய் தானும் ரணப் பட்டு இறந்து விட்டார். இவரது பாத்திரப் படைப்பும் இயல்பான அறிமுகமே!பிரமிளா தன் தம்பியான கமலின் மருத்துவப் படிப்புக்காக நகரத்தில் சந்திக்கும் பல தரப் பட்ட ஆண்களின் குணங்களும் அவர்களின் இரக்கமற்ற எதிர்பார்ப்புகளும்
தான் கதையை நகர்த்துகின்றன.

இதிலும் "கதையின் நாயகி என்பவள் ஒரு மையப் புள்ளி அல்ல ...அவளை சுற்றி மட்டுமே கதை நகரவில்லை.அவளது கண்ணோட்டத்தில் "இதனால் இப்படி ஆனது " என்ற வாழ்வியல் நிதர்சனம் காட்டப் படுகிறது அவ்வளவே! படம் பார்த்தவர்கள் எவரானாலும் இந்தக் கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் .அவள் ஒரு தொடர் கதை சுஜாதாவையும்...அரங்கேற்றம்" பிரமிளாவையும் அவர்களது அந்தந்த பாத்திரப் படைப்புகளை வைத்து ஒத்திட்டுப் பாருங்கள் .

கவிதாவின் (சுஜாதா) தைரியமும் தெளிவும் பிரமிலாவுக்கு இல்லை ,
ஆனால் அவளும் ஒருவிதத்தில் துணிவான பெண்ணாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.இது இரு வேறுபட்ட பெண்களின் சூழ்நிலை சார்ந்த தனித் தன்மைகளே இவை.

கல்கி படத்தில் வரும் கதாநாயகி மட்டுமா அப்படத்தில் முக்கியமாகக் கருதப் படுகிறாள்? அதில் அவளைத் தவிரவும் செல்லம்மா என்ற பாடகி (கீதா) அவளுக்கு பணிப்பெண்ணாக வரும் கோகிலா(பாத்திமாபாபு),ரேணுகா...நாயகன் பரஞ்சோதி...பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் இப்படி எல்லாமே தனித்தன்மையுடன் தான் படைக்கப் பட்டுள்ளது.

இதே போல "சிந்து பைரவியிலும்" சுகாசினி(சிந்து) ,நாயகன்(பி.கே.பி) சிவக்குமார், அவன் மனைவி பைரவி (சுலோச்சனா) தவிரவும் முக்கியத்துவம் வாய்ந்த பல பாத்திரங்கள் வருகின்றன. தவில் வாசிக்கும் குருமூர்த்தி(டெல்லி கணேஷ்),சிந்து தங்கியிருக்கும் பதிப்பக மாடி அறையின் உரிமையாளர் பிரதாப் போத்தன்...அந்த ஜட்ஜ் கதாபாத்திரம் ,அவரது கார் டிரைவராக வரும் கவிதாலயா கிருஷ்ணன் ...சிவசந்திரன் இப்படி படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையுமே முக்கியத்துவம் பெற வைப்பதே பாலசந்தரின் தனித் திறமை தான்.

இந்தப் படங்கள் தான் என்றில்லை ;

"எதிர் நீச்சலில் "வரும் எல்லா கதாபாத்திரங்களுமே அப்படத்தில் கதையின் நாயகன் ...நாயகிகளே! நாம் தினம் தோறும் கடந்து செல்லும் அல்லது நம்மைக் கடந்து செல்லும் நபர்களின் சாயலை அவரது பாத்திரப் படைப்புகளில் நாம் காணலாம்."பட்டு மாமி...கிட்டு மாமாவை மறக்க முடியுமா? நாயர் முத்துராமனை மறக்க இயலுமா?எந்நேரமும் அந்தப் படத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் மனோரமாவின் தந்தை கதாபாத்திரத்தை மறக்க முடியுமா? ஜெயந்தி என்ற அருமையான ஒரு நடிகையை மிகச் சரியாக கே.பி மட்டுமே பயன்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன் ,மாடிப் படி மாது மட்டுமா அதில் நாயகன் ? மேலே நான் குறிப்பிட்ட அத்தனை பேர்களும் இல்லாவிட்டால் கதை ஏது?

இதே போல"பாமா விஜயத்தையும்" சொல்லலாம் ; இதற்கும் நீளமான விளக்கம் அளித்தால் சிலருக்கு போர் அடிக்கலாம் .அதனால் வேண்டாம். ஒரு நடிகை தம் வ்வீட்டுக்கு வருகிறாள் என்பதற்காக ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் அடிக்கும் கூத்துக்களும் அவர்களை நல்வழிப் படுத்தி நிதர்சனத்தை அறிய வைக்க அவர்களது மாமனாராக ...பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பழம் பெரும் நடிகர் திரு.டி.எஸ் .பாலையா செய்யும் முயற்சிகளுமே "பாமா விஜயம்" படத்தின் கதை .நல்ல நகைச்சுவையை விரும்புவோர் தாராளமாகப் பார்க்கலாம் எப்போதுமே!

இதில் தான் ...

"வரவு எட்டணா செலவு பத்தணா

கடைசியில் துந்தனா " எனும் அருமையான சூபர் ஹிட் பாடல் இடம் பெற்றுள்ளது .

இன்னும் புதுப் புது அர்த்தங்கள் ...

இளமை ஊஞ்சலாடுகிறது...

நினைத்தாலே இனிக்கும் ...

உன்னால் முடியும் தம்பி ...;

இப்படி எல்லாப் படங்களுமே சில நாட்கள் இடைவெளியில் மறுபடி பார்க்கத் தகுந்த படங்களே.

இந்த வரிசையில் "உன்னால் முடியும் தம்பி ...இருகோடுகள்...புதுப் புது அர்த்தங்கள் "இந்த மூன்று படங்களையும் ஆறுமாத இடைவெளியில் மறுபடி மறுபடி பார்த்தாலும் அலுப்பில்லாத படங்களே என்பார் என் அம்மா...அது நிஜம் தான் என்பது முதல் முறை படம் பார்த்தபோது புரிந்தது .

சரி இனி தலைப்பிற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தான் சம்பந்தம் இன்று குழப்பத்தை ஏற்படுத்தாமல் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்கிறேன் .அம்மாவின் பணி மாறுதல் காரணமாக ஒரே ஒரு வருடம் சொல்லப் போனால் முக்கால் வருடம் மட்டும் "மானாமதுரையில் " வசிக்க நேர்ந்தது .அங்கே நானும் ...தங்கையும் அங்கே அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முறையே ஏழாம் வகுப்பும்...ஆறாம் வகுப்பும் சேர்க்கப் பட்டோம்.அங்கே எங்களுக்கு கணிதப் பாடம் எடுத்தவர் தான் "ஆண்டாள் டீச்சர் ... !

அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் பணி புரிந்திருக்கலாம் ஆனால் ஆண்டாள் டீச்சரை மட்டும் ஏனோ மறக்க இயலுவதில்லை .டீச்சர் மிக அருமையாகப் பாடம் எடுப்பார்(ஆனால் என்ன எனக்குத் தான் கணக்கு எப்போதுமே பெரும் பிணக்கு ) சுத்தமாக கணக்கு வராது என்பதை விட கணக்கு பாடமே அப்போது பிடிக்காது எனக்கு .

வீட்டுக் கணக்கு போடாமல் வந்து விட்டு டீச்சரிடம் அடி வாங்குவதிலிருந்த தப்ப எத்தனையோ முறை என்னென்ன காரணம் சொல்வது சரியாக இருக்கும் என்று பெரிய ...பெரிய பிளான்கள் எல்லாம் போட்டதுண்டு அப்போது .

அதை விடுங்கள்...டீச்சரைப் பற்றி பார்ப்போம்; ஆண்டாள் டீச்சர் பேருக்குப் பொருத்தமாக "ஆண்டாள் "போலவே ரொம்ப அழகானவர். எலுமிச்சை நிறம்;அளவான உயரம் ...கை தேர்ந்த சிற்பி நேர்த்தியாக செய்து ஓட்ட வைத்ததைப் போல பொருத்தமான மூக்கு ...எத்தனை தூரம் ஒழிந்து மறைந்தாலும் ...கண்டு பிடித்து அவரது நாற்காலி முன்னே மண்டி போட வைக்க தக்க கூர்மையான பார்வை .

இத்தனை அழகான கண்களை வைத்துக் கொண்டு இந்த டீச்சர் ஏன் இப்படி எந்நேரமும் கண்களில் சிரிப்பே காட்ட மறுக்கிறாரோ ? என்றெல்லாம் நாங்கள் பேசிக் கொள்வதுண்டு..இத்தனை இலக்கிய நயமாக அல்ல? "இந்த டீச்சருக்கு என்ன வந்துச்சுல ? எல ஏம்லா இவ்ளோ அழகா கண்ணு முழி மீன் மாதி வச்சிக்கிட்டு ஏம்லா இப்பிடி அடிசுக்கினே இருக்காங்க எப்போ பார்த்தாலும் ?அவங்க கைய தேளு புடுங்க ...! (இவை தவிர்க்க முடியாத திட்டுக்கள் என்ன செய்ய பள்ளி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே!

எங்கள் வகுப்பில் மட்டுமே அப்போது 130 பேர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!) மொத்தம் மூணு செக்சன்கள் வேறு ...நான் "எ" செக்சன் .)ஒழிந்திருக்கும் மாணவியைத் தேடிக் கண்டு பிடித்து குச்சியால் சாத்தி தனது கணக்குப் பாடத்தை மூளையில் கஷ்டப் பட்டேனும் ஏற்றி விடக் கூடிய பிடிவாதமான பாசக்கார டீச்சர் அவர்.

அப்படிப் பட்ட டீச்சர் "கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்பது எனக்கு நான் அந்தப் பள்ளியை விட்டு விலகும் போது தான் தெரிய வந்தது, அதற்கும் ஒரு குட்டி கதை சொன்னார்கள் உடன் பயின்ற மாணவிகள்.

விசாலம் டீச்சர்..விசாலம் டீச்சர் என்று ஒரு டீச்சர் இருந்தார் அங்கே அப்போது...அவர் "சி " செக்சனுக்கு கணிதப் பாடம் எடுப்பார் .அவரும் எங்கள் ஆண்டாள் " டீச்சரும் சின்ன வயதில் ஒன்றாகவே படித்தவர்களாம்...நெருங்கிய சிநேகிதிகளும் கூடவாம் ...ஒன்றாகவே கல்லூரி வரை படிக்கையில் இருவரும் ஒரு சபதம் செய்தார்களாம்.அதாகப் பட்டது " நாம் இருவரும் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்றை இறுதி வரை நினைத்தே பார்க்க கூடாது ...கல்யாணமில்லாமல் வாழ்ந்து முடிக்கலாம் என்று .

இதற்க்கு அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு குடும்ப ரீதியாக எதோ சில காரணங்கள் இருந்திருக்கலாம்...அதைப் பற்றி ஏதும் எனக்கு தெரியவரவில்லை .இதில் காலம் செல்ல செல்ல விசாலம் டீச்சர் மனம் மாறி வீட்டினர் பார்த்த வரனை மணந்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடவும் "ஆண்டாள் டீச்சர் "அவருடன் பேசுவதில்லையாம் .அவர்களின் நட்பு இதனால் ரத்தாகி இருக்கக் கூடும் என்று என்னால் அப்போது அன்றைய தினம் சிந்திக்க முடியாவிட்டாலும் மற்றவர்கள் சொன்னதை உண்மை என எண்ணிக் கொண்டேன்.நான் பார்த்த வரையில் அப்படித் தான் என நினைக்கிறேன் .

நான் அங்கு படித்தது வருடம் சரியாக நினைவில்லை ஆனால் அப்போதே "ஆண்டாள் டீச்சர்" ஓய்வு பெரும் வயதில் இருந்தார்...நான் அப்பள்ளியை விட்டு வந்த அந்த வருடமே அவர்களின் ஆசிரியப் பணியின் கடைசி வருடமாக இருந்தது .அந்த 58 வயதில் தான் டீச்சர் அத்தனை அழகாக இருந்தார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகா வேண்டும்...சொல்லப் போனால் இப்போதைய நடிகை சுஜாதாவைப் போல டீச்சருக்கு "முதுமையே தெரியாத ஒரு வசீகர முகமும் மென்மையான தேகமும் கூட !

பாலசந்தர் படங்களுக்கும் "ஆண்டாள் டீச்சருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று இதை வாசிப்பவர்களுக்கு குழப்பம் வரத்தான் செய்யும் .அது என்னவோ மனித மனம் மிக விசித்திரமானது .அது தனக்குப் பிடித்தமானவர்களை ஏதாவது ஒரு பொருளுடனோ அல்லது சம்பவத்துடனோ தொடர்பு படுத்தி ஞாபகம் வைத்துக் கொள்ளும் .அப்படித் தான் நான் எனது"ஆண்டாள் டீச்சரை" " அவள் ஒரு தொடர் கதை " சுஜாதாவுடன் கற்பனயில் பொருத்திப் பார்த்து ஞாபகத்தில் ஏற்றி வைத்தேன்

அது நேற்று அந்த டி.வி காட்சியில் தட்டி எழுப்பப் பட்டு இன்று உங்கள் முன் வாசிப்பிற்கு வந்திருக்கிறது .இத்தனைக்கும் சுஜாதா அவள் ஒரு தொடர் கதையில் "வயதான பெண்ணே அல்ல?!" அவள் ஒரு முதிர்கன்னி என்பதைப் போல தான் காட்டப் பட்டிருப்பார். அதென்னவோ 58 வயதிலும் டீச்சரின் கட்டுப்பாடு கலந்த பாசம் எனக்கு "சுஜாதாவின் சாயலையே காட்டுகிறது .

வருடம் சரியாக நினைவில்லை சற்றேறக் குறைய 1993 அல்லது ௧௯௯௨ ஆக இருந்திருக்கும் சான்றிதழ்களைப் பார்த்தல் ஒரு வேலை ஆண்டு சரியாகத் தெரியலாம்.அப்போது அந்தப் பள்ளியில் ஆண்டாள் டீச்சரிடம் படித்ட மாணவிகள் யாரேனும் இந்தப் பதிவை வாசித்தால் மீண்டும் ஒரு முறை நம் ஆண்டாள் டீச்சரை நினைவு கூர்ந்து மகிழலாம் .அப்படி யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இடம்- மானாமதுரை பள்ளி-அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அப்போது இந்தப் பள்ளி அங்கே படு பிரபலம் தேர்ச்சி விகிதத்தில் எப்போதும் நல்ல டாப் தான் )

அப்போது அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர்- திருநாவுக்கரசு (தேனிக்காரர்)

டீச்சரின் பெயர்- ஆண்டாள் டீச்சர்பாடம்- பெருமை வாய்ந்த கணிதம் (ஆண்டாள் டீச்சர் எடுத்த பாடம் என்பதால்)

இத்தோடு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் வாசிப்பவர் நலம் கருதி மட்டுமே!!!

குறிப்பு :

பாலசந்தர் படங்களின் ஹீரோயின்களில் எல்லோருமே தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள் என்பதோடு தங்களுக்கு என தனிப் பட்ட விருப்பு வெறுப்பு உள்ளவர்களாகவே பெரும்பாலும் காட்டப் படுவார்கள்.யார் என்ன விமர்சித்தாலும் அவரது பெண் கதா பாத்திரங்கள் தங்களது குணநலன்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் .ஆண்டாள் டீச்சர் கூட அப்படித்தான் எனக்கு தோன்றினாரோ என்னவோ ?! ஏதோ அந்தப் பாதிப்பில் தான் இந்த பதிவு வந்தது .

Saturday, January 24, 2009

எல்லாப் பயணங்களும்...


எல்லா பயணங்களும்

கீழிருந்தே துவங்குகின்றன ...

மேலே செல்லச் செல்ல

தொடரும் வால் போல

நீளும் ஏணிப்படிகள்

படிப்படியாய் தயங்கி

அவ்விடத்தே

நிலைத்துவிட

பயணங்கள் என்றென்றும்

துவங்கித் தொடர்கின்றன ...

பயணிகள் மாறலாம்

பயணங்கள் மாறுவதில்லை

எல்லாப் பயணங்களும்

கீழிருந்தே

துவங்கித் தொடர்கின்றனவாம் ...!!!

மரத்துப் போன மரப்படிகள் ...!

உடைந்த கண்ணாடிகளாய்

சிதறிய உறவுகள்

ஒட்ட வைக்க முயன்றாலும்

கிட்டுவதெல்லாம்

ஒழுங்கில்லா பிம்பங்களே

முக்கோணத்தின் மூலை விட்டமாய்

ஒட்டாமல் உதறிபிரிந்தவற்றை

சட்டமாய் ஒதுக்கித்தள்ள

மனமில்லாவிட்டாலும்

சற்றேனும்

மறந்த்திருக்க

வேலைகளும் காத்திருக்க

சட்டென்று வீசி எறிந்தேன்

உச்சிப்பரண் மீது

லேசாகிபோனது போல்

நடித்த மனதுடன்

நடந்து கடந்தேன்

என் வீட்டு பரணின் மரப்படிகளை ...!!!

மரத்துப் போகும் மனக்காயங்கள்

என்ற

உளுத்துப் போன நம்பிக்கையோடு ...?!

Tuesday, January 20, 2009

கார்ட்டூன் சானல்கள் லிஸ்ட் ...(விவாத மேடை)

எவ்ளோ தேடியும் எனக்கு கிடைத்த கார்ட்டூன் டி.வி. சானல் லிஸ்ட் இவ்ளோ தான் ...

  1. சுட்டி டி.வி
  2. போகோ சானல்
  3. டூன் டிஸ்னி
  4. ஜெட்டிக்ஸ்

சரி இப்போ இந்த லிஸ்ட்ல உள்ள சானல்களில் முதலில் அதிக குழந்தைகளின் விருப்ப சானலான சுட்டி மற்றும் போகோ பற்றி பார்க்கலாம்.ஜெட்டிக்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம்...அது வன்முறையைத் தூண்டுவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு நெடு நாட்கள் ஆகின்றன.

சுட்டி டி.வி நிகழ்ச்சி பட்டியல்:-

  1. அபி அண்ட் எபி
  2. பாபி
  3. டோரா தி எக்ஸ்ப்ளோரர்
  4. அறிவோம் ஆயிரம்
  5. குளோரியாவின் வீடு
  6. சூப்பர் சுஜ்ஜி
  7. கடல் இளவரசிகள்
  8. மைக்கேல் தாத்தா
  9. ஹானாஸ் ஹெல்ப் லைன்
  10. சிரிப்பு கோழிகள்(பெயர் சரியானு தெரியலை...பாப்பூ சொன்னதை வச்சு டைப் பண்றேன்!)
  11. செட்ரிக்
  12. உலக சிறுகதைகள்
  13. காட்சிலா
  14. ஜாக்கி ஷான்
  15. ஹீமேன்
  16. சியாமா அக்காவும் சின்ன சின்ன கிராப்ட்சும்
  17. லிட்டில் ஷோபீ

இப்போதைக்கு இந்த தொடர்கள் மற்றும் இந்த ஒரு சானல் பத்தி விவாதம் நடக்கட்டும்.மீதியை இதற்குப் பிறகு தொடரலாம்.இந்தப் பட்டியலில் இருக்கும் தொடர்கள் எல்லாம் "சுட்டிகளுக்கு " தேவையான விசயங்களை மட்டுமே தான் கற்பிக்கின்றனவா? இந்தத் தொடர்களில்

  1. எது அருமையானது?
  2. எது சுமாரானது?
  3. எது தேவை இல்லாதது?
  4. எது நீக்கத் தகுந்த தொடர்?
  5. எது கண்டிக்கத் தகுந்தது?
  6. எது நம் குழந்தைகள் பார்க்கத் தகுந்தது?
  7. உங்கள் ஓட்டு எந்த நிகழ்ச்சிக்கு ?(தமிழ்மணத்துல ஓட்டு...ஓட்டு ன்னு எல்லாரும் கேட்கராங்களா அந்தப் பாதிப்பு தான்...ஹி...ஹி ..ஹி )

சரி இப்போ விவாதத்தை ஆரம்பிங்கப்பா !!!

கார்ட்டூன் சேனல்கள் செய்வது சரியா தவறா?(விவாத மேடை)

என்னுடைய குவிஸ் பதிவுல பதில்களை சொன்ன எல்லோருக்கும் நன்றி...வழக்கமா வந்து கருத்து சொல்ற சிலரை இன்னும் காணோமே???இன்னும் த்ரீ டேஸ் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.யாருக்கு ராமாயணம்...மகாபாரதம் மேல நிறைய ஆர்வம் இருக்குன்னு. !!!

துளசி டீச்சரை காணோமே அவங்க எல்லாக் கேள்விக்கும் சூப்பரா பதில் சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன்.அதுசரியையும் காணோம்.சுரேஷ் குவிஸ் பதிவைப் பாக்கலையா இன்னும்?சந்தனமுல்லை உங்களையும் காணோமே!!!அபிஅப்பா சொன்னாரே நான் புள்ளி வச்சிருக்கேன் கோலம் போட நிறைய பேர் வருவாங்கன்னு ...அவருக்கு புள்ளி மட்டும் தான் வைக்கத் தெரியுமாம்...கோலம் போட இது வரைக்கும் வந்தவுங்களுக்கெல்லாம் மிக்க நன்றி...

முக்கியமா டோண்டு அய்யா...முரளிகண்ணன்...குடுகுடுப்பை(பிரம்படி இருக்கு இதிகாசத்துல்ல முட்டை...முட்டையாவா...வாங்குவாங்க!?) அமுதா(கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுத்து யோசிக்கங்கபா ...குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது தப்பு தப்பா பெயர்களை மாத்தி சொல்லிடப் போறீங்க!?)முரளிகண்ணன்...மீதி கேள்விக்கு எப்போ வந்து பதில் சொல்லப் போறீங்க?ஜமால் நீங்க நல்லா ஆன்சர் பண்ணுவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன் நான்!!!நீங்களும் முட்டை மார்க் தானா?

முக்கியக் குறிப்பு:

பாப்புவோட டான்ஸ் டீச்சர் ராமாயணம்...பாரதக் கதைகளை பத்தி கேள்வி கேட்டு அங்க இருந்த எல்லா பெற்றோர்களையும் நேத்து செம ட்ரில் வாங்கிட்டாங்க.யாருக்குமே நிறைய கேள்விகளுக்கு சரியான பதில் தெரியலை.அம்மா...அப்பாக்களுக்கே தெரியலைனா குழந்தைகள் பாவம் என்ன செய்வாங்களாம்?அவங்களுக்குப் பாவம் டோராவும்...புஜ்ஜியும் தான் தெரியுது.கார்டூன் சேனல்கள் செய்வது சரியா...தவறான்னு கூட ஒரு பதிவு போடலாம் போல இருக்கே?அந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்கு நம்ம பாரம்பர்ய மறக்கடிப்பு.

பேசமா இதை ஒரு விவாத பொருளா எடுத்துகிட்டு நாமலே ஒரு பதிவு போட்ட என்னான்னு யோசிச்சதுல தான் இந்த பதிவு வந்தது. சரி இப்போ நம்ம கார்டூன் சேனல்களைப் பற்றி யார் யாருக்கு எண்ணலாம் தோணுதோ அதை வந்து தெரிவிக்கலாம் இங்கே..அதற்க்கு பதில் சொல்றவங்களும் சொல்லலாம்..எதிர்ப்பு தெரிவிக்கரவங்களும் சொல்லலாம் .

க்விஸ் ...ஸ்ஸ்...ஸ்!!!

ஒரு சின்ன க்விஸ் வைக்கலாமா ? எவ்ளோ பேர் சரியான விடை சொல்றாங்கனு பார்க்கலாம். இது விளையாட்டு மட்டும் தான் பரீட்சை இல்லை.இதிகாசங்கள் பற்றிய நமது பொது அறிவு எவ்வளவு தூரம் என்று தான் ஒரு கை பார்த்துடலாமே!

சரி இனி கேள்விகளுக்குப் போகலாம்.

  1. ராமாயணத்தில் "ஜாம்பவான்" எனும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
  2. அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் யார்?
  3. இந்திரனின் தாயார் பெயர் என்ன?
  4. விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
  5. சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் என்ன?
  6. மஹாபாரதத்தில் "வத்சலா "யார்?
  7. பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் என்ன?
  8. பிருகன்னளை யார்?
  9. கைகேயியின் பணிப்பெண் யார்?
  10. பஞ்சகன்யாஸ் (பஞ்ச கன்னிகள் )யார் யார்?
  11. மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் எது?
  12. கிருபாச்சாரியார் யார்?
  13. சல்லியன் என்ன செய்தான்?
  14. சகாதேவன் எதில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது?
  15. ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் என்ன?

அவ்ளோ தான் கேள்விகள்.

பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.

Monday, January 19, 2009

மை டியர் பாப்பு


சில நாட்களுக்கு முன்பு பாப்பு வரைந்த ஓவியம் இது.
இந்த ஓவியத்தில் இருப்பவர்கள் ...
பாப்புவின் வலது புறம் தேவ் ,இடது புறம் நான்.நடுவில் பாப்புவாம்.
வரைந்து முடித்த பின் அவளே என்னிடம் சொன்னாள்.
எங்களுக்கு மேற்புறம் இருக்கும் படம் என் தம்பியாம்.அதாவது பாப்புவின் மாமா.அவனுடன் அவனது வலது புறம் கண்ணுக்கே தெரியாமல் குட்டியாய் துளியூண்டு ஓவியம் ஒன்று இருக்கிறது கண்களைச் சுருக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும்,
அது பாப்புவின் தம்பியாம்(என் தங்கையின் எட்டு மாத குழந்தை சக்தி தான் அது)அப்புறம் எனக்கும் பாப்புவுக்கும் நடுவில் எங்கள் மூன்று பேருக்கும் தலா மூன்று பூக்களும் வரைந்திருக்கிராளாம்.
தேவ் தலைக்கு மேல் நான்கு கற்களை இணைப்பது போல இருக்கும் படம் என் வளையலாம்!
பாப்பு சொன்னதின் பேரில் இந்த அருமையான ஓவியத்தை நான் வலையில் பதிந்திருக்கிறேன்.
"என் மகள் இவள்" நினைக்கும் போதே எப்போதும் போல் மனம் நிறைவடைகிறது இப்போதும்.

டிஸ்க்கி:- இந்த பெருமை வாய்ந்த ஓவியத்தின் ஒட்டு மொத்த உரிமையும் பாப்புவுக்கு மட்டுமே சொந்தமாம்.

நிறங்களின் ஊடலையும் மனமே...

மௌனத்தின்

சலனத்தோடு

முனை மழுங்கிய

புலன்களின் ஊடே

வழுக்கிக் கொண்டு

சறுக்கும்போது

புள்ளியில் குவிந்த

பெருவெளிச்சத்தின்மத்தியில்

துழாவித்....துழாவி

ஓய்ந்த பின்

எல்லையற்ற நீள்வெளியில்

கருப்பு அழைத்தது

தன்னுள் அமிழ

வெளுப்பு நழுவியது

ஒட்டாமல் வெட்டிக் கொண்டு

கூம்புகளும்

உருளைகளும்

குழம்பித் திகைத்த

ஏதோ ஒரு நொடியில்

குத்தீட்டிகளாய்

பரவிச் சிதறின

பளபளப்பாய் பல நிறங்கள்

நிறங்களின் ஊடலையும் மனமே ...

எந்த நிறம் நல்ல நிறம் ?

Sunday, January 18, 2009

அக்காவென்றே கூப்பிடு...


தேவதைக் கனவுகளின்

மிச்சங்களில்

ஒட்டிக் கொண்டு

இன்றோ

நாளையோவென

விட்டு விடுதலையாகக்

காத்திருந்த

கல்யாணமான

அக்காக்களின்

இன்னும் நான் ...

சின்னப் பெண்ணே !

பிம்பங்கள்

யூனிபார்ம்

பாட்டாம் பூச்சிகளின்

ஆண்ட்டி

எனும்

இனிக்கும் (!!!)

அழைப்புகளில்

உடைந்து

நொறுங்குகின்றன

எப்போதும் போல்

இருபது வருடங்களுக்கு

ஒருமுறை!

யவனிகா...திரைப்படமானால்!(சுஜாதா கோச்சுக்க மாட்டார்!)

யவனிகாவை வாசித்து முடித்திருக்கிறேன் இன்று காலை.சுஜாதா ஏன் இவ்வளவு சீக்கிரம் இறக்க வேண்டும் என்று எல்லா சுஜாதா வாசகர்களைப் போலவே நானும் நினைத்தேன் கொஞ்ச நேரம்,பிறகு காலை சமையல் இருக்கவே இருக்கிறதே எல்லாவற்றையும் மறக்கடிக்க.

நிறைய பேர் யவனிகாவை வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்,நானும் என் பங்குக்கு இன்று தான் ...முடித்தேன்.சுஜாதாவை மட்டம் தட்டநினைப்பவர்கள் மற்றும் ஒரு கணேஷ்...வசந்த் கதை என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட முடியும் தான் .ஆனால் இதில் கற்றுக் கொள்ளவும் ...ஆச்சர்யப்படவும் விஷயம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு கேரக்டரும் தனித் தனி குணநலன்களுடன் படைக்கப் பட்டிருப்பதே சுஜாதா டச் தான்.யார் யார் எப்படி இருப்பார்களோ...அவர்களை அப்படி அப்படியே கதையில் உலவ விட சுஜாதாவால் மட்டுமே முடியும்! வரும் கேரக்டர்கள் எல்லோரும் கும்பலில் கலந்து கட்டி கும்மி அடிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வது ரசிக்கும் படி இருக்கிறது.

வேண்டுமானால் ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாமா?
இப்போது நான் யவனிகா கேரக்டர்களின் பெயர்களை இங்கே வரிசைப் படுத்துகிறேன் ...உங்களுக்கு அவர்கள் கதையில் எந்த இடத்தில் என்னவாக வந்து போகிறார்கள் ?என்பது சட் சட்டென்று மனதில் வந்து நிற்கும் பாருங்கள்(நிற்கும் தானே!!!)

கணேஷ் &வசந்த்-இவர்களைத் தெரியாதவர்கள் சுஜாதாவையே தெரியாதவர்கள்.

கணேஷ் கேரக்டருக்கு எவ்ளோ யோசிச்சும் "வெற்றி விழா ...விக்ரம் ...படத்துல பார்த்த நம்ம உலக நாயகன் கமல் தவிர வேற யாரும் செட் ஆகலைங்களே!

வசந்த் கேரக்டருக்கு பேசாம விக்ரமை போட்றலாம்.(காசா...பணமா...எதோ எனக்குத் தோணினதை சொல்றேன்.)

கெளரி-இவள் இந்தக் கதையில் யார்?இப்படி பல கேரக்டர்கள் நம்மைக் கடந்து போயிருக்கும் நாம சரியா கவனிச்சிருக்க மாட்டோம்...;(இந்தப் பொண்ணு கேரக்டருக்கு அலை பாயுதேல மாதவன் பிரெண்டா வந்த மேத்தாவை போடலாம்!

தேஜோமயி -ஹை... இவளை நீங்கள் மறந்திருக்க முடியாதே!(சரி நம்ம நமீயைக் கற்பனை பண்ணிக்குங்க இப்போதைக்கு ...சுஜாதா வர்ணனைல நமீ தேஜூவை விட கொஞ்சம் ஜாஸ்தி பிரம்மாண்டமாவே இருந்தாலும் கூட தேஜூ தமிழ் நமீக்கு மட்டுமே பொருந்தும் இன்னைய தேதிக்கு!

ராஜா செல்லையா...ராஜா ராமையா-சகோதரர்கள்.(ராஜா ராமையாவுக்கு நம்ம கிரீஸ் கர்னாட் அருமையா செட் ஆவார்.செல்லையாவுக்கு கிட்டியப் போட்டுக்கலாம்.(எவ்வளவு நாள் தான் பாவம் அவரும் வில்லனாவே வந்து போயிட்டு இருப்பார்?! இதுல கேரக்டர் ரோல் பண்ணட்டுமே?!

நடேசன்-செல்லையாவின் பார்ட்னர்(தேவன் ஒரு மலையாள நடிகர் அவர் பொருந்தலாம் இந்த ரோலுக்கு!)

அம்ஜத்-தேஜுவின் பாய் பிரென்ட் (சல்மான் கானைத் தவிர இதுக்கு யாருமே பொருந்தலைங்க என் கற்பனைல!?

சம்பத்-தேஜுவின் பி.எஸ் (எல்லா மெகா சீரியல்லயும் வர ட்ரை பண்ணுவார் பாருங்க மோகன் ராம் அவரைப் போடலாம் சரியா இருக்கும்.)

கும்பகோணத்தில் இருந்து வந்து அநியாயமாகச் உயிரை விடும் ஸ்தபதி ஒருவர்.(இந்த கேரக்டருக்கு நிழல்கள் ரவி கொஞ்சம் சரியா பொருந்துவார்னு தோணுது!

யவனிகா சிலையை கணேஷிடம் ஒப்படைக்கும் பரமானந்த் (இந்தக் கேரக்டருக்கு பழைய காதல் தேசம் அப்பாசைப் போடலாம் பொருத்தமா இருக்கும்!

மயிலாப்பூர் ஆழ்வார் சன்னதியின் அர்ச்சகர் கேரக்டர் .(யவனிகாவை படமாக்கினா இந்த ரோலை ஹேமா பாஸ்கருக்குத் தரலாம்...மனுஷர் பிச்சு உதறிடுவார் பாத்திரத்தை! பிரிவோம் சந்திப்போம் ல சேரனுக்கு சித்தப்பாவா வருவார் அவர் தான்!)

வெடி குண்டுகளை செயலிழக்க வைக்க கணேஷின் நண்பனாக கடைசி பக்கங்களில் மட்டுமே அதிரடியாக வந்து போகும் ஸ்ரீ ,(கரன் அவர் கிடைக்கலனா ஸ்ரீமன் நடிச்சா சரியா வரும் இந்த ரோல்!)

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசியே கொல்லும் ஒரு அராபிக் கொள்ளை கூட்டக் காரன் .(கசன் கானைப் பத்தி என்ன நினைக்கறீங்க இந்த ரோலுக்கு!)

அவ்ளோ தாங்க நடிகர்...நடிகைகள் தேர்வு முடிஞ்சது. இனி கதைக்கு போகலாம்.

கதை என்று பார்த்தால்,யவனிகா ...சோழர் காலத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வீர ராஜேந்திரர் காலத்தில் செய்வித்த ஒரு வெண்கலச் சிலை.

இதை நம்ம கிட்டி தொல்பொருள் சேகரிப்பாளர் கம் ஆர்வலரா இருந்து ஒரு மியுசியம் வச்சு பாதுகாத்துட்டு வரார்.
நம்ம மேத்தாக்கா அவர்கிட்ட வேலை பாக்கறாங்க அசிஸ்டன்ட்டா...திடீர்னு ஒருநாள் யவனிகா சிலை காணமா (திருடு) போய்ட்டதா மேத்தாக்க வந்து கமல் கிட்டயும் விக்ரம் கிட்டயும் புகார் பண்றாங்க.

இடைல நம்ம நமீதா சல்மான் கான் காதல் கலாட்டா வேற வரும்(ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கக் கூடாது...நமீ இருந்தா தானே சூட்டிங் சீன் வைச்சு கொஞ்சம் கலகலப்பா ஆக்க முடியும் கதை ஓட்டத்தை !அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நமீ சூட்டிங்கள தான் கதையோட முடிச்சு அவிழும்.அதனால் நமீ இந்த கதைக்கு ரொம்பத் தேவை.இவங்க கதை ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கட்டும்.
மெயின் கதைக்கு போவோம் வாங்க...

கமலும் ...விக்ரமும் யாவநிகாவைத் தேடறாங்க...தேடறாங்க...ஒரே குழப்பமா இருக்கு ! யார் தான் யவனிகாவை திருடினதுனு ? முதல்ல தேவன் மேல சந்தேகப் படறாங்க...அப்புறம் கிட்டி மேல...அப்புறம் மேத்தாக்கா மேல...கடசில திருடன் நம்ம கிரீஸ் கர்நாட்னு தெரிஞ்சிருது,

அவரே அவங்க தம்பி வச்சிருந்த விலை மதிப்பற்ற சிலையை திருடி வெளிநாட்டுக்கு விக்கிறதா சொல்லி போலி சிலையை வித்துட்டு அவங்களையும் ஏமாத்திடறார்(கிரீஸ் கர்னாட் இப்படி ஏமாத்தலைனா தான நமக்கெல்லாம் டவுட் வரும்!.

அந்த வெளிநாட்டு கொள்ளைக்கூட்ட காராங்க (அதாங்க கசன்கான் கோஷ்டி )இதனால் வெறி பிடிச்சி போயி நிஜ யவனிகா சிலையைத் தேடி இந்தியாவுக்கு வந்து கிரீஸ் கர்நாட்டுக்கு பீதி தராங்க.
ஒரு பக்கம் போலி சிலையை செஞ்சு தர உதவின ஸ்தபதி நிழல்கள் ரவி அதுக்கு உடந்தையா இருந்த தேவன்...இப்படி ஒரு நாலஞ்சு பேரை இந்தக் கூட்டம் சகட்டு மேனிக்கு கொலை செய்யுது.அதான் டுவிஸ்ட்டு !

அப்புறம் என்ன ஆகுது சில பல இடங்கள்ல (அட நம்ம சென்னைக்குள்ள தாங்க கதை நடக்குது) கலவரங்களும் குண்டு வெடிப்பும் நடந்த பின்ன யவனிகா சிலை பத்தின துப்பு விக்ரமுக்கு கிடைக்குது .கூடவே நம்ம கமலுக்கும் கிடைக்குதுங்கடா சாமியோவ்!
கமலும்...விக்ரமும் புத்திசாலித் தனமா பல செயல்கள் செஞ்சு அப்பால நிஜ (ஒரிஜினல்)யவனிகாவை கண்டு பிடிச்சிடறாங்க ஒரு கட்டத்துல .

இதுல காமெடி இன்னான்னா கடைசில அந்த சிலை ராமையா & செல்லையா கிட்டயும் போகலை...இந்திய அரசாங்கத்தின் தொல் பொருள் துறை வசமும் போகலை ...கட்டக் கடைசில மயிலாப்பூர் ஆழ்வார் கோயில்ல அவரோட பத்தினியா நிக்க வைக்கப் படுது.
சில பல உயிர்களைக் காவு வாங்கிட்டு அந்த சிலை பொது மக்கள் கண்ணில் தட்டுப் பட எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கு பாருங்க!சிலைக்கும் உயிர் உண்டோ?

கிரீஸ் கர்னாட் வந்து வெளிநாட்டுக் கொள்ளைக் காரங்க அவரோட கார்ல வச்ச குண்டால ...தப்பு தப்பு அதான் அந்த குண்டு வெடிப்பு விபத்துல இருந்து கரனும் கமல் அண்ட் விக்ரம் கோஸ்டி அவரைக் காப்பாத்திடுதே...ஆனாலும் உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் " பழமொழிக்கேற்ப தன்னோட வாலட்டை (மணி பர்சு தாங்க athai ippadiyum solluvaangalaam!)கார்ல் இருந்து எடுக்க மறுபடி காருக்குள்ள பாயுற கிரீஸ் பீஸ் பீசா வெடிச்சு சாகிறார்.(படத்துலங்க!)

மேத்தாக்க இடைல கணேஷை லவ் பண்ணறதா பீல் ஆகிட்டு பின்னாடி ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி அமேரிக்கா போயிடறாங்க.

நம்ம வசந்த் சல்மான் கான் கிட்ட இருந்து நமீயை காப்பாத்த நமீயோட தற்காலிக பாய் பிரெண்டா நடிக்கறார்.அப்புறம் kazhandukkaraar..சல்மான்கான் மான் vettaila ஜெயிலுக்குப் போனதும் நமீ இந்தியன் கிரிகெட் டீம்ல ஒருத்தனை லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.

அதாங்க கமல் கல்யாணம் பண்ணிக்காம ...காதல்லயும் மாட்டிகாம eppavum போல ஒழுங்கான பிரம்மச்சாரியா காலத்தை வக்கீலாவே கடத்திட்டு இருக்கார்.

இதாங்க யவனிகா கதை விமர்சனம்.

நிஜமா தான் சொல்றேன்...யவனிகா படிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இதை படிக்காதீங்க.ஏதேதோ எழுத நினைச்சு கடைசில இன்னைக்கு இப்படி போய் முடிச்சிட்டேன் பதிவை.

திட்ரவங்க திட்டலாம் ....பாராட்டுறவங்க பாராட்டலாம்!!!!!அப்படி யாராச்சும் வருவாங்க பாருங்களேன்!

Saturday, January 17, 2009

சுகமாய்த்தான் இருந்திருக்கும்?!

வளைந்து

நெளிந்து

செல்லும்

பாதை;

குழைந்து

கவிழ்ந்து

மூடும்

மேகம்;

மத்தியான

வெயிலை

ஏமாற்றி

தழைந்து

தாழ்ந்து

பரவும்

காற்று ;

சுகமாய்த்தான்

இருந்திருக்கும்...

சொந்த நாட்டில்

வேலையென்றால்?!

Friday, January 16, 2009

மயிலு...மயிலு...மயிலம்மா!!!


மயில் எவ்ளோ அழகா இருக்கு இல்ல?

எங்கம்மாவோட பட்டுச் சேலை போல எவ்ளோ கலர்?கழுத்து பாரு இவ்ளோ நீளமா !வழு வழுன்னு இருக்கு பாரு .

ராஜி தான் கேட்டுக்கொண்டிருந்தாள்...எத்தன எத்தன கலர் பாரேன் ?!

அந்தக் கடங்கார மல்லீஷ் ராஜியை மட்டும் மயிலைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தான்...என்னை அதன் கொண்டையைக் கூட தொட விடவில்லை .அவன் மீது சும்மாவே எனக்கு நல்ல நட்பு இல்லை.எப்போதடா யாரிடமாவது அவனுக்கு தர்ம அடி வாங்கித் தரலாம் என்ற நல்லதொரு எண்ணத்தில் இருந்தேன் நான்.

அவனுக்கும் எனக்கும் வகுப்பறை சண்டை வெகு பிரசித்தம் .

விமலா டீச்சருக்கு எப்போதுமே என்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்.(நன்றாகப் படிப்பவர்களைத் தானே டீச்சருக்கு பிடிக்கும்!!!) விமலா டீச்சர் எப்போது பாடத்தில் கேள்வி கேட்டாலும் மல்லீசுக்கு பதில் தெரியாமல் தான் போகும் .பதில் தெரியாத எல்லோருமே வரிசையில் நிற்க வேண்டும்.யாருக்கு பதில் தெரியுமோ...அதாவது யார் பதில் சொல்கிறார்களோ அவர்கள் நிற்பவர்களைக் குனிய வைத்து முதுகில் நங்கென்று குத்தலாம்.(எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக!)

அப்படித்தான் ஒருமுறை அல்ல பலமுறை அவன் என்னிடம் அடி வாங்கினான்.அந்தக் கடுப்பு.மயிலை சரியாகவே பார்க்க விடவில்லை.எனக்கும் மயில் பார்ப்பதில் எல்லாம் அவ்வளவு அதிக ஆர்வம் இல்லையென்றாலும் இவன் இவ்வளவு பிகு செய்கிறானே என்று தான் "இவனென்ன தடுப்பது"என்ற ஆக்ரோஷம் வேறு! அவன் மயிலை மறைக்க ...மறைக்க இவனை ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டி விட்டே தீருவது என்று முடிவே செய்து விட்டேன்.

என்ன செய்யலாம் இவனை? திடுமென்று தான் அப்படி முடிவு செய்தேன் .அவன் என்னவோ ஏதோ...நாய்...பூனையை விரட்டுவது போல எல்லாரையும் விரட்டிக் கொண்டு இருந்தான் .மயில் பார்க்க வந்த பையன்களிலும்... பெண்பிள்ளைகளிலும் அவனது கூட்டாளிகள் யாரோ அவர்களிடம் மட்டும் தனி கரிசனம் காட்டினான் .மற்றவர்களை சூ...சூ என்று விரட்டினான். இதெல்லாம் அராஜகம் இல்லையா? (மயில் என்ன இவன் தாத்தா வீட்டு சொத்தா என்ன? எங்கேயோ யாருடைய தோட்டத்திலோ சோளம் கொத்தித் தின்ன வந்த அப்பாவி மயில் அது! அதைப் போய் எப்படித்தான் அதற்குத் தெரியாமல் பொறி வைத்துப் பிடித்தானோ?!

எல்லோரிடமும் பீற்றிக் கொள்கிறான்,அவனே அவன் கையால் மயிலை பொறி வைத்துப் பிடித்ததாக .எனக்குத் தெரியும் நான் நம்பவே இல்லை.இது அவனது தாத்தா வேலையா வேலையாகத் தான் இருக்கும்!!! அவர் தான் தோட்டம் தோட்டமாக மயில் பிடித்துக் கொண்டு திரிவார்.மயில்கறி அப்போது எங்கள் ஊரில் பேமஸ் .

பெரும்பாலும் விவசாயக் குடும்பங்கள் என்பதால்,மயில்கள் கூட்டம் கூடமாக வந்து பயிர்களை அழித்து விட்டுப் போகும் தொல்லை பொறுக்க மாட்டாமல் தொட்ட சொந்தக்காரர்கள் யாரும் வேலையாவை ஒன்றும் சொல்வதில்.சில வீடுகளில் மயில் பிடிக்க அவருக்கு கூலி கூட தருவதுண்டு.

வேலையா மயில் பிடிக்கப் போவது எனக்கு என் பாட்டி சொல்லித் தெரியும்.மயில் முட்டை பெருசாக இருக்கும் கோழி முட்டையை விட என்பார் வேலையா.நான் பார்த்தது இல்லை.வேலையா வந்தால் என்னையும் மயில் பார்க்க விடுவார் என்று நினைத்துக் கொண்டேன் நான்.

அந்த மல்லீஸ் ஏதேதோ அளந்து கொண்டிருந்தான் எல்லோரிடமும்.மயில் தான் இனி அவனுக்கு ரொம்ப நெருங்கிய கூட்டாளியாம்.தினம் காலையில் அதற்க்கு சோறு வைத்து விட்டுப் பிறகு தான் இனிமேல் இவன் சாப்பிடுவானாம் .மயிலை அதன் காலில் ஒரு சின்னக் கயிறு கட்டி அந்தக் கயிற்றின் அடுத்த முனியை அவன் வீட்டு ஜன்னல் கம்பியில் கட்டி இருந்தான் அவன்.பாவம் மயில்!அது பாட்டுக்கு எங்கேயோ பறந்து திரிந்திருக்கும் நேற்று வரை .

முதலில் அவன் கயிற்றை அதன் கழுத்தில் தான் கட்டினானாம்.மயில் அகோரமாய்க் கத்தவே பிறகு தான் இவனாகவே புரிந்து கொண்டு காலில் கயிற்றை கட்டினானாம்.(பெரிய அறிவாளின்னு நினைப்பு இவனுக்கு ) அவன் மயில் பிடித்த கதை இப்படியாக நீண்டு கொண்டே போனது.வீட்டில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை ,வேலையா எங்கே போனாரோ?!இப்போது வந்தாரென்றால் இவனைப் பற்றி வண்டி வண்டியாகப் புகார் சொல்லி விட்டு மயிலையும் ஆசை தீர தொட்டுப் பார்த்து விட்டு என் வீட்டுக்கு ஓடி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான்.

மயில் நமது தேசியப் பறவை என்று சோசியல் டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது.புக்கில் பார்த்த மயிலின் தோகை ரொம்பப் பெரிசு இந்த மயிலுக்கு தோகை கொஞ்சம் சின்னதாக இருந்தது. கணக்கு சார் மகள் மேனகா அவனிடம் ;

"மல்லீஸ்...மல்லீஸ் இந்த மயிலை தோகை விரிச்சி ஆட வையேன் ...ஒரே ஒரு தடவை டா என்று கெஞ்சினாள்.அவனுக்கு குழப்பமாகி விட்டது.இந்தப் பொண்ணு சரியான லூசு ...மயில் நாம சொன்னாலாம் ஆடாது...அதுக்கா தோணினா தான் ஆடும் என்றாள் பாலாமணி அத்தையின் மகள் வேணி.

இல்ல இல்ல ...நான் சொன்ன அது ஆடும். நீங்கலாம் இருக்கீங்க இல்ல அதான் அது ஆடாது இப்ப.நீங்கலாம் போனப்புறம் தனியா ஆடும் ...எவ்ளோ அழகா ஆடும் தெரியுமா?(அதென்னவோ மயில் அவனிடம் பலமுறை தனியாக பத்மினி பரதம் ஆடுவதைப் போல ஆடிக் காட்டியது என்ற பாவனையில் அவன் மெய் மறந்து நூல் விட்டுக் கொண்டிருந்தான்.)

எல்லோரும் அதை நிஜம் போலவே கேட்டுக் கொண்டிருந்தோம்.(நானும் தான் ...மூன்றாம் வகுப்பில் இதெல்லாம் சகஜம்யா!!!)அந்த வயசுல க்ளாஸ் மேட் சொல்றதெல்லாம் உண்மைன்னு தாங்க நம்பி இருப்போம் எல்லோருமே?!)

அவன் தினமும் அவனுக்குப் பிடித்தவர்களை மட்டும் தான் மயிலைத் தொட்டுப் பார்க்க அனுமதிப்பானாம் .இதைச் சொல்லி விட்டு என் பக்கம் குசும்பாய் ஒரு பார்வை வேறு !

இருடா இரு உனக்கு வச்சிருக்கேன் ஆப்பு என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டு "போடா லூசு' என்பது போல நான் ராஜியை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். மனதில் திரும்பத் திரும்ப அவன் மயிலைப் பார்க்க விடாததே வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தது."இருக்கட்டும் ஒரு நாள் பார்த்துக் கொள்வோம் இவனை" என்று நினைத்தவாறு என் வீட்டுக்குப் போயிருப்பேன் நான் ."விதி வலியது" தான் போல...

அந்நேரம் பார்த்தா அவன் என்னிடம் "தோத்தாக்காலி சொல்ல வேண்டும்?! விளையாட்டில் தோற்றுப் போனவர்களைத் தான் அப்படிக் கேலி செய்வார்கள்.இவன் ஏன் இந்த நேரத்தில் என்னை இப்படிச் சொல்கிறான் ?இங்கே என்ன விளையாட்டு நடக்கிறது? நான் எதில் தோற்றேன் என்று கோபம்..கோபமாய் வந்தது எனக்கு.

அவனுக்கு அன்று என்னவோ கெட்ட நேரம் ...அவன் மட்டும் சொன்னால் கூட போகிறான் கூமுட்டை என்று விட்டு விட்டுப் போயிருப்பேன்.அவன் கூட இருந்த எல்லோரையுமே சொல் வைத்தான்...

தோத்தாக்காலி ...தோத்தாக்காலி ...தோத்தாக்காலி ...

இனியுமா சும்மா இருப்பது?

முடியவே முடியாது ...

சுற்றும் முற்றும் பார்த்ததில் பக்கத்தில் ஒரு பருமனான கல் பார்வைக்குத் தட்டுப் பட்டது .என் கை கொள்ளாது அந்தக் கல், கொஞ்சம் கனமான கல் தான்.கோபத்தில் கனத்தை எல்லாம் யோசிக்காமல் எடுத்தேன்.

விசுக்கென்று எடுத்த வேகத்தில் அதை அவனது முன் நெற்றியில் பலம் கொண்டு வீசி விட்டு திரும்பியே பார்க்காமல் ஓடியே போய் விட்டேன் என் பாட்டி வீட்டுக்கு.

என் வீட்டுக்கே போயிருக்கலாம் தான் ...ஆனால் பின்னாடியேஅவனைக் கல்லால் அடித்த பஞ்சாயத்து வருமே அதற்க்கு என் வீடு சரிப் படாது ..பாட்டி தான் இதற்க்கெல்லாம் சரியான ஆள்.கரெக்ட்டாக நியாயம் வழங்குவார்எப்போதும் என் பக்கம்!!! அதனாலெல்லாம் தாங்க நான் எப்பவுமே பாட்டி செல்லம்!?

தேவமொழி


தேவ மொழி எப்படி இருக்கும் என்றெல்லாம் இது வரை தெரியாது...அது ...தெலுங்கா...ஆங்கிலமா...சமஸ்கிருதமா...

பாலியா...கொங்கனியா...கன்னடமா...உருதுவா...லத்தீனா...சரி விடுங்கள் இன்னோரன்ன மொழிகளில் தான் தேவர்கள் பேசிக் கொள்வார்களா என்பதெல்லாம் இதுநாள் வரை தெரியாது.

சற்று முன் தான் தெரிந்தது.தேவமொழி என்பது ஒவ்வொரு அம்மாவுக்கும்

தன் மகளோ ...மகனோ சொல்லும்

"ம்ம்மா மம்மு வேணும் ...ஊட்டி விடு...பசிக்குது " இந்த மூன்று வார்த்தைகள் மட்டுமே தான் .

அண்டை வீட்டுக்காரர்கள் (NEIGHBOURS)

அண்டை நாடுனாலும் சரி அண்டை வீடுனாலும் சரி தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சின்னதாகவோ...பெரிதாகவோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் மரியாதை என்று இந்தமக்களுக்கு யார் தான் கற்றுக் கொடுத்திருப்பார்களோ?

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ..இலங்கை...பங்களா தேஷ் ...பர்மா...சீனா போல நம் எல்லோருக்குமே பக்கத்து வீட்டு ஜானகி மாமி ...எதிர் வீட்டு மோசஸ் அங்கிள் ...கோடி வீட்டு ஹசீனா பேகம் பின்வீட்டு வெங்கிடு சார் இப்படி அண்டை ...அசல் வீட்டுக் காரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்!அவர்கள் இருப்பதில் நமக்கேதும் பிரச்சினை இருக்க முடியாது .

இந்தியா பாகிஸ்தான் நல்லுறவைப் போலவே அடிக்கடி ஊடுருவுதலோ அல்லது ஆக்கிரமிப்போ நிகழும்வரை நமது இருவீட்டு நல்லுறவுக்கும் எந்தக் குந்தகமும் ஏற்பட வாய்ப்பே இல்லை தான்,ஆனால்" விதி வலியது" ஆக்கிரமிப்பு என்பது மனித சமூகத்தின் நாகரீக வளர்ச்சியில் வலுவான காரணிகளில் ஒன்றாயிற்றே?! ஆகவே கண்டிப்பாக அது நிகழ்ந்தே தீரும்.இல்லாவிட்டால் நீங்கள் அடுத்த வீட்டுக் காரர்களால் "அப்பிராணி"..."லூசு"..."கேணை" என்று பட்டம் சூட்டப் படலாம்!

இந்த இடத்தில் ஊடுறுவுதல் மற்றும் ஆக்கிரமிப்பு என்றால் என்ன ? என்பதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லியே ஆக வேண்டும் ,அதற்க்கு முன் நாம் எல்லோரும் "அண்டை வீட்டுக் காரர்களே "என்ற எண்ணத்தை விட்டொழித்து விட வேண்டும்.அந்த சுற்று வட்டாரத்தில் நமது வீடு மட்டுமே தனி வீடு(அது அப்பார்ட்மென்டாக இருந்தாலும் சரி !) என்று வாழும் நாள் முழுக்க எண்ணிக் கொள்ள வேண்டும்.அப்போது தான் நீங்கள் ஒரு சிறந்த அண்டை வீட்டுக் காரர் பட்டத்தை பெற முடியும்.

ஊடுருவுதலைப் பற்றி இப்போது பார்ப்போம்...நீங்கள் ஏற்கனவே ஒரு அபார்ட்மென்டில் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அங்கே புதிதாக ஒரு அண்டை வீட்டுக் காரர் குடியேறுகிறார்.(கவனம் இதற்குப் பெயர் ஊடுறுவுதல் இல்லை),வந்த கொஞ்ச நாட்களில் அந்த அண்டை வீட்டுக் காரர் நீங்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ஊடுருவுகிறார்.. உதாரணமாக துணி உலர்த்தும் இடம்...இரண்டு சக்கரமோ...நான்கு சக்கரமோ எதோ ஒன்றை பார்க் செய்யும் இடம்.வடாம் காய வைக்கும் இடம் .நீங்கள் அரட்டை அடிக்கும் இடம் .இப்படிப் பல இடங்கள்.இதை ஆக்கிரமிப்பு என்று சொல்ல முடியாது ஏனென்றால் அது கொஞ்சம் பெரிய வார்த்தை. அண்டை வீட்டுக் காரர்கள் ஊடுருவிய இடங்கள் எல்லாம் நமது தொடர் கண்காணிப்பில் சில பல வாய் சண்டைகளின் பின் உடனே மீட்கப் பட்டு விடும்.(மறுபடியும் ஊடுறுவுதல் நிகழாது என்று சொல்வதற்க்கில்லை...அது என்றென்றும் ஒரு தொடர் நிகழ்வே!!!(தொடர் பதிவு போல!)

ஆக்கிரமிப்பு என்பது என்னவென்றால் எத்தனை வாய் சண்டைகள் போட்ட பின்னும் நமது அனுமதியே இன்றி நாம் பயன்படுத்தும் இடங்களை அஆக்கிரமித்துக் கொள்வது.அவர்களது பயன்பாதடுக்கும் இடம் போதிய அளவில் தாராளமாய் இருந்த போதும் இதை செய்தால் அதுவே ஆக்கிரமிப்பு.உதாரணமாக அவர்களுக்கு கார் பார்க் செய்ய தனி இடம் இருக்கும் அங்கே காரை நிறுத்திக் கொள்வார்கள்.ஆனால் காரை வெளியில் எடுக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாம் நமது வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் அவர்களது கார் கவரை(காரை மூட பயன்படுத்தும் உறை ) ஒவ்வொரு முறையும் மறக்காமல் போட்டு வைப்பார்கள்,இந்த விசயத்தில் மட்டும் ஞாபக மறதி என்பதே கிடையாது போல!

இவர்களை என்ன தான் செய்வது அதையாவது ஒழுங்காக மடித்து ஒரு இடத்தில் வைத்து விட்டுப் போகலாம் !முழு அபார்ட்மெண்டும் அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போலவே ஓவொரு முறையும் அவர்களது நடவடிக்கை இருக்கும்.இவர்களை என்ன செய்யலாம்?எடுத்து நீட்டாக மடித்து ஒரு இடத்தில் ஓரமாக வைத்து விட்டுப் போகச் சொன்னால் ...காலையில் காரை எடுக்கும் அவசரத்தில் ஒவ்வொரு முறையும் கவரை மடித்து மடித்து வைத்து விட்டுப் போக முடியுமா ? என்று நம்மை முறைப்பார்கள்?! இதெல்லாம் ஆக்கிரமிப்பில் சேர்த்தி தானே?! பிறகு நம் வண்டியை நாம் எங்கே பார்க் செய்து கொள்வதாம்? வீட்டுக்குள்ளா?

வேறு வழியே இல்லை அந்தக் கார் கவரை தூக்கி காம்பவுண்டு சுவருக்கு வெளியே வீசுவதை தவிர!அதை தான் செய்து பார்க்க வேண்டும் இனி!!!

Thursday, January 15, 2009

ஸ்டைலு...ஸ்டைலு...தான்;இது சூப்பர் ஸ்டைலு தான்...!


இந்தப் படத்தை நல்லா பார்த்துக்கோங்க முதல்ல ...!
பின்னாடியே ஒரு டெஸ்ட் இருக்கு ...எத்தனை பேர் சரியா ஆன்சர் பண்றீங்கன்னு பார்க்கலாம்?!இது ரவி வர்மா painting அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்,அதில்லை இப்போ கேள்வி;
இந்தப் பதிவை வாசிக்கறவங்க யாரா இருந்தாலும் சரி ,பொறுமையா கீழே பின்தொடரும் எல்லாப் புடவை படங்களையும் பார்த்துட்டு கடைசியா இங்க கேட்கப் படற கேள்விக்கும் சற்றேறக்குறைய சரியான பதிலை சொல்ல ட்ரை பண்ணிட்டுப் போங்க ...எத்தனை பேருக்கு புடவை நாலேட்ஜ் இருக்குன்னு தான் பார்த்துடுவோமே .
சரியான பதில் சொல்றவங்களுக்கு கண்டிப்பா விருது உண்டு,
அதனால எல்லாரும் வந்து கலந்துகிட்டு விருது வாங்கிட்டு போங்க.
ரெடி ...
ஸ்டார்ட் ;



........................;


இது நம்ம பெங்காளிகள் புடவை ஸ்டைல்!
இது அஸ்ஸாமிகள் புடவை கட்டற ஸ்டைல்!


இது தீர்த்தா புடவை கட்டற ஸ்டைல்லாம் !


இது ஒரிஸ்ஸா...

இது மகாராஸ்டிர ஸ்டைல்லாம் ...


இது குஜராத்தி புடவைக்கட்டாமுங்க!
இது கூர்க் இனத்து பெண்கள் புடவை கட்டும் முறையாம்...
இது ராஜபுத்திர பெண்கள் புடவை கட்டும் ஸ்டைல் ...இவங்க புடவையை விட நகைகள் தான் வெயிட் ஜாஸ்தி இருக்கும் போல?


இந்த ஸ்டைல் இலங்கை பாரம்பரிய ஸ்டைல் புடவைக் கட்டாம்.இவங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சே இருக்கும்...மதிப்பிற்குரிய இந்த முன்னாள் பிரசிடென்ட் பத்தி தகவல் ஒன்னும் காணோமே இப்போலாம்? ஏன்?

இது மத்திய இந்தியா ஸ்டைல்(தக்காணம்னு கூட சொல்லலாம்! பீகார் தக்காணத்துல சேருமோ?மத்தியப் பிரதேசம்னும் சொல்லலாமுங்க...)


இது ஒரிஜினல் மடிசார்...

இது சினிமா மடிசார்.(ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி தான்...என்ன ஒரு பெர்பெக்சன் பாருங்க?!
நம்ம தமிழ்நாட்டுல புடவை ஸ்டைல் எக்கசக்கமா இருக்கு ,வீட்டுக்கு வீடு ஒரு ஸ்டைல் இல்ல பாலோ பண்ணுவோம் நம்ம எல்லாம்?!பின் கொசுவம்...முன்கொசுவம்...எட்டு ப்ளீட்ஸ்...மடிசார்னு இங்க ஏகப்பட்ட வரைட்டி உண்டே!
இப்போ முதல்ல சொன்ன பாயின்ட்டுக்கே போகலாம் .
இது கேள்வி நேரம் .
முதல்ல பார்த்த ரவி வர்மா படத்துல மொத்தம் பதினோரு பெண்கள் பதினோரு விதமா புடவை கட்டிட்டு இருக்காங்க ...ஓகே இப்போ சொல்லுங்க ,
எந்தப் பெண் எந்த மாநில ஸ்டைல் ல புடவை கட்டி இருக்காங்கனு...யார் யார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவங்கன்னு இதுல இருந்தும் தெரிஞ்சிக்கலாம் இல்லையா?
இதானே நம்ம கலாச்சாரம்"வேற்றுமையில் ஒற்றுமை"
சரி இப்போ எத்தனை பேர் போட்டில கலந்துகிட்டு சரியான பதிலை சொல்லி கலைமாமணி மாதிரி "கலாச்சார மாமணி விருது" வாங்கப் போறீங்கனு பார்க்கலாம்.





































Tuesday, January 13, 2009

நான்...பாப்பு...தேவ்...பிளஸ் புத்தகக் கண்காட்சியும் கிருஷ்ணா ஸ்வீட்சும்

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போக முடியுமா? இல்லையா என்ற சந்தேகம் நேற்று ஒரு வழியாகத் தீர்ந்தது,ஞாயிறு விடுமுறை என்பதால் நான்,பாப்பு,தேவ் , மூன்று பேரும் முற்பகல் பத்து மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தோம்.நேற்று விடுமுறை நாளென்பதால் கூட்டம் அதிகமிருக்கக் கூடும் என்ற எங்களது எண்ணம் பொய்த்தது.

நிறைய ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன.சென்ற ஆண்டைப் போல இல்லை.முன்புறம் சாமியானவில் கூட அடர்த்தியின்றி அங்கொன்றும்...இங்கொன்றுமாகச் மக்கள் குழுக்களாகச் சிதறி இருந்தார்கள்(பார்க்க ஒரு ஒழுங்கின்றி காமா...சோமாவென்றிருந்தது அந்தக் காட்சி),இயற்கை விவசாயத்தையும்...சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலைப் பற்றியும் மேடையில் ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
உள்ளே ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வந்து பார்க்கலாம் என்றார் தேவ் ,

போனமுறை எனக்கு ஸ்டால்களைத் தேர்ந்தெடுப்பதில் பயங்கரக் குழப்பம் இருந்தது,எந்த பதிப்பகத்தில் நான் தேடும் புத்தகங்கள் கிடைக்கும் என்கிற தெளிவேதும் இல்லாமல் முழு கண்காட்சி அரங்கையும் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாகி விட்டது,இந்த முறை அப்படி எல்லாம் நான் தேவ் மற்றும் பாப்புவை சோதிக்கவில்லை.

முதலில் எனக்குப் பிடித்தமான பதிப்பகங்களின் ஸ்டால் எண்களை பார்த்து விட்டு பிறகு தான் உள்ளே சென்றோம்.சில குழந்தைகள் கையில் பலூன்களுடன் எதிர்ப்படவும் பாப்புவும் பலூன் வேண்டுமென்று ஆரம்பித்து விட்டாள்,சில ஸ்டால்களில் அலங்காரத்துக்கென பலூன்களைத் தொங்க விட்டிருந்தனர், அவர்களிடம் கேட்டால் தருவார்களா என்னவோ என்ற ஐயமிருந்ததால்...நாங்கள் பாப்புவிடம் உள்ளே வேறு ஒரு இடத்தில் பலூன் விற்கிறார்கள் வாங்கித் தருகிறோம் என்று சமாளித்து விட்டு

முதலில் நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் சில் நுழைந்தோம்.யாரோ சொன்னார்கள் இங்கே நல்ல நல்ல ரஷ்யன் நாவல்கள் எல்லாம் விலை மலிவாகக் கிடைக்கும் என்று. நான் தேடியது ஆன்டன் செகாவ்...கிடைத்ததோ அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,தலைப்பை பார்த்தே புத்தகம் வாங்கினேன்.வாசித்த பிறகு தான் தெரியும்...லாடமா ...லட்டுவா என்று!!!

இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே நடந்தது ,பாப்பு எப்போதுமே நான் என்ன செய்கிறேனோ அதைக் கொஞ்சம் பின்பற்றும் பழக்கம் உண்டு என்பதால் அன்றைக்கும் நான் புத்தகங்களை எடுத்து...சிலவரிகள் வாசித்து விட்டு பிறகு அதை அதே இடத்தில் வைத்து விட்டு அடுத்த அடுத்த புத்தகங்களையும் இதே முறையில் கொஞ்சம் புரட்டிப் பார்த்து எனக்கானதைத் தேர்ந்தெடுப்பதை அவளும் கவனித்திருக்கக் கூடுமோ என்னவோ ,தேவ் தான் பாப்புவைப் பார்த்துக் கொள்கிறாரே என்று நான் புத்தகங்களில் கவனித்துக் கொண்டிருக்க பாப்பு நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதையே அவளும் செய்து கொண்டு இருந்திருக்கிறாள்.

ஒரு நான்கு வயது குட்டிப் பெண் அதி தீவிரமாக புத்தக அடுக்குகளில் ஆர்வமாகப் புத்தகம் தேடுவது அங்கிருந்த போட்டோ கிராபர்களுக்கு அதிசயமாகப்ப் பாட்டதோ என்னவோ நான்கைந்து புகைப்படங்களாவது எடுத்திருப்பார்கள் பாப்புவை அவள் புத்தகம் தேடும் போஸில் .இது பத்திரிகையில் வருமா அல்லது சும்மா குழந்தை தானே என்று விளையாட்டுக்கு பொய்யாக எடுத்தார்களோ என்னவோ ? அது அந்த போட்டோ கிராபர்களுக்கே வெளிச்சம்.

பிறகு உயிர்மைக்குள் சென்று பார்த்தோம்...எஸ்ரா,ஜெயமோகன்,சாரு,தமிழச்சி தங்க பாண்டியன் இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் அழகாக அடுக்கியிருந்தனர், எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எஸ்ராவின் "யாமம் " மட்டும் வாங்கிக் கொண்டேன் .இது போன தடவையே வாங்க நினைத்தது ,இப்போது தான் வாங்கினேன்.சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.

அடுத்து "காலச்சுவடில் " ..."ஒற்றன்" வாங்கினேன் ,பாராவின் பக்கங்களில் பரிந்துரைக்கப் பட்ட புத்தகங்களில் ஒன்றை வாங்கிய திருப்தி .அசோகமித்ரனை வாசிக்கும் ஆர்வம் முன்பும் உண்டு ஆனாலும் சிறுகதைகளோடு நிறுத்தி இருந்தேன் .பெரும்பாலும் ,பாலகுமாரனும் ,சுஜாதாவும்,சிவசங்கரியும்,அனுராதா ரமணனும்,லக்ஷ்மியுமே ஆக்கிரமித்திருந்தது சில காலம்,பிறகு அம்மாவின் பள்ளி நூலகத்தில் கிடைத்த பழைய "தேவன்...சாவி...மெரீனா எனக்குப் பிடித்துப் போனது எனது கல்லூரி விடுமுறைக்காலங்களில்..இதுவே முதல் முறை அசோகமித்ரனின் படைப்பை வாங்கினேன்.

எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன் அப்போது எங்கள் ஊரில் புதிதாக நூலகம் திறந்திருந்தார்கள்,முன்புற சுவரில் சிவப்பு மையால் பெரிய எழுத்துக்களில் "வெள்ளி விடுமுறை என்று "எழுதி இருப்பார்கள்.அது ஒரு சின்னஞ்சிறு நூலகம்.பெரும்பாலும் அங்கே ஊற்றில் உள்ள இளைஞர்கள் உட்கார்ந்து தினமலர் வாசிப்பார்கள் அல்லது தினத்தந்தி .

நான் என் அம்மாவுக்காக புத்தகம் எடுக்கப் போவேன் அப்போது தான் வாண்டு மாமா வின் பல மாயாஜாலக் கதைகளை வாசித்தேன்."அந்த காலகட்டத்தில் எங்கே "பூந்தளிர்,சிறுவர்மலர்...பாலமித்ரா...ரத்னமாலா,ராணி காமிக்ஸ் என்ற பெயரைப் பார்த்தாலும் உடனே வாங்கிப் படித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியதுண்டு.

கூடவே தமிழ்வாணன் அப்போது தான் எனக்கு அறிமுகமானார்,தமிழ்வாணன்
என்ற பெயரை விடவும் வெறுமே கருப்பு மையில் தீட்டப் படும் அவரது தொப்பியும் கண்ணாடியுமே பலரையும் போன்று என்னையும் கவர்ந்தவை.அந்தத் தொப்பிக்கும் கண்ணாடிக்கும் அப்படி ஒரு மவுசு உண்டு தான்.அந்தப் புத்தகங்களில் அப்படி ஒரு ஈடுபாடு .

கண்காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டு எங்கெங்கேயோ சுற்றி வளைத்து எழுதுகிறேன் பாருங்கள் ,சரி விசயத்துக்கு வருகிறேன்.எப்போதுமே "சுஜாதாவை" மறப்பதில்லை நான் விடுவதும் இல்லை .கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இருந்து கொலையுதிர்காலம் தொட்டு...ஸ்ரீரங்கத்துக் கதைகள் கடந்து.ஒவ்வொன்றைப் பிரித்துப் பார்த்து விட்டு கடைசியில் "யவனிகாவைத்" தேர்ந்தெடுத்தேன்.

பாப்புவுக்கு அவள் கேட்ட பலூன் காலச்சுவடில்" கிடைத்தது.அங்கிருந்த ஒரு விற்ப்பனையாளர் ஸ்டாலில் நுழையும் எல்லாக் குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி பலூன்களை பரிசு போலத் தந்து கொண்டிருந்தார்.பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .

ராஜநாராயணனை வாங்க "அன்னம் பதிப்பகம்" சென்றோம்,ராஜநாராயணன் புத்தகங்கள் ஏற்கனவே கொஞ்சம் இருந்ததால் ...நான் வாங்க நினைத்த கி.ரா வுக்கு மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் புத்தகத்தின் விலை பட்ஜெட்டைத் தாண்டி விட்டதால் "இந்த வருட இந்த" இந்த எடுத்துக் கொண்டேன்.தவற விட்ட மற்றொன்று "கழனியூரானின்" குறுஞ்சாமிகளின் கதைகள்" எடுத்துப் பார்த்து விட்டு அடுத்த முறை வாங்கலாம் என்று வைத்து விட்டேன்.ஆலிஸை வாங்கியது பாப்புவுக்காக!

அம்பையைப் பற்றியும் எனக்கேதும் இதுவரை பெரிதாகத் தெரியாது .விருது பெற்ற பெண் எழுத்தாளர் என்ற ஆர்வத்தில்" காட்டில் ஒரு மான் " வாங்கினேன்.அங்கேயே நளினி ஜமீலாவின் "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" வாங்கினேன்.இதுவும் சென்ற முறை வாங்க நினைத்து மிஸ் பண்ணிய புத்தகமே.படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றவே வாங்கி விட்டேன்.

இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது .ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் தான் இந்த முறை ஆக்கிரமித்திருந்தார்கள்.பலகாரம் நன்றாகவே இருந்தது.அவர்களைத் தவிர ஜமாய் ஐஸ் கிரீம் கடை ஒன்று மட்டுமே இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு செட் பரோட்டாவும்,தயிர் சாதமும் வாங்கிக் கொண்டோம்.கேசரி அவர்கள் செய்வதைப் போன்ற பக்குவத்தில் நமக்கு அமைவதில்லை ஏனோ என்ற சந்தேகத்துடன் ஒரு பிளேட் வாங்கிக் கொண்டோம்.

paappu ஐஸ் கிரீம் கேட்டாள்,அவளுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை என்பதால் சின்னதாய் ஒரு வெனிலா வாங்கிக் கொடுத்து விட்டு பாதிக்கு மேல் நான் எடுத்துக் கொண்டேன்.பாப்பு அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.அவளுக்கு கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கிறார்களா இல்லையா என்ற டெஸ்டிங் அவ்வளவு தான் !

இப்படியாக இந்த வருடப் புத்தகக் கண்காட்சி விசிட் ஒரு வழியாக முடிந்தது.இதில் நான் வாங்க நினைத்து விடுபட்டது பல புத்தகங்கள்.அவற்றில் டால்ஸ்டாயின் "அண்ணா கரீனாவும்" அடங்கும். புத்தகம் கழிவு போக நானூற்று ஐம்பத்து ரூபாய் என்றார்கள் ,அடுத்த முறை வாங்கலாம் என்று வந்து விட்டேன்,தேவ் ஏன் ...பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளேன் என்றார்,விருப்பமிருந்தும் வாங்கத் தோன்றவில்லை.அடுத்த புத்தகத்து திருவிழா வராமலா போகும் என்று வெளியில் வந்தேன்!?

manimegaip பிரசுரம்...வானதி பிரசுரம் ...விகடன்...விகடனில் ஏதாவது புத்தகம் வாங்குவது வழக்கம் எப்போதுமே உண்டு.இந்தமுறை பாப்புவின் பொறுமை எல்லை மீறியதில் நிதானமாகப் புத்தகங்களைத் தேட அவகாசமில்லை அதனால் அதொன்றும் வாங்காமல் வந்து விட்டோம், .சத்யாவில் "வண்ணதாசன் சிறுகதைகள்" வாங்க நினைத்து கடைசியில் வாங்கவில்லை.இதற்கும் அடுத்த முறை பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

கதைப்புத்தகங்கள் தவிரவும் நான் வாங்க விரும்பியது "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " மேலும் எ.கே .டாங்கே எழுதிய "பண்டைக் கால இந்தியா புத்தகங்கள் வாங்க நினைத்திருந்தேன்.அவற்றைத் தேட முடியவில்லை.எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்றும் தெரியவில்லை.இதற்கும் அடுத்த முறை தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு வழியாய் வெளியில் வந்தோம்.

நாங்கள் வெளியில் வரும்போது மகாத்மா காந்தியும் ,அம்பேத்கரும் (கருப்பு நிற கோட்...சூட் அம்பெத்கராகத் தான் இருக்கும்!) அந்த வெயிலில் முகம் முழுக்க வெள்ளை மாவைப் பூசிக் கொண்டு சாமியானவுக்கு முன்பிருந்த மேடையிலிருந்து படிகளில் எதற்காகவோ இறங்கிக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கப் பாரிதாபமாக இருந்தது,தலையில் கொம்புகளை ஒட்டிக் கொண்டு அரக்கர்கள் போல சிலர் மேடையில் எதோ பாடி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.

அவ்வளவு தான் இந்த வருடம் புத்தகத் திருவிழா முடிந்தது எனக்கு. உங்களுக்கு எப்படி ?

எழுதுங்கள் மக்களே!!!

Monday, January 12, 2009

பூ வாசம்...!

என்ன வாழுது

சந்நிதிக் கருவறையில் ...?

விழி

மூடிக் கிறங்கச்

செய்யும்

ஏதோ ஒரு

பூ வாசம்

சுண்டி இழுக்க

நட்ட நடு

சூலின் வழியே

பூவிதழ் விலக்கி

காற்றாய் வழுக்கி

தண்டில் நழுவி

சல்லி வேர்...

தூவி வேர் ...

தேடிப் பதுங்கி

விளிம்பில் நின்று

துளித்துளியாய்

நீர் உறுஞ்சும்

வித்தை காண

நெடு நாளாய்க்

காத்திருக்கிறேன்;

மோனம் வயப் படவில்லை ...!

என்ன வாழுது

சந்நிதிக் கருவறையில்?!

Sunday, January 11, 2009


இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போக முடியுமா? இல்லையா என்ற சந்தேகம் நேற்று ஒரு வழியாகத் தீர்ந்தது,ஞாயிறு விடுமுறை என்பதால் நான்,பாப்பு,தேவ் , மூன்று பேரும் முற்பகல் பத்து மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தோம்.நேற்று விடுமுறை நாளென்பதால் கூட்டம் அதிகமிருக்கக் கூடும் என்ற எங்களது எண்ணம் பொய்த்தது.


நிறைய ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன.சென்ற ஆண்டைப் போல இல்லை.முன்புறம் சாமியானவில் கூட அடர்த்தியின்றி அங்கொன்றும்...இங்கொன்றுமாகச் மக்கள் குழுக்களாகச் சிதறி இருந்தார்கள்(பார்க்க ஒரு ஒழுங்கின்றி காமா...சோமாவென்றிருந்தது அந்தக் காட்சி),இயற்கை விவசாயத்தையும்...சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலைப் பற்றியும் மேடையில் ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.


உள்ளே ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வந்து பார்க்கலாம் என்றார் தேவ் ,போனமுறை எனக்கு ஸ்டால்களைத் தேர்ந்தெடுப்பதில் பயங்கரக் குழப்பம் இருந்தது,எந்த பதிப்பகத்தில் நான் தேடும் புத்தகங்கள் கிடைக்கும் என்கிற தெளிவேதும் இல்லாமல் முழு கண்காட்சி அரங்கையும் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாகி விட்டது,இந்த முறை அப்படி எல்லாம் நான் தேவ் மற்றும் பாப்புவை சோதிக்கவில்லை.


முதலில் எனக்குப் பிடித்தமான பதிப்பகங்களின் ஸ்டால் எண்களை பார்த்து விட்டு பிறகு தான் உள்ளே சென்றோம்.சில குழந்தைகள் கையில் பலூன்களுடன் எதிர்ப்படவும் பாப்புவும் பலூன் வேண்டுமென்று ஆரம்பித்து விட்டாள்,சில ஸ்டால்களில் அலங்காரத்துக்கென பலூன்களைத் தொங்க விட்டிருந்தனர், அவர்களிடம் கேட்டால் தருவார்களா என்னவோ என்ற ஐயமிருந்ததால்...நாங்கள் பாப்புவிடம் உள்ளே வேறு ஒரு இடத்தில் பலூன் விற்கிறார்கள் வாங்கித் தருகிறோம் என்று சமாளித்து விட்டு


முதலில் நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் சில் நுழைந்தோம்.யாரோ சொன்னார்கள் இங்கே நல்ல நல்ல ரஷ்யன் நாவல்கள் எல்லாம் விலை மலிவாகக் கிடைக்கும் என்று. நான் தேடியது ஆன்டன் செகாவ்...கிடைத்ததோ அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,தலைப்பை பார்த்தே புத்தகம் வாங்கினேன்.வாசித்த பிறகு தான் தெரியும்...லாடமா ...லட்டுவா என்று!!!


இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே நடந்தது ,பாப்பு எப்போதுமே நான் என்ன செய்கிறேனோ அதைக் கொஞ்சம் பின்பற்றும் பழக்கம் உண்டு என்பதால் அன்றைக்கும் நான் புத்தகங்களை எடுத்து...சிலவரிகள் வாசித்து விட்டு பிறகு அதை அதே இடத்தில் வைத்து விட்டு அடுத்த அடுத்த புத்தகங்களையும் இதே முறையில் கொஞ்சம் புரட்டிப் பார்த்து எனக்கானதைத் தேர்ந்தெடுப்பதை அவளும் கவனித்திருக்கக் கூடுமோ என்னவோ ,தேவ் தான் பாப்புவைப் பார்த்துக் கொள்கிறாரே என்று நான் புத்தகங்களில் கவனித்துக் கொண்டிருக்க பாப்பு நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதையே அவளும் செய்து கொண்டு இருந்திருக்கிறாள்.



ஒரு நான்கு வயது குட்டிப் பெண் அதி தீவிரமாக புத்தக அடுக்குகளில் ஆர்வமாகப் புத்தகம் தேடுவது அங்கிருந்த போட்டோ கிராபர்களுக்கு அதிசயமாகப்ப் பாட்டதோ என்னவோ நான்கைந்து புகைப்படங்களாவது எடுத்திருப்பார்கள் பாப்புவை அவள் புத்தகம் தேடும் போஸில் .இது பத்திரிகையில் வருமா அல்லது சும்மா குழந்தை தானே என்று விளையாட்டுக்கு பொய்யாக எடுத்தார்களோ என்னவோ ? அது அந்த போட்டோ கிராபர்களுக்கே வெளிச்சம்.


பிறகு உயிர்மைக்குள் சென்று பார்த்தோம்...எஸ்ரா,ஜெயமோகன்,சாரு,தமிழச்சி தங்க பாண்டியன் இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் அழகாக அடுக்கியிருந்தனர், எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எஸ்ராவின் "யாமம் " மட்டும் வாங்கிக் கொண்டேன் .இது போன தடவையே வாங்க நினைத்தது ,இப்போது தான் வாங்கினேன்.சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.


அடுத்து "காலச்சுவடில் " ..."ஒற்றன்" வாங்கினேன் ,பாராவின் பக்கங்களில் பரிந்துரைக்கப் பட்ட புத்தகங்களில் ஒன்றை வாங்கிய திருப்தி .அசோகமித்ரனை வாசிக்கும் ஆர்வம் முன்பும் உண்டு ஆனாலும் சிறுகதைகளோடு நிறுத்தி இருந்தேன் .பெரும்பாலும் ,பாலகுமாரனும் ,சுஜாதாவும்,சிவசங்கரியும்,அனுராதா ரமணனும்,லக்ஷ்மியுமே ஆக்கிரமித்திருந்தது சில காலம்,பிறகு அம்மாவின் பள்ளி நூலகத்தில் கிடைத்த பழைய "தேவன்...சாவி...மெரீனா எனக்குப் பிடித்துப் போனது எனது கல்லூரி விடுமுறைக்காலங்களில்..இதுவே முதல் முறை அசோகமித்ரனின் படைப்பை வாங்கினேன்.


எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன் அப்போது எங்கள் ஊரில் புதிதாக நூலகம் திறந்திருந்தார்கள்,முன்புற சுவரில் சிவப்பு மையால் பெரிய எழுத்துக்களில் "வெள்ளி விடுமுறை என்று "எழுதி இருப்பார்கள்.அது ஒரு சின்னஞ்சிறு நூலகம்.பெரும்பாலும் அங்கே ஊற்றில் உள்ள இளைஞர்கள் உட்கார்ந்து தினமலர் வாசிப்பார்கள் அல்லது தினத்தந்தி .


நான் என் அம்மாவுக்காக புத்தகம் எடுக்கப் போவேன் அப்போது தான் வாண்டு மாமா வின் பல மாயாஜாலக் கதைகளை வாசித்தேன்."அந்த காலகட்டத்தில் எங்கே "பூந்தளிர்,சிறுவர்மலர்...பாலமித்ரா...ரத்னமாலா,ராணி காமிக்ஸ் என்ற பெயரைப் பார்த்தாலும் உடனே வாங்கிப் படித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியதுண்டு.கூடவே தமிழ்வாணன் அப்போது தான் எனக்கு அறிமுகமானார்,தமிழ்வாணன் என்ற பெயரை விடவும் வெறுமே கருப்பு மையில் தீட்டப் படும் அவரது தொப்பியும் கண்ணாடியுமே பலரையும் போன்று என்னையும் கவர்ந்தவை.அந்தத் தொப்பிக்கும் கண்ணாடிக்கும் அப்படி ஒரு மவுசு உண்டு தான்.அந்தப் புத்தகங்களில் அப்படி ஒரு ஈடுபாடு .


புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டு எங்கெங்கேயோ சுற்றி வளைத்து எழுதுகிறேன் பாருங்கள் ,சரி விசயத்துக்கு வருகிறேன்.எப்போதுமே "சுஜாதாவை" மறப்பதில்லை நான் விடுவதும் இல்லை .கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இருந்து கொலையுதிர்காலம் தொட்டு...ஸ்ரீரங்கத்துக் கதைகள் கடந்து.ஒவ்வொன்றைப் பிரித்துப் பார்த்து விட்டு கடைசியில் "யவனிகாவைத்" தேர்ந்தெடுத்தேன்.


பாப்புவுக்கு அவள் கேட்ட பலூன் காலச்சுவடில்" கிடைத்தது.அங்கிருந்த ஒரு விற்ப்பனையாளர் ஸ்டாலில் நுழையும் எல்லாக் குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி பலூன்களை பரிசு போலத் தந்து கொண்டிருந்தார்.பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .


ராஜநாராயணனை வாங்க "அன்னம் பதிப்பகம்" சென்றோம்,ராஜநாராயணன் புத்தகங்கள் ஏற்கனவே கொஞ்சம் இருந்ததால் ...நான் வாங்க நினைத்த கி.எழுத்தாளர்கள் புத்தகத்தின் விலை பட்ஜெட்டைத் தாண்டி விட்டதால் "இந்த வருட இந்த" இந்த எடுத்துக் கொண்டேன்.தவற விட்ட மற்றொன்று "கழனியூரானின்" குறுஞ்சாமிகளின் கதைகள்" எடுத்துப் பார்த்து விட்டு அடுத்த முறை வாங்கலாம் என்று வைத்து விட்டேன்.ஆலிஸை வாங்கியது பாப்புவுக்காக!


அம்பையைப் பற்றியும் எனக்கேதும் இதுவரை பெரிதாகத் தெரியாது .விருது பெற்ற பெண் எழுத்தாளர் என்ற ஆர்வத்தில்" காட்டில் ஒரு மான் " வாங்கினேன்.அங்கேயே நளினி ஜமீலாவின் "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" வாங்கினேன்.இதுவும் சென்ற முறை வாங்க நினைத்து மிஸ் பண்ணிய புத்தகமே.படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றவே வாங்கி விட்டேன்.


இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது .ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் தான் இந்த முறை ஆக்கிரமித்திருந்தார்கள்.பலகாரம் நன்றாகவே இருந்தது.அவர்களைத் தவிர ஜமாய் ஐஸ் கிரீம் கடை ஒன்று மட்டுமே இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு செட் பரோட்டாவும்,தயிர் சாதமும் வாங்கிக் கொண்டோம்.கேசரி அவர்கள் செய்வதைப் போன்ற பக்குவத்தில் நமக்கு அமைவதில்லை ஏனோ என்ற சந்தேகத்துடன் ஒரு பிளேட் வாங்கிக் கொண்டோம்.


பாப்பு ஐஸ் கிரீம் கேட்டாள்,அவளுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை என்பதால் சின்னதாய் ஒரு வெனிலா வாங்கிக் கொடுத்து விட்டு பாதிக்கு மேல் நான் எடுத்துக் கொண்டேன்.பாப்பு அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.அவளுக்கு கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கிறார்களா இல்லையா என்ற டெஸ்டிங் அவ்வளவு தான் !


இப்படியாக இந்த வருடப் புத்தகக் கண்காட்சி விசிட் ஒரு வழியாக முடிந்தது.இதில் நான் வாங்க நினைத்து விடுபட்டது பல புத்தகங்கள்.அவற்றில் டால்ஸ்டாயின் "அண்ணா கரீனாவும்" அடங்கும். புத்தகம் கழிவு போக நானூற்று ஐம்பத்து ரூபாய் என்றார்கள் ,அடுத்த முறை வாங்கலாம் என்று வந்து விட்டேன்,தேவ் ஏன் ...பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளேன் என்றார்,விருப்பமிருந்தும் வாங்கத் தோன்றவில்லை.அடுத்த புத்தகத்து திருவிழா வராமலா போகும் என்று வெளியில் வந்தேன்!?


manimegaip பிரசுரம்...வானதி பிரசுரம் ...விகடன்...விகடனில் ஏதாவது புத்தகம் வாங்குவது வழக்கம் எப்போதுமே உண்டு.இந்தமுறை பாப்புவின் பொறுமை எல்லை மீறியதில் நிதானமாகப் புத்தகங்களைத் தேட அவகாசமில்லை அதனால் அதொன்றும் வாங்காமல் வந்து விட்டோம், .சத்யாவில் "வண்ணதாசன் சிறுகதைகள்" வாங்க நினைத்து கடைசியில் வாங்கவில்லை.இதற்கும் அடுத்த முறை பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.கதைப்புத்தகங்கள் தவிரவும் நான் வாங்க விரும்பியது "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " மேலும் எ.கே .டாங்கே எழுதிய "பண்டைக் கால இந்தியா புத்தகங்கள் வாங்க நினைத்திருந்தேன்.அவற்றைத் தேட முடியவில்லை.எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்றும் தெரியவில்லை.இதற்கும் அடுத்த முறை தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு வழியாய் வெளியில் வந்தோம்.


நாங்கள் வெளியில் வரும்போது மகாத்மா காந்தியும் ,அம்பேத்கரும் (கருப்பு நிற கோட்...சூட் அம்பெத்கராகத் தான் இருக்கும்!) அந்த வெயிலில் முகம் முழுக்க வெள்ளை மாவைப் பூசிக் கொண்டு சாமியானவுக்கு முன்பிருந்த மேடையிலிருந்து படிகளில் எதற்காகவோ இறங்கிக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கப் பாரிதாபமாக இருந்தது,தலையில் கொம்புகளை ஒட்டிக் கொண்டு அரக்கர்கள் போல சிலர் மேடையில் எதோ பாடி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.அவ்வளவு தான் இந்த வருடம் புத்தகத் திருவிழா முடிந்தது எனக்கு. உங்களுக்கு எப்படி ? எழுதுங்கள் மக்களே!!!