Wednesday, December 10, 2008

தேவனின் லக்ஷ்மி கடாட்சம்(மலரும் நினைவுகள்)

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தான் நான் பழைய எழுத்தாளர் தேவனின் "லக்ஷ்மி கடாட்சம் " நாவலை வாசித்து முடித்தேன் . கல்கியின் "பொன்னியின் செல்வனை " போல மூன்று மிகப் பெரிய புத்தகங்கள்முதலில் கொஞ்சம் போர் அடித்தாலும் போகப் போக கதையின் போக்கு என்னை ஈர்த்துக் கொண்டது .

இரெண்டே நாட்களில் முழு நாவலையும் முடித்து விட்டேன் .

கதை ஒன்றும் புதுமையானதில்லை ...ஆனாலும் கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறதே அதில் இருக்கிறது ஒவ்வொரு கதாசிரியரின் சாமர்த்தியம் ;

எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ ? ரொம்பப் பேருக்கு பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை !!! எனக்கு அவரின் பிராமணத் தமிழில் எதோ வசீகரம் தென்பட்டு கவர்ந்து கொண்டது .

சரி நாவலுக்கு வருவோம் .

இந்தக் கதையின் நாயகி "காந்தா மணி "

நாயகன் "துரை சாமி "

அந்தக் கால பழைய பட "ரங்கா ராவ் " போல இங்கேயும் ஒரு charactor உண்டு அவர் " கங்காதர முதலியார்

"அப்புறம் வில்லனின் நல்ல நண்பர் "சிங்காரம் "

கதைச்சுருக்கம் :-

காந்தாமணி தனது சிற்றன்னையின் கொடுமையிலும் நற்பன்புகளோடு வளர்ந்து வந்த ஒரு நல்ல பெண்மணி . அவளது வாழ்வைப் பாழாக்க நினைக்கும் சிற்றன்னையிடமிருந்து முன்னெப்போதோ ஒருமுறை பால்ய காலத்தில் உடன் விளையாடிய நண்பனான துரைசாமியின் மீது ஏற்பட்ட பரிவு கலந்த காதலால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியே வாழத்தொடங்குகின்றனர் .

அப்போது தான் சித்தியின் மூலம் வில்லன் (மன்னிக்கவும் ... பெயர் மறந்து விட்டது ) kandhamani , துரைசாமியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து ஒரு பெண் குழந்தை ( மீனாக்ஷி ) பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிய நேரிடுகிறது ;

துரைசாமி பணப் பற்றாக்குறையால் பர்மா செல்கிறான் , அங்கே " லக்ஷ்மி கடாட்சத்தால் " ஸ்ரீமான் கங்காதர முதலியார் எனும் பெரிய மனிதரை சந்திக்கிறான் , அவரது தயவால் வாழ்கையிலும் முன்னேறுகிறான் ..பலன் என்ன ?

பணம் நிறைய சேர்த்துக் கொள்ள முடிந்தாலும் குடும்பம் இந்தியாவில் என்ன கதி ஆனது எனத்தெரியாமல் கலங்குகிறான் ...இப்போதைப் போல அன்று செல்போன் வசதிகளோ ...இன்டர்நெட் வசதிகளோ கிடையாதே !!!

எனென்றால் கதை நிகழும் காலகட்டம் விடுதலைக்கு முன்பு என நினைக்கிறேன் .இப்படிச் செல்லும் கதையின் போக்கில் துரைசாமி பல்வேறு இன்னல்களையும் தாண்டி மறுபடி தன் குடும்பத்தை அடைந்து சந்தோஷிக்க நினைக்கும்போது மறுபடி வில்லன் வந்து தன் வேலையைக் கட்டுகிறான் ...

பலன்துரைசாமி தன் மனைவி காந்தா மணியை சந்தேகிக்க தொடங்குகிறான் ;கணவன் தன்னோடு இல்லாத காலத்தில் காந்தாமணி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறாள் .பணத்தின் வழியாக அவளை அடைய நினைக்கும் வில்லன் அது முடியாமல் போகவே wherever she goes இடங்களில் எல்லாம் அவளை வாழ விடாமல் தொடர்ந்து துயரங்களுக்கு உட்படுத்துகிறான் .

எல்லாம் முடிந்து இனியாவது நல்வாழ்க்கை கிட்டும் என ஆறுதலடைய விடாமல் கடைசி முயற்சியாககாந்தாமணி யின் நடத்தை பற்றி அவளது கணவனிடம் இல்லாத பொல்லாத நடக்காத விசயங்களைக் கூறி அவனை சஞ்சலத்திற்கு உட்படுத்துகிறான் வில்லன் .

துரைசாமியும் he also a good human ...இங்கே காந்தாமணி கணவன் தன்னை விட்டுப் பிரிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காக தன் குழந்தை மீனாக்ஷியின் நலனுக்காகவும் தனக்கு இயல்பாகவே she has good voice சாரீர (குரல் ) வளத்தால் பாடகியாகி விடுகிறாள் ;நல்ல நல்ல தெய்வீக பாடல்கள் இவள் பாடி வெளிவந்தவை எல்லாம் நன்றாக விற்பனை ஆனதால் peak of her feild போகிறாள் காந்தாமணி ;

இந்த நேரத்தில் மறுபடி ஒன்று சேர முடியாமல் வில்லன் இருவர் மனதையும் நஞ்சாக்கி விட முயல்கிறான் .இறுதியில் கங்காதர முதலியார் ,சிங்காரம் போன்ற நல்ல மனம் படைத்தவர்களின் உபாதேசத்தின் பின் தம்பதிகள் ஒன்று சேர்வதே "லக்ஷ்மி கடாட்சம் " நாவல் .

இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நாயகி காந்தாமனியை விடவும் கங்காதர முதலியார் தான் ;

அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ...பிறருக்கு உதவும் நிமித்தமாகவோ இருக்கலாம் ,பணம் பெட்டியில் வெறுமே பொங்கி வழிய...வழிய உள்ளே வைத்துப் பூட்டவே கூடாது .

பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " இதே அவர் தன்னை அண்டி வருவோருக்கு சொல்லும் உபதேசம் .

நன்றாகத்தான் போகிறது நாவலின் ஓட்டம் !

உங்களுக்கும் இஷ்டமிருந்தால் ஒரு முறை வாசித்து தான் பார்க்கலாமே !!!

குல தெய்வக் கதை (தொடர்கிறது )

அண்ணிகளுக்குள் நடந்து கொண்டிருந்த சம்பாசனை எதுவும் தெரியாத கிச்சம்மாள்எப்போதும் போல வீடு திரும்புகிறாள் கொஞ்சம் சீக்கிரமாகவே ;
ஒட்டுக் கேட்ட அண்ணன் போய் மற்ற அண்ணன்களிடம் என்ன சொன்னானோ?
அத்தனை பெரும் அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டனர்.
மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை .
பொழுது விடிந்தது ;
என்றும் இல்லாத அதிசயமாக அன்றைக்குப் போய் பெரிய அண்ணன் கோழி அடித்துக் குழம்பு வைக்கச் சொன்னார்.சரி என்று வீட்டில் தடா புடலாக கோழி அடித்தக் குழம்பு வைத்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தங்கையுடன் சாப்பிட்டனர் .
அண்ணன்கள் ஒவ்வொருவரும் பாசம் மிகுந்து தங்கைக்கு மாறி மாறிப் பரிமாறினர்.கிச்சம்மவுக்கு நெஞ்சடைக்க அழுகை வந்தது அவர்களது பாசத்தைக் கண்டு ;இப்படிப் பட்ட பாசக்கார அண்ணன்களை விட்டு விட்டு யாரோ ஒரு ஆணைக் கல்யாணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறோமே!
யாரோ ...எந்த ஊரோ ?
அந்த ஊர் இந்த ஊரிலிருந்து இன்னும் எத்தனை தூரமோ?
நினைத்தால் உடனே புறப்பட்டு வரக்கூடிய தொலைவோ இல்லையோ?
என்ன தான் முகம் கொட்த்துப் பேசா விட்டாலும் அண்ணிகளைப் பிரிவதும் கூட இந்த நேரத்தில் இவ்வளவு துக்கமாக இருக்கிறதே ?
என்று அந்த பேதை பெண் நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள் .
ஆயிற்று ...எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள் .
கிச்சம்மா ரொம்ப நாட்கள் கழித்து அண்ணிகள் வருவதற்கு முன்பு தன் வீட்டில் எப்படி சுதந்திரமாகப் புழங்கினாலோ அதே போல இருப்பதற்கு தைரியம் உள்ளவளாய் ;பின்வாசலில் தலையணை போட்டு கொஞ்சம் கண்ணயரலாம் என்று ஆசை ஆசையாக பின்வாசலுக்கு நேரே வெறும் பாயில் தலையணை இட்டுக் கொண்டு கோழிக் குழம்பு தந்த தூக்கம் மெதுவாக கண்ணைச் சுழற்ற ஒருக்களித்து படுத்து கண் அயர்ந்தாள்.
ஏதேதோ கனவுகள் சூழ மெல்ல மெல்ல உறங்கிப் போனாள்;ரொம்ப நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் .
தன்னைக் காப்பாற்ற அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியோ என்னவோ?
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே அறிந்துகொள்ள தேவையில்லை எனும்படி ஆழ்ந்த உறக்கம் .
ஆனாலும் மிகப் பயங்கரமான நேரத்தை நாம் உணரா விட்டாலும் நமது புலன்கள் அறிந்து கொள்ளுமாமே ?!அப்படித்தான் தலைமாட்டில் ஏதோ ஆள் அரவம் கேட்டு ; வீட்டுப் பூனையோ ...ஆட்டுக் குட்டியோ ? என்று அரைக்கண் தூக்கமாய் விழிகளை மலர்த்தியவள் அதற்குப் பிறகு அதிர்ச்சியில் பிரமை பிடித்துப் போய் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள தொண்டை வறண்டு போய் மலங்க மலங்க விழித்தாள்.
எதிரே ...அம்மா சீதனமாக கொண்டு வந்த பழைய அம்மிக் குழவியை ஏந்தியவாறு பெரிய அண்ணன் நின்றார்.வெகு உறுதியாக அதை தன் தங்கையின் தலையில் போட்டே தீருவது என்ற முடிவோடு.
கிச்சம்மா ஊமையானாள்...பேச்சு வரவில்லை ...!
திக்கித் திணறி ...அண்ணா என்பதற்குள் அந்த பாசமிக்க அண்ணன் ;தன் அழகான சின்னத் தங்கை ...கடைசியாய் பிறந்தாலும் பாதுகாக்க அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்த ,
தூங்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட தன் அண்ணன்களின் பாசத்தில் உருகிப் போய் திணறிய அந்த அன்பான வெள்ளந்தி தங்கையின்
இளம் தலையில் அந்தப் பழைய பெரிய அம்மிக் குழவியை போட்டே விட்டான் .
தங்கையின் தலை சிதறிய அடுத்த நொடி உயிர்ப்பறவை கதறிக் கொண்டு பறந்தது .அண்ணா நீயா ? என்று கேட்டுக் கொண்டே அந்த உயிர் தெருவில் கதறிக் கொண்டு பறக்க அந்நேரம் மாலை மயங்கும் அந்தி நேரம் பிரம்மா முகூர்த்தம்
"அந்த ஊர் வழக்கப் படி ஊர்க் காவல் தெய்வம் பெரியாண்டவர் வேட்டைக்குப் புறப்படும் நேரம்.
"ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க வேட்டைக்கு தன் பைரவ மூர்த்தியுடன் எதிரே வந்த பெரியாண்டவர் தன் காலடியில் கதறிக் கொண்டு வந்து மோதிய உயிரின் அலறல் கேட்டு ஒரு வினாடி திகைத்து நின்றாராம்.
மறுநிமிடம் நடந்ததை உணர்ந்து "அண்ணா என்று அபயக் குரலோடு என் காலடியில் விழுந்த கன்னியே இன்று முதல் நானே உனக்கு அண்ணன் ...உனக்கு காவல் ...என்று அழைத்துப் போய் தன் கோயிலில் தனி சன்னதி கொடுத்து ஆட்கொண்டாராம் .
தன் சொந்த அண்ணன்களால் மிக மோசமாக நம்பிக்கைத் துரோகம் இழைத்து கொடூரமாக கொல்லப் பட்ட கிச்சம்மா அன்று முதல் "பெரியாண்டவரால் " குலம் காக்கும் குல தெய்வமானாள் .
இதோடு கதை முடிகிறது .
இந்தக் கோவில் கோவில் பட்டிக்கு அருகே இருக்கிறது .
உண்மையில் நடந்த கதை என்று பேசிக் கொள்கிறார்கள் .
கிச்சம்மளுக்கு பூஜை முடிந்ததும் பெரியாண்டவரையும் மறக்காமல் நன்றியோடு நினைத்து பூஜை புனச்காரங்களுடன் வணங்கி விட்டே பக்தர் கூட்டம் கலைகிறது.
வருடா வருடம் மாசி மாதம் பூஜை நடக்கிறது .