யாரு சொன்னா? அப்போ நாங்கலாம் யாராம்? எங்களுக்கும் சிரிப்பு வரும்ல ?நாங்களும் சிரிப்போம்ல?






அந்தப் புலிப்பய சிரிக்கான் பாரு ...நான் சிங்கம்யா...சிங்கம் சிரிக்காட்டிப் போனா வெங்கம் பயனு சொல்லிருவாக அது வேற அசிங்கம் !!! அதான் இந்தச்சிரிப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

எத்தனை நாட்களுக்குத் தான் சீரியஸ் பதிவுகள் மட்டுமே போட்டுக் கொண்டு இருப்பது ?
கொஞ்சம் போர் அடித்தால் இப்படித்தான் ஆகி விடுகிறது சமீப காலங்களாய்...!
பாப்பு வந்து இன்றைக்கு என் போட்டோ கலெக்சனை வைத்து ஒப்பேற்றி விட்டாயே அம்மா !!! என்று சொன்னாலும் பரவாயில்லை !
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?
மனிதர்களின் சிரிப்பை விட விலங்குகளின் சிரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது .
அதென்னவோ முன்பு என் அப்பா...பிறகு என் கணவர் ...வேலையில் சேர்ந்த பிறகு இப்போது என் தம்பியும் கூட (வேலையில் சேருவதற்கு முன் அவன் பாரபட்சமே இல்லாமல் எல்லா சேனல்களிலும் பாட்டு மட்டுமே கேட்பான்) இப்படி என் வீட்டு ஆண்கள் எல்லோருமே காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ...சிரிக்க வேண்டும் ...எப்பாடு பட்டாவது சிரித்தே ஆகவேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன்,என்றைக்கோ எந்திர மயமாகி விட்ட இந்த உலகில் மூச்சு விடவும்...முழுகிப் போகாமல் மீண்டு எழவும் அந்த நேரம் பயன்படுகிறதோ என்னவோ?உலகம் சுற்றும் வாலிபனில் "வாத்தியார்" பாடுவார் பாருங்கள்"சிரித்து வாழ வேண்டும்பிறர் சிரிக்க வாழ்ந்திடாதேசிக்கு...மங்கு...சிக்கு...மங்கு சிக்க பாப்பா "பாட்டு தான் ஞாபகம் வருகிறது .அதெல்லாம் சரி ;இப்போது டவுட் நேரம்..."பாப்பா சரி ...அதென்ன சிக்கு...மங்கு...சிக்கு...மங்கு ..சிக்க பாப்பா?"யாருக்காவது புரிந்திருந்தால் இங்கு வந்து பின்னூடத்தில் தெரிவியுங்கள்...அந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் இந்த டவுட் வந்து கொண்டே இருக்கிறது .