இந்து மத நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற நிலை குறித்து சென்னை பிர்லா பிளானெட்டோரியத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறதாம்.இந்த பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தக் கூறி பி.ஜே.பி தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணனும் இந்து முன்னணி ராமகோபாலனும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த பயிற்சி முகாம் இந்து மதத்தின் பாரம்பர்ய நம்பிக்கைகள் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சி எனவும் இப்படி ஒரு பயிற்சி முகாமை நடத்துவதில் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
கீழே உள்ள அறிவிப்பைப் பாருங்கள் ;
சென்னை, மே 7_ சென்னை பிர்லா கோள-ரங்கத்தில் உள்ள அறி-வியல் தொழில்நுட்ப மய்யத்தில் பல்வேறு பயிற்சிகளும், தொழில்-நுட்ப நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 15ஆ-ம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் பயிற்சியில் நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு, விண்வெ-ளியைக் கண்காணித்தல், 3டி அறிவியல் காட்சிகள், சூரிய ஒளிக்கதிர்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்-தப்பட உள்ளன. இதில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பங்கேற்-கலாம். முதலில் வருபவர்-களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 50 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மே 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாள் கோடைகால முகாம் நடத்தப்படுகிறது. சூரிய ஒளிக்கதிர் முறை, சந்திரன் குறித்த ஆய்வு-கள், நட்சத்திரங்களின் பிறப்பு, அண்டைவெளி, தொலைநோக்கு கருவிகள் ஆகியவை குறித்த விவ-ரங்கள் கற்றுத் தரப்படும். இதில் 7, 8 மற்றும் 9ஆ-ம் வகுப்பு மாணவ, மாண-விகள் பங்கேற்கலாம்.மே 20ஆ-ம் தேதி முதல் 28ஆ-ம் தேதி வரை ஓவியம் மற்றும் களிமண் சிற்பங்-கள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் 8-ஆம் வகுப்பு முதல் 11ஆ-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி-களில் பங்கேற்க விரும்பு-பவர்கள் 044_24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு-கொண்டு, பதிவு செய்து-கொள்ள வேண்டும்.
பயிற்சி முகாம் பற்றிய இந்த அறிவிப்பில் எங்கேயாவது இந்து மதத்தின் நம்பிக்கைகள் குறித்தான அவதூறுகளைக் காண முடிகின்றதா? நட்சத்திரங்களை ,வான மண்டலத்தைப் பற்றிப் படிப்பதோ தெரிந்து கொள்வதோ எப்படி இந்து மத நம்பிக்கைகளில் சேற்றை வாரி இறைப்பதாக இருக்க முடியும்?! இந்து மதத்தைப் பற்றியோ அதன் கடவுள்களைப் பற்றியோ இந்த அறிவிப்பில் எதுவும் தவறாக இல்லை. பிறகெதற்கு இந்தப் பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தச் சொல்லி இவர்கள் இருவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்?
தமிழக அரசியல் வாதிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் எங்கு?...எதற்கு ?... எப்படி? எதிர்ப்பு தெரிவிப்பது என்பதில் பயங்கரக் குழப்பம் நிலவி வருவது புரிந்திருக்க வேண்டுமே!!!
மாணவர்கள் அறிவியல் அறிவைப் பெறுவதால் அவர்கள் சார்ந்துள்ள இந்து மதத்தின் மீதான நம்பிக்கை குலையும் என எப்படி இவர்கள் இருவராக முடிவு செய்து கொண்டார்கள்.இப்படியே போனால் வானியல் என்றொரு பாடமே இருக்கக் கூடாது என்று கூட சொல்லக் கூடும் நாளடைவில்.வான மண்டலம்..நட்சத்திரம் ....அண்ட வெளியில் சிதறிப் பரவியுள்ள எண்ணற்ற கோள்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இவைகளை எல்லாம் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவதால் இவர்களுக்கு என்ன நஷ்டம்?
சூரியனை பாம்பு விழுங்குவது சூரிய கிரகணம் என்றும்,சந்திரனை பாம்பு விழுங்கினால் அது சந்திர கிரகணம் என்றும் இனி வரும் தலைமுறைகளும் நம்ப வேண்டுமா? சந்திரன் (நிலா) இந்த நட்சத்திரத்தின் மனைவி ரோஹிணி எனும் நட்சத்திரமாம் சந்திரன் ரோஹிணியோடு இருக்கும் காலங்கள் வளர்பிறை என்றும் ரோகினியை விடுத்து இன்னொரு மனைவி(பெயர் தெரியவில்லை) யோடு இருக்கும் காலங்கள் தேய்பிறை என்றும் தான் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா?
மத நம்பிக்கைகள் என்ற பெயரில் எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளும் மடத்தனம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்,இதெல்லாம் மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள் ஆகாதா?
முதலில் திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் ...இப்படி எல்லாம் பெயர் வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்,அப்புறம் இரவு எட்டு மணிக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு கட்சி கண்டித்தது...இப்போது மாணவர்களுக்கு நடத்தப் படும் பயிற்சி வகுப்புகளில் கை வைத்திருக்கிறார்கள்.
யார் எதைப் படித்தால் இவர்களுக்கென்ன ? பள்ளி மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதை அவரவர் பெற்றோர்களும் அந்தந்த மாணவர்களும் அல்லவா முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் யார் நடுவில் கருத்துச் சொல்ல!குட்டையைக் குழப்புவதில் மீன் கிடைக்குமா ?
கட்சிகளும் மதங்களும் அவரவர்களுக்குரிய இடங்களை விட்டு விட்டு சுய சார்புடைய சுயமாய் சிந்திக்க கற்றுத் தரப் படும் சில விசயங்களில் மூக்கை நுழைப்பானேன்.
Wednesday, May 19, 2010
Tuesday, May 18, 2010
மாரிக்கும்...காளிக்கும்...தாத்தனுக்கும் சமர்ப்பணம்
மாரியின் முழுப்பெயர் எனக்குத் தெரியாது.என் பாட்டியின் வயதிருக்கும் ,பின் கொசுவம் வைத்து தான் சேலை கட்டுவாள்,கொப்பு வைத்து அள்ளி சொருகிய தலைமுடி ,லேசாக கண்கள் சொருகினார்போல சிரித்தபடி தான் எப்போதுமே இருப்பாள்,நான் கூட மாரியைப் போல கண்ணாடி முன் நின்று கொண்டு சிரித்துப் பார்த்ததுண்டு ,அதென்னவோ அந்த ஸ்டைல் பிடிபட்டதே இல்லை,அவளென்னவோ கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார்த்து ப்ராக்டிஸ் செய்பவளேல்லாம் இல்லை,அதற்கெல்லாம் அவளுக்கு நேரமும் இருக்காது.
மாரிக்கு காளி என்றொரு புருஷன் ;காலங்காலையில் சம்சாரி வீடுகளிருக்கும் தெருக்கள் வழியாகப் புருஷனும் பெண்டாட்டியுமாய் ஒரு ரவுண்டு வருவார்கள்.மாரியின் இடுப்பில் பெரிய எவர்சில்வர் குண்டான் இருக்கும்,காளி சட்டையில்லாத மேலுடம்பில் ஒற்றி உலர்ந்த வயிற்றில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சாயம் போன துண்டு ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு வருவான்,மாரி வீடுகளில் சோறு வாங்கும் வேலையை செய்தாளானால் காளி அழுக்குத் துணி எடுக்கும் வேலையைச் செய்வான், ஒவ்வொரு வீடாய் மலை போல சேர்ந்து போன அழுக்கு மூட்டைகளை இரண்டு மூன்று சிறு சிறு குன்றுகள் போல கட்டிக் கொண்டு போய் தெரு முக்கில் வைத்து விட்டுப் போவான்,ஒரு வழியாய் சோறெடுக்கும் வேலை முடிந்து அவர்களின் குடிசைக்குப் போய் உண்டு முடித்தார்களானால் காளியின் மகன் ரெண்டு கழுதைகளைப் பத்திக் கொண்டு வந்து காளி தெருமுக்குகளில் கட்டி வைத்த துணி மூட்டைகளை அவற்றின் முதுகில் ஏற்றிக் கொண்டு குடும்பமாய் ஊர் கம்மாய்க்குப் போவார்கள்.
அடிப்பதும் துவைப்பதுமாய் ஜோராய் வேலை ஆரம்பமாகும்.
பளிச் பச்சைக் கரை சாரதி வேட்டி கண்ணில் பட்டதும் காளி ரவுத்திரமாவான்.அதற்கு இணையான கதர் சட்டையை தேடித்துழாவிஎடுப்பான் ;
கோழிப்பண்ணை நாயக்கன் வீட்டு வேட்டியும் சட்டையும் தான் அது ?
டேய் முட்டா நாயக்கா அன்னைக்கு அஞ்சு ரூபா பணம் கடனாக் கேட்டதுக்கு என்னா சொன்ன எம்பொண்டாட்டிய அடகு வைன்னா சொன்னா இந்தாடி வாங்கிக்கோ உன்ன இப்ப என்னா தொவை தொவைக்கப் போறேன் பாரு,மவனே செத்தடி நீ, துணைக்கு மகனையும் அழைத்துக் கொள்வான் ,
"டேய் சோலை இந்தா இந்தக் கையப் பிடிச்சி முறிடா " கல்லில் படீர் படீர் என கோபம் வடியுமட்டும் அடித்து முடிப்பார்கள் ,அத்தனை கோபத்துக்கும் சட்டை சேதமாகி விடக் கூடாதென்பதில் அதீத கவனமிருக்கும்.
செட்டி வீட்டுப் பெண் சரளாவின் பாலியஸ்டர் பட்டுச் சேலையைக் கண்டதும் சோலைக்கு கண் மண் தெரியாமல் கோபம் மூளும்,
" ஏய் அப்பே இந்தா இருக்காளே இந்த மூதேவி பொம்பள போன தபா எம்பொண்டாட்டி இந்த பட்டுச் சேலையக் கட்டிட்டு சோலைக் கருப்பன் கோயில் கொடைக்குப் போய்ட்டா ,மறுக்கா பஸ்ல வரைல பாத்துப்புட்டாளாம் இந்த சேலைக்காரப் பொம்பள ;அத்தினி பேரு நிக்காங்களே பஸ்லன்னு கூட காங்காம மானங்கெட்ட சிறுக்கி எஞ்சேலைய எதுக்குடி எடுத்துக் கட்டிக்கிட்டு ஊர் மேயுறன்னு கேட்டுப்புட்டாளாம் ,உம்மருமவ "என்னிய இப்படிக் கேட்டுப்புட்டாலே அந்தப் பாதகத்திப் பொம்பளன்னு " மூணு நாளா சோறு தண்ணி இல்லாம கெடந்தா . அவள நாலு மிதி மிதிச்சாதான் எம் மனசாறும் "
அந்தச் சேலை... இந்த வேட்டி ...அந்த ஜாக்கெட்...இந்த தாவணி ...பட்டாளத்துக்காரன் டவுசர் ,நாட்டாமைக்காரர் லங்கோடு என்று அப்பனும் மகனும் மடார் மடார் படீர் படீர் என அடங்காக் கோபத்தை அடித்து அடித்து வடித்து முடித்த பின் அழுக்கு போய் துணிகள் மட்டுமா சுத்தமாகும் அந்த ஏழைகளின் ஊமைக் கோபங்களும் சுத்தமாய் வடிந்து போய் மறுபடி அந்தி கருக்கலில் ஒவ்வொரு வீடாய் துவைத்த துணிகளைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார்கள்.
ராச்சோறு வாங்கமாரியும் வருவாள் .
மாரியை நான் பாட்டி என்று அழைத்திருக்கலாம்.அழைக்காமல் தடுத்தது எது! அழைக்க வேண்டும் என்று தோன்றக் கூட இல்லை அப்போது.அந்த நாள் அப்படிப் பட்டது.என் பாட்டி வயதில் இருப்பவர்களைக் கூட சம்சாரி வீட்டுக் குழந்தை எனும் அகம்பாவத்தில் வா போ...வாடா போடா என அழைக்க வைத்தது எது! இந்த பாரபட்சங்கள் இன்றைக்கு பெருமளவில் குறைந்து விட்ட போதிலும் மாரியின் சிரித்த முகம் ஞாபகம் வரும் போதெல்லாம் அவளை என் வயதொத்த பிள்ளைகள் பாட்டி என்று அழைத்திருந்தால் அவள் சந்தோசப் பட்டிருக்கக் கூடுமோ என்று தோன்றும்.
மாரியின் எவர்சில்வர் குண்டானில் இருக்கும் பல வீட்டுச் சோற்றை கேளிக்கேனும் அள்ளி எடுத்து ஒரு வாய் உண்பதிலும் ,கனத்துத் தொங்கும் அவளது தண்டட்டியை தொட்டு இழுத்து விளையாடுவதிலும் காட்டப் பட்ட எல்லையற்ற ஆர்வம் அவளை ஒரு முறையேனும் பாட்டி என்று அழைப்பதில் காட்டப்படவே இல்லை. பாட்டி என்ற அழைப்பை அவள் எதிர்பார்த்திருக்க முடியாது ஆனாலும் தலையில் அடித்ததைப் போல அத்தனை பெரிய மனுஷியை பெயர் சொல்லி அழைத்த விதத்தை அவள் ரசித்திருக்க மாட்டாள்,
விருப்பும் வெறுப்பும் அற்றுப் போன நிலையில் தான் அன்றைய குடியானவர்களை இந்த சமூகம் வைத்திருந்தது .மனித உழைப்பை மலினமாக்கி அவர்களது சுயமரியாதையையும் முடக்கி வைத்த அந்த நாட்களை நினைக்கையில் இன்றைக்கு மாரியின் பேரன் கவர்ன்மென்ட் வேலை பார்த்து கால் காசு சம்பாதித்தாலும் கவுரவமாய் சம்பாதிப்பது ஆறுதலாய் இருக்கிறது .
மாரியின் கதை இப்படி என்றால் ;
தாத்தன் என்றொரு வயதான வெட்டியான் இருந்தார் எங்கள் ஊரில் ,யார் செத்தாலும் எரிப்பதும் புதைப்பதும் அவரே, ஊர் கட்டு செட்டான ஊர் அதோடு சம்சாரி வீட்டுக் குடும்பத் தலைவிகள் இருக்கிறார்களே பெரும்பாலும் கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறை தான். அழுக்குத் துணி எடுக்க காளி வந்தாலும் சரி ,தொழுவத்தில் சாணி அள்ள குப்ப மாதாரி வந்தாலும் சரி .வீட்டுப் பிள்ளைகளுக்கு முடி வெட்ட முனுசாமி நாவிதன் வந்தாலும் சரி அவர்களுக்கு சம்பளம் அளப்பதில் ரொம்பத்தான் பெரிய மனசு .ஒனக்கும்...நீ செஞ்ச வேலைக்கும் இம்புட்டுப் போதாதாடா என்று ஒரே மிரட்டு மிரட்டி எத்தனை வயதானவர்கள் என்றாலும் அடா...புடா போட்டு சாதிப்பார்கள்.அதில் பட்சி நாயக்கர் வீட்டம்மாள் ஊருக்கு முதல்வி .அந்தம்மாள் சம்பளம் அளக்க வருகிறாள் என்றால் குடியானவர்களுக்கு வயிறு எரியும்.
ஒரு கோடை நாளில் அந்தம்மாள் செத்துப் போனாள், ஊரோடு சுடுகாடு வரை சொந்தம் பந்தம் எல்லாம் போய் அழுது குமித்தாலும் எரிந்து முடியும் வரை பிணத்துக்கு காவல் வெட்டியான் மட்டும் தானே! ஏற்கனவே சாயங்காலத்தில் எடுத்ததால் பிணத்தை எரிக்க இரவாகி விட்டது.எல்லோரும் போய் விட்டார்கள் .வெட்டியான் தாத்தன் பிணத்தை எரித்துக் கொண்டிருந்தார்.பட்சி வீட்டம்மாள் திகு திகுவென எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அழுது கொண்டே சொந்தம் கலைந்தது.பட்சியின் அக்கா பேரன் வெங்கடரமணி வயிற்றை கலக்குகிறது என்று ஒதுங்கப் போனவன் அங்கே கூட நாலைந்து இளவட்ட நண்பர்களைப் பார்த்ததும் ஊர் கதை உலகக் கதை பேசிக் கொண்டு நின்று விட்டு அந்த நால்வரும் பிணம் எரிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரம் கடந்து அந்தப் பக்கம் வந்திருக்கிறார்கள் சுடுகாட்டைக் கடந்து வீட்டுக்குப் போக.
தாத்தன் ரத்தமும் சதையுமாய் எரியும் பிணம் சிதையில் இருந்து வெடித்து சிதறி தரைக்கு வந்தால் மறுபடி சிதைக்குள் தள்ள என்று வைத்திருக்கும் ஒரு கம்பால் பிணத்தைப் போட்டு அடி சவட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.
இதேதடா தாத்தன் பிணத்தை இப்படிப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறானே என்று அதிர்ச்சியாகிப் போன இளவட்ட கோஷ்ட்டி அருவமில்லாமல் நெருங்கி வந்து தாத்தன் அறியாமல் அவன் செய்வதை பக்கத்தில் வந்து வேடிக்கை பார்க்க.
தாத்தன்...
"பண்ணை வீட்டு நாயக்கரம்மா நீயெல்லாம் ...உசிரோட இருந்த வரைக்கும் ஒரு நாள் கூலிய ஒழுங்கா கொடுத்திருப்பியா எங்களுக்கு ,இந்தா வாங்கிக்கோ ...இந்தா வாங்கிக்கோ :
கம்பால் மொத்து மொத்தென்று ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டே ;
"இந்த அடியெல்லாம் ஒனக்கு எம்மாத்திரம் நீ பண்ண அக்குறும்புக்கு ஒன்னைய எம தர்மன் எண்ணெய் சட்டில வறுக்கணும்...போ ...போ அங்க எமன் காத்திருப்பான்."
பார்த்துக் கொண்டிருந்த கோஷ்ட்டி மூச்சுக் காட்டாமல் சுடுகாட்டை விட்டு ஊருக்குள் ஓடி வந்தது.அங்கே பிடித்த ஓட்டம் ஊர் மந்தை வேப்ப மரத்தடியில் மூச்சு வாங்க நின்றது.திக்கித்துப் போனவனாய் சிரிப்பை அடக்க மாட்டாமல் வேங்கட ரமணி சொல்கிறான்.
ஏன்டா டோய் மாப்ள நாளைக்கி நாஞ் செத்தாலும் தாத்தன் இப்டித்தான் அடிப்பான் போலடா.
நீ செத்தா...நம்ம கோவாலு செத்தா ...
"எங்க அவ்வா நாரம்மா செத்தா இப்பிடித்தான் சொல்லி சொல்லி அடிப்பான் போலருக்கேடா.எங்கவ்வா அருந்த வெரலுக்கு சுண்ணாம்பு தராதுடா.அதுக்கு என்ன கதியோ தாத்தன்ட்ட" ,அந்த இளவட்ட கோஷ்ட்டி அன்றைய இரவு மட்டுமல்ல நெடுநாட்கள் சொல்லிச் சொல்லி சிரித்தது தாத்தனின் இந்த செய்கையை.
மேலோட்டமாய் பார்த்தால் இந்த செய்கைகள் கேளியானவை தான்.உள்ளிருக்கும் வேதனைகள் அந்தந்த நபர்களுக்கு மட்டுமே புரியக் கூடும்.
இந்த இடுகை மாரிக்கும் காளிக்கும் தாத்தனுக்கும் சமர்ப்பணம் .

Monday, May 17, 2010
கல்திண்ணை...
அந்த வீடு பழமையான வீடு.கல் கட்டிடம் .. எண்ணெயில் கழுவி விட்டதைப் போன்ற அதன் பள பள கருங்கல் திண்ணைகளில் உண்டு உறங்கி விளையாடிக் களித்திருக்கிறோம் நானும் என் தம்பி தங்கைகளும் ,சின்ன மாமா ஆறடி நீள கனக்கும் இலவம் பஞ்சு மெத்தை தையல் விட்டுப் போனால் படரக் கிடத்தி அதை தைப்பது இந்தத் திண்ணையில் வைத்து தான்.பெரிய மாமா தண்டால் எடுக்கும் போது பிள்ளைகள் நாங்கள் ஆள் மாற்றி ஆள் அவர் முதுகில் ஏறி கும்மாளமாய் சிரித்துப் புரண்டது இந்தத் திண்ணையில் தான்.
அம்மாவும் சித்தியும் அத்தையும் ஈர்விளியும் பேன் சீப்புமாய் குழந்தைகளை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து சீவி சிணுக்கெடுத்து அலங்கரித்து சிங்காரம் பண்ணிக் கொள்வதும் இந்தத் திண்ணையில் தான்.எதேச்சையாய் பொங்கல் தீபாவளிகளில் உறவுகளும் நட்புகளும் ஒன்று சேர்ந்தால் சீட்டுக் கச்சேரி களை கட்டும் இதே கல் திண்ணையில் தான்.இந்த வீடு யாருக்குச் சொந்தமென்று அதுவரை பேதம் காண தோன்றவில்லை.வளர்ந்தோம் திண்ணையோடு திண்ணையில்.
ஒருநாள் அம்மாவைப் பெற்ற பாட்டியின் அண்ணனுக்குச் சொந்தம் என்றார்கள் அந்த திண்ணை வீட்டை.பாட்டியோ வாரிசில்லாத அண்ணன் சொத்து மூன்று அக்கா தங்கைகளுக்கும் பொதுவென்று எண்ணிய தன் மடத்தனத்தை எண்ணிக் கொண்டு பேச்சிழந்து நிற்க திண்ணையோடு வீடு மொத்தமும் அந்த தாத்தாவுக்கும் அவர் மனைவிக்கும் என்றாக ,திண்ணைகள் வெறிச்சோடின.
பிள்ளைகளின் அரவமின்றி திண்ணை அழுததோ!
அதற்குப் பின் அப்படி ஓர் திண்ணை வைத்த வீட்டை வாடகைக்கு குடி இருக்க கூட கண்டுபிடிக்க முடியாமலே போனது,எத்தனையோ வீடுகளில் வாழ்ந்து இன்று சொந்த வீட்டில் வாழும் போதும் அந்த வீட்டுத் திண்ணையில் ஆடிய நினைவுகள் ஆழ்ந்து கனக்கும் மனசின் ஓரம்,அது ஒரு சுகமான சுமை.மூடி வைத்த முதல் காதலைப் போல இது திண்ணைக் காதல்,மனிதர்களை மனிதர்கள் நேசிப்பது மட்டும் தான் காதலாக முடியுமா என்ன! ? அம்மா இல்லாத நேரங்களில் அம்மா வரும் வரை அந்தத் திண்ணையை அம்மாவாய் உணர்ந்த காலங்களும் உண்டு.கூடடைந்த பறவையின் நிம்மதியென்றும் கொள்ளலாம் .அது ஒருநாள் மீளாமலே போனது.
இன்றும் திண்ணை இருக்கிறது ...தாத்தாவுடையதாய் அல்ல .
வாரிசில்லை ... சொத்துக்களை விற்றுத் தின்னும் நிலை வந்த பின் திண்ணை வைத்த வீடு மிஞ்சவில்லை.ஊரில் யாருக்கோ அதை விற்று விட்டார்கள்,வாங்கியவர்கள் இன்னும் அந்த வீட்டையும் திண்ணையையும் இடித்துப் புது மோஸ்தரில் கட்டிக் கொள்ளவில்லை,வீடும் திண்ணையும் அப்படியே தான்இருக்கின்றன.எப்போதாவது விடுமுறையில் அகஸ்மாத்தாய் அந்த ஊருக்குப் போகையில் கண்ணில் படும் கல் திண்ணை .
என்றோ ஜெக ஜோதியாய் எரிந்து முடிந்த தீப்பந்தத்தில் எஞ்சி உதிர்ந்த சாம்பலைப் போல போல வெளுத்த முகமும் வெறித்த பார்வையுமாய் உறவுகளைத் தொலைத்த தாத்தாவை அந்த திண்ணையில் காணும் போது மனம் ஒரு நொடி நின்று துடிக்கிறது.
"வீட்டை வாங்கிய கடங்காரன் அதை இடிச்சுத் தொலைச்சா என்ன? "
பாட்டி துக்கம் அதிகரிக்கையில் கத்தி ஓய்வது திண்ணை கடக்கையில் செவியில் அறைகிறது !சொல்ல மறந்தது இப்போது தாத்தாவும் பாட்டியும் வசிக்கும் வீடு அவர்களுக்கு உரிமையானதல்ல.
தேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்
மீள் உறக்கங்களுக்கு
தயாராகி நிற்கும் ஓராசிரியர் பள்ளிகள்.
மத்யானச் சோற்றுக்கு மாணவப் போர்வையில்
காலை முதல் காத்திருக்கும் பசித்த கோழிக் குஞ்சுகள் ;
பருந்துப் பார்வையில் எங்கேனும் தட்டுப்படத்தான் செய்கின்றன
இன்றும் கூட ;
ஒரு ரூபாய் அரிசி பாலீஸ் போடப்பட்டு
மறுபடி மளிகைக் கடை சாக்குகளில்
ஏழைகள் வாங்க இயலா விலையில் ;
உலை கொதித்தடங்கும்
நீர்க்குமிழிகளாய்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உரக்கக் கத்துகிறது காலமயக்கங்களின்றி
"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை "
மான் ஆடி...மயில் ஆடி குடும்பம் குழந்தை குட்டிகள் ஆடி
குட்டையில் வீழ்ந்த இனமான தமிழ் சமுதாயம்.
அடுத்தென்ன ...!
கேஸ் அடுப்பாமே ?!
வாங்க விற்க என்னை அணுகுங்கள்
அறிவிப்பு பலகை தொங்காத குறை;
இங்கிட்டு வாங்கி
அங்கிட்டு வித்துருவோம்ல
எல்லோரும் வியாபார காந்தங்களே அன்றேனும் .
பணம்
பத்திரிகை
சேனல்
அதிகாரம்
இவை போதும் அரசமைக்க .
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஆளும்
மக்களாட்சி இது மக்களாட்சி
வாழ்க குடிமக்கள் ,
யார் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?!
டாஸ்மாக் இருக்கும் வரை
தடையின்றி தாக சாந்தி,
எடுக்கலாம் எப்போதும் வாந்தி
மற்றதெல்லாம் வெறும் காராபூந்தி .
NOTE :
வீட்டு வேலைக்கென்று தேவி என்ற பெண் என் வீட்டுக்கு கடந்த ஒரு வருடமாய் வந்து போகிறாள்,வேலை சுத்தமாக இருக்கும்,கையும் படு சுத்தம்,அளவான பேச்சு.,மொத்தத்தில் நல்லவள்,இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கிறாள்.கணவர் ஒரு மருத்துவரிடம் டிரைவர் ஆக வேலையில் இருப்பதாகக் கூறி இருக்கிறாள். விடிகாலையில் முறைவாசல் செய்வதில் தொடங்கும் அவளது வேலை நேரம் என் வீடு உட்பட இன்னும் நான்கைந்து வீடுகளில் முடிய எப்படியும் பிற்பகல் மூன்று மணி ஆகி விடும்.இந்த வேலைகளை செய்வதால் அவளுக்கு கிடைக்கும் மாத சம்பளம் நான்காயிரம் ,அவளது கணவருக்கு ஐந்தாயிரம் மாத சம்பளமாம்.ஆனால் அவர் அதை அப்படியே வீட்டுக்குத் தருவதில்லையாம்,தினமும் டாஸ்மாக் போகா விட்டால் அந்த ஆளுக்கு பைத்தியம் பிடிக்குமாம்,அப்படிக் கரைத்தது போக மிஞ்சும் சொற்ப பணம் மகன்களின் அரசுப் பள்ளி கட்டணம் கட்டக் கூட போதவில்லை என்று தேவி பலமுறை சொல்வதுண்டு,கணவரிடம் எதிர்த்து வாதாடியதில் ஒரு முறை அந்த மனிதன் இடுப்பில் எட்டி உதைக்க பாவம் இவள் மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அழுது வீங்கிப் போன முகத்தோடு வேலைக்கு வந்தாள்.
இவள் மட்டும் அல்ல சென்ற வருடம் என் வீட்டில் வேலை செய்து பாதியில் காணாமல் போன புவனாவுக்கும் இதே தான் பிரச்சினை,புவனாவின் கணவன் குடிக்க காசு கேட்டு அவளை அடிப்பதாக அவள் ஒருநாளும் சொன்னதில்லை கடைசியில் ஒருநாள் ஒரு வாரம் லீவெடுத்து வலது பக்க காதறுந்து மறுநாள் வேலைக்கு வரும் வரை,குடிக்க காசில்லை என்று மனைவியின் காதில் இருந்த கம்மலை அந்த ஆள் பிடுங்கிய வேகத்தில் அறுந்த காது அது.
ஒரு தேவி...ஒரு புவனாவின் கதை மட்டும் தானா இது!
இலவசங்களால் இவர்களின் துயரம் குறைந்ததாய் காணோம்.

Saturday, May 15, 2010
ஆற்றில் இறங்கிய அழகரும் குதிரையும் ...கூடவே நானும் என் செல்ல மகளும்
விடுமுறையில் சொந்த ஊருக்குப் போவதென்பது என்னைப் பொறுத்தவரை வருடம் ஒருமுறை நான் கொண்டாடும் மிகச்சிறந்த விசயங்களில் ஒன்று.வருடம் முழுமைக்கும் தேவையான புத்துணர்வை அந்த ஓரிரு நாட்கள் மீட்டுக் கொடுத்து விடக்கூடும்.அதுவும் நாம் செல்லும் நாட்கள் திருவிழாக் காலங்களாக இருந்து விட்டால் விட்டுப் போன நட்புகளை சொந்தங்களை மெனக்கெட்டு தேடி அலையும் சிரமம் இன்றி ஒரே இடத்தில் பார்த்து விடும் வாய்ப்பும் கூட.அப்படித் தான் சென்ற மாதம் நான் பிறந்த ஊரில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா என்று போயிருந்தோம் .
சித்திரையில் மதுரையில் அழகர் எப்போது ஆற்றில் இறங்குகிராரோ அதே நாள் அதே நேரம் தான் எங்கள் ஊர் வைகையிலும் அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இறங்கி எங்களைக் காண வந்தார்.எப்போதும் அழகர் ஆற்றில் இறங்கியதும் எங்களுக்கென்று காட்சி தருவது ஆற்றங்கரை பிரம்மாண்டமான அரச மரத்தடியில் தான். அரசின் நிழல் குறுக்கு வாட்டில் பாதி ஆற்றுக்கு கிளை விரித்திருக்கும்.சென்ற வருடம் கூட அந்த நிழலைக் கண்டேன்.இந்த வருடம் அரச மரத்தை காணோம் ,அதன் தூர் மட்டும் அனாதையாய் சில பசும் துளிர்களோடு ...அரசின் நிழலின்றி அழகரை பார்க்க பகீரென்று இருந்தது.
சிவப்பு நாக்கைத் துருத்திக் கொண்டு உருட்டி விழித்த கண்களோடு பச்சைக் குதிரையில் வெள்ளை சம்பங்கியும் பசுந்துளசியும் கலந்து கட்டிய அலங்கார மாலையில் சிங்காரமாய் பொன்னும் மணியுமாய் கல்நகைகளோடு அழகர் பவனி வருவதை காணும் போது பெற்று வளர்த்து ஐந்தாறு வயது நிரம்பிய சின்னஞ்சிறு மகனை அலங்கரித்து தெரு வழியே பெருமிதமாய் அழைத்துச் செல்கையில் கிடைக்கும் உற்சாகமும் சந்தோசமுமாய் மனம் நிறைந்து போனது.
தேனிப்பக்கம் கோடையில் கூட முன்னெல்லாம் வெயில் அத்தனை வாட்டி வதைக்கவில்லை என்றே நம்பியிருந்தேன் ,அந்த எண்ணத்தை மறக்கடிக்கும் வண்ணம் இந்த ஆண்டு வெயிலோ வெயில் கொள்ளையாய் வாட்டி எடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டது.ஊரைச் சுற்றிலும் நிறைய காற்றாலைகள் புதிது புதிதாய் ...முன்னைப் போல தண்ணீர் வசதி காணோம் ,தேனியில் தண்ணீர் பஞ்சம் என்பது நான் எதிர் பாராதது.ஆனால் நிஜம் அது தான்,தேனி நகருக்குள் லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி வாரம் ஒருமுறை டேங்கை நிரப்பிக் கொள்ளும் நிலை வந்து விட்டது. நிலத்தடி நீர் வற்றிப் போகும் அளவுக்கு தேனி இன்னும் அத்தனை வளர்ந்து விடவில்லை தான்.இன்னும் மாசு கலக்காத ஊர் என்றே அதை எண்ணிக் கொண்டிருக்கிறேன் நான்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்றன சமீபத்திய அதன் மாற்றங்கள்.புதிதாய் வந்த காற்றாலைகளுக்கும் தேனியின் தண்ணீர் பஞ்சத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமோ ?யாரோ சொன்னார்கள் தூத்துக்குடி திருசெந்தூர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் வர அங்கு ஏராளமாய் பெருகிப் போன காற்றாலைகளும் காரணம் என்று. காளியா பிள்ளையின் இயற்கை காற்றாலைகள் அமைத்தால் இப்படி பஞ்சம் வராமல் தடுக்கக் கூடுமோ என்றெல்லாம் சும்மா யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்.நமது வருத்தங்கள் எல்லாம் ஏட்டளவில் தானே ,அதை விட என்ன செய்து விட முடியும் என்று தெரியாத காரணத்தால் இங்கே பதிவதோடு விடுபடுகின்றன அந்தக் கவலைகள்.
வெயில் காலமென்றால் அப்பாவைப் பெற்ற பாட்டி உயிரோடு இருக்கும் வரை வீட்டுக்கு வெளியே தெரு வாசலில் மண் தரையில் பாய் விரித்து படுக்கையைப் போடுவது கிராமங்களில் சர்வ சகஜம் ,பல நாட்கள் நிலாவையும் நட்சத்திரங்களையும் எண்ணிக் கொண்டு கண்ணை அசத்தும் காற்றில் தெருப்பிள்ளைகளோடு விளையாடிக் களைத்த மேனி வியர்வை மெல்ல காய பாட்டி சொன்ன சுண்டெலி இளவரசி கதை கேட்டுக் கொண்டே கண்ணயர்ந்தது உண்டு.அந்த மண் தரை இப்போது எங்கேயும் இல்லை கிராமங்களில் .தெருவுக்குத் தெரு சிமென்ட் தரை ,தெரு முக்கு முடுக்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை.வீடுகள் இருக்கும் இடமெல்லாம் மண்ணின் மூச்சை இறுக்கி சிமென்ட் பூசி இருந்தார்கள்.மூச்சடக்கிய மண்ணின் சமாதி போல வெள்ளை சிமென்ட் தெருக்கள் இருந்தன.சுத்தம் பராமரிக்க எளிமை என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் கூடுமோ!
எது எப்படி இருந்தாலும் திருவிழாவுக்காக சிறுவர்களுக்கென்று நடத்தும் விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் அப்படி அப்படியே தான் இருந்தன இன்று வரையிலும் அதில் ஒரு சின்ன சந்தோசம்.பாப்பு கண்கள் மின்ன அம்மா நான் கலந்துக்கறேன்மா எல்லா போட்டியிலயும் என்று என்னைக் கேட்கையில் உடனே சரி சொல்லி விட்டேன்.எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டாள்...கலந்து கொண்ட அதே வேகத்தில் எல்லா போட்டிகளிலும் இருந்தும் முதல் ரவுண்டிலேயே வெளியில் வந்தாள் முகம் கொள்ளா சிரிப்போடு.அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை நானும் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன். போட்டியில ஜெயிக்கறதும் தோக்கறதும் முக்கியமே இல்லை,சந்தோசமா கலந்துகிட்டியா ...என்ஜாய் பண்ணியா அவ்ளோ தான் அம்மா தன் பேத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.இன்னொரு முறை சிரித்தேன் நான்.ஜெயிக்கறதா தோக்கனுமானு அவ தான் முடிவு பண்ணனும்டா ...நாம இல்லை அம்மா போகிற போக்கில் சொல்லிப் போக எந்த சிரமத்தையும் இலகுவாக எடுத்துக் கொண்டு அடுத்தது என்ன என ப்ராக்டிகலாக இருக்கும் என் தம்பி தங்கையின் ஞாபகம் வந்தது எனக்கு .நானும் அப்படித் தானோ! அம்மா எங்களை நன்றாகத் தான் வளர்த்திருக்கிறார்,நான் கூட பாப்புவை நன்றாகவே வளர்ப்பேன் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். :)))
எப்போதையும் போல பட்டுக் குஞ்சலக் குடை வரிசை ,தமிழ் நாட்டு மேளத்துக்குப் பதில் இப்போதெல்லாம் கேரள செண்டை தான் முழங்குகிறதாம் ஊர் திருவிழாக்களில் ,செண்டை மேளம் கேட்க கேட்க காதுக்கு இதமாகத் தான் இருந்தது.கேரளாக் காரன் பெரியார் அணையை திறந்து விட்டு தண்ணீர் தரா விட்டால் போகிறான் செண்டை மேலமாவது காதாரக் கேட்டுக் களிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டவர்களைப் போல எடுத்ததற்கெல்லாம் செண்டை தான்.சென்ற வருடம் பாப்புவின் பள்ளியில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம் அங்கேயும் சக்கைப் போடு போட்டது இந்த செண்டை வாத்தியம் தான்.என்னமாய் உயிரைக் கொடுத்து வாசிக்கிறார்கள் அந்த இளைஞர்கள் ! எப்படியெல்லாம் லாவகமாய் வளைந்து ஆடுகிறார்கள்! வாசிப்புக்கும் ஆட்டத்துக்கும் இடையில் என்னவெல்லாமோ வித்தைகள் வேறு ஓணம் படகுப் போட்டியை செண்டை மேளத்தோடு மேடையில் ஆட்டத்தோடு நடத்திக் காட்டுகிறார்கள்,மகாராஜா யானையில் பவனி வருவதையும் இதே ஸ்டைல் ஆட்டமாய் மேடையில் செய்து காட்டுகிறார்கள்.பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு செண்டை ஓசையில் சன்னதம் வந்து ஆடாத குறை தான்.
வாத்திய இசையில் மயங்கிக் கிறங்கிப் போன சிலர் ஆடவும் செய்தார்கள், பொது இடங்களில் மக்கள் இப்படி தங்கள் சந்தோசங்களை மீட்டெடுக்கும் வகையில் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய கனிமொழி அவர்களின் முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே.திருவனதபுரம் பத்மனாபருக்கு மட்டும் தான் செண்டை முழங்க வேண்டுமா எனக்கில்லையா என்பதைப் போல ...இப்போதெல்லாம் எங்கள் ஊர் வைகையில் இறங்கும் அழகரும் செண்டை மேளம் தான் கேட்கிறார் போலும்!இரண்டு நாள் திருவிழா முழுக்க செண்டை அதிர்ந்து நாடி நரம்புகளை முறுக்கி பிறகு தளர வைத்தது.
பிறகென்ன என்கிறீர்களா? நல்ல கோடையில் ஆற்றில் வந்திறங்கும் அழகரின் பிரசாதமாக நாட்டுச் சர்க்கரையும் துளசி தீர்த்தமும் தான் ஊர் பொதுவில் வழங்குவது வழக்கம்,இம்முறை யாரோ ஜமாய் ஐஸ் க்ரீம் இலவசமாக வழங்கினார்கள்,அந்த இடம் முழுக்க கூட்டம் குறையவே இல்லை.ஆளாளுக்கு நான்கு ஐந்து என்று வாங்கி வாங்கி வெயிலுக்கு வகையாய் முழுங்கிக் கொண்டிருந்தார்கள்(தோம்). "பாப்பு நீ கூட்டத்துல இடிச்சிட்டு போய் ஐஸ் கிரீம் வாங்காத..யாராவது தள்ளி விட்ரப் போறாங்க ..." நான் அவசரமாய் சொல்லச் சொல்ல கேட்காமல் கூட்டத்துக்குள் புகுந்து பயத்தோடு நான் பார்த்துக் கொண்டிருக்க எனக்கொன்றும் அவளுக்கொன்றுமாக இரண்டு ஐஸ் க்ரீம் வாங்கி கொண்டு வந்தாள் பாப்பு. "ஏண்டா மம்மி உனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்ததே இல்லையா ? ஏன் இப்டி கூட்டத்துல போய் அவதிப் படனும்."
" இல்லம்மா ...இப்டி கூட்டத்துல போய் வாங்கறது புதுசா த்ரில்லா இருக்கு "
சிரிப்புடன் கைகளில் ஐஸ்க்ரீம் வழியச் சொல்லி விட்டு அவள் வயதுப் பிள்ளைகளோடு ஆற்றுக்குள் இறங்கி விளையாட கிளம்பி விட்டாள் என் செல்லப் பாப்பு . அவளுக்கு கிடைத்த அதே குதுகலத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.
காத்திருக்கிறோம் ...எதிர்பார்த்திருக்கிறோம் அடுத்த வருடமும் ஆற்றில் இறங்கப் போகும் அழகரையும் அவரது குதிரையையும் எண்ணிக் கொண்டு.
Labels:
அனுபவம்,
திருவிழாக்காலம்,
பகிர்வு,
ஹரிணி
Friday, May 14, 2010
மரம்
விரையும் பேருந்தின் ஜன்னலில் ஓடி கடக்கும்
பெயர் தெரியா பசு மரங்கள்
யார் நட்டனவோ !
அம்மாவும் இல்லை
அப்பாவும் இல்லை
ஓயாது விறு விறுக்கும் காற்றின் பேரோசையில்
துண்டால் இறுக்கிய தொண்டைக்குழிக்குள் நசுங்கித்
திணறும் குரல்வளையாய்
எங்களுக்கோர் சொந்தமென்று எவருமில்லையே !
ஆர்ப்பரித்துப் புலம்பின காண் ;
வீட்டுக்கோர் மரம் வளர்ப்போம் !
Friday, April 23, 2010
ஸ்பீட் ப்ரேக் ...
அங்காங்கே தகரக்கூரையின் ஓட்டை வழியே வீட்டுக்குள் வழிந்த தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தகர ஓட்டைகள் ஒவ்வொன்றும் நட்சத்திரங்களாயின,ஒவ்வொரு நட்சத்திர ஓட்டையும் பார்த்திபனுக்கு பாரதியின் ஒற்றைகல் மூக்குத்தியின் ஞாபகத்தை கிளறி விடுவனவாய் ;
வெள்ளை ஜார்ஜெட் தாவணியில் ரோஸ் நிறப் பெரிய பெரிய பூக்களிட்ட பாவாடையும் அதே நிற ரவிக்கையும் அணிந்து வெள்ளை ரிப்பனில் தூக்கிக் கட்டிய ஒற்றை சடையுமாய் அவள் புத்தகக் கூடையுடன் நடக்கையில் தூர வரும் போதே பார்த்திபனின் சைக்கிள் தள்ளாடத் தொடங்கி விடும்.படிப்பது பிளஸ் டூ தான்.மேலே படிக்க நினைப்பாளோ என்னவோ!
இப்போது பெண்ணைக் கேட்டால் கொடுப்பார்களா? அதிலும் நாட்டாமைக்காரர் பேத்தியை பஸ் டிரைவர் பெண் கேட்டால் ஒன்றும் பேசாமல் தூக்கிக் கொடுத்து இந்தாப்பா கட்டிக்கோ என்பார்களோ!நினைக்கையில் அவனுக்கு உள்ளே எதுவோ உடைந்து நொறுங்கிப் போவதாய் சின்னதாய் ஒரு பயம் ,இருந்தாலும் தான் அவளைப் பார்க்கையில் எல்லாம் அவளும் தன்னைப் பாராமல் பார்ப்பதால் உண்டான நிச்சயம் உள்ளே சில்லென்று மழையடிக்க வைத்தது.
ஒரு வார்த்தை பேசியதில்லை ,இன்று வரையிலும் குளிரக் குளிர பார்வைகள் தான் இடம்பெயர்ந்து மீண்டு கொண்டிருந்தன.
பிளஸ் டூ வகுப்பின் அழிக்கம்பியிட்ட ஜன்னல் அருகே நின்று கொண்டு வெளியே பார்த்தால் எதிர்த்தார் போல் முத்தப்பாவின் பெட்டிக் கடை ,ஒரு ஆள் உட்கார மட்டுமே இடமிருக்கும்,அங்கே தான் டியூட்டிக்குப் போகும் போதும் வரும் போதும் பாரதி தரிசனம் காண பார்த்திபன் தவமிருப்பான்.
உள்ளுக்குள் என்ன நினைப்பு ஓடுமோ அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஜிவ்வென்று பறக்கும் உணர்வில் அவளுக்குப் பித்துப் பிடிக்காத குறை தான்.
"நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னா புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா "
எங்கிருந்து இந்தப் பாட்டைக் கேட்டாலும் பொன்னுமணி படத்து கார்த்திக் சௌந்தர்யாவாக பாரதி தன்னையும் பார்த்திபனையும் கற்பனை செய்து கொள்வாள்.கண்ணை மூடினால் அவன்முகம் தான் .
பார்த்திபன் கருப்பன் தான் ,பெரிய அழகனில்லை,ஆனால் சிரிக்கையில் கன்னம் விரிந்து பளீர் வெளுப்பில் சீராய் வரிசைப் பற்கள் பளீரிட கண்கள் மின்னுவது கொள்ளை அழகாய் இருக்கும்,விட்டால் பாரதி இன்றைக்கெல்லாம் கூட பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னை அவனுக்கு கட்டி வைப்பார்களா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றியதில்லை அவளுக்கு,ஆறடி உயரத்தில் உறவில் அத்தை மகனாய் அவனிருக்க,அவனுக்கில்லாத உரிமையா எனும் கிராமத்து மெத்தனமோ என்னவோ! அவனே தன் கணவன் என வரித்துக் கொண்டு நிம்மதியாய் இருந்தாள்.
அவனுக்கு மதுரைக்கு மாற்றல் ஆகும் வரை எல்லாம் சலனமின்றி .
அவளுக்கு பிளஸ் டூ பெயில் ஆகும் வரை எல்லாம் சலனமின்றி .
அன்றொரு நாள் விடுமுறை நாளில் ஊருக்கு வந்த பார்த்திபன் அதே பெட்டிக் கடையில் நின்று கொண்டிருக்கையில் தான் அவனை கடந்து ஊருக்குள் போனது ஒரு மெட்டாடர் வேன் ,டிரைவர் சீட்டிற்கு பக்கத்தில் ஜம்மென்று உடம்பெல்லாம் நகைகள் பளபளக்க தந்த நிறத்தில் மெழுகு பொம்மை போல உட்கார்ந்து கொண்டு ராஜம்மா அந்த ஊருக்குள் வந்தாள்.ராஜம்மாளின் மூத்த மகன் பார்த்திபனைக் காட்டிலும் மூத்தவன் .இளையவனுக்கு பார்த்திபன் வயதிருக்கும்,அவள் கணவன் இந்த ஊர் மிராசு ,நாட்டமைக்காரருக்கு அண்ணன் மகன்.
அப்பா இருந்தவரை பிறந்த வீட்டு சீராடலில் இருந்த ராஜம்மா ஒரு வழியாக அவர் இறந்த பின் இப்போது தான் புகுந்த வீட்டுக்கு வாழவே வந்திருக்கிறாள்.அதுவரை ஊர் திருவிழாக்காலங்கள் தவிர வேறெப்போதும் அவள் இங்கு வந்ததில்லை ;
ராஜம்மாள் மிக்க அழகி,அவள் கணவரும் ஜம்மென்று இருப்பார்.என்ன பிணக்கோ அந்த மனிதர் இந்தம்மாளைக் கட்டின ஐந்து வருடங்களில் நான்கு பிள்ளைகள் பெற்று . ஆமாம் ...இல்லை என்பதைத் தவிர பெரும்பாலும் பேச்சிழந்து போனார்.
மெட்டாடர் வேனில் இருந்து குதித்து இறங்கிக் கொண்ட ராஜம்மாள் நேரே நுழைந்தது தன் கணவன் வீட்டில் அல்ல ;பாரதியின் தாத்தா வீட்டில் தான்.சின்ன மாமனார் என்ற மரியாதையில் அல்ல ,தனக்கு இணையான பணம் படைத்த ஒரே வீடு இது...இது மட்டும் தான் எனும் தீர்மானத்தில் நுழைந்தாள்.
அதே சமயம் எந்நேரமும் தோப்பே கதி என்றிருக்கும் ராஜம்மாளின் கணவர் வராத மனைவி வந்து விட்டாள் என்று துள்ளிக் குதித்துக் கொண்டு அவளைப் பார்க்க வந்து விடவில்லை ,போய் சேதி சொன்னவர்களிடம் வீட்டுச் சாவி கொடுத்தனுப்பி
"என்ன திடீர்னு வந்து எறங்கிட்டா! ...சரி...சாயந்திரம் வரேன்..." என்று முடித்துக் கொண்டார்.
அதென்னவோ முதல் பார்வையிலேயே பாரதிக்கு ராஜம்மாளை பார்த்ததும் பகீரென்று ஆகிப் போனது.ஏதோ இனம் காண முடியாத அச்சம் அவளைப் பார்க்கையில் எல்லாம் பெரும் இம்சையாய் அவளுக்குள்.
ப்ளஸ் டூ பெயில் ஆனதும் சும்மா வீட்டில் இருப்பானேன் என தையல் கிளாஸ் போக ஆரம்பித்தாள் பாரதி ; தாத்தா டுடோரியலில் படிக்க சொன்னதற்கு மாட்டேன் என்று விட்டாள்.அதிகம் படித்து விட்டாள் எங்கே பார்த்திபனுக்கு தன்னை தர மாட்டேன் என்று விடுவார்களோ என்று அதிபுத்திசாலியாக தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
மதுரைக்கு பார்த்திபன் மாற்றலாகி போனதிலிருந்து முன்னைப் போல அவனைக் கண் குளிர காண முடியவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கமிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளியும் மாலை அவன் ஊருக்கு வரும் நேரம் பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோயிலுக்கு விளக்குப் போட கிளம்புவது அவளளவில் அவளுக்கு கோலாகலத் திருவிழா.
வெள்ளிக்கிழமைக்காக ஞாயிறு மாலையில் இருந்தே ஏங்க ஆரம்பித்து விடுவாள்.ஞாயிறு மாலை பார்த்திபன் மதுரைக்கு பஸ் ஏறும் வரை எதையேனும் சாக்கிட்டுக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் இருக்க வேண்டுமென்று ரொம்பவே பிரயத்தனப்படுவாள்,முடியாத பட்சத்தில் அகப்பட்டவர்கள் பாடு திண்டாட்டம் தான் எண்ணெயில் போட்ட கடுகாக முகத்தை வைத்துக் கொள்வாள்.
இத்தனைக்கும் அவனும் அவளும் பேசிக்கொண்டதில்லை ஒருநாளும் .
யாருக்கும் தெரியவும் தெரியாது.அவனை அவளுக்குப் பிடிக்கும் என்று .
ராஜம்மாள் ஊருக்கு வந்த ஒரே வருடத்தில் அந்த ஊரின் அதிசயப் பொம்பளை ஆகிப் போனாள்,அவளளவு நாகரிகமான பெண் எவளும் அங்கில்லை என்பதாய் இருந்தது அவளது நடவடிக்கைகள் ,ஊர் பெண்கள் எல்லாம் அவரவர் தோட்டத்தில் குளிக்க துவைக்க என ஒதுங்க இவள் நீலப் பளிங்கில் வீட்டுக்குள் பாத் ரூம் கட்டிக் கொண்டாள்.பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாள்,அரங்கு வீட்டு மகாராணி என்பது அவளுக்கே பொருந்தும்.
அந்தம்மாளின் புருஷன் அப்படியே தான் இருந்தார்.தோப்பில் தான் சாப்பாடு தூக்கம் எல்லாம் ,எப்போது வீட்டுக்கு வருவார் எப்போது போவார் ஊருக்கு மர்மமாகத் தான் இருந்தது பேசிச் சிரித்து மென்று கொள்ள அவல் கிடைத்த கதை தான் .
போதாக்குறைக்கு நாட்டாமைக்காரர் தலை அடிக்கடியும் அவள் வீட்டு வாசலில் தென்பட உறவில் மாமானார் தானே எனும் சௌகரியத்தையும் மீறி புகைய ஆரம்பித்தது விஷயம்.சொந்த கணவர் எதுவும் பேசாதிருக்கையில் ஊருக்கு என்ன வந்தது?!,அவரெதிரில் துண்டை கக்கத்தில் இடுக்கிக் கொண்டாலும் புறத்தில் நக்கலாய் சிரித்துக் கொண்டனர்.
வெள்ளி செவ்வாய்களில் காசிப்பட்டு சர சரக்க காசுமாலை கனமாய்த் தொங்க கழுத்தொட்டி கல் அட்டிகை புரள வட்டக் கொண்டையிட்டு மொட்டு மொட்டாய் குண்டு மல்லி வாசம் பரப்ப நடுவில் வெள்ளைக் கல் பிச்சோடா டாலடிக்க கரு நெளிக் கூந்தல் முன்நெற்றியில் பிசிராட ராஜம்மா பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோயிலுக்குப் போய் வருவாள் .கண் கொள்ளாக் காட்சி தான் அந்நேரம் கோயிலில் இருக்க நேர்ந்தவர்களுக்கு.
ராஜம்மாள் அதிர்ந்து பேசி எவரும் கண்டதில்லை,அத்தனை மென்மையாய் எப்படித் தான் பேச முடியும்? சம்சாரி வீட்டுப் பெண்கள் குசு குசுப்பாய் கேட்டுக் கொள்வார்கள் தத்தம் புருஷர்களிடம்.அவர்களெல்லாம் மஞ்சள் தேய்த்து தேய்த்து மேனி பள பளக்க எதையோ செய்து பார்க்க ராஜம்மாளின் சருமம் மஞ்சள் காணா தந்த நிறம்.எங்கருந்து இப்படி இருக்கா மகராசி! தமக்குள் முணங்கிக் கொள்வார்கள் .
நாற்பது கடந்த பெண்ணொருத்தி அழகிலும் இளமையிலும் இளம் பெண்களுக்குப் போட்டியாக இருக்க முடியுமென்றால் ராஜம்மா எத்தனை அழகென்று சொல்லத் தேவையில்லை.அந்த ஊரில் எதற்கும் அவளைக் கேட்பாரில்லை யாரும்.
எத்தனை அழகிருந்தும் திருஷ்டி என்று ஒன்றிருக்கத் தானே வேணும் எங்கேயும் எப்படியும்?!
இருந்தது ராஜம்மாளின் மூத்த மகனுக்கு அவள் வைத்த பெயர் என்னவோ ராஜேந்திரன் தான் ,ஊர் வைத்த பெயரோ கிறுக்கு ராஜேந்திரன் .அவன் அழகில் அம்மாவையோ அப்பாவையோ கொண்டிருக்கவில்லை.மாநிறம் ஒற்றை நாடி தேகம்,தூக்கலான முன் பற்கள் என்பதால் சதா திறந்த வாய்.தலை அனிச்சையாய் அவன் கட்டுப்பாடின்றி ஆடிக் கொண்டே இருக்கும்,இப்படி ஒரு மகன் ராஜம்மாவுக்கு உண்டு என்று புதிதாய் ஊருக்கு வருபவர்களிடம் சொன்னால் எளிதில் நம்ப மாட்டார்கள்.
இளையவன் பிரபாகரன் சாயலில் அம்மாவைக் கொண்டிருந்தான்.சும்மா தான் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் ஆனாலும் அவன் மீது ஊருக்குள் ஏழெட்டு ஜோடிக்கண்கள்.கிறுக்கனுக்கு யார் பெண் தரப் போகிறார்கள்?! ,பிரபாகரனைக் கட்டியவளுக்கு தான் ராஜம்மாள் வீட்டுச் சொத்தின் ஏக போக உரிமை எனும் பேராசை அந்த ஊரில் நிறைய பேருக்கு இருந்ததென்னவோ வாஸ்தவமே.
பார்த்திபன் கனவில் இருந்த பாரதிக்கு வாரங்கள் துவங்குவதும் சட்டென முடிவதும் சில மாதங்களில் அலுத்துப் போக ஆரம்பித்தன.அவன் எப்போது அவன் அம்மாவோடு தன்னைப் பெண் கேட்டு வீட்டுப் படியேறி வருவான் என நொடிக்கு நொடி பைத்தியமாகிக் கொண்டிருந்தாள்.
தையலும் கற்று முடிந்தாகி விட்டது,
மதுரையில் பாரதியின் தாய்மாமன் ராமனுஜம் பிரபல கண் டாக்டர் ;
மாமன் வீட்டிலிருந்து மேலே வேறு எதுவும் படிக்கிறாயா பாரதி ? தாத்தா பேத்திக்கு ஏதாவது வகை செய்ய வேண்டும் என்ற பாசத்தோடு தான் கேட்டார்.சரி என்று உடனே ஒத்துக் கொண்டாள் .
மதுரைக்குப் போனால் தினமும் பார்த்திபனை பார்க்கலாம் என்ற வெகுளித் தனம் அவளுக்கு ,முட்டாள் பெண் மதுரை என்ன அவள் பிறந்த கிராமமா?! ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட் தான் இருக்குமா அங்கே அதெல்லாம் யோசிக்காமல் மதுரைக்குப் போனவள் டுடோரியலில் பிளஸ் டூ தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தாள்.பாஸ் பண்ணி விடடால் ஏதாவதொரு பெண்கள் கல்லூரியில் டிகிரி சேர்த்து விடலாம் என்று அத்தை வற்புறுத்த மறுக்க வேறு வழி இல்லாமல் தான் போய் வந்து கொண்டிருந்தாள்.
மாமா வீட்டிலிருந்து படித்த ஒரு வருடம் முழுதும் அவளால் பார்த்திபனை பார்க்கவே முடியவில்லை,உள்ளே நொந்து நூலானாலும் எப்படியோ பிளஸ் டூ பரீட்சை எழுதி முடித்து விடுமுறைக்கு ஊருக்கு பஸ் ஏறினாள் .
ஐஸ் மழை கொட்டாத குறை தான் ; அந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபனாய் இருக்கக் கூடும் என்று அவள் சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இவளை கண்ட மாத்திரத்தில் அவனுக்கும் அப்படித்தான்.
திடீர் சந்தோசத்தில் பிரகாசித்த கண்களில் கண்டு கொள்ள முடிந்தது
காரோடு இவளை பஸ் ஏற்றி விட வந்த மாமா பார்த்திபனை பார்த்ததும் அகலமாய் புன்னகைத்து ;
நம்ம ஊர் டிரைவரா ...எப்படி இருக்கீங்க தம்பி? என்று ஒப்புக்கு கேட்டு விட்டு பாரதி தனியா ஊருக்குப் போறா தேனி பஸ் ஸ்டாண்ட்ல பார்த்து எறக்கி விட்ருங்க தம்பி, சின்னக் கை குலுக்கலோடு டிரைவர் சீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த ஜன்னலோர ஒற்றை சீட்டில் அவளை உட்கார வைத்து விட்டு அவர் போய் விட்டார் .
முழுதாய் ஒரு வருடம் கழித்து அவனைப் பார்க்கும் அவஸ்தையில் அவளுக்கு முகம் சிவந்து கண்கள் கலங்கி விட சன்னமான நிம்மதியில் குனிந்த தலை நிமிர மாட்டாமல் உல்லாச அலையடிப்பில் மனம் லேசாகிப் பறந்தது.
அவளையே காணாததைக் கண்டவனாய் பிரயாணம் முழுக்க பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன ! டிரைவர் ஆயிற்றே !உதடுகளில் உறைந்து விட்ட புன்னகையோடு நிதானமாகவே வண்டியை எடுத்தான்.அவனது நிதானம் கண்டு ;
உடனிருந்த டியூட்டி கண்டக்டர் " மாப்ள என்னப்பா முகமே சுவிட்ச் போட்டாப்புல பள பளக்குது,வண்டி ஏறும் போது சாதாரணமாத் தான இருந்தா! " இப்பிடி நீ வண்டி ஓட்டிகிட்டு போனா கட்ட வண்டி முந்திட்டு போயிடும்.என்ன சங்கதி! வீட்ல பொண்ணு கிண்ணு ரெடியா பார்த்து வச்சிட்டாங்களா?
கண்சிமிட்டலோடு பார்த்திபனின் தோளில் தட்டி கண்டக்டர் சிரிப்போடு கேட்க ;
கன்னத்தில் அடக்கிய சிரிப்போடு கண்ணோரம் குருவிக்கால் ரேகை விரிக்க அடக்க மாட்டாமல் சிரித்த பார்த்திபன் ,கண்டக்டருக்கு காதில் விழும் படி "ம்ம்...பொண்ணே இந்த வண்டில தான் வருதாம்...! எனக் கூறிக் கொண்டே சடக்கென்று எதிரே வந்த மணல் லாரிக்காக பிரேக்கை ஒடித்தான்.
என்னது ...பொண்ணு வருதா! இந்த வண்டியிலையா ...ஆராய்வது போல எல்லா சீட்டுகளிலும் பார்வையை நழுவ விட்ட கண்டக்டரின் கண்கள் பாரதியை முன் சீட்டில் கண்டதும் பிரேக்கடித்து நின்றது.
ஒத்த வயதேன்பதாலோ என்னவோ ...மாப்ள ...அப்படியா சங்கதி ..நடத்து...நடத்து உன் ராஜ்யத்தை நான் பேக் சீட்ல உட்கார்ந்துகறேன் இன்னைக்கு மட்டும் என்று சிரிப்புடன் விலகி நடந்தான் .
பாரதிக்கு பார்த்திபனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் போலவும் இருந்தது ...ஆனால் தன்னால் வெட்கமின்றி அப்படி பார்த்து விட முடியாது என்பதைப் போலவும் இருந்தது , என்ன செய்வதென்று அறியாத ஏதோ ஒரு உணர்வில் இருந்தாள்.சில நிமிடங்களில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதும் என்ற நிலைக்கு ஆளாகிப் போனாள்.
கடைசி சீட்டில் போய் உட்காரும் முன்பாக அந்த கண்டக்டர் வேறு பஸ்ஸில் இருந்த டி.வி யில் ராஜாவின் மெலடி மெட்டுகளை கசிய விட்டுப் போயிருந்தார்.அந்த ஒன்றரை மணி நேர பஸ் பயணம் ஒரு ஜென்மம் வாழ்ந்த உணர்வைத் தரக்கூடுமா என்ன? பஸ்சுக்குள் கசிந்த பாடல்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர் பார்த்திபனும் பாரதியும்.
ஊர் வந்தது...
பாரதியை கூட்டிப் போக ராஜம்மாளின் காரும் வந்தது.
இந்த கார் எதற்கு தன்னை அழைத்துப் போக வந்தது?! புரியாத பாவனையில் பஸ்ஸில் இருந்து இறங்கிய பாரதி பார்த்திபனை யோசனையாய் நோக்க ;
"வா பாரதி ...கார்ல உட்கார்,உன்ன கூட்டிட்டுப் போகத் தான் வந்தேன்"
ராஜம்மாளின் குரல் காருக்குள் இருந்து கேட்கவே ;
"இல்ல நான் பஸ்ல வரேங்க "...பாரதி மிக மிக மெல்ல மறுத்தாள் .
"அட ஏம்மா பொண்ணு காரே இன்னும் ஒரு வாரத்துல உன்னோடதாகப் போகுது சும்மாத்தான் ஏறி உட்காரேன்."
ராஜம்மாள் வீட்டு மேல்வேலைக்காரி சண்முகமணி உரத்த குரலில் சிரிப்புடன் சொல்ல,பாரதிக்கு விசுக்கென்று கோபம் வரப் பார்த்தது.
ச்சே..இருந்திருந்து ஒரு முழு வருசத்துக்குப் பின் இன்றைக்கு தான் பார்த்திபனை கண்ணால் காண முடிந்திருக்கிறது ,இதேதடா இந்த பொம்பிளைகளுடன் பெரிய வம்பாய் போய் கொண்டிருக்கிறதே! சுள்ளென்று வெடித்த கோபத்தில் பார்த்திபன் அங்கு நிற்பதையும் மறந்து போனவளாய்,
"நான் வரலை நீங்க போங்க ,"என்றாள் வெடுக்கென்று.
ராஜம்மாளுக்கு சுருக்கென்று தைத்ததோ என்னவோ !
"சின்னப் பொண்ணு தானே அதான் இவ்ளோ துடுக்குத் தனம் .எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தா தானா சரி ஆயிடும் " மெத்து மெத்தென்ற குரலில் தனக்குள் சொல்லிக் கொண்டு அவள் சாலையின் மறுபுறம் பார்க்க பாரதியின் தாத்தா வந்து கொண்டிருந்தார்.
நள்ளிரவில் குடு குடுப்பையின் உடுக்கை சத்தம் கேட்டால் உள்ளுக்குள் பயம் உருளுமே அப்படி ஒரு பயம் பாரதிக்கும் ;என்னவோ சரியாய் படவில்லை அவளுக்கு
தாத்தா ஏன் ராஜம்மாளின் காரில்!
அவள் மிரண்ட மான் குட்டியாய் பார்த்திபனை திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் ஏதேனும் செய்து தன்னை அங்கிருந்து கூட்டிப் போய் விட மாட்டானா என்பதாய் கண்கள் கெஞ்ச தன் கை பற்றி கூட்டிப் போனா தாத்தாவின் கரத்தை விலக்கத் தோன்றாமல் ஜடம் போல காரில் ஏறினாள் .
தாத்தா பாரதியை ராஜம்மாளின் மகன் ராஜேந்திரனுக்கு நிச்சயம் பண்ணி விட்டார் .
இளையவன் பிரபாகரனுக்கு தான் பாரதியைக் கொடுப்பதாய் முதலில் பேச்சு ஆரம்பித்ததாம் கடைசியில் ராஜம்மாளின் கண்ணீர் கசிவில் கைகேயி நாடகத்தில் அவள் மேல் இரக்கப்பட்டு அவள் மீது வைத்த மீளாக் காதலில் தன் பேத்தியை அந்த கிறுக்கு ராஜேந்திரனுக்கு தாரை வார்த்தார் தாத்தா.
பார்த்திபன் !!!
இருக்கிறான் கல்யாணமாகி விட்டது அவனுக்கும்.
திருவிழா தவிர வேறு எதற்கும் அவன் தன் ஊருக்கு வருவதில்லை இப்போதெல்லாம்.அப்படி வரும் போதும் அகஸ்மாத்தாய் பாரதியின் கண்களில் விழ நேர்ந்தால் தடுமாறத்தான் செய்கிறது விவஸ்தை கெட்ட நெஞ்சம்.
சொல்ல மறந்து விட்டேன் கிறுக்கு ராஜேந்திரனுக்கும் பாரதிக்கும் ஒரு மகளிருக்கிறாள்.இப்போது அவள் பிளஸ் டூ .

Subscribe to:
Posts (Atom)