Wednesday, February 10, 2010

My Daughter...


என் தம்பி இந்த வருடப் பிறந்த நாளுக்காக பாப்புவுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தான்.தினம் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டினால் தான் அவளுக்கு திருப்தி,மூன்று மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் 4 to 4 .30 cycling தான்.

நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,

காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பாப்பு இங்கிருந்து கொண்டே ...

"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,

அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.

"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;

ச்சே..ச்சே ..பெட் கௌ "

சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;

பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.

ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!

சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .

ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."

எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.

"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!

அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"

இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"

எனக்கு ;
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.

குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))


டிஸ்கி:
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது.

13 comments:

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க. நானும் என் மகளுக்கு போன வாரம்தான் சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன்.

அண்ணாமலையான் said...

இந்த நல்ல மனசு குழந்த பருவத்தோட போய்டுதே அதான் இன்னிக்கி எல்லாரும் மெஷினா ஆயிட்டோம்...

KarthigaVasudevan said...

நன்றி அகநாழிகை பொன்.வாசுதேவன்.
முன்னாடி சைக்கிள் கத்துக்கும் போதெல்லாம் முழங்கை ,முழங்கால் எல்லாம் சிராய்ச்சிக்காம NO CYCLING ,இப்ப குழந்தைகளுக்கு அந்தக் கஷ்டம் இல்லை பாருங்க.மூணு சக்கரம் பிட் பண்ணிடறான்,ஈசியா சைக்கிள் கத்துக்கறாங்க .

KarthigaVasudevan said...

நன்றி அண்ணாமலையான்.
பொதுவா அப்பிடி சொல்லி முடிச்சிட முடியாது,குழந்தைகள் இருக்கற வரை இந்த உலகம் இயந்திரத் தன்மை கொண்டதுன்னும்,இந்த லைப் மெஷின் லைப்னும் சொல்லிட முடியாதே,குழந்தைகள் அவங்களோட வீட்டை மட்டுமல்ல அவங்க எங்கலாம் இருக்காங்களோ அங்கெல்லாம் அந்த சூழலையும் அழகாக்கிடறாங்க.

ஹுஸைனம்மா said...

குழந்தைப்பேச்சு கேட்பது தனி சுகம்தான்.

KarthigaVasudevan said...

நிஜம்..நிஜம்...நிஜம் ஹூசைனம்மா ,

குழந்தைப் பேச்சு கேட்பதும்...குழந்தையின் செயல்களை வேடிக்கை பார்ப்பதும் இதமான சுகம் .

pudugaithendral said...

எப்பவுமே குழந்தையாவே இருக்க வரம் கிடைச்சா நல்லாயிருக்கும்ல- சொன்னது என் மகள். எனக்கும் இந்த எண்ணம் உண்டு

KarthigaVasudevan said...

// புதுகைத் தென்றல் said...
எப்பவுமே குழந்தையாவே இருக்க வரம் கிடைச்சா நல்லாயிருக்கும்ல- சொன்னது என் மகள். எனக்கும் இந்த எண்ணம் உண்டு//

எனக்கும் தான் தென்றல் :)

நாமளும் குழந்தைகள் தான்; என்ன கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் அவ்ளோ தான! :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!" //

அழகா சொல்லியிருக்கா இல்ல பாப்பு.

ரசித்தேன்.

அதென்ன தொடர்ந்து சைக்கிள் பதிவு ;) விஜயலு

butterfly Surya said...

அருமை.

குழந்தைகள் உலகம் அலாதியானது.அன்பு மட்டுமே நிறைந்த ஆன்நத சொர்க்கம் அது மட்டுமே.

பகிர்விற்கு நன்றி.

Sanjai Gandhi said...

குழைந்தைகள் நம்மையும் குழந்தைகளாக்கி விடுகிறார்கள்..இல்லைனா இதெல்லாம் ரசிக்க முடியாது.. :)

நேசமித்ரன் said...

ஒரு குறிப்பிட்ட பருவம் வரை குழந்தைகளை நாய்கள் கடிப்பது இல்லை

அவர்கள் அவற்றின் வாலை முறுக்கும் காதைத் திருகும்
செல்லமாக பேசிக் கொண்டே அடிக்கவும் செய்யும் ஆனால் நாய்கள் கடிப்பது இல்லை அவர்கள் உடலில் சுரக்கும் பீனமோன்கள் காரணம் அது போல் பேச்சு வராத குழந்தைகள் வளர்ப்பு பிராணிகளிடம் பேச கற்றுகொள்கிறார்கள் அவர்களின் தொடர்பு கொள்ளும் திறன் மற்ற குழந்தைகளை விட மேம்பட்டதாக இருக்கிறது என்பது நிரூபிக்க பெற்றிருக்கிறது.

சாத்தியம் இருப்பின் வளர்த்துப் பாருங்களேன்

அலர்ஜி என்று சொன்ன பத்து வரிகளுக்கு பிறகு காக்கை குருவி எங்கள் ஜாதி என்று வாசிக்க கிடைத்ததால் சொல்லத்தோன்றியது

நன்றி!

:)

ஜெய்லானி said...

குழல் இணிது யாழ் இணிது என்போர் மழலை சொல் கேளாதார்----உண்மைதானே!!!!!!!!!.