இந்தக் கைக் குழந்தைகளின் அராஜகம் இருக்கிறதே சொல்லி மாளாது அதன் மகாத்மியம். காலையில் பேருந்தில் ஐ.சி.எப் நிறுத்தத்தில் ஒரு கைக்குழந்தையும் அதன் அம்மாவும் ஏறினார்கள் கூடவே அதன் பாட்டியும்.இந்தக் குழந்தை அது எனக்கு இடம் கொடுங்கள் என்று யாரிடமும் கேட்கவே இல்லை,கேட்கும் முன்பே பிங்க் நிற பஞ்சுத் துவாலையில் சுற்றப் பட்ட அதன் தோற்றத்தை உத்தேசித்து எனக்கு பின்னிருக்கையில் இருந்த அம்மாள் டக்கென எழுந்து அதற்குரிய மரியாதை செலுத்துவதாக எண்ணிக் கொண்டு இடம் கொடுத்தாள். சரி சத்தமில்லாமல் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ள வேண்டியது தானே!வயதானவள் என்ற ஹோதாவில் அந்தக் குழந்தையின் பாட்டியம்மாள் அதை பூப்போல மடியிலேந்திக் கொண்டு உட்காரப் போக ,உடனே ஒரு சிணுங்கல் மெல்ல ஆரம்பித்து அந்தம்மாள் எழுந்து கொண்டு அதன் அம்மாவை உட்கார வைக்கும் அவகாசத்தில் பெருத்த கத்தலாகப் போய் விட்டது. யாருக்கு வசதிக் குறைச்சலாகப் போனாலும் இந்தக் கைக்குழந்தைகள் மட்டும் அதன் விருப்பங்களை எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொள்கின்றன பாருங்கள்!
எரிச்சலாக கடக்கும் காலை நேரப்பேருந்துப் பயணம் இன்று இந்த கைக்குழந்தையின் செல்ல அராஜகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததில் எனது நிறுத்தம் வந்ததே தெரியவில்லை. அந்தக் குழந்தையின் முகம் இன்னமும் கண்ணுக்குள் .லவ் யூ குட்டிம்மா //யார் குழந்தையாய் இருந்தால் என்ன?! குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்//
குழந்தைகள் மகத்தானவர்கள் நம்மையும் நமது மனநிலைகளையும் நொடியில் மாற்றி எந்தச் சூழலின் மீது வண்ணம் பூசி மைல்டாக மாற்றி விடுவதில் கில்லாடிகள்.
Tuesday, January 10, 2012
Thursday, September 22, 2011
ஒரே கடல் (மூவி ரெவ்யூ)
Movie link :
http://www.bharatmovies.com/tamil/watch/ore-kadal-movie-online.htm
படம் - ஒரே கடல்
காஸ்டிங் -மம்முட்டி(நாதன்) மீரா ஜாஸ்மின் (தீப்தி ) பெல்லா (ரம்யா)நரேன் (தீப்தியின் கணவன் )
வெளிவந்த ஆண்டு -2007
Over to the movie ...
அந்தக் குழந்தைகள் பதைபதைக்க வைக்கிறார்கள் .
அம்மாவின் காதல் அவர்களுக்குப் புரியும் காலம் வரலாம் வராமலும் போகலாம்.
படத்தில் பெல்லா இப்படி ஆனதற்கு காரணங்கள் ,தீப்தி இப்படியானதற்குகாரணங்கள் ,நாதன் இப்படியானதற்கு காரணங்கள் இன்னின்ன சம்பவங்களாலும்வசனங்களாலும் விளக்கப்படுகின்றன,இவர்களது வாழ்க்கை நியாயங்களை உணரமுடிந்தும் குழந்தைகள் நெருடிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்குப் பெயர்செண்டிமெண்ட் என்றால் ,அதைத் தாண்டி வர முடியாமை தான் மிடில் கிளாஸ்மனநிலை.//மிடில் கிளாஸ் ஃபனிஷ்மென்ட் என்றும் சொல்லிக் கொள்ளலாம்//
உள்ளுணர்வின் உந்துதலாய் நாதன் தீப்திக்கு ஒருமுறை உதவுகிறான், தொடர்ந்துதீப்தி தன் கணவனுக்கு வேலை வேண்டுமென்பதற்காக நாதனிடம் உதவி கேட்டுச்செல்கிறாள்,கவனியுங்கள் இதற்குப் பெயர் யாசிப்பில்லை,உதவி மட்டுமே.அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது ,அவளுக்கும் அவனிடத்தில் பெற்றுக்கொண்ட உதவிக்கான நல்லெண்ணத்தினால் ஏற்படும் நன்றியுணர்வு பிரமிப்பாகி,பிரமிப்பே காதலாக மாறுகிறது ,அவனால் தன் குடும்பத்தின் தற்போதைய சூழலைமாற்றி அமைக்க முடியும் எனும் நம்பிக்கை அவளை வீழ்த்துகிறது ,அவள்வீழ்கிறாள்.
வீழ்ந்தாலும் தனக்கென ஒரு தாங்கு கட்டையை இடைவிடாது கோரிக் கொண்டேஇருக்கும் ஊனமுற்ற மனம் அவளை நிம்மதி இழக்கச் செய்து கொண்டே இருக்கிறது .நாதனுடனான உறவை நியாயப் படுத்திக் கொள்ள அவள் தன்னோடு தானே போராடும்நிலை ,அவனுடனான அவளது பொழுதுகள் அவள் மனதிற்கு மிக நெருக்கமானவையாகிகணவனைத் தூர நிறுத்தத் துணிகிறது. இந்நிலை அவளை குற்ற உணர்வில்தள்ளுகிறது .
எல்லாமும் மனைவி பார்த்துக் கொள்வாள் ,எந்தச் சூழலையும் அவள் பொறுத்துக்கொள்வாள்,அது அவளது கடமையும் கூட என்றென்னும் கணவனாக நரேன் .பார்க்கப்பரிதாபமாக இருக்கிறது திரையில் .அவன் எதையும் அறிந்தவனில்லை .கடமையுணர்வுமிக்க கணவனாக தன் கேரக்டரை சரியாகச் செய்து முடித்து விட்டு ஒதுங்கும்அளவுக்கே முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.அப்பாவி என்றுதீப்தியால் சொல்லப் படக் காரணம் அவன் தன் மனைவியின் காதலை அறிய நேரவில்லைஎன்பதனால் மட்டுமே என்பதை இங்கு கவனத்தில் கொள்தல் நலம் .
அவன் தன் மனைவி மனநல விடுதியில் இருந்து மீண்டு வந்தால் போதும் எனஏற்றுக் கொள்ளும் அளவில் பெருந்தன்மை கொண்டவனாகவே இருக்கிறான். மனைவியின்காதலையும் அவ்விதம் ஏற்றுக் கொள்வான் என நம்ப முடியாதே. தீப்தி நாதனோடுஇணைவதாக படம் முடிகிறது .அவளது கணவன் என்னவானான் என்னவாகிறான்?! எனும்யோசனையை எளிதில் கடக்க முடியவில்லை ,இவனது நிலை என்ன ? தன் மனைவியின்தேடலை உணர்ந்து கொண்டு இவன் அவர்களை அணுசரித்துப் போவான் என நம்புவதுபேதமை .போகலாம் போகாமலும் இருக்கலாம்,நெருங்கி முட்கள் தூவப் பட்டஎப்படியும் இருக்கலாம் நிகழ்வுகள் .தீப்திக்கு இவனைப் பிரிவதற்கோதவிர்பதற்கோ எவ்வித நியாயங்களும் காட்சிப் படுத்தப் படவில்லை படத்தில்.ஒரு மனைவி தன் கணவனைப் பிரிவதற்கு அவன் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் கணவன்எனும் சொத்தைக் காரணம் மட்டுமே போதாது தானே !
படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.உறவுகளால்,பந்தங்களால் பாதிக்கப்படாதவன் என படம் முழுக்க சதா தன்னைபிரகடனப் படுத்திக் கொண்டே இருக்கும் நாதனுக்கும் தனக்கே தனக்கான பேரன்புதேவைப் பட்டிருக்கிறது,தீப்திக்கும் தேவைப்பட்டிருக்கிறது ,சந்தர்பங்கள்அவர்களை இணைக்கிறது ...அவர்கள் இணைகிறார்கள் .தடைகள் எனக் கருதப்படும்(கணவன்,குழந்தைகள் இத்யாதி இத்யாதி )மற்றெல்லா காரணங்களும் இந்தபேரன்பின் பின்னணியில் நீர்த்துப் போகின்றன.
பல கடல்களைக் கடந்து பல நாடுகளுக்கும் பயணப்பட்ட நாதன் கடைசியில் ஒரேகடலில் சங்கமித்து உறைவதாய் கதை முடிகிறது .அதற்குப் பிறகு தான் கதைதொடங்குகிறதோ என்ற கேள்வி எழத்தான் செய்யும் .கேள்விகளை சேமித்து நாமும்அந்த ஒரே கடலில் விட்டெறியலாம்.அதிகம் சிந்திப்பது ஆத்மாவுக்கு நல்லதல்லஎன்பதால் :)))
தீப்தியை புரிந்து கொள்ள முடிகிறது ...
நாதனைப் புரிந்து கொள்ள முடிகிறது ...
தீப்தியின் கணவனைப் புரிந்து கொள்ளலாம் ;
பெல்லாவையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும் .
ஆனால் இந்தக் குழந்தைகளை என்ன செய்வது !
அவர்களுக்கு என்று கேள்விகள் விருப்பங்கள் ,வெறுப்புகள்,ஆட்சேபங்கள் இருக்காதோ ?!!!
ஒரே கடல் தீப்தியைக் காட்டிலும் வாடிக் கசங்கிய முகத்துடன் தேம்பலோடு தன்அம்மாவைத் தேடி மாடிப்படிகளை கடந்து வரும் அந்த குட்டிப் பெண் அதிகமும்பாதிக்கிறாள்.
//எனக்கு யாருமே இல்ல //
என்ற குற்றச்சாட்டோடு இன்னொரு தீப்தி உருவாக்கப் படுகிறாளோ என்ற மெல்லியஅச்சம் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.
ஒரு மனைவி இரு கணவர்கள் என்பதை வீம்புக்கேனும் //ஆம் வீம்புக்கு தான்//இந்தியக் கலாச்சாரம் வெளிப்படையாய் ஏற்காதே .
உளவியல் சிக்கல்களை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதென்பதுமகானுபாவர்களுக்கே சாத்தியம் .
என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் படத்தில் உணர்த்தப் பட்ட நீதி"கணவனேன்றாலும் மனைவிஎன்றாலும் யாருக்கு எப்போது என்ன தேவை ?! என்பதைபுரிந்து கொள்ளும் முயற்சி கணவன் மனைவி உறவில் முதல் பாடம்.
கவனக் குறைவானால் எவருடைய சிந்தனை எல்லைக்கு அப்பாலும் எதுவும்நிகழலாம்.சதா அன்பை இரந்து அன்பில் கரையும் உலகம் இது.
படத்தின் பாடல்கள் நம்மை வாரிச் சுருட்டி மூழ்கடித்துநினைவிழக்கச் செய்ய வல்லவை.அத்தனை உருக்கம்அத்தனை பரிதவிப்பு ,அத்தனை இதம் ! பாடும் குரலின் ஆழ்ந்த மென்சோகம்வலித்தாலும் அதிலொரு சுகம் பேரானந்தம் .
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கடலாழத்து சங்கிலிருந்து மீட்கப்பட்ட புராதனஇசையின் கணிக்க இயலா தொன்மையில் கசியும் கனத்த வேதனையை அவதானிக்கமுடிகிறது .
தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒளசபச்சனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்

Labels:
ஒரே கடல்,
நரேன்,
பகிர்வு,
மம்முட்டி,
மீரா,
மூவி ரெவ்யூ,
ரம்யாகிருஷ்ணன்
Sunday, September 11, 2011
பாத்துமாவின் ஆடு ( பஷீர் )
பாத்துமாவின் ஆடு ... (பஷீர்)
மதிலுகள் கடந்தே இன்னும் வர முடியலையாம் .இங்க என்னடான்னா இந்த பாத்துமாவோட ஆடு பாஷீரோட பால்யகால சகியையும் உலகப் புகழ் பெற்ற மூக்கையும் ஒரே நேரத்துல தின்னு செரிச்சிட்டுதாம் .ஏன்னா அது பாத்துமாவோட ஆடாச்சே ! என்ன ஒரு நையாண்டி ! குடும்பத்தின் மூத்த மகள்களுக்கென்றே இருக்கும் சில பிரத்யேக உரிமைகளை இதை விட யாரும் நையாண்டி செய்து விட முடியாது .
பெரியதொரு கூட்டுக் குடும்பத்தின் மூத்தமகனாக இருப்பதின் சங்கடங்கள் .அதிலும் பஷீர் போல காடாறு வருடம் வீடாறு மாதம் என இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க விழைந்த ஊர் சுற்றிகளுக்கு ரொம்பக் கஷ்டம் தான் .மூன்று தம்பிகள் இரண்டு தங்கைகள் ,தம்பிமார் மனைவிகள் ,தங்கைமார் கணவர்கள் அவர் தம் பெற்றெடுத்த சந்தான செல்வங்கள் இத்தனை பேருக்கும் சமர்த்தாக நடந்து கொண்டாக வேண்டிய உறவுச் சிடுக்காட்டமான குடும்ப நிலை .
இத்தனூண்டு ஒலைக்குடிசையினுள் உறவுகளோடும் ,உம்மா வளர்க்கும் கோழிகளோடும்,தங்கைகள் வளர்க்கும் ஆடுகளோடும் ,தாங்கலை வேண்டி விரும்பி உறவாட வந்த பூனைகளோடும் பஷீரின் வாழ்வில் சில காலங்கள் கழிகின்றன .அன்றைய நாட்களை அப்படியே நமக்குக் காணத் தருகிறார் பஷீர்.
பஷீரைப் படிக்கும் போதெல்லாம் என்னவோ ஒரு வேதனையை அடக்கிக் கொண்டு வாசிப்பதான உணர்வு மேலெழும் .
காசு காசென்று பிய்த்தெடுக்கும் உம்மாவும் தம்பிமார்களும் ,தங்கைமார்களும்.
பஷீர் காடாறு வருஷம் போகையில் எல்லாம் வீட்டைக் கவனிப்பவன் தான் தானே என்று அசந்தால் அண்ணனாகி விடும் மூத்த தம்பி அப்துல்காதர் .
கொடுத்த காசுக்கு கணக்குக் கேட்கும் போதெல்லாம் "நான் பட்டாளத்திற்கே போகிறேன் என்று சவடால் அடிக்கும் இளைய தம்பி ஹனீபா "
வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் ஆடு கோழிகளுக்கும் பூனைகளுக்கும் கூட அதட்டல் உருட்டல் மிரட்டல் தான் எப்போதும் செல்லுபடியாகும் என்று நினைத்துக் கொண்டு எந்நேரமும் கம்பெடுத்துக் கொண்டு அதட்டிக் கொண்டு திரியும் கடைக்குட்டி அத்துலு . அவனிடம் அறுபது ஜோடு செருப்புகள் உண்டாம் .
பிறந்த வீட்டில் தனக்கு மட்டுமல்ல தன் ஆட்டுக்கும் ஏகபோக உரிமை கேட்கும் பாத்துமா .
இவர்களது வாரிசுகள் கதீஜா ,ஆரிபா,செய்து முகம்மது,லைலா ,அபி மற்றும் சிலர் .
இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் பிரசவிக்கும் பாத்துமாவின் ஆடு .
பிரசவத்தை பின் மத்யானப் பேன் பார்த்தல் போல சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பஷீர் குடும்பத்துப் பெண்ணரசிகள் .
ஆனால் பஷீர் அவர்களைப் போல அல்லவே ! பஷீருக்கு பிரசவித்த ஆட்டுக்கு பக்குவம் பார்க்காமல் அப்படியே விட்டு விட்ட தன் வீட்டுப் பெண்கள் மீது பெரும் மனத்தாங்கல் ஏற்படுகிறது,ஆனாலும் ஒன்றும் கேட்டு விட முடியாது ,ஏதாவது கேட்டு வைத்தால் பஷீர் இல்லாத நேரமாகப் பார்த்து கேலி பேசிச் சிரிப்பார்கள் .
இதெல்லாம் ஒரு புறம் இருக்க ,தினம் தெரு வழியே பஷீரைப் பார்த்துக் கொண்டே போகும் பள்ளி மாணவிகள் அத்தனை ஆசை கொண்டு பார்த்துச் சென்றது தன்னை அல்ல தன் வீட்டு சாம்ப மரத்தின் சாம்பக் காய்களைத் தான் என்ற உண்மை தெரியுமிடத்து பஷீரின் தற்பெருமை டமால் என்று உடைபடுகிறது. அதற்காக அவர் அந்தப் பெண்கள் மறுபடி சாம்பக்காய்கள் வாங்க வரும் போது நோஞ்சான் காய்களாக கொஞ்சம் பறித்துக் கொடுத்து காசு வாங்கிக் கொண்டு பழி தீர்த்துக் கொள்வது ஏக தமாஷ் .
அதே சமயம் பஷீரின் பெருமை உணர்ந்து வீட்டுக்கு அவரைத் தேடி வந்து ஆட்டோகிராப் வாங்கும் தொழிலாளியின் மகள் சுஹாசினிக்கு பஷீர் பார்த்துப் பார்த்து சிவந்த பழங்களாக நிறையப் பறித்து பொட்டலம் கட்டிக் கொடுத்து அனுப்பும் இடம் ரசனை .
//உலகமகா மூத்த எழுத்தாளரே உமக்கு எமது வந்தனங்கள் //
சப்பைக்காலன் அப்துல் காதர் சாகித்ய வித்வப் புகழ் பஷீரைப் பார்த்து இலக்கணம் படித்துக் கொண்டு அப்புறம் நீ இலக்கியம் படைக்கலாம் காக்கா (அண்ணன்) எனச் சொல்லுமிடத்து பஷீரின் ஆற்றாமை வெகுண்டேழுகிறது.
உம்மா பஷீரைக் கல்யாணம் செய்து கொள்ள சொல்லிக் கேட்டு வெறுப்பேற்றுகிறார்.
பாத்துமாவுக்கோ பஷீர் அவள் மகள் கதீஜாவுக்கு ஒரு ஜோடி தங்கக் கம்மல் செய்து தர வேண்டுமென பேராவல்.
பஷீரிடம் இருந்த காசெல்லாம் கரைந்து இனி தம்பிடிக் காசில்லை .
என்ன செய்தார் பஷீர் ?!
புத்தகம் வாங்கிப் படித்து அப்புறம் தெரிந்து கொள்ளுங்கள் .
புத்தகம் -பாத்துமாவின் ஆடு
ஆசிரியர் -பஷீர்
வெளியீடு -காலச்சுவடுவிலை - 80 ரூ

பஷீர்,
பாத்துமாவின் ஆடு,
புத்தகம்.,
வாசிப்பு
Monday, August 8, 2011
Sharing...
கேணி சந்திப்பில் வரும் ஆகஸ்ட் 14, ஞாயிறு மாலை 4 மணிக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் (துர்வாசர்) பங்கேற்கிறார். இடம்: 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. வருக நண்பர்களே
Sunday, August 7, 2011
சித்ரா -சிறுகதை
சித்ராவின் கணவனாம் !
இன்று தான் பார்க்கிறேன் இவனை.
எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு பலகாலம் ரொம்ப சிநேகம் போல அவனது தோளைத் தட்டி கைகளைப் பற்றிக் கொண்டும் விட்டுக் கொண்டும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் .
தலை முழுக்க மங்கி நிறமிழந்த பேப்பர் கூழ் பெட்டியை வைத்துக் கவிழ்த்தார் போல ஒரு ஹேர் ஸ்டைல் அவனுக்கு ,அந்த முடி வெட்டும்,முழி வெட்டும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது எனக்கு . இவனை எப்படித்தான் சகித்துக் கொண்டு இரண்டு வருடங்கள் வாழ்ந்து சித்ரா ஒரு பிள்ளையையும் பெற்றாளோ என்று பற்றிக் கொண்டு வந்தது. காட்டெருமை நடை!
சித்ரா வீட்டிலிருந்து ஒருவரும் இன்னும் சாமி கும்பிடுக்கு வரக்காணோம். கோயிலில் கூட்டம் நெறிபட்டுக் கொண்டிருந்தது .
ஃபேன் உபயம் ராசுக் கொத்தனார் என்ற அடர்நீல எழுத்துக்களோடு தலைக்கு மேலே காற்றாடி ஓடிக் கொண்டிருந்தாலும் அந்தக் காற்றை அந்த அடர் நீல எழுத்துக்களே மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டார் போல ராசுக் கொத்தனார் வகையறாக்கள் அந்த ஃபேன் அடியை விட்டு நகர்வேனா என்று நின்று கொண்டிருந்தார்கள் .
ராசுக் கொத்தனார் சம்சாரம் அலமேலு யாரும் பார்க்காத சமயமென்று தான் எண்ணின நேரமெல்லாம் அண்ணாந்து அண்ணாந்து அந்த ஃபேனைப் பார்ப்பதும் உடனே உள்ளே அம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வதுமாய் இருந்தாள்.
பார்க்கப் பார்க்க வேடிக்கை தான் மனித சுபாவங்கள் ,நான் சித்தியின் மணிக்கட்டைக் கிள்ளி ராசுக்கொத்தனார் சம்சாரத்தை காட்டினால் அவளோ போன வருடம் தாத்தா இருக்கும் போது கோயிலுக்கு என்று கோயில் முகப்பில் செய்து நிறுத்தி இருந்த பெரிய வெண்கல மணியையே பெருமை சிந்தி சிதற பார்த்துக் கொண்டிருந்தாள். என்னே அரிய கல்யாண குணங்களடா நம் மக்கள் மனங்களுக்குள் !!
அதற்குள் சித்ரா கணவனைக் காணோம் ,கழுதை கெட்டால் குட்டிச் சுவராம். எங்கே போயிருப்பார்கள் ? பால்வாடியின் முள்காட்டுப் புதர் ஓரம் தள்ளிக் கொண்டு போயிருப்பார்கள் தண்ணிக் கோஷ்டிகள் ,அவனுக்கு இந்த ஊரோடு இழுத்துக் கட்டிய சரடுகள் அறுந்தே போன பின்னும் ஊர்ப் பொங்கலுக்கு வருகிறான் ...வந்து கொண்டே இருக்கிறான் என்றால் வேறென்ன உத்தம உன்மத்தமான பந்தங்கள் கட்டிக் கொண்டு ஆடக் கூடும்!
"]உங்க மாமா தண்ணி அடிக்கறதுக்கோசறமே அவன இங்க அழைச்சிருப்பாரு தெரியுமாடீ ?"
அத்தை சூடத் தட்டை உள்ளங்கை நிறைக்க கருப்பு பூசிக் கொள்ள தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே எனக்குச் சொன்னாள்.
சூடத் தட்டில் விபூதிக்குள் காசுக் குவியல்களும் பச்சை நோட்டுக்க்களுமாய் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது . தட்டுக் காசு நிரம்பி வழிய வழிய பூசாரி வேளார் முகம் ஆறேழு முறை பழனி கந்த விலாஸ் விபூதி தேய்த்து தேய்த்து பள பளப்பாக்கிய செப்புச் சொம்பு போல மினுங்கியது .
சித்ரா வீட்டுக்காரர்கள் பொங்கல் என்றில்லை எப்போதுமே சாமி கும்பிட ஜதையாகத் தான் கோயிலுக்கு வந்து போவார்கள் ,
துலுக்கபட்டியில் கட்டிக்கொடுத்திருக்கும் பெரியக்கா பாமா , போலீஸ்காரனைக் கட்டிக்கொண்டு சிவகாசி ரிசர்வ் லைனில் குடி இருக்கும் சின்னக்கா தனம் ,வெங்கால் நாயக்கன்பட்டியில் வாக்கப் பட்டிருக்கும் கடைசி அக்கா நீலவேணி ,எல்லோருக்கும் மூத்த அண்ணன் ஜெகநாதனின் பெண்டாட்டி ராஜகமலம் எல்லோரும் யூனிபார்ம் மாதிரி ஒரே நிறத்துப் பட்டு கட்டிக் கொண்டு முழ நீல பவுடர் டப்பாவைக் காலி செய்து விட்டு சீவிச் சிங்காரித்து தலைப்பின்னல் நீளத்துக்கு பூ வைத்துக் கொண்டு பெரிய பித்தளைத் தாம்பாளத்தில் சாமி கும்பிடு சாமான்களை நிறைத்துக் கொண்டு அவர்களது அம்மா சாவித்திரி அன்ன நடை போட்டு வர வாத்து நடை,பூனை நடை,எருமைநடையில் அக்காள்கள் எல்லாம் பின்னே பவனி வந்து கோயிலை அடைவார்கள் .
சாமி கும்பிடுவதெல்லாம் வெறுமே சம்பிரதாயம் , பழக்க தோசம் என்பதாகத் தான் இருக்கும் அப்போது யாரைப் பார்த்தாலும் .
மூன்றாம் வருடம் நான் என் அம்மா,சித்தி ,பாட்டி அத்தைகள் புடை சூழ கோயிலுக்குள் நுழைகையில் சித்ரா அண்ட் சிஸ்டர்ஸ் பச்சைப் பட்டு கட்டிக் கொண்டு மல்லிகை மணத்துக் கசங்கி தலை பாரம் தாங்காது கூந்தல் தாண்டி தரை என்பது தொட்டு விடும் தூரம் தான் என்பதாக சரிந்து தொங்கத் தொங்க கோயிலுக்குள் வியர்த்து வழிந்து கொண்டிருந்தார்கள் .
வந்த வரன்களை எல்லாம் அது நொள்ளை ,இது சொள்ளை என்று தட்டிக் கழித்து கொண்டிருந்ததில் பாட்டிக்கு என் மேல் ஏகக் கடுப்பு .
சித்ரா பல லட்சம் சொத்துக்களோடு டிஜிட் ராஜகோபாலை மணக்கப் போகும் பெருமையில் இருந்திருப்பாள் போலும் ! பெரிய கவர்னர் மாலை சங்கிலி பச்சைப் பட்டின் மேல் தாழ்ந்து படிய கழுத்தை இறுக்கிய பச்சைக் கல் அட்டிகை யோடு என்னைப் பார்த்தும் பாராதவள் போல்...என்ன நிம்மி (நிர்மலா) என்ன பண்ணிட்டு இருக்க இப்ப? என்று மிதப்பாய் பெரிய மனுஷி தோரணையில் கேட்டாள் .
" நான் ஓட்டுச் சில்லு வச்சு பாண்டி ஆடிட்டு இருக்கேன்டீ "
வாய்க்கு வந்ததை நக்கலாய் நான் சொல்ல பாட்டிக்கு வந்ததே கோபம் .
"என்ன பண்ணுவா ?எங்க உசுர எடுத்துக்கிட்டு இருக்கா வர்ற மாப்ளை எல்லாம் தட்டிக் கழிச்சிட்டு அவ்வையாராகப் போறாளாம் .."
தர தரவென்று பாட்டியை இழுத்துக் கொண்டு போய் கோயிலுக்கு வெளியில் விட்டு வந்தால் தேவலாம் என்றிருந்தாலும் அடக்கிக் கொண்டேன் அந்த என்னத்தை பிறகு அதற்கொரு பொங்கல் நேரும். எதற்கு வம்பு ?
"உன் சோட்டுப் பொண்ணு தான பாரு எம்மாம் பெருசா படிச்சிருந்தும் அதுக்குத் தக்கன மாப்ள வரணும்னு ரூல்ஸ் பேசாம எத்தன புத்தியா வீட்ல சொன்ன மாப்ளைய வசதி வாய்ப்ப பார்த்து கட்டிக்கிறேன்னு தலையாட்டிடுசுச்சு ,அதாம் பொழைக்கற பொண்ணு ."
பாட்டி எனக்குச் சொல்லிக் கொண்டே அம்மாவையும் சித்தியையும் ,அத்தைகளையும் பார்த்தாள் .
"அதானே?!" என்றன அந்த முகங்கள்.
அதற்கப்புறம் வந்த பொங்கலுக்கு நான் பாட்டி ஊருக்குப் போகவில்லை கல்யாணமாகி புகுந்த வீட்டுப் பொங்கலைப் பார்க்கப் போய் சேர்ந்து விட்டேன் . அம்மாவும் சித்தியும் கூட என்னோடு அங்கேயே பொங்கலைப் பொங்க வைக்க வந்து சேர "அங்கேயும் பொங்கல் பொங்கத்தான் செய்கிறதாம் "என்றான் தம்பி. எல்லோரும் சிரித்தார்கள் , அந்தப் பொங்கலுக்கு சித்ராவின் நினைவே இல்லை எனக்கு .
நான் போகாவிட்டாலும் பாட்டி ஊரிலும் கூட அந்த வருடம் பொங்கல் பொங்கித்தான் வழிந்ததாம் . அட எப்போதும் பொங்கலின் இயல்பு பொங்கி வழிவதன்றி வேறேல்லவே!
சித்ரா கறுப்பி தான் ஆனாலும் அழகுக் கண்கள் அவளுக்கு ;என் தங்கைக்கு தான் அவள் வகுப்புத் தோழி என்றாலும் விளையாடுகையில் நாங்கள் இருவரும் தான் ஒன்றாய் சேருவோம் பல நாட்கள் .
அடர்ந்த கரும்புப் புருவங்கள் அவளுக்கு ...கீழே திராட்சை பழத்தை பாலிடாலில் மிதக்க விட்டது போல பெரிய கண்கள்.ஒருமுறை விளையாட்டில் என்னவோ சண்டை வர ;வந்த கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தலைமுடியை இழுத்துக் கீழே தள்ளி புடைத்துத் தெரிந்த அவளது இமைகளை ரத்தம் கன்றும் அளவுக்கு கடித்து விட்டேன். அலறி விட்டாள் அலறி ,விஷயம் அவளம்மா வரை போய் சாயந்திரமாய் பஞ்சாயத்துக்கு பாட்டியிடம் வந்தது.
"தேவகிக்கு இப்படியும் ஒரு பிள்ள பிறக்கனுமா? அதென்ன பொம்பளபுள்ள மாதிரியா நடந்துக்கிடுது? என்னத்தே நீங்க கண்டிக்கிறீங்களா இல்ல நானே ரெண்டு சாத்து சாத்தவா ? "
கண் காயத்தில் தேங்காய் எண்ணெய் பூசிய சித்ராவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் திண்ணையில் பாட்டிக்குப் பின்னால் அமர்ந்து பயத்துடன் நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை இழுக்க சாவித்திரி அத்தை கை நீட்ட ...ராத்திரி சமையலுக்காய் அவரைக்காய் நறுக்கிக் கொண்டிருந்த பாட்டி சடக் புடக்கென உதறிக் கொண்டு எழுந்தாள்.
இந்தா சாவித்திரி ...என்ன திடு திப்ன்னு பிள்ளைய அடிக்க கை ஓங்கிட்டு வர்ற நீ ?சின்னப்பிள்ளைங்க சண்டைய போய் வீதிக்கு கொண்டு வந்துட்ட ...போ...போ நான் கண்டிக்கறேன் .
சாவித்திரி எனக்கு அத்தை முறை ...பாட்டி இப்படிச் சொன்னதும் என்ன நினைத்தாளோ ?
"அடியேய் உன்ன எம்மருமகளாக்கி என் பையன விட்டு உதைக்கச் சொன்னா தான் திருந்துவ நீ ...என்று அநியாயத்துக்கு என்னை மிரட்டி விட்டுப் போனாள் .
எனக்கு அவள் என்னை அடித்து விட்டுப் போயிருந்தால் கூட அத்தனை பயமிருந்திருக்காது ,அவள் சொல்லி விட்டுப் போன பிறகு ராவெல்லாம் நினைத்து நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் அந்த குண்டுக் கண்ணன் கோபிக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்து விடுவார்களோ என்று .இத்தனைக்கும் அப்போது படித்துக் கொண்டிருந்ததென்னவோ மூன்றாம் வகுப்பில் தான்.
சித்ரா வீட்டில் ரோஸ் நிறப் பெயின்ட் அடித்த மரக்குதிரை ஒன்று இருந்தது ,அந்தக் குதிரையில் மூன்று பேர் உட்கார்ந்து ஆடலாம் .இந்த குண்டுக்கண்ணன் உட்கார்ந்தால் யாருக்குமே இடமிருக்காது அவனுக்கே இடம் பத்தாதே ! அவன் இருக்கும் பொது அந்தக் குதிரையில் யார்ரையும் ஆட விடாமல் அழிச்சாட்டியம் செய்வான் ,அண்ணனும் தங்கையுமே குதிரைக்காக கட்டிக் கொண்டு அடித்துப் புரள்வார்கள்,சாவித்திரி வந்து முதுகில் நான்கு வைத்து எல்லோரையும் தெருவில் விளையாட விரட்டி விடுவாள். இப்படித் தான் இனிதே கழிந்தது எங்கள் பால பிராயம் .
அவனம்மா தான் அப்படி மிரட்டினாலே தவிர அவனுக்கு என்னைக் கண்டால் காந்தாரி மிளகாய்நெடி மூக்கேறிய கதை தான் ...சித்ராவின் சிநேகிதிகளான எங்களில் யாரைக் கண்டாலும் அவன் "ஏய் கொண்டி "என்று தான் கூப்பிடுவான் .
"போடா கோண மூக்கு குதிரைக் கோவாலு "என்று உரக்க கத்தி விட்டு ஓடிப் போய் ஒழிந்து கொள்வோம் நாங்கள் ,ஒருநாளைக்காவது அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் பாட்டி மிளகாய்ப் பொடி அரைக்க காய வைத்திருக்கும் வர மிளகாய் இரண்டை உடைத்து அவன் மூக்கில் திணித்து விட்டு ஓடியே போய் விட வேண்டும் என்றெனக்கு ஆவல் உந்தித் தள்ளி இருக்கிறது அப்போதெல்லாம் .
எப்படியோ என் வர மிளகாய் உடைப்பிற்கு தப்பி விட்டாலும் பாவம் சித்ராவைக் கட்டிக் கொடுத்த ஆறே மாதத்தில் ராத்திரி fireஆபிஸ் கணக்குப் பிள்ளை வேலையை முடித்து கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அவன் வைத்திருந்த பணத்துக்காக சாத்தூர் முக்குப் பாலம் ரோட்டில் வைத்து முகமறியாத சிலரால் விருதாவாய் குத்திக் கொல்லப் பட்டான் .
கோபாலின் கதை இப்படி முடிந்தது .
கோபால் உயிரோடு இருக்கும் போதே ... கை நாட்டு கூட ஒழுங்காய் போடா வராத டிஜிட் ராஜகோபால் என்ற திருநாமத்தோடு ஊரெல்லாம் வளைய வந்த தன் சின்ன முதலாளிக்கு சிவகாசி எஸ்.எப்.ஆர்.காலேஜில் எம்.சி.ஏ படித்து முடித்த தன் கடைசித் தங்கை சித்ராவை சொத்துக்காக கல்யாணம் பண்ணி வைத்திருந்தான். எல்லாம் இவன் ஏற்பாடு தான் .சித்ராவும் எதற்கு மண்டையை ஆட்டினாள் என்பது ஒரு எழவும் புரியத்தான் இல்லை , என்ன தான் சொத்து கிடைத்தாலும் அவளுக்கு ரசனை காணாது என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது இப்போது அவள் புருசனின் முடி வெட்டைக் காண்கையில் ,
"பேப்பர் கூழ் பெட்டி மண்டையன். " ஓரிருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவனுக்கென்ன தெரியவா போகிறது இப்படியெல்லாம் தனக்கு பெயர் வைக்கப் படுவது .
அவன் இந்நேரம் யார் யாரோடெல்லாம் தண்ணியில் முங்கிப் போய் கிடக்கிறானோ?!
போன வருடப் பொங்கலுக்கு தன் பெண்டாட்டியோடு வந்திருப்பானாய் இருக்கும். இந்த வருடம் தனியே வர என்ன ஒரு திண்ணக்கம் இவனுக்கு ? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் .
தேனிப்பக்கம் சருத்துப் பட்டியில் இருந்து எலுமிச்சம் பழச் சிவப்பில் அவனுக்கு மறுகல்யாணத்துக்கு பெண் எடுக்கப் போகிறார்களாம். பாட்டி குசு குசுவென்று சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் .
"அவனுக்கென்ன ஆம்பளை ...பொண்டாட்டி செத்தா புது மாப்ள தான் "செவிட்டில் அறைந்தார் போலிருந்தது பாட்டி சொல்வது.
அவன் எக்கேடோ கெட்டு ஒழிகிறான் .
எம்.சி.ஏ படித்து முடித்த பெண்ணை அவன் ஏன் வீட்டு டெலிபோன் வயரால் கழுத்தை நெறித்துக் கொன்றான் ?!
ஊர் என்ன சொன்னது?
உறவுகள் என்ன சொல்லி ஆற்றிக் கொண்டன இந்த துக்கத்தை ?
சித்ரா செத்துப் போகையில் அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகளிருந்தாள்.
சித்ராவின் அப்பாவுக்கு பேத்தியை விட மகள் செத்ததில் மருமகன் மீது வழக்குப் போடாமல் இருக்க வந்த நஷ்ட ஈட்டுத் தொகையின் மீது தான் அதீத பாசம் மிகுந்து வழிந்தது.
கழுத்து நெறிபட்டு செத்துக் கிடந்த தன் பெண்டாட்டியை ட்ரை சைக்கிளில் போட்டு எடுத்துக் கொண்டு போய் சுடுகாட்டில் எரிக்கச் சொன்னது எது? ஆணாதிக்கமா ? பண ஆதிக்கமா?
என்ன நடந்திருக்கக் கூடும் என பல யூகங்கள் கசிந்தன.அதிலொன்று தன் கம்பெனி ஆர்டர்களுக்காக வடநாட்டு ஏஜெண்டுகளுடன் தன் அழகான பெண்டாட்டியை கம்பெனி கொடுக்கச் சொன்னானாம் இந்த பேப்பர் கூழ் பெட்டி மண்டையன்.
இவளென்ன சொன்னாளோ... நடந்த வாக்கு வாதத்தில் தான் சித்ராவின் கழுத்தை டெலிபோன் வயர் சுற்றிக் கொண்டதாம்.
அப்படிப் பட்ட துணுக்குறாத நுணுக்க குணம் கொண்ட தகப்பனிடத்தில் தான் சித்ராவின் மகள் வளர்ந்து வருகிறாள்.
"எங்க பொண்ணையே கொன்னுட்டாங்க இனி அவன் பொண்ணை நான் ஏன் பார்க்கறேன் ..." - சித்ராவின் மகளைக் குறித்து கேட்பவர்களுக்கெல்லாம் இதே பதில் தான் சித்ராவின் அப்பாவிடமிருந்து .மனிதருக்கு மகளால் வந்த பணம் இன்னொரு வீடு கட்டிக் கொள்ள உதவியது. சம்சாரத்துக்கு வைக்கோற் பிரி சங்கிலி செய்து போட்டுக் கொள்ள உதவியது.பாவம் அந்த சின்னக் குழந்தை பற்றி யோசிக்கத் தான் எவருக்கும் மனமில்லை.
சதா பணம் பேசிக் கொண்டே இருப்பதால் .
யாரும் எவர் மனதிலும் ஆழப் பதிவதில்லையாம் ...சித்ராவின் மகளை நான் பார்த்ததில்லை போலவே என் மகளையும் அவள் பார்க்கவா போகிறாள் ? என்று என்னை நானே ஊமை சமாதானம் செய்து கொண்டு அந்தப் பொங்கலோடு சித்ராவை மறந்து போனதாய் எனக்குள் நானே சொல்லிக் கொள்கிறேன் எப்போதாவது பொங்கலுக்கு பாட்டி ஊருக்குப் போக நேர்கையில் மட்டும்.
சித்திரைப் பொங்கல்கள் எல்லா ஊர்களிலும் வருடா வருடம் பொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன சித்ரா இல்லாமல்.
அவள் மகளை எப்போதேனும் பார்க்க நேர்ந்தாலும் கூட எனக்கு அவளை அடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை.

கார்த்திகாவாசுதேவன் சிறுகதைகள்,
சித்ரா,
சிறுகதை
Saturday, August 6, 2011
நல்லதங்காளும் அவளேழு வெள்ளரிப்பிஞ்சுகளும்...
வேழமறுத்து துண்டாடும் கோடைகடுவெயில்
கானக நடுவிற் செவ்வரிமா சிறுமுயல்
காண நாணி கடுகிப் பாய்ந்து தாவி அணைந்தது
பின்னப்பட்ட காசி நகர் சுற்றுக் கோட்டை
கற்சிதைந்த பாழும் கிணற்றில் ;
கிணற்று நீர் சிலும்பிச் சிலும்ப
தழும்பி முகம் காட்டினாள்
நல்லதங்காள் .
தூசு தும்பேஎன்று
அருந்தக் கை குவித்த நீரள்ளி வீசி
மஞ்சள் பூ முகம் மறுத்துத் திரும்பினால்
பசியோ பசியென்று கத்திக் குமிகின்றன
ஆறேழு வெள்ளரிப் பிஞ்சுகள்
மூளி மறுத்த முக்கால் வயிற்றை
உப்பி நிறைத்தது உப்பு நீர் கிணறு ;
கோடைக் கிணறுகள் தோறும்
இன்னுமிருக்கிறார்கள்
நல்ல தங்காளும்
அவளேழு வெள்ளரிப் பிஞ்சுகளும் .
கானக நடுவிற் செவ்வரிமா சிறுமுயல்
காண நாணி கடுகிப் பாய்ந்து தாவி அணைந்தது
பின்னப்பட்ட காசி நகர் சுற்றுக் கோட்டை
கற்சிதைந்த பாழும் கிணற்றில் ;
கிணற்று நீர் சிலும்பிச் சிலும்ப
தழும்பி முகம் காட்டினாள்
நல்லதங்காள் .
தூசு தும்பேஎன்று
அருந்தக் கை குவித்த நீரள்ளி வீசி
மஞ்சள் பூ முகம் மறுத்துத் திரும்பினால்
பசியோ பசியென்று கத்திக் குமிகின்றன
ஆறேழு வெள்ளரிப் பிஞ்சுகள்
மூளி மறுத்த முக்கால் வயிற்றை
உப்பி நிறைத்தது உப்பு நீர் கிணறு ;
கோடைக் கிணறுகள் தோறும்
இன்னுமிருக்கிறார்கள்
நல்ல தங்காளும்
அவளேழு வெள்ளரிப் பிஞ்சுகளும் .
Friday, July 29, 2011
எல்லாம் கிருஷ்ணனுக்கே சமர்ப்பயாமி ...
மரண பரியந்தம் தொடரும்
என நினைத்திருந்த பந்தம் ஒன்று
இடைவழி போயின் உள்நிறைக்கும்
ஏமாற்றம் இன்னதென விவரணை காணாது
புறத்தாடும் கண்ணாமூச்சு ஆட்டம் ;
எதை நான் பரிகசித்தேனோ
அதுவே நானாகி நானே அதுவாகி
எனக்கே எனக்கென்று
தலைவலியும் காய்ச்சலும்
வந்து மெய்ப்பிக்கும் சோதனையின்
கால் தடங்கள்;
எப்போதும் நமக்கென்று
எதுவும் மிஞ்சி இருப்பதில்லை
இருக்கப்போவதுமில்லை !
எப்போது வேண்டுமானாலும்
தூக்கி எறிந்து விடலாம்;
ஆனாலும் இட்டமுடன் தூக்கிச் சுமக்கும்
அகத்தொருமித்த ஜீவாதாரப் பாம்பு
முற்ற முழுதாய் எனைத்தின்னும் முன்பே ...
உள்ளங்கை நீர் குவித்து
உவந்தளிக்கிறேன் தானம்
எல்லாம் கிருஷ்ணனுக்கே
சமர்ப்பயாமி!
Subscribe to:
Posts (Atom)