இருட்டை
பிளாஸ்டிக் வாளியில்
சேந்தி
சேந்தி
வாரி வழித்து எடுத்து
முற்று முழுதாய்
வீசி எரிந்து விட்டு
வீட்டுக் கதவை
பெரிய திண்டுக்கல்
பூட்டால்
பூட்டி விட்டால் மட்டும்
இருள் செத்துப் போவது
இல்லையாமே
வகீதா
இன்னும்
அழுது கொண்டு தான்
இருக்கிறாள்!
நம்ப மாட்டாதவளாய்
சுவற்றில்
காய்ந்த மாலையுடன்
(தொ)தூங்கும்
பஷீரின் புகைப்படம் !
இருட்டும் இரவும்
ஒன்றல்லவே
எதற்கோ
எதையோ பரீட்சித்துப் பார்க்கும்
பேதை மனம்
அழுது ஓயட்டும் !
Showing posts with label புரியலைனாலும் படிங்க (சும்மா). Show all posts
Showing posts with label புரியலைனாலும் படிங்க (சும்மா). Show all posts
Tuesday, February 10, 2009
பிளாஸ்டிக் வாளியில் தளும்பும் இருட்டு
Labels:
கவிதை,
புரிந்தாலும்,
புரியலைனாலும் படிங்க (சும்மா)
Subscribe to:
Posts (Atom)