Wednesday, November 24, 2010

பண்டைய இந்தியா பகுதி -4 (தி லைன் ஃஆப் ப்ரைம் காட்ஸ் (The Line of Prime Gods -Pages from History))


The line of Prime gods : ( Pages from History )  (பண்டைய இந்தியா பகுதி - 4 )

இன்றைக்கு சென்னை மியூசியம் போயிருந்தேன் ,
எனக்கென்னவோ புத்தர் சிலைகள் தான் விஷ்ணு அனந்த சயன சிலைகள் தோன்ற மூலமாக இருந்திருக்க கூடுமோ என்றொரு ஐயம். எந்த மதத்தையும் சார்ந்து பேசும் முயற்சி அல்ல இது, இந்தோ கிரேக்க சிற்ப முறைப்படி வடிவமைக்கப் பட்ட சிற்பங்களில் பெரும்பாலும் காலத்தால் முந்தியவை புத்தர் சிலைகலாகவே இருக்கின்றன. இங்கு மட்டும் அல்ல கி.மு .300 க்குப் பின் அலெக்சாண்டர் பாக்டிரியாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வழிகள் (வடக்கு ஆப்கன் ,பஞ்சாப் - இந்துஸ்தானம் )எங்கும் காணக் கிடைக்கும் புத்த சிலைகள் ,அப்படி இருக்கலாம் என்ற எண்ணத்தை அளிக்க வல்லவை.


இவை மட்டுமல்ல யானைகள் இருபுறமும் ஆசிர்வதிக்க நடுவில் புத்தரின் தாயார் மாயா தேவி அமர்ந்திருக்கும் சிற்ப வடிவமே பின்னாட்களில் வைணவ கஜலக்ஷ்மி என்றாகி இருக்க கூடும் என யூகிக்க தோன்றுகிறது.


க்ரீக் இந்தோ வகை சிற்பங்களை வெகு எளிதாக அடையாளம் காண முடியும் என மியூசியக் குறிப்புகளில் வாசித்தேன் ,கிரேக்க சிற்பங்கள் உடல் பலத்தை காட்டும் வகையில் இருப்பனவேன்றும்,நமது நாட்டு சிற்பங்கள் முக சௌந்தர்ய பாவங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்றும் கூறப் பட்டிருந்தது,ஒப்பிட்டுப் பார்த்ததில் விளங்கியது.


சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த முத்திரை மாதிரிகளின் அடிப்படையில் அந்த மக்கள் பசுபதி வழிபாடும்(காலை -சிவன்- நந்தி வழிபாடு) ,விசிறி போன்ற கூந்தல் அலங்காரம் செய்துள்ள பெண் தெய்வம் ஒன்றையும் வணங்கி வந்திருக்க கூடும் என தெரிகிறது.

இது புத்தருக்கு முற்பட்ட காலம் அப்படியானால் புத்தருக்கு முன்பே பல ஆன்மிகத் தலைவர்கள் அன்றைய மக்களை பண்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல வழிநடத்திக் கொண்டே தான் வந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். மேலும் புத்தரும் கூட தமது கோட்பாடுகளில் எழுதி வைக்கப் படாத முந்தைய தலைவர்களின் அல்லது குருக்களின் கோட்பாடுகளை இணைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது. மேலும் புத்தரின் கோட்பாடுகளும் கூட புத்தர் முக்தி அடைந்த பின்பே அவரது அந்திமக் காலங்களில் உடனிருந்து சேவை செய்த அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தரால் அவருக்குத் தெரிந்த வகையில் பதிவு செய்யப் பட்டது தான் என வரலாறு காட்டுகிறது.

முன்பே கூறியபடி புத்தர் சார்ந்திருந்த சாக்கிய குளத்தில் சாலமர வழிபாடு இருந்தது (தாய் தெய்வ வழிபாடு)என்பதைக் கண்டோம் இல்லையா?
மெசபடோமிய சிற்பங்களில் காணக் கிடைக்காத சிறப்பம்சமாக சிந்து சமவெளி நாகரிக அகழ்வுகளில் கிடைத்த முத்திரை மாதிரிகள் மற்றும் சிற்பங்களில் ...

அப்படியானால் இந்திய கடவுள்கள் வரிசை இப்படித் தான் இருக்கக் கூடும்.

1.தாய் தெய்வ வழிபாடு
2.காளை மனிதன் (பாசுபத -சிவ வழிபாடு)
3.சிவ வழிபாட்டோடு லிங்க யோனி வழிபாடு

சிந்து வெளி காலத்திற்கு பல நூறு ஆண்டுகள் கழித்தே வேத காலம் வருகிறது ,

வேத காலத்தில் ;

இந்திர வழிபாடு

இந்திரன், வருணன்,மித்திரன்(சூரியன்), யக்ஷன், வழிபாடுகள் தோன்றின, தாய் தெய்வ வழிபாட்டை இந்த தெய்வங்களின் வழிபாடுகள் பின்னுக்குத் தள்ளி இருக்கலாம் . ரிக் வேதத்தில் பாடப்படும் முதன்மை தெய்வங்கள் இவை .

கிருஷ்ணன் ரிக் வேத காலத்தல் ஒரு யக்ஷனாகவே அடையாளம் காணப் படுகிறான்.

ரிக் வேத கால ( இந்திர வழிபாடு )வழிபாடுகளில் பெருமளவில் யாகங்கள் நடத்தப் பட்டன,யாக பலிகள் மக்களை பீதியில் ஆழ்த்தும் அளவுக்கு கால்நடைகளும் பிற உயிர்களும் கணக்கின்றி கடத்திச் செல்லப் பட்டு யஞ்ஜங்களில் பலி இடப் பட்டன. பழங்குடி உணவு சேகரிப்பு(வேட்டை மற்றும் ஆநிரை மேய்த்தல் நிலையில் இருந்து பழங்குடி விவசாய (உணவு உற்பத்தி)முறைக்கு பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி காலத்து மக்கள் தங்களது செல்வ வளங்கள் எனக் கருதிய கால்நடைகள் யாகங்களுக்காக பலியிடப் படுவதை விரும்பாமல் உயிர் பலியை எதிர்ப்பவர்களாக மாறினார்.
இது இட்டுச் செல்லும் பாதை கிருஷ்ண வழிபாடு எனும் நிலைக்கு.

கிருஷ்ணன் கால்நடைகளின் காவலனாகக் கருதப் படுகிறான்.
ஆநிரைகளை மீட்பதற்காக கிருஷ்ணன் இந்திரனோடு நடத்திய போர்களைப் பற்றி ரிக் வேத பாடல்கள் உள்ளன. இப்படித் தான் மானுட கிருஷ்ணன் அரை தெய்வ நிலைக்கு மாறினான்.

பிற்பாடு பஞ்சாப் பகுதிகளில் அதிப்படி விளைச்சல் மற்றும் வளமைப் பெருக்கத்துக்காக பெருமளவில் இந்திர வழிபாட்டை ஓரம்கட்டி விட்டு அந்த இடத்தை கிருஷ்ணா வழிபாடு ஆக்கிரமித்தது. கிருஷ்ணா விக்ரஹங்களின் மூலங்கள் இந்துஸ்தானத்தின்


இந்த வழியில் போனால் முதலில் சமணம் (உயிர்பலியை எதிர்த்தல்)


அதனையொட்டி (பௌத்தம் )


வரலாற்றுக்கு மிகப் பிந்தைய காலமாகிய தென்னிந்திய பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழர் கால திருமால் விக்கிரகங்களுக்கு பௌத்த விக்ரங்கங்களில் இருந்து மாதிரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம் ,//படித்தவற்றில் இருந்து கிடைத்த யூகமே //

படித்த விசயங்களைக் கொண்டும் திரட்டிய விவரங்களைக் கொண்டும் இப்படித் தான் எண்ண முடிகிறது.

7 comments:

R.Gopi said...

மிக நல்ல அலசல்...

விரிவா எழுதி இருக்கீங்க....

வாழ்த்துக்கள்........

அது சரி(18185106603874041862) said...

புத்தருக்கு முன்னரே மிக நிச்சயமாக மதம் இருந்தது. அதற்கு பெயர் தான் இல்லை. அந்த மதத்தின் சடங்குகளை எதிர்த்தே புத்த மதம் போதிக்கிறது இல்லையா?

அதே போல, தாய் வழிபாட்டுக்கு முன்னரே இயற்கை வழிபாடு இருந்திருக்க வேண்டும். மனிதனின் பயத்தின் காரணமாகவே முதலில் வழிபாடு வந்திருக்க வேண்டும். அதன் பின்னரே குழு அமைப்பு, சமூகம், பின்னர் தானே தாய் வழிபாடு வந்திருக்க முடியும்?

அது சரி(18185106603874041862) said...

//
வரலாற்றுக்கு மிகப் பிந்தைய காலமாகிய தென்னிந்திய பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழர் கால திருமால் விக்கிரகங்களுக்கு பௌத்த விக்ரங்கங்களில் இருந்து மாதிரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம் ,//படித்தவற்றில் இருந்து கிடைத்த யூகமே //

இதற்கு வாய்ப்புண்டு. பள்ளிக் கொண்ட பரந்தாமனின் முகத்தை யார் பார்த்திருப்பார்கள்? அதுவுமின்றி சிற்பக்கலைக்கு என்று இருக்கும் விதிகளின் படியே அந்த சிலைகள் இருப்பதால், பல்வேறு கலாச்சாரங்களின் கலப்பாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

Unknown said...

அருமையான பகிர்வு கார்த்திகா! ஆழமான கருத்துக்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். சட்டென்று கட்டுரை முடிந்தது போல் உள்ளது. இரண்டாம் பகுதி மட்டுமல்லாம தொடர்ந்து எழுதுங்கள்!

KarthigaVasudevan said...

@ அது சரி(18185106603874041862)

அதுசரி நீங்க சொல்றது சரிதான் .

புத்தருக்கு முன்பே மதம் என்று தனிப்பட்ட பெயரில் எதுவும் இருந்ததோ என்னவோ ஆனால் சமூகமாய் வாழத் தொடங்கிய மனிதன் பின்பற்றி வந்த சடங்கு சம்பிரதாயங்களே பிற்பாடு மதம் என்ற பெயர் கொடுக்கப் பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கலாம், அந்த சடங்கு சம்பிரதாயங்கள் மனித உயிர்களை காவு வாங்குகையில் புத்தரைப் போன்று தோன்றிய ஆன்மிகத் தலைவர்கள் அன்று தொட்டே அதை ஆட்சேபித்து தங்களது போதனைகளை வழங்கி வந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம்.

தாய் தெய்வ வழிபாட்டுக்கு முன்பே இயற்கை வழிபாடு இருந்திருக்கிறது.

அக்னி (மித்திரன்) வழிபாடு அதன் அடிப்படையில் அமைந்ததே. காடுகள் நிரம்பிக் கிடந்த பண்டைய இந்தியாவில் காடுகளை எரித்து அழிக்க பெரிதும் துணை நின்றது அக்னியே.

KarthigaVasudevan said...

நன்றி R . கோபி

KarthigaVasudevan said...

நன்றி உமா ...

இந்தக் கட்டுரை இன்னும் முழுமை அடையவில்லை. படித்ததை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வடிவம் தர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

பாஸ்கர் அண்ணாவிடம் இருந்து வாசிக்க எடுத்து வந்த "பண்டைய இந்தியா" புத்தகத்தில் இருந்து தான் இவற்றை எழுதி இருக்கிறேன் . படிக்க படிக்க சுவாரஸ்யம் தீரவில்லை. இந்த ஒரு புத்தகம் அதை சார்ந்த பல புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை நீட்டித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன் உமா. பதிவை வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள்.