உதிரும் கால் நெருடும் சறல்மண்
தகடாய் இறுகிக் கெட்டிக்கும்
அடுக்கடுக்காய் ஏடுகள் படிய
அழுந்த மூடிக் கொண்ட சூலி;
விரியத் திறக்கும் மாதுளை முத்துக்கள்
இனிப்பும் புளிப்புமாய்
ஈயமும் பித்தளையும்
உப்பிடக் கடல் காய்ந்து பாலை நிலம்;
நெடுக நெடுகவே கண்கொத்தும் ராஜாளிகள்
சருகிலை சர சரக்க சதா ஊறும் சர்ப்ப ராஜாக்கள் ;
தோண்டத் தோண்டவே கால்சியமும் பாஸ்பரசுமாய்
கண் மறைக்கும் பழுப்பு வெள்ளைகள்
அஃ தன்றோ ...
அகழ்வாராய்ச்சி !
No comments:
Post a Comment