Wednesday, December 3, 2008
இப்படித்தான் நியாயம் செய்யுமா இந்திய அரசு?!
சென்ற வாரம் மும்பையில் வெறியாட்டம் ஆடித் தீர்த்த தீவிரவாதிகளுக்கு எதிராக நமது இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரப் போராட்டத்தில் பலியான ராணுவ வீரர்களின் இழப்புக்கு அவர் தம் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய்கள் இழப்பீடு வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது .
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரருக்கு மூன்று கூடி ரூபாய்களோடு வெகுமதிகள் வேறு இன்னும் தொடர்கின்றன.நாட்டையும் மக்களையும் காக்க தமது இன்னுயிரை ஈந்த துப்பாக்கி வீரருக்கோ வெறும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு மட்டும்!!! ஏன் இந்தப் பாரபட்சம்?!
அபினவ் பிந்த்ரா ஒரு கோடீஸ்வரரின் மகன் அவருக்கு இந்த மூன்று கோடி ரூபாய் பரிசுப் பணத்தை விட ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கமே பெரியதொரு "கௌரவச் சின்னமாக " இருக்கக் கூடும் .பணம் அவருக்கு ஒரு அத்யாவஸ்யமே அல்ல ! அவருக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கி ஏன் அரசு கௌரவித்தது என்பது இங்கே முன்வைக்கப் படவில்லை.
விளையாட்டில் ஒருமுறை வென்றால் அதிர்ஷ்டமிருப்பின் மறுமுறையும் வெல்ல வாய்ப்பு இருக்கிறது .ஆனால் நிஜத்தில் போன உயிர்(தேசப் பாதுகாப்புக்காக பறிக்கப் பட்ட உயிர்) மறுபடி திரும்பக் கூடுமா?இறந்த ராணுவ வீரர்களின் கடமை உணர்ச்சிக்கும் தேச பக்திக்கும் இந்திய அரசு இப்படித் தான் நியாயம் செய்கிறதா?
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரரின் பெருமையைக் காட்டிலும் தேசத்துக்காக போராடி உயிரை விட்ட துப்பாக்கி வீரரின் பெருமை எந்த விதத்தில் சோடை போய்விட்டது?அவர்களுக்கும் முக்கியத்துவம் தருவதில் என்ன பாரபட்சம் வேண்டி இருக்கிறது ?
இந்திய அரசு சிந்திக்குமோ ...சிந்திக்காதோ ?
எனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி என்னை இப்படி சிந்திக்க வைத்தது.அதனால் இதனை உங்களோடு பகிர்கிறேன் இப்போது .
Monday, December 1, 2008
ஹார்லிக்ஸ் ..காம்ப்ளான் சண்டையா?
புது ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு நியாயமாக எத்தனை நாட்களில் கார்டு வழங்கப் படவேண்டும்?
கடந்த ஒரு வருடமாக ரேசன் கார்டு அப்ளை செய்து விட்டு ரேசன் ஆபிசுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறோம்,இன்னும் கார்டு வந்தபாடில்லை,எங்களுக்குப் பிறகு புது ரேசன் கார்டுக்கென பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கெல்லாம் புது கார்டு கிடைத்து விட்டதாம் சிலர் தேடி வந்து சொல்லி விட்டுப் போய் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கின்றனர்,
எங்களுக்கு இன்னும் கார்டு வரவே இல்லை .எத்தனை முறை ரேசன் ஆபிசுக்குப் போய் விசாரித்து விட்டு வந்தோம் என்று நாள்...தேதி வாரியாகக் குறித்து வைத்திருக்கிறேன் நான்,அந்த அத்தனை முறைகளுமே அங்கிருந்த ஒரு பெண்மணி அவர் தான் எங்கள் பகுதிக்கு களப் பணியாளராம்,உங்களுக்கு கார்டு வந்து விடும் ,அதற்க்கு முன்பு உங்கள் வீட்டு முகவரிக்கு ஒரு போஸ்ட் கார்டு வரும் அதில் "உங்களுக்கு புது ரேசன் கார்டு வழங்கப் படும் தேதியும்..இடமும் தெரிவிக்கப் பட்டிருக்கும் ,அந்த போஸ்ட் கார்டை எடுத்துக் கொண்டு இங்கே வந்தீர்களானால் புது கார்டு தருவோம் என்கிறார்,அதெல்லாம் சரி தான் .
எங்கள் வீட்டு முகவரிக்கு தான் இன்னும் போஸ்ட் கார்டு வந்தபாடில்லை...இதற்குள் பக்கத்து குடித்தனக் காரர்களில் சிலர் எங்களைப் போல புது கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் சிலருக்கு புது கார்டு வந்து விட்டதாம் .அவர்கள் வேறு அடிக்கடி வந்து இன்னுமா உங்களுக்கு கார்டு வரவில்லை?பாருங்கள் உங்களுக்குப் பிறகு தான் நாங்கள் விண்ணப்பித்தோம் எங்களுக்கெல்லாம் வந்து விட்டது ,உங்களுக்கு ஏன் இன்னும் வரவில்லை இன்னொரு முறை போய் விசாரியுங்கள்...அங்கிருக்கும் உங்கள் பகுதி களப் பணியாளரிடம் கார்டு தாமதமாவதற்கு தெளிவான விளக்கம் கேளுங்கள் என்று தூண்டி விடுகிறார்கள்.அங்கே ரேசன் ஆபிசிலோ என்ன கேட்டாலும் எதோ கடன் கேட்க வந்தவர்களைப் போலவே நம்மைப் போன்ற நுகர்வோர்கள் நடத்தப் படுகிறார்கள் .
எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை,மீறி கொஞ்சம் கார சாரமாகக் கேட்டோமானால் உங்கள் வீட்டுக்குப் போஸ்ட் கார்டு வரும் வந்த பிறகு அதை எடுத்துக் கொண்டு வாருங்கள் இப்போது எதற்கு சும்மா வந்து எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று நம்மைக் கேள்வி கேட்கிறார்கள் .
நியாயமாக அரசு நுகர்வோர் பாதுகாப்புக்கென்று வகுத்த நடைமுறை விதிமுறைகளின்படி " அனைத்து ஆவணங்களையும் இணைத்து முறைப்படி விண்ணப்பிக்கும் நுகர்வோர்களுக்கு எத்தனை நாட்களில் புது நுகர்வோர் அட்டை(ரேசன் கார்டு) வழங்கப் பட வேண்டும்? அவர்கள் குறிப்பிட்ட அந்த நாட்களுக்குள் குறிப்பிட்ட ஒரு அல்லது பல நுகர்வோர்களுக்கு நுகர்வோர் அட்டை வழங்கப் படாவிட்டால் அதற்கான காரணத்தை அறியும் உரிமை நுகர்வோருக்கு உண்டா இல்லையா? அப்படி தகவல் கேட்கும் நுகர்வோருக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அந்தப் பகுதி களப் பணியாருக்கு உண்டா இல்லையா?
தேவையற்ற வீணான தாமதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் வேறு பல பணித்தடைகளுக்கு யார் பதில் கூறும் பொறுப்பில் உள்ளார்கள்?நுகர்வோருக்கு ஏற்படும் மனக் கஷ்டங்கள் எவ்வகையில் சமன் செய்யப் படும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் உண்டா இல்லையா? இது நான் மட்டும் இன்று புதிதாக எழுப்பும் கேள்வி அல்ல...!!! பாதிக்கப் பட்ட மக்கள் பலர் இருக்கலாம் .அவர்கள் சார்பாக இன்றைய எனது இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களில் சிலரேனும் தங்களுக்குத் தெரிந்தவரையில் இதற்கான தங்களது பதிலை இங்கே பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன் .
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்கிறார்களே ?இப்படி ரேசன் கடையில் சரியான தகவல்களைச் சொல்லி நுகர்வோரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பதோடு அசட்டையாக மந்த கதியில் பதில் என்ற பெயரில் வெட்டி சாக்கு போக்குகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கும் பணியாளர்களை என்ன செய்வது?இவர்களைக் கேட்க ஆட்களே இல்லையா? இவர்களைப் பற்றி புகார் புகார் தரும் பட்ச்சத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப் படுமா? அல்லது இதே பகுதியில் தொடர்ந்து வசிக்கும் நிலை ஏற்படின் புது ரேசன் கார்டு வாங்க முடியாத சூழல் இப்படிப் பட்ட பணியாளர்களால் நுகர்வோராகிய மக்களுக்கு ஏற்பட்டு விடுமா?
ஒன்றுமே புரியவில்லை.புது கார்டுக்கு என விண்ணப்பிக்கும் பொது அவர்கள் கெட்ட னைத்து ஆவணங்களையும் இணைத்து தாக்கல் செய்தோம்,பதிலுக்கு அவர்கள் அளித்த பெறப்பட்டது என்ற சான்றிதல் ஆவணம் எங்களிடம் பத்திரமாக உள்ளது .இந்த ஆவணம் நம்மிடம் இருந்தால் போதும் எத்தனை நாட்கள் தாமதம் ஆனாலும் பயமில்லை என்கிறார்கள் சிலர் .எது நிஜம்?
எதை நம்பலாம் ?
எதை நம்பக் கூடாது என்ற குழப்பத்தில் இருக்கிறோம் இப்போது நாங்கள்.
இனி அடுத்ததாக நுகர்வோர் கோர்டுக்குப் போவது ஒன்று தான் தீர்வா?
ஒரு இரண்டு மாதம் ...மூன்று மாதம் ...அட மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு மாதம்...ஏன் ஒன்பது மாதம் அல்லது பிள்ளைப் பெருகாலமான பத்து மாதங்கள் என்று கூட ஒதுக்கித் தள்ளி விடலாம் .ஆனால் யாருக்கேனும் ஒரு வருடம் கழித்து ரேசன் கார்டு வந்திருக்கிறதா? எனக்குப் பெருத்த சந்தேகமாக இருக்கிறது.
இதைப் போன்ற ஒத்த அனுபவம் பதிவர்கள் யாருக்கேனும் இருந்தால் தயவு செய்து எனதுசந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன?
நுகர்வோர் கோர்ட்டுக்குத் தான் போய் ஆகா வேண்டுமா?
இன்று கூட ரேசன் கடைக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எப்போது கார்டு வரும் என்று விசாரிக்க....
Saturday, November 29, 2008
சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் பிஞ்சில் பழுத்த சக்கரைக்கட்டிகளா? ?
"சக்கரைக்கட்டி" என்றொரு படம்...!!!முருங்கைக்காய் பாக்கியராஜ் என்று ஒதுக்கி விடமுடியாத அற்புதமான திரைகதையாளரின்... மகன் சாந்தனு தான் ஹீரோ .
எந்நாளும் ஞாபாகத்தில் நீடிக்கும் "தாவணிக் கனவுகள்" படத்தில் ஹீரோ பாக்கியராஜ் ஐந்து பைசா நாணயத்தை தியேட்டர் தரையில் வீசி விட்டு தன் வயது வந்த தங்கைகள் படத்தில் காட்டப் படும் விதி மீறிய ஆபாசக் காட்சிகளைக் காண்பதை தடுப்பது போல ஒரு சீன் வருமே!!!அதே பாக்கியராஜ் மகன் தான் ...!!!
இப்போது கூட தன் மகளை வைத்து "பாரிஜாதம்" என்று ஒரு நல்ல படம் கொடுத்தார்.படம் சரியாக ஓடாவிட்டாலும் படம் நல்ல படமே குடும்பத்தோடு பார்க்கலாம் வகை,அவரது மகன் ஹீரோவாக நடித்த முதல் படம் சக்கரைக்கட்டி .
அதில் ஒரு சீன்!!!பத்து ...பன்னிரண்டு வயதில் உள்ள சிறுவர்கள் ஆறு ...ஏழு பேர் (அத்தனையும் சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் வேறு!!!அந்தச் சிறுவர்கள் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து தேடித் தேடி புத்தகம் வாங்குகிறார்கள் ...என்ன புத்தகம்தெரியுமா?
"காமசாஸ்த்திரம்"சாட்சாத் வாத்ஸ்யாயனர் எழுதிய அதே புத்தகம் தான்!வெறும் பத்தே வயது நிறைந்த அந்தப் பையன்கள் அந்தப் புத்தகத்தை வாங்குவதோடு அல்லாமல் ஒரு பூங்காவில் உட்கார்ந்து அதைப் படிக்க வேறு செய்வதைப் போல படத்தில் காட்சி வைத்திருக்கிறார்கள் .
இதைக் கண்ட நொடியில் எனக்கு மிக அதிர்ச்சியாகி விட்டது .மீடியா வளராத எண்பதுகளைப் போல அல்ல இன்றைய சிறுவர்...சிறுமிகளுக்கு அன்றைய சிறுவர்...சிறுமிகளை விடவும் விவரமும் தெளிவும் அதிகம் தான் ;அதற்காக இப்படியா காட்சி வைப்பது?
பள்ளிகளில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக வைப்பதா ....வேண்டாமா என்பதே இன்னும் குழப்பமாக இருக்கும் பட்ச்சத்தில் இப்படி ஒரு சீன் தேவை இல்லை என்பதே எனது கருத்து.
அதிலும் கடையில் விற்பனையாளராக வரும் கிரேசி மோகன் அந்தப் பையன்களுக்கு அறிவுரை சொல்லத் தக்க ஒரு சிறந்த ஹாஸ்ய எழுத்தாளர் வேறு ?அவருமா இப்படி ஒரு சீனில் நடிக்க ஒத்துக் கொள்ள வேண்டும்?
அப்புறம் அந்தப் பையன்களில் பெரும்பாலோர் சுட்டி டி.வி காம்பியர்கள் வேறு!!!
என்னத்தைச் சொல்ல?
இங்கே இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும்...சுட்டி டி.வி நிகழ்ச்சிகளில் சில ஆகா ரகம் !!!...சில பரவாயில்லை ரகம்..சில பார்க்கலாம் ரகம் ...சில இது தேவையா இப்போது ரகம்? ...
ஆகா ரகம் !!!:-
"டோரா தி எக்ஸ்ப்ளோரர் "(சின்னஞ்சிறு இதயங்களின் தேடலை ஊக்குவிக்கும் தொடர்)
"குளோரியாவின் வீடு "(சிறுவர்களோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அருமையான நட்பின் அவஷியத்தை உணர்த்தும் தொடர் இது )
"அபி அண்ட் எபி"(காட்டு விலங்குகளை...பறவைகளை...பூச்சிகளை அறிமுகப் படுத்தும் இன்னொரு உலகம் இது )
"பாபியின் உலகம் "(இதில் அந்தச் சிறுவனின் விரியும் கற்பனை உலகம் கொஞ்சம் சுவாரஷ்யமானதே)
சில பரவாயில்லை ரகம்:-
"அறிவோம் "ஆயிரம்(சில அறிவியல் ரீதியான விளக்கங்களை தினசரி வாழ்வை ஒட்டி விளக்கும் ஜப்பானியத் தொடர்...இது கூட சில நேரங்களில் தேவையில்லாத கேள்விகளை(அதாவது இப்போதைக்குத் தேவை இல்லாத சில கேள்விகளை என் மகளைக் கேட்க வைக்கிறதோ? என்ற எண்ணம் எனக்கு உண்டு...மற்றபடி பார்க்கலாம் வகை தான் பாதகம் இல்லை)அப்புறம்
"உலகச் சிறுகதைகள்"(பல்வேறு தேசத்து சிறுகதைகள் தொகுக்கப் பட்டு ஒவ்வொன்றாகக் காட்டப் படுகின்றன).
"ஜாக்கி" (ஜாக்கி சானை விரும்பும் குழந்தைகள் இதைப் பார்க்கலாம்...சுமார் ராகம் ...இறுதியில் ஜாக்கி குழந்தைகளுக்க்ச் சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம்...அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம்)
இவையெல்லாம் ஓகேஇவை தவிர ;
இது தேவையா இப்போது ரகம்?:-
"செட்ரிக்""ஹீமான்"
"மென் இன் ப்ளாக் "
"கடல் இளவரசிகள்"
இதெல்லாம் அத்தனை அவஷியமானது இல்லையோ ? என்ற எண்ணம் வருகிறது.எனென்றால் ஏனைய இந்தத் தொடர்களில் எல்லாம் குழந்தைகள் கற்றுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை .இந்த நிகழிகளைத் தொகுத்து வழங்க மாற்ற டி.விக்களைப் போன்றே இதற்கும் வர்ணனையாளர்கள் உண்டு ...அவர்களில் சிலர் தான் மேலே சொன்ன படத்தில் அந்தக் காட்சியில் நடித்தவர்கள்.
பாவம் அந்தச் சிறுவர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.அவர்களது பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறை அவர்களுக்கு மட்டும் எப்படி வர முடியும்?இப்படிப் பட்ட ஒரு காட்ச்சியில் தங்களது மகன் அல்லது மகள் வரலாமா கூடாதா என்ற கவலையே இல்லாத அவர்களை என்னவென்று நொந்துகொள்வதோ புரியவில்லை?
அதிலும் சுட்டி டி.வியில் சில குழந்தைகள் வர்ணனை என்ற பெயரில் தேவை இல்லாத (வயது வந்த மாற்ற டி.வி வர்ணனையாளர்களைப் போன்றே அதிகப் படியான உடல் அசைவுகள் )அலட்டல்களைச் செய்யும் போது மிதமிஞ்சிய வருத்தமே எஞ்சி நிற்கிறது .எப்போது திருந்துவார்கள் இவர்கள்? ஸாரி...ஸாரி எப்போது திருத்தப் படுவார்கள்?
குழந்தைகளிடம் எப்போதுமே "போலச் செய்தல்' என்ற பழக்கம் உண்டு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஏன் இனி எதிர்காலத்திலும் கூட அது தொடரும்.அதாவது அவர்கள் எல்லா விஷயங்களையுமே பெரியவர்களிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்...தாம் அறிந்த பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல அதன் தாக்கம் அவர்களைச் சார்ந்த அந்த சிறுவர்களிடமும் படிந்து விடுகிறது...இது கண்கூடான உண்மை.
இப்படி சுட்டி டி.வி குழந்தைகளைப் பார்த்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நம் வீட்டுக் குழந்தைகளும் மாறி விட்டால் என்ன செய்வது?ஆதலால் பெற்றோர்களே உங்கள் வீட்டில் குழந்தைகள் டி.வி தானே பார்க்கிறார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்!!! மிதமான கண்காணிப்பு எப்போதுமே எந்த வயதிலும் அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் அது எப்போதுமே நன்மை தரக் கூடும்.
Thursday, November 27, 2008
இங்லாந்து லெட்டர் எங்க போச்சு ?
சென்ற வருடம் இதே போன்றதோர் டிசம்பர் நெருக்கத்தில் தான் நல்ல மழை நாளில் இதை எழுதினேன் என்று ஞாபகம்...!
கரண்ட் வேறு இல்லை அப்போது...;டி.வி யும் பார்க்க முடியவில்லை ...கூடப் பேச என் தம்பியைத் தவிர யாரும் இல்லை.அவனும் நண்பன் அழைத்தான் என்று வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
சரி என்னத்தையாவது கிறுக்குவோம் என்று எண்ணிக் கொண்டு தான் இதை ஆரம்பித்தேன்.போகும் போது என் நோட் புக்கில் எட்டிப் பார்த்த தம்பி சொன்னான் ;
கவிதை ...கதை நு எழுதறதை விட இப்படியும் ட்ரை பண்ணி பாரேன் , எங்க ஹெச் .ஆர் ஒரு தடவை எங்க கிட்ட இந்தியன் போஸ்டல் சர்வீஸ் விளம்பரத்துக்கு காப்பி ரைட்டிங் பண்ண சொல்லிக் கேட்டார் ...யாரோடது பெஸ்ட்னு பார்க்கலாம்னு ?நாங்க ட்ரை பண்ணலை அதுக்குள்ளே செமெஸ்டர் வந்துடுச்சு ...!!!
நீ சும்மா தான என்னத்தையோ எழுதிட்டு இருக்க ...இத வேணா ட்ரை பண்ணேன் என்றான்."சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை போல" உங்களுக்குத் தோணினால் நான் பொறுப்பில்லை.
1."DONT ROAR
WE
AT
YOUR DOOR" IPS (INDIAN POSTAL SERVICE)
2. "THINK
WITH
INK
PRESSING BUTTONS
IS NOT EQUAL TO
IMPRESSING THE MINDS
START TO
THINK
WITH
INK " IPS (INDIAN POSTAL SERVICE)
3."DONT TAKE RISK
WE ARE
AT YOUR DESK"
IPS (INDIAN POSTAL SERVICE)
4."CHOOSE INDIAN POSTAL SERVICE
CHAZE INDIAN POLICE SERVICE
WE
BEST
TO PASS YOUR DREAMS"
5. " IPS
IS THE PLACE OF YOUR ESSENCE OF FEELINGS
PROTECTED"
6. "BROWSING CENTRE
CYBER CAFE
DESK TOP
LAP TOP
MOBILE PHONE
CRUSH CRUSH CRUSH
EVERY WHERE CRUSH
JAM JAM JAM
EVERY WHERE JAM
COME TO SEE MY NAME
I AM VERY ... FAME
...IPS(INDIAN POSTAL SERVICE)"
Tuesday, November 25, 2008
தொடர்கிறது...ஷாக்...ஷாக்...ஷாக்...!?
- எந்தப் பொருளாக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடப் பட்டதா என்று சோதித்து தரமானதாகவே வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்(கடைக்குள் நுழையும் முன்பு இருக்கும் உறுதி...பொருளின் வெளி அலங்காரத்தில் மயங்கி மாறி விட்டால் நீங்கள் கொள்கை தவறியவர்கள் என்று அறிவிக்கப்படுவீர்கள்).
- எந்தக் கடையிலும் பொருளை வாங்குவதற்கு முன்பு கடையின் நம்பகத் தன்மையையும் ஒரு முறைக்கு இருமுறை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
- விழாக்காலங்களில் ஒன்றுக்குப் பத்தாக இலவசமாகத் தரப் படும் லோக்கல் அசெம்பிள்டு பொருட்களை வாங்கி ஏமாறக் கூடாது.
- வாரண்டி...கியாரண்டி கார்டுகளை கவனமாகப் பத்திரப் படுத்த வேண்டும் .
- வாங்கும் பொருட்களில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய சர்வீஸ் சென்டர் போன் நம்பர்கள்...அட்ரஸ் போன்றவற்றை மறக்காமல் கேட்டு வாங்கி பத்திரப் படுத்த வேண்டும்.
- எல்லாவற்றையும் விட முக்கியம்...கடைகளில் பொருட்களோடு வழங்கப் படும் மேனுவல் கைடுகளையும்,கியாரண்டி கார்டுகளில் "கன்டீசன்ஸ் அப்ளை" என்று போடி எழுத்தில் அச்சிடப் பட்டவற்றையும் கஷ்டப் பட்டாவது படித்துப் பார்த்து கடையிலிருந்து வீட்டுக்குப் பொருட்களை எடுத்து வரும் முன்பாகவே நமது சந்தேகங்களை விற்பனையாளர்களிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது மிக்க நல்லது.
- கட்டக் கடைசியாக "யானைக்கு அங்குசம் போல" விலை ரசீதுகளை (பில்...ரிசிப்ட்) பொக்கிஷம் போல பத்திரப் படுத்த மறக்க வேண்டாம் .(தரமான பொருட்களில் கூட காஸ்டிங்குக்கு ஆசைப் பட்டு குவாலிட்டி தேயும் படி கலப்படம் செய்யப் பட்டால் இது நமக்கு பயன்படும்)
- இதெல்லாம் செய்தால் (யு ஆர் டிரபிள் ப்ரீ சார் !) நீங்கள் தான் கிங்!யாரும் உங்களை ஏமாற்ற முடியாது .
இதுவரை சொல்லியாச்சு ...இனி எந்தப் பொருளை எப்படி எப்படி வாங்கனும்னு தெரிஞ்சா நல்ல இருக்குமே என்கிறீர்களா ?
(வெண்டைக்காய உடைச்சிப் பார்த்து வாங்கற மாதிரி உடைச்சா பார்க்க முடியும்?!) கவலையே வேண்டாம்...அதற்கும் பதில் உண்டு .
ஜஸ்ட் வெயிட் ....
ஒன்னு ஒண்ணா பாக்கலாமே...என்ன அவசரம் இப்போ ?
Friday, November 21, 2008
சிரி...சிரி...சிரி...சிரி(அட சும்மா சிரிங்க சார்)
யாரு சொன்னா? அப்போ நாங்கலாம் யாராம்? எங்களுக்கும் சிரிப்பு வரும்ல ?நாங்களும் சிரிப்போம்ல?
ஏய் பூனைக்குட்டி அக்கா வாய மூடிட்டு சத்தம் போடமா சிரிக்கத் தெரியாதாக்கும்!இந்தா பாரு இங்கன ...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...இப்பிடித்தான்....இப்பிடித்தான்...சிரி...சிரி...சிரி...சிரி... !!!
அடங்கொக்கா...மக்கா....இன்னாத்துக்கு வாய மூடிக்கனும்? நான் இப்பிடித்தான் சிரிப்பேன்...இன்னான்றீன்ங்க இப்போ?
சிரிக்கிறதுல என்னப்பா பாலிடிக்சு? என்னைய மாதிரி கூட சிரிச்சுட்டு போங்களேன்!
எந்நேரமும் தண்ணியிலேயே இருக்கான்டான்னு திட்ராகளே நாட்டுக்குள்ள? தண்ணில கிடக்கற சுகமே சுகம்...அதான் இந்தச் சிரிப்பு...சும்மா சிரிச்சுப் பழகலாம் வாங்கண்ணா...!!!
புலி புல்லைத்தான் திங்க கூடாதுன்னு சொன்னாங்க,சிரிக்கக் கூடாதுன்னு எல்லாம் யாரும் சொல்லலை!!! எங்கே என் முன்னாடி வந்து யாராச்சும் சிரிக்காதேன்னு சொல்லித்தான் பாருங்களேன் ...ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் !!!
அந்தப் புலிப்பய சிரிக்கான் பாரு ...நான் சிங்கம்யா...சிங்கம் சிரிக்காட்டிப் போனா வெங்கம் பயனு சொல்லிருவாக அது வேற அசிங்கம் !!! அதான் இந்தச்சிரிப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
டிஸ்கி: இந்தப் புகைப் படத் தொகுப்புக்குச் சொந்தகாரி என் அருமை பாப்பு மட்டுமே!!! இதிலுள்ள உப்புச் சப்பில்லாத கமெண்டுகள் மட்டுமே எனக்குச் சொந்தம் .இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?