ஹார்லிக்சுக்கும் காம்ப்ளானுக்கும் நேரடிப் பகையா என்ன? இப்போது புதிதாக வந்துள்ள ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்று அப்படித் தோன்ற வைக்கிறது.அவர்களுக்குள் பகையோ...போட்டியோ எதுவோ ஒன்று இருந்து விட்டுப் போகட்டும் .
ஆனால் பலகோடிப் பேர் பார்க்கும் விளம்பரங்களில் அதை இப்படிக் காட்டி இருக்க வேண்டியதில்லை.
இப்போது காம்ப்ளான் பருகும் குழந்தைகளிடம் ஒரு சந்தேகம் உருவாகிவிட வாய்ப்பளிக்கும்படி அந்த விளம்பரம் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.இரண்டு சிறுவர்களும் அவர்களது அம்மாக்களும் பேசிக் கொள்வதைப் போல அமைந்த அந்த விளம்பரத்தில் ;
காம்ப்ளான் அம்மா ஹார்லிக்ஸ் அம்மாவிடம் சொல்கிறாள்...
இப்ப்படி விலை மலிவான பானங்களை அருந்தினால் பையன் எப்படி அதிக உயரமாக வளருவான் ?(காம்ப்ளான் விளம்பரத்தின் அடிநாதமே உயரத்திற்கு முக்கியத்துவம் தருவது தான்)
அதற்க்கு ஹார்லிக்ஸ் அம்மா சொல்கிறாள்.
ஆரோக்கியத்துக்குத் தேவையான மற்ற ஊட்டச் சத்துகள் எதுவுமே இன்றி பையன் வெறுமே உயரமாக வளர்வதில் என்ன லாபம் என்கிறாள்!!!(சரியான கேள்வி தானே?)
முடிவில் ஹார்லிக்ஸ் அம்மா...வெறும் நூற்று இருபத்திஎட்டே ரூபாயில் ஹார்லிக்ஸில் இதெல்லாம் சாத்தியம் ,ஆனால் நூற்று ஐம்பத்து எட்டு ரூபாய் காம்ப்ளானால் வெறும் உயரம் வளர்ப்பதை தவிர வேறு என்ன சாதிக்க முடிந்தது என்று கேட்பது மாதிரி விளம்பரம் முடிகிறது .
காம்ப்ளான் அம்மா தனது காம்ப்ளான் பாட்டிலின் விலையை மறைக்க முயல்கிறாள்.கேள்வி எல்லாம் சரி தான் .ஆனால் இன்னும் காம்ப்ளான்...ஹார்லிக்ஸ் சண்டை தெருவுக்கு வரவில்லையே என்று நினைக்கையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது .இப்படி ஒரு விளம்பரம் வரும் போது காம்ப்ளான்காரர்களுக்கு(காம்ப்ளான் கம்பெனிக்காரர்களைச் சொல்கிறேன்) கோபம் வராதா?
3 comments:
இது இன்று நேற்றல்ல பல காலமாய் இருக்கும் பனிப்போர்தான்
உதாரணம் - ஒரு டாக் ஷோவில் காம்பியர் விதவிதமான பானங்களினால் கிடைக்கும் சத்துக்கள் குறித்தும் காம்ப்ளான் இதிலிருந்து எப்படி உயர்ந்தது என்றும் காட்டுவார்கள்..
அதில் பார்வையாளர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு காம்ப்ளான் தருவதாய் கூறுவர்..
பார்த்திருக்கிறீர்களா
இந்த சண்டை ஏற்கனவே நடந்திருக்கு. ஒருமுறை கேசெல்லாம் போட்டு விளம்பரத்தை தடை பண்ணாங்க.(ஒரு டாக்டர் வந்து ஒரு பானம் நல்லதுன்னும், இன்னொன்னு நல்லதில்லைன்னும் சொல்றதாக வரும்).
எது எப்டியோ, ஹார்லிக்சை அப்டியே சாப்டலாம். நல்லா டேஸ்டோடவாவது இருக்கும். காம்பிளானை வாயில் வெக்கக் கூட முடியாது.
ஹார்லிக்ஸ்-கு பதிலடி கொடுக்கும் வகையில் காம்ப்ளான் நிறுவனத்தார் ஏற்கனவே செய்தித்தாள்களில் காம்பிளான் ஏன் சிறந்தது என்று பட்டியலிட்டு ஒரு விளம்பரம் கொடுத்து வருகிறார்களே கவனிக்கலையா?
Post a Comment