Showing posts with label க்க்கவிதை அல்ல. Show all posts
Showing posts with label க்க்கவிதை அல்ல. Show all posts

Tuesday, March 2, 2010

புல்...




பாயிலிருந்து உருவி நழுவிய கோரைப்புல்
நழுவாத மற்றொன்றிடம் சொல்லிக் கொண்டது
எனக்கு விடுதலை !
புல்லின் பாஷை அறியாமல்
கட்டிக் கொண்டு துயில்கின்றனர்
தம்பதிகள்.
"கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்"
மடையர்கள்
புல் சரி...கல் எப்படி ?!
கோபித்துக் கொண்டு
சுளித்த முகத்துடன்
தரையில்
தனியாய் புல் !

நோட்:
படம் கூகுளில் தேடுகையில் உயிர்மையில் கிடைத்தது.