கேள்வி நம்பர் 1 :
பஞ்சவன் மாதேவி யார் ?
அவள் ராஜராஜனின் மனைவியா ?இல்லை அவரது மகன் ராஜேந்திரனின் மனைவியா ? பொன்னியின் செல்வனில் பஞ்சவன் மாதேவி இல்லை. உடையாரில் ராஜராஜனின் மனைவி என்றே வாசித்தேன். வரலாற்றுச் சான்றுகளோடு எழுதப் பட்ட ஒரு கட்டுரையில் பஞ்சவன் மாதேவிக்கென்று பள்ளிப்படை கோயில் பழையாறையில் இருப்பதாக படித்த ஞாபகமும் உண்டு அதை எழுப்பியது ராஜேந்திரன் என்றும் தன சிற்றன்னைக்காக அவன் எழுப்பினான் என்றும் கண்டிருந்தேன்.
இப்போது கேள்வி என்னவென்றால் "உளியின் ஓசை திரைப் படத்தில் பஞ்சவன் மாதேவி ராஜேந்திரனின் மனைவியாக காட்டப் படுகிறார். படம் வரலாற்றுப் படங்களுக்கு வந்த கேடு என்பதை விட்டுத் தள்ளி விடலாம்,என்னவோ நாடகத்தனத்துடன் அபத்தமாகத் தோன்றியது(நிஜ நாடகங்களை நான் குறை சொல்லவரவில்லை,நாடகம் வேறு திரைப் படம் வேறு இல்லையா?அதற்கு பேசாமல் தென்பாண்டி சிங்கம் போல இதையும் நாடகமாகவே எடுத்து விட்டுப் போயிருக்கலாம்!!!) .அதல்ல விஷயம் அத்திரைப்படத்தின் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு வழங்கப் பட்டதை டி.வியில் பார்த்ததால் இப்போதாவது இந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து கொண்டால் என்ன ?எனும் வெட்டி வேலை தான் இது. யாருக்காவது தெரிஞ்சா வரலாற்று ஆதாரத்தோட சொல்லுங்கப்பா .

கேள்வி நம்பர் 2 :
ரமணிச்சந்திரன் எழுத்து மலம் என்று விமர்சிக்கப் பட்டால் அவரது வாசகிகளுக்கு கோபம் வருவதில்லையே ஏன்?
நான் ரமணி சந்திரனை வாசித்திருக்கிறேன்... இனியும் வாசிப்பேன் என்பதால் இந்தக் கேள்வி வந்தது.
இதுவே சாரு.ஜெயமோகன் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு இலக்கியச் சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள் (கொல்கிறார்கள்)
அதென்ன சாருவிலிருந்து நண்பர் அதுசரி வரையிலும் ரமணிசந்திரன் என்றால் அத்தனை இளப்பமா?
பெண்களிடையே பிரபலமான எழுத்தாளர் ,எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுபவர்.அரைத்த மாவையே அரைப்பவர் etc ...etc . ம் ...வாசித்தவரை எனக்கொன்றும் சாரு சொன்னதைப் போல மலம் போல தெரியவில்லை அவரது எழுத்து. பொதுவான பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வணிகமயமாக அவர் எழுதுவதை இத்தனை மோசமாக விமர்சிக்க என்ன நிர்பந்தமோ இவர்களுக்கு?!
காஞ்சனா ஜெயதிலகர் ரமணிசந்திரனின் சாயலில் ஆனால் கூடுதல் துறை சார்ந்த தகவல்களோடு எழுதுவதால் அவர் மீது விமர்சனக் கத்தி பாயவில்லை போலும்!
வாழ்கை என்பது வெறும் தீவிர இலக்கியத்தை மட்டுமே வாசிப்பது அல்ல,அன்பே வா படம் அடையாத வெற்றியா? விஜயின் பிரியமானவளே ...சிவாஜியின் புதிய பறவை...இவையெல்லாம் வெற்றிப் படங்களே, அந்தப் படங்களை ரசிப்பவர்களும் மனிதர்கள் தான்,சுப்பிரமணிய புரத்தை ரசிப்பவர்கள் பிரியமானவளே படத்தையும் ரசிப்பார்கள் தான் .ரசனை என்பது மனம் சார்ந்தது,ஒரு நாவல் என்பது மக்களின் வாழ்க்கை என்றால் ரமணி சந்திரன் எழுதுவதும் மக்களின் வாழ்க்கையை தான். ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறானோ ஒரு மனைவி தன் கணவன் எப்படி தன்னை ஆராதிக்க வேண்டும் என விரும்புகிறாளோ அதைத் தான் அந்தம்மா எழுதுகிறார்கள். இதை இத்தனை கடுமையான பதத்தில் விமர்சிப்பது என் வரையில் கண்டனத்திற்குரியதே,குறை நிறைகள் இல்லாத இடங்களே இல்லை,அப்படிப் பார்த்ததால் ரமணி சந்திரன் படித்து யாரும் வாழ்வைக் கெடுத்துக் கொண்டதாக செய்தித் தாட்களில் பார்த்த ஞாபகம் இல்லை.)
நாவல்கள் ...தீவிர இலக்கியம் என்பதெல்லாம் சரி தான் உண்மை வாழ்க்கை அதை விட்டு வெகு தூரத்திற்கு அப்பால் இருக்கிறது,எழுதுபவர்களும் சரி படிப்பவர்களும் சரி இதை கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம்.
சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!
வற்புறுத்தல்கள் இல்லாத எல்லா எழுத்தும் என் வரையில் வாசிக்கத் தக்கதே.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் :
ஆரம்பம் முதலாய் வரிசைப் படுத்தலாம் ..வாண்டு மாமா (அஞ்சாம் கிளாஸ்ல )...தமிழ் வாணன் (சங்கர்லால்) எட்டாங்கிளாஸ்ல) சிவசங்கரி ..அனுராதாரமணன்...( ஒன்பதாம் கிளாஸ்ல இருந்து) ராஜேஷ் குமார்(விவேக் ரூபலா),சுஜாதா(கணேஷ்,வசந்த்),பட்டுக் கோட்டை பிரபாகரின் (பரத் சுசீலா வரிசை கதைகள்) ,சுபா வின் நரேன்..வைஜூ சீரிஸ் ,
அப்புறம் காலேஜ் லீவ்ல தேவன்,கல்கி,சாவி,நா.பார்த்தசாரதி ,பொன்னீலன்,கந்தர்வன்,இப்படிக் கொஞ்சம் ...காலேஜ் இரண்டாம் வருட ஆரம்பத்தில் இருந்து ரமணி சந்திரன் ,காஞ்சனா ஜெயடிலகர்
பி.ஜி படிக்கும்போது எஸ்ரா,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன்,கி.ராஜநாராயணன்,வண்ணதாசன் .அசோக மித்திரன்,தி.ஜா,
கல்யாணத்திற்குப் பின் உமா மகேஸ்வரி ,கண்மணி குணசேகரன்,வா.மு.கோமு,வேல ராம மூர்த்தி ,ஜெயந்தன் ,சாரு இப்படி எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் இன்னும் கூட நிறைய இருக்கலாம் .ஆனால் யாருடைய எழுத்தும் எனக்கு ரசனைக்குறைவானதாகத் தோன்றவில்லை.அவரவர் பாணியில் அவரவர் எழுத்து வாசிக்க உகந்ததே.
47 comments:
விக்கிபீடியா கூட பஞ்சவன் மாதேவி ராசேந்திரசோழனுக்கு மனைவின்னு சொல்லுது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D
நிறைய இடங்களில் இது நான் எழுதியதோ என யோசிக்க வைத்துவிட்டீர்கள்!நான் இப்போதும் ரமணி சந்திரனைப் பகிரங்கமாகவே வாசிக்கிறேன்.
இது இடுகை! பொறி பறக்குதுல்ல
:)
பஞ்சவன் மாதேவி குறித்த உங்கள் முதல் கேள்விக்கு பதில்:
பொன்னியின் செல்வன் சுமார் அறுபது வருடத்திற்கு முன் எழுதியது...அன்றைய சூழ்நிலையில் கல்கிக்கு எல்லா தகவல்களும் கிடைக்காது இருந்திருக்கலாம்...தவிர, பொன்னியின் செல்வன் வரலாற்று தகவல்கள் தூவப்பட்ட ஒரு ஃபிக்சன்...அதில் வந்தியத் தேவனை கதாநாயகனாகவும், நந்தினியை வில்லியாகவும், ஆழ்வார்க்கடியானை கதாநாயகனின் தோழனாக, கொஞ்சம் காமெடியானாக காட்டுவது தான் நோக்கம்....பொன்னியின் செல்வனின் பல தலைமுறைகள் கடந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு இந்த அடிப்படையும் மிக முக்கியமானது....உண்மையில் நந்தினி என்ற கதாபாத்திரமே வரலாற்றில் இல்லை...(பொன்னியின் செல்வன் குறித்து எனக்கு மற்றொரு பெரிய கேள்வி இருக்கிறது...இல்லாத ஒரு கதாபாத்திரத்தை சுற்றியே கல்கி கதை சொல்ல காரணம் என்ன?? பொன்னியின் செல்வனின் அடிப்படை நோக்கம் என்ன??)
உடையார் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், பாலகுமாரன் ஆராய்ச்சி செய்து தான் எழுதியிருக்கிறார் என்றே நம்புகிறேன்.....ஆனாலும் பஞ்சவன் மாதேவி உண்மையில் ராஜராஜனின் மனைவியா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு...உடையாரில் பாலகுமாரன் இதற்காக எந்த ஆதாரத்தையும் தரவில்லை....
ஆனால், கருணாநிதி எழுதுவதை வைத்தெல்லாம் எதையும் முடிவெடுக்க முடியாது...அது உளியின் இம்சை!
//
ரமணிச்சந்திரன் எழுத்து மலம் என்று விமர்சிக்கப் பட்டால் அவரது வாசகிகளுக்கு கோபம் வருவதில்லையே ஏன்?
நான் ரமணி சந்திரனை வாசித்திருக்கிறேன்... இனியும் வாசிப்பேன் என்பதால் இந்தக் கேள்வி வந்தது.
//
நீங்க ரமணிச்சந்திரனின் வாசகி தானே...உங்களுக்கு கோபம் வந்ததா வரலியா? வரலைன்னா ஏன் வரலை?? :0))))
என்னைக் கேட்டா, சரி உண்மையை தான சொல்றாய்ங்க...ன்னு நினைச்சி யாருக்கும் கோவம் வரலைன்னு நினைக்கிறேன் :0))))
//
அதென்ன சாருவிலிருந்து நண்பர் அதுசரி வரையிலும் ரமணிசந்திரன் என்றால் அத்தனை இளப்பமா?
//
ரமணிச்சந்திரன்னா இளப்பம்னு எதுவுமில்லைங்க...ஆனா, அதுக்காக மலத்தை ஆஹா தங்கம்னு கொண்டாட முடியாது....Lets call shit as shஇட் என்பது எனக்கு பிடிச்ச பாலிஸி!
தவிர, நான் படித்தவரையில் தான் எனது அளவீடு இருக்கிறது...அவரை விட மோசமாக எழுதுபவர்கள் இருக்கலாம்( ஆனா, கொஞ்சம் டவுட்டு தான்)...
//
பெண்களிடையே பிரபலமான எழுத்தாளர் ,எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுபவர்.அரைத்த மாவையே அரைப்பவர் etc ...etc . ம் ...வாசித்தவரை எனக்கொன்றும் சாரு சொன்னதைப் போல மலம் போல தெரியவில்லை அவரது எழுத்து. பொதுவான பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வணிகமயமாக அவர் எழுதுவதை இத்தனை மோசமாக விமர்சிக்க என்ன நிர்பந்தமோ இவர்களுக்கு?!
//
ம்ம்ம்ம்....எதுனா வேஸ்ட் டிஸ்போஸல் சைட் பக்கம் போயிருக்கீங்களா?? ஒரு கிலோமீட்டருக்கு முன்னாடியே பயங்கர "கப்பு" அடிக்கும்...ஏன்னா, குப்பை மேல குப்பை, குப்பை மேல குப்பை, குப்பை மேல குப்பைன்னு கொட்டி அது மலத்தை விட மிக மோசமாக நாறுகிறது....
அரைத்த மாவுன்னு நீங்களே சொல்லிட்டீங்க...அதே மாவை எனக்கு தெரிஞ்சி அவர் இருபது வருஷமா அரைக்கிறார்னு நினைக்கிறேன்...அப்ப எவ்ளோ கப்பு....
இருபது வருஷமா ஒருத்தர் ஒரே கான்செப்டையே, அதே எழுத்து நடையில், பல கதைகள்ல வித்யாதரன்கிற பேரை கூட மாத்தாமா எழுதுனா அதை என்னன்னு சொல்றது?
தவிர, பொதுவான பெண்களின் எதிர்பார்ப்பும், மனநிலையும் ரமணிச் சந்திரன் எழுதுற மாதிரி இல்ல....அவர் எழுதுறது நாப்பது வருஷத்திற்கு முந்திய மனநிலை...இன்னைக்கு எவ்ளவோ மாறி இருக்கு....ஆனா உங்க ஆதர்ஷ எழுத்தாளர் மாற மாட்டேங்குறாரே??
அவரை விமர்சிக்க எந்த நிர்ப்பந்தமும் இல்லை...இவரை விமர்சித்தா எனக்கு யார்னா காசு குடுக்குறாங்களா?? ரமணிச் சந்திரன் எழுத்தை மலம்னு சொன்ன சாரு நிவேதிதா எழுத்தை சுஜாதா மலம்னு சொல்லிருக்காரு...அதுக்காக சுஜாதாவுக்கு எதுனா நிர்பந்தம் இருந்ததுன்னு சொல்ல முடியுமா??
பொதுவில் வைக்கப்படும் எதுவும் பொதுவில் விமர்சிக்கப்படும்...அவ்ளோ தான்!
//
வாழ்கை என்பது வெறும் தீவிர இலக்கியத்தை மட்டுமே வாசிப்பது அல்ல,அன்பே வா படம் அடையாத வெற்றியா? விஜயின் பிரியமானவளே ...சிவாஜியின் புதிய பறவை...இவையெல்லாம் வெற்றிப் படங்களே, அந்தப் படங்களை ரசிப்பவர்களும் மனிதர்கள் தான்,சுப்பிரமணிய புரத்தை ரசிப்பவர்கள் பிரியமானவளே படத்தையும் ரசிப்பார்கள் தான் .
//
சிவாஜி படமெல்லாம் நான் பார்க்கிறதில்ல...(ரொம்ப கஷ்டம்!)...ஆனா, எப்படி சிவாஜியை ரசிக்கிறாங்களோ அதே மாதிரி ரமணிச்சந்திரனையும் ரசிக்கலாம்...தப்பில்லை...
அதுக்காக எல்லாரும் அவங்களை கொண்டாடனும்னு அவசியம் இல்லையே...சிலருக்கு சிவாஜி நடிப்புக் கடவுள்...சிலருக்கு ஓவர் ஆக்டிங்...அதே மாதிரி தான் ரமணிச் சந்திரனும்....
//
ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறானோ ஒரு மனைவி தன் கணவன் எப்படி தன்னை ஆராதிக்க வேண்டும் என விரும்புகிறாளோ அதைத் தான் அந்தம்மா எழுதுகிறார்கள்.
//
அதைத் தான் எழுதுகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை...அதை மட்டுமே இருபது வருடங்களாக எழுதுகிறார்கள்...அதையும் கூட காலத்திற்கேற்ப உண்மை நிலவரம் எழுதுகிறார்களா என்றால் இல்லை....
//
இதை இத்தனை கடுமையான பதத்தில் விமர்சிப்பது என் வரையில் கண்டனத்திற்குரியதே,குறை நிறைகள் இல்லாத இடங்களே இல்லை,அப்படிப் பார்த்ததால் ரமணி சந்திரன் படித்து யாரும் வாழ்வைக் கெடுத்துக் கொண்டதாக செய்தித் தாட்களில் பார்த்த ஞாபகம் இல்லை.)
//
வாழ்க்கையை கெடுத்தாங்களோ இல்லையோ அவங்க புக்கு ஒண்ணு வாங்கி என் காசு வீணாப் போச்சி...அந்த காசுக்கு ரெண்டு விஸ்ல் ஃபில்டராவது வாங்கிருக்கலாம்...என்ன செய்ய...எல்லாம் விதி....
//
சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!
//
அப்படியெல்லாம் இல்ல...உங்களுக்கு பிடிச்சது உங்களுக்கு...இதில் என்ன தப்பு, இதை ஏன் ரகசியமா செய்யணும்??
ரமணிச்சந்திரனையே இலக்கியவாதின்னு சில பேரு ஒத்துக்கும் போது, படிக்கிறவங்களை ஒத்துக்க மாட்டாங்களா? அநியாயமா இருக்கே....
//
வாண்டு மாமா (அஞ்சாம் கிளாஸ்ல )...தமிழ் வாணன் (சங்கர்லால்) எட்டாங்கிளாஸ்ல) சிவசங்கரி ..அனுராதாரமணன்...( ஒன்பதாம் கிளாஸ்ல இருந்து) ராஜேஷ் குமார்(விவேக் ரூபலா),சுஜாதா(கணேஷ்,வசந்த்),பட்டுக் கோட்டை பிரபாகரின் (பரத் சுசீலா வரிசை கதைகள்) ,சுபா வின் நரேன்..வைஜூ சீரிஸ் ,
அப்புறம் காலேஜ் லீவ்ல தேவன்,கல்கி,சாவி,நா.பார்த்தசாரதி ,பொன்னீலன்,கந்தர்வன்,இப்படிக் கொஞ்சம் ...காலேஜ் இரண்டாம் வருட ஆரம்பத்தில் இருந்து ரமணி சந்திரன் ,காஞ்சனா ஜெயடிலகர்
பி.ஜி படிக்கும்போது எஸ்ரா,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன்,கி.ராஜநாராயணன்,வண்ணதாசன் .அசோக மித்திரன்,தி.ஜா,
கல்யாணத்திற்குப் பின் உமா மகேஸ்வரி ,கண்மணி குணசேகரன்,வா.மு.கோமு,வேல ராம மூர்த்தி ,ஜெயந்தன் ,சாரு இப்படி எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் இன்னும் கூட நிறைய இருக்கலாம்
//
ஏங்கப்பா....இவ்ளோ பேரா?? நான் படிச்சதெல்லாம் அவ்வையார் (ஓண்ணாம் கிளாஸ்), திருவள்ளுவர் (அஞ்சாங்கிளாஸிலிருந்து பத்தாங்கிளாஸ்), இளங்கோவடிகள் (பன்னென்டாங்கிளாஸ்), கம்பர் (எந்த க்ளாஸ்னு மறந்து போயிடுச்சி)....அப்புறம்....ம்ம்ம்...அவ்ளோ தான்....
கடைசியா ஒண்ணு....
"அகில இந்திய ரமணிச் சந்திரன் ரசிகர் மன்ற தலைவி மிஸஸ்.தேவ் வாழ்க"
:0))))
நம்ம லிஸ்ட்ல முதல்ல ரத்னபாலா
பல உங்க லிஸ்ட்ல உள்ளதும் இருக்கு.
"விட்டு விடுதலை ஆகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை "
அட இந்த மாற்றத்தை கவணிக்கவேயில்லையே ...
:)
//சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!//
அப்படியெல்லாம் ஏன் பயப்பட வேண்டும்? ரமணி சந்திரனைத்தான் எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் விட அதிகமாகப் பிடிக்கும்.
ஏன் என்பதை எனது இப்பதிவில் காணலாம். பார்க்க: http://dondu.blogspot.com/2006/06/1.html
@அதுசரி
ஸ்டீரியோடைப் என்று பார்த்தால் உங்கள் வேதாளம் சீரீஸ் கதைகளும் அவ்வாறுதானே. அதிலும் அரதப்பழசான கான்சப்ட் வேறு.
ஆனாலும் உங்கள் ஒவ்வொரு கதையும் சுவாரசியமாகப் போகிறது என்பதுதானே முக்கியம்? மேலும் உலகிலேயே மொத்தம் ஏழு கதை பிளாட்டுகள்தான் உள்ளன. அந்த ஏழும் மகாபாரதச்த்தில் வந்து விட்டது என்கிறார்கள். அதற்காகவெல்லாம் இனிமேல் சுவாரசியமான கதைகளே வராது என்பதா பொருள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
யப்பா.... என்னா கோவம்... என்னா கோவம்...
சரிதானே...
எல்லாருமே கஷ்டப்பட்டுதானே எழுதுகிறார்கள்...
அதை குறை சொல்வானேன்....
உங்க லிஸ்ட்ல என் அபிமான எழுத்தாளர்கள் எல்லாருமே இருக்கிறார்கள்...
// //
ரமணிச்சந்திரன் எழுத்து மலம் என்று விமர்சிக்கப் பட்டால் அவரது வாசகிகளுக்கு கோபம் வருவதில்லையே ஏன்?
நான் ரமணி சந்திரனை வாசித்திருக்கிறேன்... இனியும் வாசிப்பேன் என்பதால் இந்தக் கேள்வி வந்தது.
//
நீங்க ரமணிச்சந்திரனின் வாசகி தானே...உங்களுக்கு கோபம் வந்ததா வரலியா? வரலைன்னா ஏன் வரலை?? :0))))
என்னைக் கேட்டா, சரி உண்மையை தான சொல்றாய்ங்க...ன்னு நினைச்சி யாருக்கும் கோவம் வரலைன்னு நினைக்கிறேன் :0)))) //
கோபம் வந்ததால தான் இப்படி ஒரு பதிவே...அது கூட புரியாத அளவுக்கு நீங்க இருக்கறதா நான் நினைக்கலை அதுசரி ...போகட்டும் அதை விடுங்க.யாரும் எதிர் கருத்து சொல்லலைனா உங்க கருத்து உண்மை ஆயிடாது ...ம்ம்...எதுக்கு வம்புன்னு கூட சிலர் பதில் சொல்லாம இருக்கலாம் !!! :)
//ரமணிச்சந்திரன்னா இளப்பம்னு எதுவுமில்லைங்க...ஆனா, அதுக்காக மலத்தை ஆஹா தங்கம்னு கொண்டாட முடியாது....Lets call shit as shஇட் என்பது எனக்கு பிடிச்ச பாலிஸி!
தவிர, நான் படித்தவரையில் தான் எனது அளவீடு இருக்கிறது...அவரை விட மோசமாக எழுதுபவர்கள் இருக்கலாம்( ஆனா, கொஞ்சம் டவுட்டு தான்)...//
இடுகையை நல்லா வாசிக்கலை போல நீங்க...நான் ரமணிசந்திரனை தங்கமா கொண்டாடச் சொல்லி எந்த இடத்திலயும் சொல்லலை.மலம்னு சொன்னது கண்டனத்துக்குரியதுன்னு தான் சொல்லியிருக்கேன்.தங்கமா மலமான்னு முடிவு பண்ண அதொண்ணும் நாட்டின் முக்கியப் பிரச்சினை லிஸ்ட்ல இல்லை. சோ பிடிச்சா படிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாம் பிடிக்கலைனா நல்லா இல்லைன்னு சொல்லிட்டு விட்ரலாம் ,இவ்ளோ கடுமை தேவை இல்லை என்பதே என் கருத்து .நீங்க சொன்னது மாதிரி இது என் கருத்து ,எப்படி மலம்னு சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கோ ...அப்படியே அதை மறுக்கவும் ஒருத்தருக்கு உரிமை இருக்கலாம்.தட்ஸ் இட் . :)
@ அதுசரி ...
//ம்ம்ம்ம்....எதுனா வேஸ்ட் டிஸ்போஸல் சைட் பக்கம் போயிருக்கீங்களா?? ஒரு கிலோமீட்டருக்கு முன்னாடியே பயங்கர "கப்பு" அடிக்கும்...ஏன்னா, குப்பை மேல குப்பை, குப்பை மேல குப்பை, குப்பை மேல குப்பைன்னு கொட்டி அது மலத்தை விட மிக மோசமாக நாறுகிறது....//
நீங்களே சொல்லிட்டிங்க அவ்ளோ நாறும்னு தெரிஞ்சும் ஏன் போகணும் ?! சிலருக்கு நாற்றமா தெரியறது சிலருக்கு வாசனையாக் கூட தெரியலாம் ,அது அணுகக்கூடிய மனிதர்களின் மனம் மற்றும் தேவை சார்ந்த விஷயம் ,இப்ப இருக்கற பெண்களுக்குப் பிடிக்கலைனா ரமணிச்சந்திரன் புக் விற்பனைக்கு வந்து ஒரே நாள்ல எப்படிங்க ஸ்டாக் தீர்ந்து போக முடியும் !!!சோ பிடிக்கிறவங்க படிச்சிட்டுப் போறாங்க.
//தவிர, பொதுவான பெண்களின் எதிர்பார்ப்பும், மனநிலையும் ரமணிச் சந்திரன் எழுதுற மாதிரி இல்ல....அவர் எழுதுறது நாப்பது வருஷத்திற்கு முந்திய மனநிலை...இன்னைக்கு எவ்ளவோ மாறி இருக்கு....ஆனா உங்க ஆதர்ஷ எழுத்தாளர் மாற மாட்டேங்குறாரே?? //
ஆதர்ஷ எழுத்தாளர் !!! அடடா... நான் சொல்லாம நீங்களே முடிவு பண்ணிகிட்டிங்க.இப்படித் தான் நான் ஒரு அர்த்தத்துல சொன்ன நீங்க ஒரு அர்த்தத்துல எடுத்துக்கணும் ,இல்லனா கச்சேரி களை கட்டாதே.:) நாற்பது வருசத்துக்கு முன்பும் பெண் பெண் தான்.இன்றைக்கும் பெண் பெண் தான். அதே போல ஆண் ஆண் தான் .மனநிலை மாறி இருக்கலாம்.ஆனால் கணவன் மனைவின்னு பார்த்தா அவங்களோட எதிர்பார்ப்புகள் பொருளாதாரத்தைத் தாண்டியும் அன்றிலிருந்து இன்று வரை அன்பும் அரவணைப்பும் தான்,விதிவிலக்குகள் எங்கயாவது இருக்கலாம் இதை மறுக்க முடியுமா?
//வாழ்கை என்பது வெறும் தீவிர இலக்கியத்தை மட்டுமே வாசிப்பது அல்ல,அன்பே வா படம் அடையாத வெற்றியா? விஜயின் பிரியமானவளே ...சிவாஜியின் புதிய பறவை...இவையெல்லாம் வெற்றிப் படங்களே, அந்தப் படங்களை ரசிப்பவர்களும் மனிதர்கள் தான்,சுப்பிரமணிய புரத்தை ரசிப்பவர்கள் பிரியமானவளே படத்தையும் ரசிப்பார்கள் தான் .
//
சிவாஜி படமெல்லாம் நான் பார்க்கிறதில்ல...(ரொம்ப கஷ்டம்!)...ஆனா, எப்படி சிவாஜியை ரசிக்கிறாங்களோ அதே மாதிரி ரமணிச்சந்திரனையும் ரசிக்கலாம்...தப்பில்லை...
அதுக்காக எல்லாரும் அவங்களை கொண்டாடனும்னு அவசியம் இல்லையே...சிலருக்கு சிவாஜி நடிப்புக் கடவுள்...சிலருக்கு ஓவர் ஆக்டிங்...அதே மாதிரி தான் ரமணிச் சந்திரனும்.... //
பேஷ் ...நீங்க ஏன் எப்பவும் உங்களை மட்டுமே ரசனையின் அளவுகோலா வச்சிகரீங்களோ?!சரி அது உங்க கவலை அதை விட்ரலாம் .யாரையும் கொண்டாடச் சொல்லி நான் சொல்லவே இல்லை, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று " எப்படி கொண்டாட முடியலையோ அதே போல கல்லெறியவும் வேண்டாமேங்கறேன்..அதை கேட்கறதும் கேட்காததும் உங்க இஷ்டம். அதுக்காக நான் என் கருத்தை சொல்லாம இருக்க முடியாது.அதான் இந்தப் பதிவே தவிர உங்க கருத்துக்கு மறுப்பு இல்லை இது.
//ரமணிச் சந்திரன் எழுத்தை மலம்னு சொன்ன சாரு நிவேதிதா எழுத்தை சுஜாதா மலம்னு சொல்லிருக்காரு...அதுக்காக சுஜாதாவுக்கு எதுனா நிர்பந்தம் இருந்ததுன்னு சொல்ல முடியுமா??
பொதுவில் வைக்கப்படும் எதுவும் பொதுவில் விமர்சிக்கப்படும்...அவ்ளோ தான்! //
அதே அதே..."வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்னு "சும்மாவா சொல்லி வச்சிட்டுப் போயிருப்பாங்க ? சுஜாதா தன்னை இப்படிச் சொல்லிட்டாதால் தான் யாரையாச்சும் இப்படிச் சொல்லிடணும்னு சாரு அப்படிச் சொல்லிட்டாரோ ?அவர் சுந்தர ராமசாமியோட (அசோகமித்ரனா!!!)எழுத்தைக் கூடத் தான் சுவத்துல ஒன்னுகிருந்த மாதிரி இருக்குன்னு வாசிச்ச ஞாபகம்,எல்லாருக்குமே தான் எழுதறது தான் பெரிய இலக்கியம்னு நினைப்பு அந்த நினைப்பை விமர்சனம்னு வெளிக்காட்டற விதம் இவ்ளோ கடுமை வேண்டாமேங்கறது என்னோட எண்ணம்,
//பொதுவில் வைக்கப்படும் எதுவும் பொதுவில் விமர்சிக்கப்படும்...அவ்ளோ தான்! //
அதை தான் நானும் செய்திருக்கேன் இந்தப் பதிவுல.சரி தானே அதுசரி ?!
@ அதுசரி ...
//
வாழ்க்கையை கெடுத்தாங்களோ இல்லையோ அவங்க புக்கு ஒண்ணு வாங்கி என் காசு வீணாப் போச்சி...அந்த காசுக்கு ரெண்டு விஸ்ல் ஃபில்டராவது வாங்கிருக்கலாம்...என்ன செய்ய...எல்லாம் விதி.... //
கடைசில பாயிண்டுக்கு வந்துட்டிங்க பாருங்க ,அதே தான் சிலருக்கு வில்ஸ் சிகரெட் ...சிலருக்கு கிங் பிஷர் பீர் ,சிலருக்கு ரமணி சந்திரன் புக்ஸ் etc ,சிலருக்கு மெகா சீரியல்ஸ் அவங்கவங்க இண்டரஸ்ட் அவங்கவங்களுக்கு .உங்க காசு வீணாப் போகலை அதுசரி ...வாங்கிப் படிச்சதனால் தான் சீ...சீ இந்தப் பழம் புளிக்கும் ரேஞ்சுக்கு அனுபவப் பாடம் கிடைச்சது,இனிமே ரமணிச்சந்திரன் படிக்கப் போறதில்லைங்கர முடிவெடுக்க அந்தக் காசு செலவழிஞ்சதா நினைச்சுக்கோங்க .:))))வாழ்க்கைல ஏட்டறிவை விட பட்டறிவு தான் சிறந்ததாம். :))))
//கடைசியா ஒண்ணு....
"அகில இந்திய ரமணிச் சந்திரன் ரசிகர் மன்ற தலைவி மிஸஸ்.தேவ் வாழ்க"
:0)))) //
இந்தப் பட்டம் கொடுக்கறேன்னு கிளம்பறாங்க பாருங்க அவங்களை எல்லாம் காலாபாணி(சிறைச்சாலை) படத்துல காட்டற அந்தமான் எரவாடா சிறைல கொண்டு போய் ரெட்டை ஜென்மம் சாம்பிள் காட்டிட்டு விடணுமாம் .அப்புறம் பட்டம் கொடுப்பிங்க நீங்க? !
:))))
// சின்ன அம்மிணி said...
விக்கிபீடியா கூட பஞ்சவன் மாதேவி ராசேந்திரசோழனுக்கு மனைவின்னு சொல்லுது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D//
நன்றி சின்னஅம்மிணி ...
விக்கிபீடியா அப்படித் தான் கூறுகிறது,பிறகு ஆதாரங்கள் இல்லாமலா பாலகுமாரன் உடையாரில் அத்தனை விஸ்தீரணமாக பஞ்சவன் மாதேவியை ராஜராஜன் மனைவி என்று விவரிக்கிறார்?!!!இது தான் சந்தேகம்! பார்க்கலாம் யாரிடமிருந்தாவது ஆதாரப் பூர்வமான விடை கிடைக்கிறதா என்று .
//அன்புடன் அருணா said...
நிறைய இடங்களில் இது நான் எழுதியதோ என யோசிக்க வைத்துவிட்டீர்கள்!நான் இப்போதும் ரமணி சந்திரனைப் பகிரங்கமாகவே
வாசிக்கிறேன்.
//
நன்றி அன்புடன் அருணா...
அதானே...வாசிக்க நமக்கெதுக்கு தயக்கம்! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு style of writing ,பிடிச்சதை வாசிக்க நமக்கென்ன தடை?!நீங்க வாசிங்க.
// நேசமித்ரன் said...
இது இடுகை! பொறி பறக்குதுல்ல
:)//
வாங்க நேசமித்திரன் ...
பார்த்து வாங்க பொறி கண்ல பட்ரப் போகுது. :)
//நட்புடன் ஜமால் said...
நம்ம லிஸ்ட்ல முதல்ல ரத்னபாலா
பல உங்க லிஸ்ட்ல உள்ளதும் இருக்கு.//
நன்றி ஜமால் ...
பூந்தளிர்,ரத்னபாலா,பாலமித்ரா,கோகுலம்,சிறுவர் மலர் அம்புலிமாமா ,ராணி காமிக்ஸ் இதெல்லாம் இன்னொரு தனி லிஸ்ட் ,இதுவும் தான் அன்னிய தேதிக்கு புக் கண்ல கண்டவுடனே சொர்கமே கைல சிக்கின மாதிரி சந்தோசமா இருக்கும்.அதெல்லாமே ரசனை தானே. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம் அதுக்காக ஒன்னை விட ஒன்னு மட்டம்னு சொல்ல முடியாதில்லையா?
// நட்புடன் ஜமால் said...
"விட்டு விடுதலை ஆகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை "
அட இந்த மாற்றத்தை கவணிக்கவேயில்லையே ...
:)//
:)
dondu(#11168674346665545885) said...
//சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!//
அப்படியெல்லாம் ஏன் பயப்பட வேண்டும்? ரமணி சந்திரனைத்தான் எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் விட அதிகமாகப் பிடிக்கும்.
ஏன் என்பதை எனது இப்பதிவில் காணலாம். பார்க்க: http://dondu.blogspot.com/2006/06/1.html
@அதுசரி
ஸ்டீரியோடைப் என்று பார்த்தால் உங்கள் வேதாளம் சீரீஸ் கதைகளும் அவ்வாறுதானே. அதிலும் அரதப்பழசான கான்சப்ட் வேறு.
ஆனாலும் உங்கள் ஒவ்வொரு கதையும் சுவாரசியமாகப் போகிறது என்பதுதானே முக்கியம்? மேலும் உலகிலேயே மொத்தம் ஏழு கதை பிளாட்டுகள்தான் உள்ளன. அந்த ஏழும் மகாபாரதச்த்தில் வந்து விட்டது என்கிறார்கள். அதற்காகவெல்லாம் இனிமேல் சுவாரசியமான கதைகளே வராது என்பதா பொருள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார் ...
உங்கள் இணைப்பிலிருந்த பதிவையும் பதில்களையும் பார்த்தேன். பொன்ஸ் மற்றும் இனியாள் கருத்தை வழிமொழிகிறேன். கயழ்விழி சொல்வதைப் போல அவர் இன்றைய நகர்ப்புற பெண்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எழுதவில்லை என்றும் முற்றாகக் கூறி விட முடியாது,நான் வாசித்தவரையில் கூடுமான வரை பாசிடிவ் எண்ணங்களை ஏற்படுத்தி மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ளவே பல பெண்களும் ரமணி சந்திரனை விரும்பி வாசிக்க நேர்ந்திருக்கலாம்
// R.Gopi said...
யப்பா.... என்னா கோவம்... என்னா கோவம்...
சரிதானே...
எல்லாருமே கஷ்டப்பட்டுதானே எழுதுகிறார்கள்...
அதை குறை சொல்வானேன்....
உங்க லிஸ்ட்ல என் அபிமான எழுத்தாளர்கள் எல்லாருமே இருக்கிறார்கள்...//
நன்றி R.Gopi ...
கோபமெல்லாம் இல்லைங்க ...என் கருத்தை சொன்னேன் அவ்ளோ தான்.(என்னையும் சேர்த்து நாட்ல எவ்ளோ கருத்து கந்தசாமிங்க (சாமிக்கு பெண்பால் சாமியாரிணியோ!?) கிளம்பிட்டாங்கன்னு பாருங்க).
// அது சரி said...
பஞ்சவன் மாதேவி குறித்த உங்கள் முதல் கேள்விக்கு பதில்://
பொன்னியின் செல்வனும் சரி உடையாரும் சரி கொஞ்சமேனும் ஆதாரங்கள் இல்லாமல் எழுதி இருக்க மாட்டார்கள் என்பது நிஜம். நந்தினி,ஆழ்வார்க்கடியான்,மந்தாகினி ...இன்னும் சிலர் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்,ஆனால் பஞ்சவன் மாதேவி கற்பனை அல்ல. சொல்லப் போனால் பொன்னியின் செல்வனில் அருண்மொழியின் இளவயது வாழ்கை தான் இடம் பெறுகிறது,பஞ்சவன் மாதேவி ராஜராஜணினி வாழ்வில் அவரது ஐம்பதாம் அகவைக்குப் பின் வருவதாக எங்கோ வாசித்த நினைவு,அன்றைக்குப் பிரபலமான தலைக்கோலி (ஆடற்பெண்களின் தலைவி என்று எடுத்துக் கொள்ளலாம்)விருது பெற்ற பஞ்சவன் மாதேவியை ரவிதாசனிடம் இருந்து காப்பாற்றி ராஜராஜன் தனது அரசிகளில் ஒருத்தியாக்கியதாக உடையாரில் காணலாம். பெரிய கோயில் எழுப்பியதும் வராகி பூஜை நடத்திய சமயம் அந்த விழாக் கோலாகலத்தில் ராஜராஜன் மீது பகைவர்கள் எறிந்த விசக்கத்தி மாறுதலாக பஞ்சவன் மாதேவி மீது பாய்ந்து தனது பூர்ண இளமையிலேயே வயதான கிழக்கோலம் அடைந்து நோயாளியாகிப் பழையாறையில் இறந்ததாக வாசித்தேன்,இவையெல்லாம் கற்பனை செய்திகள் தானா!
தஞ்சைக் கோயிலின் நூற்றி எட்டு கரண சிற்பங்களுக்கு குஞ்சரமல்லருக்கு மாடலாக இருந்தது இவள் தானேன்பதும் கற்பனையா?
உளியின் ஓசையை விடுங்கள் ,நான் அறிந்து கொள்ள விரும்பியது பஞ்சவன் மாதேவி பற்றித் தான்.
உளியின் (ஓசை)இம்சையில் வரலாற்றுப் படத்தில் வில்லியாக ஒரு நடிகை வந்து சினேக் டான்ஸ் ஆடுவாரே அதைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. :)))
நானும் படிச்சிருக்கேன்ப்பா ரமணி சந்திரன்.. ஒரு கட்டத்துல போரடிச்சிருச்சிருன்னு நினைக்கிறேன்.. பட் அதுகுன்னு இப்படி எல்லாம் திட்டறது நல்லாத்தான் இல்லை...
வாழ்க்கையை கெடுத்தாங்களோ இல்லையோ அவங்க புக்கு ஒண்ணு வாங்கி என் காசு வீணாப் போச்சி...அந்த காசுக்கு ரெண்டு விஸ்ல் ஃபில்டராவது வாங்கிருக்கலாம்...என்ன செய்ய...எல்லாம் விதி....
//
வில்ஸ் உடம்புக்கு கெடுதல், அதனால் ரமணிச்சந்திரன் உங்கள காப்பாத்திருக்கார்.
இப்ப என்னையும் இலக்கியவாதியா ஆக்கிட்டாங்க. அது சரி இனிமே பிரிஞ்சு மேயப்போறாரு.
பொறுப்பு அறிவித்தல்: நான் எந்த நாவலும் படிப்பதில்லை. ராணிகாமிக்ஸ்தான் நான் படித்த இலக்கியம்.
உளியின் (ஓசை)இம்சையில் வரலாற்றுப் படத்தில் வில்லியாக ஒரு நடிகை வந்து சினேக் டான்ஸ் ஆடுவாரே அதைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. :)))
//
டிவில பாட்டு பாத்தீங்களா? இல்லை தியேட்டர்ல பாத்தீங்களா?
//
dondu(#11168674346665545885) said...
//சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!//
அப்படியெல்லாம் ஏன் பயப்பட வேண்டும்? ரமணி சந்திரனைத்தான் எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் விட அதிகமாகப் பிடிக்கும்.
//
இதே தான் எனது கருத்தும்....யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்ததை எந்த தயக்கமும் இன்றி படிக்கலாம்...இதற்கு மாறான ஒரு சூழ்நிலை வருமாயின், அது மிக மோசமான விஷயம்...
//
@அதுசரி
ஸ்டீரியோடைப் என்று பார்த்தால் உங்கள் வேதாளம் சீரீஸ் கதைகளும் அவ்வாறுதானே. அதிலும் அரதப்பழசான கான்சப்ட் வேறு.
//
Dondu Sir,
Point taken...But just because I am writing crap doesn't mean I will support all other crap...:0)))
தவிர, நான் எழுதியிருப்பது இரண்டே கதைகள்(??) தான்...முதல் கதையான மனைவியின் காதலில் வரும் கான்செப்டை ரமணிச்சந்திரன் எழுதியிருந்தால், கடைசியில் விஜியின் கணவன் மனம் மாறி அவள் காலில் விழுந்திருப்பான்...விஜியின் மாமியார் இவ்ளோ நல்லா பொண்ணை கஷ்டப்படுத்திட்டேனே என்று கண்ணீர் பெருக்கியிருப்பார்...இது எம் பொண்ணு என்று விஜியின் பெற்றோர் மகிழ்ந்திருப்பார்கள்....அவளை காதலித்து தேடி வந்த ஆண்டர்சன், இது தான் இந்திய கலாச்சாரம் என்று எனக்கு புரிகிறது என்று ஒரு ஸ்டேட்மென்ட் விட்டு விட்டு போயிருப்பான்....
ஆனால், நான் அப்படி முடிக்கவில்லை என்று உங்களுக்கும் தெரியும்...
அம்புலி மாமாவும்,சிறுவர் மலரும் கூட படிக்க இன்பமாகத் தான் இருக்கின்றன....ஆனால், அம்புலி மாமாவை ஏன் இலக்கிய இதழ் என்று யாரும் சொல்லவில்லை???
//
ஆனாலும் உங்கள் ஒவ்வொரு கதையும் சுவாரசியமாகப் போகிறது என்பதுதானே முக்கியம்? மேலும் உலகிலேயே மொத்தம் ஏழு கதை பிளாட்டுகள்தான் உள்ளன. அந்த ஏழும் மகாபாரதச்த்தில் வந்து விட்டது என்கிறார்கள். அதற்காகவெல்லாம் இனிமேல் சுவாரசியமான கதைகளே வராது என்பதா பொருள்?
//
ஏழு ப்ளாட் தான் இருக்கிறது என்பது உண்மை தான்....ஆனால் சொல்லப்படும் முறையில், கதைக் களன் அடிப்படையில், எல்லா ப்ளாட்டுகளும் அன்றைய நிதர்சனத்தின், வாழ்க்கை முறையின் பேரில் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன.....சிலரின் எழுத்து மட்டுமே மாறாது இருக்கிறது....:0(((
//
R.Gopi said...
யப்பா.... என்னா கோவம்... என்னா கோவம்...
சரிதானே...
எல்லாருமே கஷ்டப்பட்டுதானே எழுதுகிறார்கள்...
அதை குறை சொல்வானேன்....
உங்க லிஸ்ட்ல என் அபிமான எழுத்தாளர்கள் எல்லாருமே இருக்கிறார்கள்...
//
கோபி,
எல்லாரும் கஷ்டப்பட்டு தான் எழுதுகிறார்கள்.....ஒரு கோடி ஊழல் செய்வதற்கு படும் கஷ்டம் அரசியல்வாதிக்கு தான் தெரியும்...எல்லாரும் கஷ்டப்பட்டு தான் அரசியல் செய்கிறார்கள்.... எல்லா நடிகர்களும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறார்கள்...அதற்காக விமர்சிக்காது விட்டு விடுவோமா??
பொதுவில் வைக்கப்படும் எதுவும் பொதுவில் விமர்சிக்கப்படும்...சம்பந்தப்பட்டவர்களின் தனிமனித வாழ்க்கையை விமர்சித்தால் தான் தவறு...இங்கு நான் விமர்சிப்பது ரமணிச்சந்திரனின் எழுத்தையே தவிர அவரை அல்ல...அவர் கஷ்டப்பட்டு எழுதினாரா இல்லை கல்லுடைத்தாரா என்பது எனக்கு அவசியம் இல்லாதது...
ஸாரி, ஆனால் சொல்லாது இருக்க முடியவில்லை....
//
Mrs.Dev said...
கோபம் வந்ததால தான் இப்படி ஒரு பதிவே...அது கூட புரியாத அளவுக்கு நீங்க இருக்கறதா நான் நினைக்கலை அதுசரி ...
//
ஓ....நாங்கெல்லாம் கோபம் வந்தா ஆட்டோ, லாரின்னு அனுப்புற கோஷ்டி...அதனால எனக்கு உங்க கோபம் புரியலை...:0)))
//
போகட்டும் அதை விடுங்க.யாரும் எதிர் கருத்து சொல்லலைனா உங்க கருத்து உண்மை ஆயிடாது ...ம்ம்...எதுக்கு வம்புன்னு கூட சிலர் பதில் சொல்லாம இருக்கலாம் !!! :)
//
என் கருத்து உண்மைன்னு யார் சொன்னா?? அது என் பார்வை மட்டுமே...
//
இடுகையை நல்லா வாசிக்கலை போல நீங்க...நான் ரமணிசந்திரனை தங்கமா கொண்டாடச் சொல்லி எந்த இடத்திலயும் சொல்லலை.மலம்னு சொன்னது கண்டனத்துக்குரியதுன்னு தான் சொல்லியிருக்கேன்.
//
ரமணிச் சந்திரனின் எழுத்தை விமர்சிப்பது என் உரிமை...அதை கண்டிப்பது உங்கள் உரிமை...:0)))
//
தங்கமா மலமான்னு முடிவு பண்ண அதொண்ணும் நாட்டின் முக்கியப் பிரச்சினை லிஸ்ட்ல இல்லை.
//
இதுல இன்னும் முடிவு பண்ண என்ன இருக்கு??
//
சோ பிடிச்சா படிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாம் பிடிக்கலைனா நல்லா இல்லைன்னு சொல்லிட்டு விட்ரலாம் ,இவ்ளோ கடுமை தேவை இல்லை என்பதே என் கருத்து .
//
எனக்கு சோவை ரொம்ப பிடிக்கும்...அப்பப்ப துக்ளக் படிக்கிறது உண்டு...
//
//ம்ம்ம்ம்....எதுனா வேஸ்ட் டிஸ்போஸல் சைட் பக்கம் போயிருக்கீங்களா?? ஒரு கிலோமீட்டருக்கு முன்னாடியே பயங்கர "கப்பு" அடிக்கும்...ஏன்னா, குப்பை மேல குப்பை, குப்பை மேல குப்பை, குப்பை மேல குப்பைன்னு கொட்டி அது மலத்தை விட மிக மோசமாக நாறுகிறது....//
நீங்களே சொல்லிட்டிங்க அவ்ளோ நாறும்னு தெரிஞ்சும் ஏன் போகணும் ?!
//
நான் இப்பல்லாம் போறதில்லை....ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு தடவை போனதே இன்னும் குடலை பொரட்டுது...
//
சிலருக்கு நாற்றமா தெரியறது சிலருக்கு வாசனையாக் கூட தெரியலாம் ,அது அணுகக்கூடிய மனிதர்களின் மனம் மற்றும் தேவை சார்ந்த விஷயம் ,இப்ப இருக்கற பெண்களுக்குப் பிடிக்கலைனா ரமணிச்சந்திரன் புக் விற்பனைக்கு வந்து ஒரே நாள்ல எப்படிங்க ஸ்டாக் தீர்ந்து போக முடியும் !!!
//
அட...அப்படி ஒரு அளவுகோல் இருக்கா?? அப்படி பார்த்தா சமையல் குறிப்பு புத்தகமும், ஜோதிட புத்தகமும் தான் அதிகம் விக்கிறதா சொல்றாங்க....அப்ப இனிமே சமையல் குறிப்பு எழுதறவங்க தான் மிகப்பெரிய எழுத்தாளர்....நோபல் பரிசு கொடுங்கப்பா...
//
ஆதர்ஷ எழுத்தாளர் !!! அடடா... நான் சொல்லாம நீங்களே முடிவு பண்ணிகிட்டிங்க.இப்படித் தான் நான் ஒரு அர்த்தத்துல சொன்ன நீங்க ஒரு அர்த்தத்துல எடுத்துக்கணும் ,இல்லனா கச்சேரி களை கட்டாதே.:) நாற்பது வருசத்துக்கு முன்பும் பெண் பெண் தான்.இன்றைக்கும் பெண் பெண் தான். அதே போல ஆண் ஆண் தான் .மனநிலை மாறி இருக்கலாம்.ஆனால் கணவன் மனைவின்னு பார்த்தா அவங்களோட எதிர்பார்ப்புகள் பொருளாதாரத்தைத் தாண்டியும் அன்றிலிருந்து இன்று வரை அன்பும் அரவணைப்பும் தான்,விதிவிலக்குகள் எங்கயாவது இருக்கலாம் இதை மறுக்க முடியுமா?
//
மறுக்க முடியுமா?
YES! YES!! YES!!!
அன்றைய எதிர்பார்ப்பு ஒரு அன்பான கணவன்/மனைவி...இன்றைய எதிர்பார்ப்பு பெரும்பாலும் வெற்றிகரமான கணவன்....வெற்றி பெற உதவி செய்யும் மனைவி....
பொருளாதார ரீதியாக வெற்றிபெறாத கணவனை கொண்டாடும் பெண்கள் எத்தனை பேர் என்று சொல்லுங்கள்...இது பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டத்தில் இருக்கும் எல்லா குடும்பங்களுக்கும் பொருந்தும்...
அதே போல பல பெண்களும் இன்றைக்கு கொடுமைக்கார மாமியாரை சகித்துக் கொண்டு அவரை திருத்தப் பார்ப்பதில்லை...(அப்படி எந்த அவசியமும் இல்லை என்பது என் கருத்து)....உடனடியாக தனிக்குடித்தனம் தான்....
ஆனால், ரமணிச் சந்திரனின் கதாநாயகி இன்றைக்கும் அதையே தான் செய்வார்....
//
பேஷ் ...நீங்க ஏன் எப்பவும் உங்களை மட்டுமே ரசனையின் அளவுகோலா வச்சிகரீங்களோ?!சரி அது உங்க கவலை அதை விட்ரலாம் .யாரையும் கொண்டாடச் சொல்லி நான் சொல்லவே இல்லை, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று " எப்படி கொண்டாட முடியலையோ அதே போல கல்லெறியவும் வேண்டாமேங்கறேன்..அதை கேட்கறதும் கேட்காததும் உங்க இஷ்டம். அதுக்காக நான் என் கருத்தை சொல்லாம இருக்க முடியாது.அதான் இந்தப் பதிவே தவிர உங்க கருத்துக்கு மறுப்பு இல்லை இது.
//
என்னக் கொடுமை இது? உங்க கருத்தை சொல்ல வேணாம்னு யார் சொன்னா??
//
//பொதுவில் வைக்கப்படும் எதுவும் பொதுவில் விமர்சிக்கப்படும்...அவ்ளோ தான்! //
அதை தான் நானும் செய்திருக்கேன் இந்தப் பதிவுல.சரி தானே அதுசரி ?!
//
தப்பே இல்லை! எனது ப்ளாக் ஓப்பன் ப்ளாக் என்பதால் அதில் நான் எழுதும் எதுவும் பொது விமர்சனத்திற்கும் மாற்று கருத்துக்கும் உட்பட்டதே....
உங்கள் விமர்சனத்தை முற்றிலும் வரவேற்கிறேன்....
//
.உங்க காசு வீணாப் போகலை அதுசரி ...வாங்கிப் படிச்சதனால் தான் சீ...சீ இந்தப் பழம் புளிக்கும் ரேஞ்சுக்கு அனுபவப் பாடம் கிடைச்சது,இனிமே ரமணிச்சந்திரன் படிக்கப் போறதில்லைங்கர முடிவெடுக்க அந்தக் காசு செலவழிஞ்சதா நினைச்சுக்கோங்க .:))))வாழ்க்கைல ஏட்டறிவை விட பட்டறிவு தான் சிறந்ததாம். :))))
//
யெஸ்....ஆனாலும் மனசு ஆற மாட்டேங்குதே :0)))
//
இந்தப் பட்டம் கொடுக்கறேன்னு கிளம்பறாங்க பாருங்க அவங்களை எல்லாம் காலாபாணி(சிறைச்சாலை) படத்துல காட்டற அந்தமான் எரவாடா சிறைல கொண்டு போய் ரெட்டை ஜென்மம் சாம்பிள் காட்டிட்டு விடணுமாம் .அப்புறம் பட்டம் கொடுப்பிங்க நீங்க? !
:))))
//
கோட்டான்கள் கூவிடும் சிறைச்சாலை எமக்கு
மாங்குயில் கூவிடும் மலர்ச்சோலை...
(நான் சொல்லலை...அண்ணா சொன்னது...)
//
கயழ்விழி சொல்வதைப் போல அவர் இன்றைய நகர்ப்புற பெண்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எழுதவில்லை என்றும் முற்றாகக் கூறி விட முடியாது,நான் வாசித்தவரையில் கூடுமான வரை பாசிடிவ் எண்ணங்களை ஏற்படுத்தி மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ளவே பல பெண்களும் ரமணி சந்திரனை விரும்பி வாசிக்க நேர்ந்திருக்கலாம்
//
கயல்விழி சொல்வதில் எனக்கு முழு ஒப்புதல்...
//
பொன்னியின் செல்வனும் சரி உடையாரும் சரி கொஞ்சமேனும் ஆதாரங்கள் இல்லாமல் எழுதி இருக்க மாட்டார்கள் என்பது நிஜம். நந்தினி,ஆழ்வார்க்கடியான்,மந்தாகினி ...இன்னும் சிலர் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்,ஆனால் பஞ்சவன் மாதேவி கற்பனை அல்ல. சொல்லப் போனால் பொன்னியின் செல்வனில் அருண்மொழியின் இளவயது வாழ்கை தான் இடம் பெறுகிறது,பஞ்சவன் மாதேவி ராஜராஜணினி வாழ்வில் அவரது ஐம்பதாம் அகவைக்குப் பின் வருவதாக எங்கோ வாசித்த நினைவு,அன்றைக்குப் பிரபலமான தலைக்கோலி (ஆடற்பெண்களின் தலைவி என்று எடுத்துக் கொள்ளலாம்)விருது பெற்ற பஞ்சவன் மாதேவியை ரவிதாசனிடம் இருந்து காப்பாற்றி ராஜராஜன் தனது அரசிகளில் ஒருத்தியாக்கியதாக உடையாரில் காணலாம். பெரிய கோயில் எழுப்பியதும் வராகி பூஜை நடத்திய சமயம் அந்த விழாக் கோலாகலத்தில் ராஜராஜன் மீது பகைவர்கள் எறிந்த விசக்கத்தி மாறுதலாக பஞ்சவன் மாதேவி மீது பாய்ந்து தனது பூர்ண இளமையிலேயே வயதான கிழக்கோலம் அடைந்து நோயாளியாகிப் பழையாறையில் இறந்ததாக வாசித்தேன்,இவையெல்லாம் கற்பனை செய்திகள் தானா!
தஞ்சைக் கோயிலின் நூற்றி எட்டு கரண சிற்பங்களுக்கு குஞ்சரமல்லருக்கு மாடலாக இருந்தது இவள் தானேன்பதும் கற்பனையா?
//
பஞ்சவன் மாதேவிக்கு பள்ளிப்படை கோயில் இருக்கிறது, அது ராஜேந்திரனால் கட்டப்பட்டது என்ற வரைக்குமே உண்மை...மற்ற எல்லாமே பாலகுமாரனின் கற்பனை...அவள் மாடலாக இருந்ததும், இப்படித் தான் இறந்தார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை....தவிர, ஒரு அரசி சிற்பி முன் மாடலாக நின்றார் என்பது அன்றைய சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ள முடியாதது....
உடையாரில் பாலகுமாரன் செய்திருப்பது தன்னை ராஜராஜ சோழன் மீது ஏற்றும் முயற்சி...அதாவது, ராஜ ராஜன் என்று வரும் இடத்தில் எல்லாம் நீங்கள் பாலகுமாரன் என்று படித்தால் கதை சரியாக வரும்! இந்த கதைக்கும் ராஜராஜ சோழனுக்கும் பெரிய சம்பந்தமில்லை....
உடையாரின் வித்து தஞ்சை பெரிய கோயில் என்பதை விட, பாலகுமாரன் முன்பு எழுதிய என் கண்மணித் தாமரை என்ற நாவலே என்பது என் புரிதல்...
நன்றி முத்துலெட்சுமி ...
பல நேரம் போர் அடிக்கிற மாதிரி தோணறது நிஜம் தான்,ஆனாலும் எனக்கென்னவோ ரமணிச்சந்திரன் வாசிக்கப் பிடிக்கும்.( நாங்கலாம் யாரு ...சும்மா பொறி கடலை மடிச்ச பேப்பரையும் கூட விடாம படிப்போமே!!!அது கையெழுத்துப் பிரதியா இருந்தாக் கூட! :)))
குடுகுடுப்பை said...
உளியின் (ஓசை)இம்சையில் வரலாற்றுப் படத்தில் வில்லியாக ஒரு நடிகை வந்து சினேக் டான்ஸ் ஆடுவாரே அதைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. :)))
//
டிவில பாட்டு பாத்தீங்களா? இல்லை தியேட்டர்ல பாத்தீங்களா?
//
தியேட்டர்ல போய் அதைப் பார்த்துட்டாலும்!!! எல்லாம் டி.வி ல தான் பார்த்துத் தொலைச்சோம்.(யாரும் பார்க்கச் சொல்லி கம்பெல் பண்ணலை ஆனாலும் பார்த்தோம்) :)))
////அதே அதே..."வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்னு "சும்மாவா சொல்லி வச்சிட்டுப் போயிருப்பாங்க ? சுஜாதா தன்னை இப்படிச் சொல்லிட்டாதால் தான் யாரையாச்சும் இப்படிச் சொல்லிடணும்னு சாரு அப்படிச் சொல்லிட்டாரோ ?அவர் சுந்தர ராமசாமியோட (அசோகமித்ரனா!!!)எழுத்தைக் கூடத் தான் சுவத்துல ஒன்னுகிருந்த மாதிரி இருக்குன்னு வாசிச்ச ஞாபகம்,////
ஆத்திரத்தை அடக்க முடியாமல் சொல்லி இருப்பார் சாரு. இவரெல்லாம் பேசுவதை குறித்துக் கொண்டு இருக்கிறீர்களே மிசஸ் தேவ்/ அல்லது அவர் சொன்னாரென்று சொல்வதைக் கூட பதித்து முக்கியத்துவம் கொடுப்பானேன். இதற்கு பதிலாக ஒரு ரமணிச்சந்திரனின் "அடிவாழை" புஸ்தக விமர்சனம் எழுதி இருக்கலாம். எனக்குப் பிடித்த நாவல் அது. அதுக்காகத்தான் சொன்னேன்.
மத்தபடி வாத விவாதங்கள்: ஓகே.
--வித்யா
ஏங்க!அது சரி! நல்லா இருக்கீங்களா?
அப்படியே டி.வீ சீரியல்களில் வரும் "த்யாகத் திலகங்கள்" பற்றியும் யாராவது ஏதாவது சொல்லி இருந்தா கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் காதுகள் குளிருதான்னு பாக்கலாம். :))
-வித்யா
ஜனவரியிலேயே ஆட்டம் முடிஞ்சு போச்சு.....
கெளம்புடா கோள்மூட்டி...:))))
:-))
விதூஷ் அப்பிடியேதான் இருக்கேன் போலருக்கு..
@ Kumky & Vidhoosh :)))
Post a Comment