இரண்டு நண்பர்கள் பாலைவனத்தின் நடுவே நடந்து போய்க் கொண்டு இருந்தார்களாம். பயணத்தின் இடையில் சிறிது நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுக்கிடையே எதையோ குறித்து விவாதம் எழுந்தது,விவாதத்தின் முடிவில் ஒரு நண்பன் கோப மிகுதியில் மற்றவனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான்.அறை வாங்கிய நண்பன் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பாலைவன மணலில் இப்படி எழுதினானாம்.
"இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் கன்னத்தில் அறைந்து விட்டான்"
பிறகும் அவர்களது பயணம் தொடர்ந்தது,குளிப்பதற்காக ஓரிடத்தில் சிறிது நேரம் தங்க நினைக்கையில் புதைமணலில் சிக்கி அதே அறை வாங்கிய நண்பன் உள்ளே மூழ்கத் தொடங்க அடித்த நண்பன் அடி வாங்கியவனை புதை மணலில் இருந்து கஷ்டப் பட்டு காப்பாற்றி விடுகிறான்.
இப்போதும் காப்பாற்றப் பட்ட நண்பன்எதுவும் சொல்லாமல் ஒரு நீளமான கல்லை எடுத்து அதில் கீழ்க்காணும் வாக்கியத்தைப் பொறித்து வைத்தானாம்.
"இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் "
என்று.
முதல் தடவை அடித்து விட்டு இப்போது காப்பாற்றிய அந்த நண்பனுக்கு மிகவும் குழப்பமாகி விட்டது.
என்ன இவன் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எதையாவது எழுதி வைத்துக் கொண்டே இருக்கிறானே என்று. அதிலும் முன்பு மணலில் எழுதினான்,இப்போது கல்லில் பொறித்து வைக்கிறானே என்று வேறு சந்தேகம் குடைய.
அதை அவனிடமே ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்கிறான்.
அதற்கு அந்த நண்பன் அளித்த பதில்.
நம் காயங்களை நாம் மணலில் எழுதவேண்டும் அப்போது தான் மன்னிப்பு எனும் காற்று அடிக்கையில் அவை கலைந்து மறையும்,அதே சமயம் நமது லாபங்களை நாம் பெற்ற உதவிகளை நான் கல்லில் தான் பொறித்து வைக்க வேண்டும்,எந்தக் காற்றும் வந்து கலைத்து விடாமல் இருக்க. இதுவே இக்கதையின் நீதி.
நோட்:
பாப்புவுக்கு ஸ்டோரி டெல்லிங் காம்பெடிசனுக்கு கதை தேடும் போது கிடைச்ச சிம்பிள் கதைங்க இது.நல்ல இருக்கு இல்ல!!!
10 comments:
ஆமாங்க நல்லாருக்கு...
நன்றி அண்ணாமலையான்...
அண்ணாமலைன்னு எனக்கொரு சீனியர் இருந்தார் எலிமெண்டரி ஸ்கூல் டேஸ்ல . அடிக்கடி ஞாபகம் வருது உங்க கருத்துகளையும் வருகையையும் பார்க்கையில் :)))
இதென்ன பிரமாதம், நம்ம ப்ளாக் பக்கம் வாங்க.. அப்புறம் சொல்லுங்க...
நல்லா இருக்கு
ப்ளாக் படிக்கும் குட்டிக் குழந்தைகள் வாழ்க....:0))))
நல்ல பகிர்வு...
@ அண்ணாமலையான்...நேத்தே உங்க ப்ளாக் படிச்சாச்சுங்க(ஹெல்மெட் போடாம வண்டிய எடுக்கரதில்லைங்க எங்க வீட்டு அய்யா,நல்ல பதிவு வாழ்த்துக்கள் )
நன்றி ஜாகிர் ...
@ அதுசரி ...ஏன் குழந்தைங்க ப்ளாக் படிக்கணுமாம் ?!அம்மா அப்பா படிச்சு கதை சொல்ல மாட்டாங்களா என்ன?இதென்னங்க பெரிய அநியாயமா இருக்கு ,வர வர உங்க அலும்பு தாங்கலை.வேதாளமே எங்கிருந்தாலும் வந்து இந்த அதுசரியை கொஞ்சம் சரி செஞ்சிட்டு அப்புறம் வேற வேலையைப் பார்.
நன்றி ஜமால் ...
நல்ல கருத்து ப்பா.
ஐயோ, ரொம்ப நல்லா இருக்குங்க, இந்தக் கதை, பகிர்ந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. எல்லா உறவுகளுக்குள்ளும் எல்லாரும் இப்படி இருந்துட்டா,,,,, எல்லாரையும் விடுங்க, நம்மால் எல்லா உறவுகளோடும் இப்படி இருக்க முடிஞ்சிட்டா,,,,,,,,
//பாப்புவுக்கு ஸ்டோரி டெல்லிங் காம்பெடிசனுக்கு கதை தேடும் போது கிடைச்ச சிம்பிள் கதைங்க இது.நல்ல இருக்கு இல்ல!!! //
ம்ம் நல்லாருக்கு :-)
Post a Comment