Thursday, November 19, 2009

நிசப்தம் ...(வெறுமே ஒரு கற்பனை வரையறை)



தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் லயமில்லா லயத்துடன் லஜ்ஜையின்றி ஒரு பறவையின் அலட்டல் அல்லாத வெது வெதுப்பான மிதமான சிறகசைப்பின் லாவகம் தப்பாமல் பறப்பதே தெரியாமல் பறப்பதைப் போல ரசிப்பில்லா ரசனையுடன் ஆளற்ற குளக்கரையின் அசட்டையான படித்துறையின் அசைந்தும் அசையா ஆலமரத்துக் கிளை நுனியின் கட்டக் கடைசி நிழல் தொட்டும் தொடாமல் உச்சந்தலையில் பட்டும் படாமல் அசைந்தும் அசையாமல் தொட்டுத் தடவ தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் ................


இது வெறுமே ஒரு கற்பனை வரையறையே ...நிசப்தம் இந்த சொல்லை எப்படி வரையறுக்க இயலும் ?!,அது புரிதல் சார்ந்ததே.எனக்குத் தோன்றியதை வெறுமே பதியத் தோன்றியது .

4 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க போட்டிருக்கிற ஃபோட்டோவை பார்த்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கு, இதுவும் நிசப்தத்தில் சேருமோ.

நல்ல கற்பனை.

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க

அது சரி(18185106603874041862) said...

அழகான கற்பனை...

முகத்தில் பெய்யும் மழை மறந்து
எண்ணங்கள் மரணித்துப் போன
சில கணங்கள்.....

இது என் நிசப்தம் :0))

அது சரி(18185106603874041862) said...

உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என்ற நம்பிக்கையில்...தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...